Sunday, October 24, 2010

சேத்தன் பகத்தின் 2 STATES...




சேத்தன் பகத்தின் 2 STATES


(டூ ஸ்டேட்ஸ்) நாவல் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

அநியாயத்திற்கு பஞ்சாபிகளையும் தமிழ் பிராமின்களையும் கலாய்த்திருக்கிறார் சேத்தன் .

செல்போன்கள் சரியாகப் புழக்கத்தில் இல்லாத காலத்தில் நிகழ்ந்த கதை ,

திருமணத்திற்கு அனன்யாவின் பெற்றோர் சம்மதத்தைப் பெற கிருஷ் மல்ஹோத்ரா அனன்யாவின் தம்பி மஞ்சுநாத்துக்கு ஐ.ஐ.டி கோச்சிங் தந்து கொண்டிருக்கிறான். ஐயோடா !ரொம்ப அநியாயமாகத் தான் இருக்கிறது கிருஷின் சென்னை நாட்கள்.


சென்னையில் சில பள்ளியில் ஆறாம் வகுப்பு முதற்கொண்டு முதல் 5ரேங் வாங்கும் மாணவர்களில் விருப்பமுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து ஐ.ஐ.டி கோச்சிங் தரத் தொடங்கி விடுவார்களாம்,ஆறாம் வகுப்பில் ஐ.ஐ.டி பற்றி கேட்டிருந்தால் எனக்கு ஒரு மண்ணும் தெரியாது. :( மஞ்சுநாத் !!!


அனன்யாவும் கிருஷும் சிரிப்பு மூட்டுகிறார்கள். கல்யாணத்திற்கு பிறகு நடத்த வேண்டிய காரியங்களை(படிப்பதற்கென்று சென்ற இடத்தில் ஒரே அறையை இருவரும் பகிர்ந்து கொள்வது ) சாவதானமாக முன்பே முடித்து விட்டு கல்யாணத்திற்கு முன்பே நடத்த வேண்டிய காரியங்களை ரொம்பப் பாடுபட்டு பிற்பாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களின் சம்மதம் பெறுதல் என்ற பெயரில்!


சேத்தனின் 3 IDIOTS போல இந்த நாவலும் படமாக்கப்படும் எனில்

சென்னை சிட்டி பேங்கில் தனது மேலதிகாரியை பற்றி கிருஷ் தனக்குள் நினைத்துக் கொள்ளும்பகடிகள் .

வேளையில் அமர்ந்த முதல் நாளில் அவனுக்கு கீழ் இருக்கும் 10 ரெப்களில் ஒரு பெண் டாய்லட் செல்லக் கூட அவளுக்கு மேலதிகாரியான கிருஷிடம் அனுமதி கேட்டு வந்து நிற்கும் காட்சி;

முதன் முறையாக அனன்யாவை சென்னையில் அவளது வீட்டில் சந்திக்கப் போகையில் அவளது அப்பா காட்டும் மிலிட்டரி முகம் ;அதையும் சமாளித்து

WHERE IS ANANYA ? என்ற கேள்விக்கு அவரது ரியாக்சனை கிருஷ் உள்வாங்கிக் கொள்ளும் விதம் திரையில் எப்படி படமாக்கப் படுமோ ! தெரியவில்லை.

:))


// Love marriages around the world are simple :

Boy loves Girl . Girl loves Boy

They get Married .

In India there are few more steps ;

Boy loves Girl . Girl loves Boy ;

Boy's family has to love Girl . Girl's family has to love Boy ;

Girl's Family has to love Boy's family .Boys Family has to love Girl's Family ;

Girl and Boy still love each other ,They get Married //

ஆரம்பமே அமர்க்களமாகத் தான் இருக்கிறது! இல்லையா? :))


Nice to Read.