க்விஸ்...
1.தமிழ் இலக்கணப்படி மாத்திரை அளவீட்டில் ஒற்று எழுத்துக்கு எத்தனை மாத்திரை?
2. நேர்..நேர் =தேமா ...இந்த வரிசையில் நிரை நிரைக்கு என்ன வாய்ப்பாடு?
3. ஐ வகை நிலங்களில் நிலமும் நிலம் சார்ந்த பகுதியும் எவ்விதம் அழைக்கப் படுகிறது?
4. பெண்ணின் பெருமை இந்த நூலின் ஆசிரியர் யார்?
5. குற்றாலக்குறவஞ்சியை இயற்றியது யார்?
6.சேக்ஸ்பியரின் "மெர்ச்சன்ட் ஆப் வெனிசில்" வில்லன் பெயர் என்ன?
7.அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு வாங்கித்தந்த ஆங்கில நாவலின் பெயர் என்ன?
8.ஷாஜகானின் அப்பா பெயர் சலீம் சரியா தவறா?
9.தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்?
10.ராமாயணக் கதையில் வரும் கிஷ்கிந்தை இப்போதைய எந்த நிலப்பகுதியில் வருகிறது?
11.துத்தநாகத்தின் அறிவியல் குறியீடு என்ன?
12."மண்ணில் இந்தக் காதலன்றி " இந்தப் பாடலை எழுதியவர் யார்?
13.பல்லவர் காலத்து காபாலிகர்கள்,காளாமுகர்கள் இவர்கள் சார்ந்திருந்த இந்து மதப் பிரிவு எது? ( 1 st கேள்வி தப்பாக் கேட்டுட்டேன் போல!!!)?
14.முகலாயர் வரலாற்றில் மதாம் அங்கா யார்?
15.இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
இப்போதைக்கு இந்தக் கேள்விகள் போதும் , யாரெல்லாம் பதில் சொல்றாங்கன்னு பார்த்துட்டு சரியான பதில்கள் இறுதியில் வெளியிடப்படும்.
check your knowledge .
Showing posts with label க்விஸ். Show all posts
Showing posts with label க்விஸ். Show all posts
Tuesday, January 19, 2010
Tuesday, January 20, 2009
க்விஸ் ...ஸ்ஸ்...ஸ்!!!
ஒரு சின்ன க்விஸ் வைக்கலாமா ? எவ்ளோ பேர் சரியான விடை சொல்றாங்கனு பார்க்கலாம். இது விளையாட்டு மட்டும் தான் பரீட்சை இல்லை.இதிகாசங்கள் பற்றிய நமது பொது அறிவு எவ்வளவு தூரம் என்று தான் ஒரு கை பார்த்துடலாமே!
சரி இனி கேள்விகளுக்குப் போகலாம்.
- ராமாயணத்தில் "ஜாம்பவான்" எனும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன?
- அசோகவனத்தில் சீதைக்கு ஆறுதலாய் இருந்த அரக்கர் குலப் பெண் யார்?
- இந்திரனின் தாயார் பெயர் என்ன?
- விஸ்வாமித்திரரின் இன்னொரு பெயர் என்ன?
- சீதைக்கு பதிலாக ராவணனின் அசோகவனத்தில் தானாகவே சிறைப் பட்டதாகக் கருதப் படும் "பெண்ணின் "பெயர் என்ன?
- மஹாபாரதத்தில் "வத்சலா "யார்?
- பலராமனின் அன்னை பெயர் அல்லது வாசுதேவரின் முதல் மனைவியின் பெயர் அல்லது கிருஷ்ணரின் பெரிய அன்னையார் பெயர் என்ன?
- பிருகன்னளை யார்?
- கைகேயியின் பணிப்பெண் யார்?
- பஞ்சகன்யாஸ் (பஞ்ச கன்னிகள் )யார் யார்?
- மஹாபாரதத்தில் நீதிக்குப் பெயர் பெற்ற கதாபாத்திரம் எது?
- கிருபாச்சாரியார் யார்?
- சல்லியன் என்ன செய்தான்?
- சகாதேவன் எதில் தேர்ச்சி பெற்றவனாக பாரதம் சொல்கிறது?
- ராவணன் சீதையை கடத்திச் செல்லும்போது தடுக்க முற்பட்டு அவனுடன் கடுமையாகப் போரிட்டு மடியும் பறவையின் பெயர் என்ன?
அவ்ளோ தான் கேள்விகள்.
பதில்களை டக்கு...டக்குனு அடிச்சு விடுங்க பார்க்கலாம்.
Subscribe to:
Comments (Atom)