Saturday, January 29, 2011

நாஞ்சில் நாடனின் 'தன்ராம் சிங்'



நாஞ்சில் நாடனின் " சூடிய பூ சூடற்க " தொகுப்பிலிருந்து "தன்ராம் சிங் " (2007 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனில் வெளியிடப் பட்ட கதை"

தனது அலுவலகத்தில் பணி புரிந்த ஒரு கூர்க்காவைப் பற்றி நினைவு கூர்தலாய் புரளும் பக்கங்கள் ; யதார்த்தத்தில் ஒரு கூர்க்கா வேறு திபெத்தியர்கள் வேறு வேறா! நேபாளிகள் மட்டும் தான் கூர்க்காக்கள் என வழங்கப் படுவார்களா? அப்படிப் பார்க்கின் தன்ராம் கூர்க்கா அல்லாத ஒரு கூர்க்கா .தன்ராம் சிங்கில் வாசிக்கும் போது கண் கலங்க வைத்த சில இடங்களை மட்டும் இங்கே தருகிறேன்.

//தன்ராம் சிங் மாத்திரமல்ல ,எந்த கூர்க்காவையும் கடுகடுத்த முகத்துடன் நான் கண்டதில்லை ,முகம் ஏறிட்டுப் பார்த்த உடன் மலரும் சிரிப்பு . ' உன் ஆதரவில் என் வாழ்க்கை என்பது போல்'//

//அவனது ஊருக்குப் பக்கத்தில் பாயும் ஆறொன்று உண்டென்றும் அதன் பெயர் இன்னதென்றும் பலமுறை சொல்லி இருக்கிறான்,எத்தனை யோடஇத்தும் எனக்கதன் பெயர் நினைவுக்கு வரவில்லை,ஆறும் குளங்களும் ,நெல்-கோதுமை வயல்களும் அவன் கனவுகளில் வந்து போகுமாக இருக்கும் .பெடையின் நினைவில் இந்திரியம் சேறாகச் சிந்துமாக இருக்கும்.//

ஒருவேளை தன்ராம் சிங் தென்னாட்டுத் தெருக்களில் இரவுகளில் கோல் தட்டி ,விசில் ஊதித் திரிந்து கொண்டிருக்கக் கூடும்.மாதத்தின் முதல் வாரத்தில் உங்கள் வீட்டின் முன் வந்து சிரித்தபடி நின்றால் அருள் கூர்ந்து அவனுக்கு ஐந்து ரூபாய் தாருங்கள் கனவான்களே!

இப்போது முதல் மாடிக்கு இடம் பெயர்ந்து விட்டாலும் முதலில் கீழ் தளத்தின் முதல் வீட்டில் குடி இருக்கையில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் "ஷாப் " என்று கதவைத் தட்டும் கூர்க்காவுக்கு தவறாது ஐந்து ரூபாய் அளித்து புண்யம் கட்டிக் கொண்டமை மட்டுமே என்னாலான சிறு நற்பணி .

வெறும் ஐந்து ருபாய் நாணயம் அதை கையில் வாங்கிக் கொண்ட ஒவ்வொரு முறையும் கை உயர்த்தி சலாமிட்டு முகம் பார்த்து வெள்ளந்தியாய் சிரிக்கும் கூர்க்காவின் முகம் இன்னும் அப்படியே ஞாபகத்தில்.எந்த ஊர் கூர்க்காவும் ஒருவரே போலிருக்கக் கடவது அவர் தம் முகம் நோக்கிய வெள்ளைச் சிரிப்பாலாமோ! ம்ம்... வெள்ளந்தியான அந்தப் புன்னகையை எதிர்கொள்ள நேர்ந்த ஒவ்வொரு முறையும் நினைத்திருக்கிறேன் பதிலுக்கு ஒரு முறை ஒரே ஒரு முறை நாமும் தான் புன்னகைத்தால் என்னவென்று? சாத்தியப் படவே இல்லை கடைசி வரை .சும்மாவேனும் புன்னகைத்த சுவடாய் கன்னத்து தசைகளை விரித்துச் சுருக்குதல் அத்தனை கடிதோ?!

பல்லாயிரம் மைல்கல் தாண்டி வந்து சொற்ப சம்பளத்திற்கு இந்த ஊர் தெருக்களில் இரவுகளில் அலையும் தோழமை தேடும் கூர்க்காக்களுக்கென்று நலன் நாடும் சங்கங்கள் உண்டோ! அவர்களும் மனிதர்களன்றோ!
குங்குமம் இதழில் எஸ்ரா முன்பொரு முறை கூர்க்காக்களைப் பற்றி அவரது அனுபவங்களை சுவை படப் பகிர்ந்திருந்தார்.

இன்னும் யாரெல்லாம் கூர்க்காக்களைப் பற்றி எழுதினாலும் குறிப்பிட மறவாத ஒற்றை வரியை இதைக் கொள்ளலாம் .

"உன் ஆதரவில் என் வாழ்க்கை என்பது போல்"

புளியமரத்து பேய்கள் (சிறுகதை )

அதீதம் மின்னிதழில் வெளி வந்த எனது சிறுகதை .

அது ஒரு பட்டரைப் பழைய புளிய மரம் தான். பெருத்த விசேஷம் ஒன்றும் இல்லைஅதில்...இத்துப் போன அந்தப் புளிய மரத்தின் நடுத் தண்டில் எக்கச் சக்கமானஆணிகள் திசைக் கணக்கின்றி அடித்து இறக்கப் பட்டிருந்தன.பாரதி அக்கா...சியாமளா சௌம்யா,ஹேமா சகிதம் ஜானா பள்ளிக்கு நடந்து போகையில் பாரதிஅக்காவிடம் பலமுறை இந்தப் புளிய மரத்தை பற்றி வித விதமான கதைகளை காதுகுளிர கேட்டிருக்கிறாள் ,பகலில் காது குளிரும் இரவில் மனம் குளிரும்,இறுக்க போர்வையை தலை முதல் கால் வரை இழுத்து மூடி போதாக் குறைக்குபாட்டியின் இடுப்பைக் கட்டிக் கொண்டு தூங்கினாலுமே பெரும்பாலும்பயத்தில் உடம்பும் மனமும் உதறிக் கொண்டே தான் இருக்கும்.அந்த மரத்தின்ஐவேஜு அப்படி!

இப்படிப் பட்ட புளிய மரத்தை நண்பர்கள் புடை சூழ கடப்பதில் ஜானாவுக்குபிரச்சினை எதுவுமஇருந்ததில்லை ,இன்றைக்குப் பார்த்தா இவளுக்கேஇவளுக்கென்று இந்த மெட்ராஸ் ஐ வந்து தொலைக்கும் ?

பள்ளியில் இருந்து இன்று காலை காட்சியாக "திக்குத் தெரியாத காட்டில்"படத்திற்கு கூட்டிப் போயிருந்தார்கள் ...படம் பார்க்கப் போகாமல் லீவுலெட்டர் எழுதிக் கொடுத்து விட்டு வீட்டில் இருந்திருக்கலாம் , படம்பார்த்து விட்டு வந்தது தான் தாமதம் இந்தக் கூட்டாளி கழுதைகள் "டீச்சர்டீச்சர் ஜானகிக்கு கண் வலி டீச்சர்" என்று போட்டுக் கொடுத்துஎட்டப்பியானார்கள்.அந்தக் கழுதைகளை விடுங்கள் இந்த டீச்சரை படத்தில்பார்த்த முதுமலை காட்டுக்குள் தனியே அனுப்பி தொலைந்து போக வைக்க வேண்டும் .

அந்தக் கடவுள்.கண் வலி எல்லோருக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று இந்த மிளகாமூக்கு பியூலா டீச்சர் கிளாசுக்குள் கால் வைக்கும் முன்னே"அடி லீவுலெட்டர்லாம் கண் வலி சரியானப்புறம் தந்தா போதும்டி,கெளம்பு ...கெளம்புஎடத்தக் காலி பண்ணு என்று துரத்தாத குறையாக வெளியில் அனுப்பி விட்டாள்.

அந்த டீச்சருக்கு என்ன தெரியும் இந்தப் பாடாவதி புளிய மரத்தின் கதையைப்பற்றி!? ஒற்றையாய் அதைக் கடப்பதை நினைத்தாலே ஜூரம் வரும் போலிருந்ததுஜானாவுக்கு.ஜானாவின் வீட்டுக்கு வலப்பக்கம் சின்னதாய் ஒரு கிளப்புக் கடைஇருக்கிறது.முன்பக்கம் கிளப்புக் கடை (கிளப்புக் கடை என்பது ஊர்ப்பக்கம்அதொரு ரெண்டும் கெட்டான் ஹோட்டல் என்று வைத்துக்கொள்ளலாம் )பின்பக்கம்வீடு என்று வைத்துக் கொண்டிருந்தார்கள் அந்த கடைக் காரர்கள்.

கடைக்காரப் பெண் நல்ல சிவப்பி ,புருஷனோ நல்ல கருப்பன் . ஆம்பிளைகளாகப்பிறந்த ரெண்டும் ரெண்டு விதமான ஜாடையில் அம்மையையும் அப்பனையும்உரித்துக் கொண்டிருந்தன. ஜாடை ஒழிகிறது குணத்தில் அப்பனின் அச்சுக்கள்.லேசு பாசாக அந்த வீட்டு ஆண்களின் குரல் காதில் விழும் போதேல்லாமும் ஒரேஅதட்டல் மயமாகத் தான் இருக்கும்.ஒத்தை ஆளாய் அந்தப் பெண் புருஷ அதிகாரம்பிள்ளைகள் அதிகாரம் ரெண்டுக்கும் எப்படியோ ஈடு கொடுத்துக் கொண்டு வாய்மூடி ஊமைச்சி போல இருந்து வந்தாள்.

கேளுங்கள் அந்தச் சிவப்பியம்மாள் ஒவ்வொரு அமாவாசைக்கும் கழுத்துச்சுளுக்குமட்டும் கனத்த கல்லைச் சுமந்து கொண்டு இந்தப் புளிய மரத்துக்கு கொண்டு வரபடுவாள். கூட கோடாங்கி மாத்திரம் உடுக்கை அடித்துக் கொண்டுஅந்தம்மாவைச் செலுத்திக் கொண்டு போய் உச்சந்தலை முடியில் சிலதைபுளியமரத்து நடுத் திண்டில் ஆணி அடித்து அறைந்து விட்டு வருவான்.அதற்கப்புறம் ஓரிரு நாள் அந்தம்மாள் தன் கிளப்புக் கடைக்கு பக்கவாட்டில்ஒதுக்கமாய் இருக்கும் சிமென்ட் திண்ணையில் அயர்வாய் நாளின் முக்காலமும்படுத்தே கிடப்பாள்.

பள்ளிக்கு போகையில் ஒருநாள் பாரதி அக்கா தான் சொன்னாள் ,இந்தம்மாளுக்குப்பேய் பிடித்திருக்கிறதென்று ,தொத்திக் கொண்ட நாட்களில் இருந்தே பிடித்தபிடியில் போவேனா என்கிறதாம் அந்த ரயில் தண்டவாளத்துப் பேய் . ஒவ்வொருஅமாவாசைக்கும் ஆணி அடித்து மாளவில்லையாம். பேய் பிடித்து ஆட்டும்நாட்களில் புருஷனைக் கிட்டக் கண்டால் சங்கைப் பிடித்து கடித்து ரத்தம்உறிஞ்ஜாக் குறையாக ஆத்திரப் படுவாலாம் அந்த சிவத்தம்மாள்.

பாரதி அக்காவுக்கு மட்டும் எப்படியோ எல்லாமும் தெரிந்து விடுகிறது.அவளுடன் பள்ளிக்கு மட்டுமல்ல சாயந்திர தெரு முக்கு விளையாட்டுகளிலும்கூட்டு சேர பிள்ளைகளிடையே போட்டா போட்டி நடக்கும்.அத்தனை பிரபலஸ்திஜானாவின் பாரதி அக்கா.

பியூலா டீச்சர் வீட்டுக்குப் போடி என்றதும் ஜானா ஒன்பதாம் வகுப்பு பிசெக்சனில் இருக்கும் பாரதி அக்காவை தான் துணைக்கு தேடிப்போனாள்,கூப்பிட்டால் பாரதி அக்கா மறுக்கமாட்டாள் தான் ...ஆனால்அன்றைக்கென்று அவளுக்கு மத்தியானப் பீரியடில் கிராப் பரீட்சை வந்துதொலைக்க கணக்கு டீச்சர் எசக்கி கூப்பிடப் போன ஜானாவை வயிற்றைப்பிடித்துக் கிள்ளி;

"ஏண்டி இந்தப் பட்டப் பகல்ல மெயின் ரோட்டோரமா நடந்து போக உனக்கு துணைக்குஆளு வேணுமாக்கும் ,தோலை உருச்சுப் போடுவேன் ,உன்னோட சேர்த்து அவளும்மட்டம் போடணுமோ...தனியாவே போய்க்கோ உன்ன ஒன்னும் பிசாசு பிடிக்காது...போ..போ "

என்று துரத்தி விட்டாள் கிளாசில் இருந்து .

சியாமளா சௌம்யாவைக் கூப்பிடலாம் யாராவது ஒருத்தர் கூட வந்திருப்பார்கள்.ஜானாவுக்கு நாக்கில் சனி ...சியாமளா சௌம்யா ,ஹேமா ,ஜானா எல்லோருமே ஒரேசெக்சனில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில்.முழுப் பரீட்சைவந்தது ,வழக்கப் படி கடைசிப் பரீட்சை முடிந்து அடுத்து ரெண்டு மாசம்லீடுலே ...என்று சந்தோசம் பீரிட்டு பாய வீட்டுக்கு நடக்கையில் கேலி போலஎதோ பேச்சு வாக்கில் சியாமளாவைப் பார்த்து சியாமி நீ அடுத்த வருசமும்கோடடடிச்சு எழாப்புல தான் உட்காரப் போற என்று சொல்லி விட்டு நாக்கைக்கடித்து அழகு காட்டினாள்.

இது சியாமிக்கு பிடிக்கவில்லை.போதாக் குறைக்கு அவள் ஏற்கனவே ஒரு வருஷம்கோட் அடித்து தான் உட்கார்ந்திருந்தால் அதே வகுப்பில் ,அவளுக்கஅடுத்தவகுப்பிலிருந்த தங்கை சௌமி; அக்காவுடன் ஒரே வகுப்பில் வந்து சேர அதுவேஅவளுக்கு இழிமானமாய் இருந்து வந்தது. ஜானா வேறு இப்படிச் சொல்லி விட்டாளாரொம்பக் கொதித்துப் போனாள் சியாமி.
சொல்லி வைத்தார் போல அவள் அந்த வருசமும் எழாப்பில் கோட் அடித்து அங்கேயேஇருக்க வேண்டியதானது.சௌமியும் ஜானாவும் எட்டாப்பு போனார்கள் .கருநாக்குஜானா நீ சொல்லித் தாண்டி எங்கக்கா பெயிலாப் போனா என்று சௌமியும்ஜானாவுடன் கா விட்டு இந்த வருடம் முழுக்க பேசாமலே இருந்து வந்தாள் .

ஆகக் கூடி இப்போது ஜானா கூப்பிட்டால் ரெண்டு கழுதைகலுமே மூஞ்சியைக் கூடதிருப்பப் போவதில்லை. கேளாமல் இருப்பதே நல்லது என்றெண்ணிய மாத்திரத்தில்ஜானாவுக்கு மறுபடியும் புளிய மரத்துப் பேய்களின் ஞாபகம் வந்துமருட்டியது. கூடவே அங்கே நித்ய கடமையை ஆணி அடித்துக் கொண்டிருக்கும்சிவத்தம்மாள் ஞாபகமும் வந்து தொண்டை வறண்டது .எண்ணெய் கேனில் கொண்டுபோயிருந்த தண்ணீரைக் கொஞ்சம் குடித்து விட்டு மூடி கூடையில் வைத்துக்கொண்டாள் .

இதொண்ணும் உச்சிக் காலமில்லை அதனால் பேய்கள் உக்கிரமாய் ஒன்றும் இருக்கப்போவதில்லை ..அதனால் தனியே போனாலும் பரவாயில்லை என்று தனக்குத் தானேசமாதானம் சொல்லிக் கொள்ளப் பார்த்தாள் .
அதற்குள் ரெண்டாம் மணி அடித்து கிளாசுக்குள் வந்த பியூலா டீச்சர் ...
முகத்தை சுளுக்கிக் கொண்டு
"ஏண்டி இன்னுமா நீ போகல?கிளாஸ்ல எல்லாத்துக்கும் கண்ணு வலிய ஓட்டவச்சுப்பிடுவ போல இருக்கே. என்னடி அக்கப்போரு உன்கூட ...இப்போ நீ போகப்போறியா இல்லா பெரம்புல ரெண்டு சாத்து சாத்தனுமா ?"

என்று கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் சொல்லவே ஜானாவுக்கு அவமானத்தில்லேசாகக் கண் கலங்கியது .இந்த டீச்சர் எப்பவுமே இப்படித் தான் .பிள்ளைகள்மாட்டிக்கொண்டால் கிண்டிக் கிழங்கேடுக்காமல் விடவே மாட்டாள் ...என்றுமனசுக்குள் வைது கொண்டே தன் புத்தகப் பை மதியச் சாப்பாட்டுக் கூடைசகிதம் பள்ளியில் இருந்து வெளியில் வந்து வீட்டை நோக்கிப் போகும் மெயின்ரோடில் நடக்க ஆரம்பித்தாள்.

ஈசன் நோட்ஸ் கடை கடந்து போனது ...அம்பாள் மெடிகல்ஸ் ,அய்யனார் லாரி செட்குருவி குளம் ஸ்பீக்கர் செட் கடை.ரோகினி பாத்திரக் கடை எல்லாம்ஒவ்வொன்றாய் தாண்டிப் போய்க் கொண்டிருந்தன. மெயின் ரோட்டில் வாகனங்கள்விரைந்த படி இருந்தன.

அப்பா இந்நேரம் இந்தப் பக்கம் டி. வி.எஸ் பிப்டியில் வந்தால்தப்பித்தோம் பிழைத்தோம் என்று எத்தனை சந்தோசமாய் இருக்கும் ,ஒரு நிமிஷம்இப்படி நினைத்து விட்டு பிறகு அவர் எப்படி இந்நேரம் இந்தப் பக்கம் வரமுடியும் ?என்ற ஏமாற்றத்தில் முகம் கசங்கினால் ஜானா.
பக்கத்து வீட்டு செக்யூரிட்டி அங்கிள் கூட சாயந்திரமாகத் தான் இந்தப்பக்கமாக வண்டியில் போவார். இப்போது தெரிந்தவர்கள் யாரும் போக வாய்ப்பேஇல்லையே ஜானா யோசித்தவாறு போய்க் கொண்டிருந்தாள் .

ஜெருசலேம் சபை ..என்று போர்டு போட்ட சின்னக் குடில் ஒன்றுவந்தது.அங்கிருக்கும் ஒரு ஊழியக்காரப் பெண்ணை ஜானாவுக்கு தெரியும்என்பதால் பயத்தில் இருந்து தப்பிக்க கொஞ்ச நேரம் அங்கே நுழையலாமா என்றுயோசனை வந்தது .

குடிலுக்கு நேராகப் போய் எட்டிப் பார்த்தால் அங்கே சின்னப் பூட்டு ஒன்றுதொங்கிக் கொண்டிருந்தது.கண்களில் ஏமாற்றத்துடன் ஜானா மேலே நடந்தாள்.

அடுத்து பத்தேட்டில் முத்து மாரியம்மன் கோயில் வரும்.இந்நேரம் கோயில்பூட்டி இருக்கும்.

அடுத்து சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளிக்கூடம ஒன்று வரும் அதைத் தாண்டினால்வெறும் பொட்டல் தான் கொஞ்ச தூரத்துக்கு வீடுகளே இருக்காது ...
அதைக் கடந்தால் போதும் பதினைந்து நிமிசத்தில் வீட்டுக்குப் போய் விடலாம்.

சி.எஸ்.ஐ பள்ளிக்கு நேராக வருகையில் ஒரு ஈக் குஞ்சைக் காணோம் பள்ளிமைதானத்தில், மட்ட மத்த்யானத்தில் பிள்ளைகள் பாடம் கவனிப்பது போலபுத்தக மறைப்பில் கண்ணைத் திறந்த வாக்கில் தூங்குகிறார்கலாக்கும் தன்னைப்போலவே என்று நினைத்துக் கொண்டே அடுத்த எட்டை எடுத்து வைக்க பலக்கயோசித்துக் கொண்டு அவள் சாலையின் வளமும் இடமுமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் .

அப்புறம் புளிய மரம் தான் .

அதைக் கடந்தால் போதும் பதினைந்து நிமிசத்தில் வீட்டுக்குப் போய் விடலாம்.

சி.எஸ்.ஐ பள்ளிக்கு நேராக வருகையில் ஒரு ஈக் குஞ்சைக் காணோம் பள்ளிமைதானத்தில், மட்ட மத்த்யானத்தில் பிள்ளைகள் பாடம் கவனிப்பது போலபுத்தக மறைப்பில் கண்ணைத் திறந்த வாக்கில் தூங்குகிறார்கலாக்கும் தன்னைப்போலவே என்று நினைத்துக் கொண்டே அடுத்த எட்டை எடுத்து வைக்க பலக்கயோசித்துக் கொண்டு அவள் சாலையின் வளமும் இடமுமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் .

தூரத்தே ஒரு லாரி தவிர்த்து வேறு எந்த அரவத்தையும் காணோம் சாலை நெடுக ...

கூப்பிடு தூரத்தில் புளியமரம் ,சுற்றுப் புறம் பெருத்த அமைதியில் உறைந்துவெயிலில் உறங்கும் பாவனையில் மரங்களின் இலைகள் கூட அசையக் காணோம்.

புளிய மரம் நெருங்க நெருங்க கிளைகளில் காய்ந்து சருகாகிப் போன செவ்வந்திமாலைகள் கண்ணுக்குப் புலனாகின. இசக்கிக்கு படைத்திருக்க கூடும் யாரோ!உடைந்த பாட்டில்கள் ஒரு பக்கம் ஓரமாகக் கிடந்தன. இன்னும் கொஞ்சம் நெருங்கதண்டில் அடிக்கப் பட்டிருந்த ஆணிகள் கண்ணில் அறைந்தன .ஆணிகளைக் கண்டால்உள்ளபடிக்கு பயம் இருக்குமிடத்தை விட்டு பெருங்கொண்டதாய் எழுந்து ஆடஆரம்பித்து விடுகிறது.என்னவோ ஆணி தன் உச்சந்தலையிலேயே அடித்தார் போல.

.சாலை விதிக்கொப்ப இடப்பக்கமாகவே சென்று கொண்டிருந்த ஜானா என்னவோபுளிய மரத்தின் கண்ணில் மண்ணைத்தூவிய பாவனையில் வலப்புறத்திற்கு மாறிக் கொண்டால் பதுங்கிப் பதுங்கி.எல்லாமொரு ஜாலக் தான் .பேய் தொற்றிக் கொள்ள நினைத்தால் எப்படிவேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் தொற்றிக்கொள்ளும் என்று சித்திசொல்லி இருக்கிறாள் முன்பே.

வலப்புறத்து ரோட்டோரோம் ஒரு வற்றிப் போன ஓடை உண்டு ,இப்போது வெறும்வெள்ளை மணல் பரப்பு தான் கண்ணைக் கூச வைக்கும்,மழைக்காலங்களி மட்டும் எதோகொஞ்சம் நீரோடும். பாதாளச் சாக்கடைக்கு என குழி தோண்டுகையில் பதிக்காமல்மீந்த பெரிய பெரிய குழாய்கள் நாலைந்து அந்த ஓடையில் தான் நிறுத்தப்பட்டிருந்தன. ,வெயிலுக்கு அணைவாக சில நேரங்களில் ஆடு மாடுகள் நாய்கள்அங்கு ஒதுங்கும் .

பேய் பயத்திலும் பெரிய பயமாக இப்போது நாய் பயம் வேறு. தெரு நாய்கள்பெருத்துப் போன நாட்கள் அவை.

ஜானா அந்த ஓடை விளிம்பு வரை போகாமல் அதை ஓட்டிக்கொண்டே தன வீட்டைப்பார்த்து சலனத்தோடு நடக்கையில் சலனமே இல்லாமல் தான் ஓடும் வெயிலும்காய்ந்து கொண்டிருந்தன.

வியர்த்து வழிந்த முகத்தை புறங்கையால் துடைத்துக் கொண்டு எட்டு குயர்பத்து குயர் நோட்டுகளும் புத்தகங்களும் திமிறிய தன் பையை திணறலுடன் தோல்மாற்றிப் போட ஒரு நிமிடம் நின்றவள் தனக்குப் பின்புறமிருந்து முன்னோக்கிநீண்ட பெரிய நிழலைக் கண்டு சன்ன விதிர்ப்புடன் திடுக்கிட்டுப் போனாள்.

ஐயோ பேய் தான் வந்துடுச்சா !!! கழுத்தின் ஓம் சக்தி டாலரை கை இருக்கப்பற்றிக் கொள்ள கண்களை இருக்க மூடிக் கொண்டு
"ஓம் சக்தி ...பரா சக்திஓம் சக்தி பரா சக்தி "

என்று முனு முணுத்துக் கொண்டே அழாக்குறையாக ஆணி அடித்தார் போல அசையாது நின்றவள்இமைகளின் மேல் நிழல்நீங்கி வெள்ளை வெயில் சுடவும் மீண்டும் கண்ணைத் திறந்தாள்
பேயும் முனியும் தான் உள்ளே சதா எட்டி எட்டிப் பார்த்து அரட்டிக்கொண்டிருக்கின்றனவே.

ஆனால் அந்த நிழல் பேயுமில்லை ...முனியுமில்லை
பக்கத்து கிளப்கடையின் சொந்தக்காரி அந்த சிவத்தம்மாவின் கருத்த புருஷன்தான் ஜானாவை தாண்டிக் கொண்டு ரோட்டில் போய்க் கொண்டிருந்தான் .

போன மூச்சு திரும்பி வந்தது.

வீட்டுக்குத்தான் போகிறான் போலும் .இந்த ஆளைத் தொடர்ந்து போனால் போதும் வீடு வரை.

அப்பாடா என நிம்மதி பெருமூச்சுடன் அவன் பின்னே நடையை எட்டிப் போடப்போகையில் பின்னால் மறுபடி கொலுசுச் சத்தம் .
ஏதடா துன்பம் என்றெண்ணும் முன் ஓடைப்புறத்து குழாய் ஒன்றில் இருந்துநைலக்ஸ் சேலை இழுத்து விட்டுக் கொண்டவளாய் பெட்டிக் கடை மீனாட்சிஜானாவுக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தாள் .அப்பாடி இனி பயமே இல்லை .ஒற்றைக்கு ரெண்டு பேர் துணை கிடைத்த பின் என்ன பயம்?

முன்னால் போய்க்கொண்டிருந்த கருப்பன் ஒரு நிமிஷம் திரும்பி ஜானாவைப்பார்த்து சிரித்தான்.

பதிலுக்கு ஜானாவும் சிரித்து வைத்தாள்.

ஒரு வழியாய் வீடு வந்தது .

புத்தகப் பையை மூலையில் கடாசி விட்டு ஓட்டமாய் போய் அம்மாவிடம் தான்புளிய மரத்தைக் கடக்கப் பட்ட கஷ்டத்தை எல்லாம் சொன்னால் தான் மனசாறும்போலிருந்தது அவளுக்கு.

துவைக்கும் கல் மேடையில் சாய்ந்து கொண்டு அம்மா சோப்பு போட போடப்நுரைக்குமிழிகளை கிள்ளிக் கிள்ளி உடைத்துக் இவள் சொல்லச் சொல்ல சன்னப்புன்னகையோடு கேட்டுக் கொண்டே வந்த அம்மா கடைசியில் கருப்பனையும்மீனாட்சியையும் பற்றிச் சொல்லும் போதுமட்டும் களுக்கென சிரித்து ;."ம்ம்...அப்போ நிஜப்பேய்க கூட பயமில்லாம நடந்து வந்தன்னு சொல்லு "என்றவாறு பிழிந்த துணிகளை உலர்த்த கொடிப் பக்கமாக நகர்ந்தாள் .

"நிஜப் பேய்களா" ஏம்மா ? ஜானாவின் முதிராத குழந்தை முகம் கேள்வியில்விரியக் கண்டு அம்மா யோசனையுடன் அதொண்ணுமில்லை பாட்டி கேப்பமாவுச்சீடை பண்ணிருக்கா போய்த் தின்னுட்டு கண்ணுக்கு மருந்து வாங்கிட்டு வரச்சொல்லி அப்பாக்கு போனப் போடு போ .என்று பிளாஸ்டிக் வாளியுடன் கிணற்றுப்பக்கம் குளிக்க தண்ணீர் இறைக்கப் போய் விட்டாள் .

பாட்டி தந்த கேப்பச் சீடையை மென்று விழுங்கும் போது ஜானாவுக்குகுழப்பமாக இருந்தது ;

அந்த கிளப்புக் கடை சிவத்தம்மா புருஷன் தன்னைப் பார்த்து சிரித்தானாஇல்லை பெட்டிக் கடை மீனாட்சியைப் பார்த்து சிரித்தானா? அம்மாவைப் போலவேகளுக்கென்று சிரித்துக் கொண்டு "நிஜப் பேய்கள் " என்று ஒருமுறை மெல்லச்சொல்லிப் பார்க்கையில் திடீரென்று தான் பெரிய மனுஷியானார் போல் ஒருபிரமை வந்தது ஜானாவுக்கு.


அன்றைக்கு அமாவாசை சிவத்தம்மாள் வழக்கம் போல் புளிய மரத்தில் ஆணிஅடிக்கக் கிளம்பிக் கொண்டிருகிராளென உடுக்கை சத்தம் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தது ஊருக்கும் ஜனாவுக்கும்.