1
"உன் எண்களைத்
தாங்கி வரும்
அலைபேசி
அழைப்புகளை
உனக்கும்
எனக்குமான
உரையாடலுக்குத் தக்க
என் வீட்டு மனிதர்கள் முன்பு
அமைதியாக
"ம்" கொட்டியோ
உரக்கப் பேசி
சிரித்துக் கொண்டாடியோ
இயல்பாய்
கையாழவே
என்றும் எனக்கு ஆசை !!!
ஆனால் ...
நட்பை
நட்பாய்மட்டுமே நோக்க
யாருக்கு இங்கே ஆசை!!!
ஓசையின்றி
அலைபேசியோடு
தனியிடம் நாடும்
ஒவ்வொரு முறையும்
வலிக்கத்தான் செய்கிறது
எனக்கும்
நம் நட்புக்கும் ?!"
2
இல்லையென்று
மறுப்பதற்கில்லை
ஐ லவ் பாரதி
ஐ லவ் ரஜினி
ஐ லவ் மணிரத்னம்
ஐ லவ் கார்ல்மார்க்ஸ்...,
ஐ லவ் டால்ஸ்டாய்
ஐ லவ் ஆல் !
சொன்ன நிமிடங்களில்
அவள் ஒரு திருமதி ;
மறுக்கப் பட்ட
ஒரு காதலுக்கு ஈடாக
இன்று பல காதல்கள்
இது ஒரு புதுக்(பொது)காதல்!!!
3
காதலைப் போல
காமத்தைப் போல,
நட்பும் ஒரு சுகமே...
எல்லைகள்
நிர்ணயிக்கப்படும் வரை!?
4
அவனுக்குள்
தனியாக
ஓராயிரம்
கனவுகள்
அவளுக்குள்
தனியாக
ஈராயிரம்
கனவுகள்
கனவுகளுடனான
தனித்தனிப் பயணங்களில்
கால் தடுக்கி
குப்புற விழும்
அபாயம் வரும் முன்
கல்யாணமென்ற
ட்ராபிக் ஜாமில்
நின்று
நிதானமானார்கள்
"...? ? ? ? ? ...."
அவர்கள்
தம்பதிகள் !!!