விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை
பலூன்கள்
உடைபடும்
நேரத்தில்
கனவுகள்
கலைக்கப் படுகையில்
சர்ரென்று சீறிடும்
கோபத்தின் ஆயுள்
அடுத்த பலூன்
ஊதப்படும் வரையோ ?!
உடைக்கப் படுதலும்
ஊதப்படுதலுமாய்
நகர்கின்றன கனவுகள்
பலூன்களை நோக்கி...!