Friday, May 28, 2010
கசாகூளம் "கி.ரா " வின் சொல்லாடலுக்கான அர்த்தம்
கி.ரா வின் அந்தமான் நாயக்கர் நாவலில் சில இடங்களில் கி.ரா "கசாகூளம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தார்,அந்த நாவல் வாசித்ததில் இருந்து யோசித்துக் கொண்டே இருந்தேன் ,இதென்ன புது வார்த்தை இதற்கென்ன அர்த்தம் என்று ! இன்று நெட்டில் அ .மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் நாவலைப் பற்றி ஏதேனும் படிக்க கிடைக்கிறதா என கூகுளில் தேடிக் கொண்டிருக்கையில் எதேச்சையாய் கண்ணில் விழுந்தது இந்த கசாகூளம் வார்த்தைக்கான அர்த்தம்.
அர்த்தம் வேண்டுவோர் கீழே வாசியுங்கள் ;
//திருச்சியில், மண்டல பொறியியல் கல்லூரி என்று முன்பு அழைக்கப்பட்ட National Institute of Technology, Trichyயில் ஆண்டு தோறும் நடக்கும் விழா "ஃபெஸ்டம்பர்". அதில் ஒருமுறை நடத்தப்பட்ட ஒரு பல்சுவை நிகழ்ச்சிக்கு கசாகூளம் என்று பெயர் வைத்திருந்தினர் . கேட்பதற்கு வினோதமாகவும், எனக்கு விசித்திரமாகவும் இருந்தது கசாகூளம் என்ற சொல்.ஆங்கிலத்தில், ரிச்சர்ட் க்ளோவர் தொகுத்துள்ள Dag's dictionary பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம் (இல்லையென்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள் :) ). மொழியினால் வெளிப்படுத்த முடியாத சில செயல்களுக்கு, ஒரு சொல்லை தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு தத்துபித்து விளக்கமும் கொடுத்தால் அது ஒரு dagword. உதாரணத்திற்கு, Batbiter என்ற சொல்லினை எடுத்துக் கொள்வோம். Batbiter என்றால் சூப்பராக விசப்பட்ட பந்தில், டூபாக்கூர் மாதிரி விளையாடி, beaten ஆன பிறகு, பேட்டில் தான் ஏதோ பிரச்சினை இருப்பது போல் பார்ப்பவர். சுருங்கக்கூறின் நம்ம சவுரவ் கங்குலி மாதிரி.அதே போல என்னுடைய dagword தான், இந்த கசாகூளம். ரொம்ப சுற்றி வளைக்காமல் கூற வேண்டும் என்றால் Potpourri, Collage, Medley மாதிரி என்று கூறலாம்.//
மேலே குறிப்பிட்டுள்ள விளக்கம் எனக்குப் படிக்க கிடைத்தது இங்கே தான் http://santhoshguru.blogspot.com/2005/04/blog-post.html அந்த வகையில் இந்த வலைப்பதிவாளருக்கு எனது நன்றிகள்.
எப்படியோ கசாகூளம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிந்ததால் அந்த வார்த்தையைப் படிக்கும் போதெல்லாம் உண்டான மண்டைக் குடைச்சல் இன்றோடு தீர்ந்தது.
:)
Subscribe to:
Posts (Atom)