பண்டைய இந்தியா ( part -2 )
For part - 1 click this link ;
http://karthigavasudev.blogspot.com/2010/11/view.html
யதுகுல கரிய வீரன் : ( Pages from History )
குரு வம்சத்து இளவரசர்கள் பாண்டவர்கள் மற்றும் கௌவரவர்களைப் போல யது குல தலைவனாக இருந்த மானிடனே கிருஷ்ணன் (கரிய நிறத்தவன்) ,இந்த கிருஷ்ணன் மகாபாரதத்தில் தெய்வ அந்தஸ்தைப் பெற்றது எங்கனம் என்ற விவரிப்பு சரித்திரத்தில் எங்கும் காணோம். ஆனால் கிருஷ்ணன் கோரஸ் ஆங்கிரச எனும் முனிவரின் மானுட சீடனாக இருந்தான் என வரலாறு சான்று காட்டுகிறது
ஆரிய மன்னர் குடும்பத்து இளவரசர்கள் இந்த குருக்களில் எவராவது ஒருவரிடம் 12 ஆண்டுகள் குருகுல வாசம் செய்து கலைகளைக் கற்க வேண்டும் என்பது வேத கால நியதி. அங்கே குருகுலத்தில் அவர்களுக்கு கற்பிக்கப் பட்டவை வேதங்களோடு முக்கியமாகப் போர் தந்திரங்கள்,போரிடும் முறைகள் ,யானை,குதிரை முதலான விலங்குகளை கையாளும் ,பழக்கும் முறைகள் ,ஒவ்வொரு இளவரசனும் தான் சார்ந்த குலத்தின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் தினமும் தத்தமது முன்னோர்களின் புகழைப் பாடும் பாடல்கள் போன்றவையே.
யது குல கிருஷ்ணன் வாழ்ந்த காலமாகக் கருதப் படுவது வேத காலம் ,ஆனால் அதற்கும் முன்பே வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தாங்கர்கள் எனும் பழங்குடியினர் ,இவர்களது தொழிலும் மேய்ச்சல் தொழிலே ,ஆயர்களைப் போலவே தான் அப்படியெனில் யது குல ஆயர்களும் தாங்கார் குல மக்களும் ஒருவரே தானா என்ற ஐயம் வர நேர்கிறது, இருக்கும் பட்சத்தில் யது குல ஆயர்களைத் தான் இந்தியாவின் மிகப் பூர்வ பழங்குடிகளாகக் கருத முடியும்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு பிரத்யேக ஆயுதம் உண்டென்பது தெரியும் தானே?!
கிருஷ்ணனின் ஆயுதம் என்ன? சக்ராயுதம்
பலராமனின் ஆயுதம் என்ன? ஏர் கலப்பை
கிருஷ்ணனின் சக்ராயுதம் வந்த கதை :
வேத காலத்திற்கு முன்பிருந்த காலத்தில் சக்கரப் படை எறிதல் என்பது போர்முறைகளில் ஒன்றாக இருந்தது ,தட்டையான கனத்த சக்கரம் போன்ற இந்த ஆயுதத்தை விட்டெறிந்தால் பகைவர்களின் தலையை அறுத்து வீழ்த்தும் அளவுக்கு அது கூர்மையானது ,இது வேத காலத்திற்கு உரியதல்ல,புத்தர் தொன்றுவதகு வெகு காலம் முன்பே ,இது வழக்கொழிந்து போய்விட்டது .
ஆனால் மீர்சாப்பூர் மாவட்டத்தில் காணப்ப்படும்குகைச்சித்திரம் ஒன்றில் ஒரு தேரோட்டி அது போன்றதோர் சக்ராயுதத்தால் பூர்விக குடிமக்களைத் தாக்கும் காட்சி உள்ளது.இது கிருஷ்ணனைப் பற்றி அறிவதற்கான மிகச் சிறந்த தொல்பொருள் சான்றென நம்பப்படுகிறது.
பலராமனின் ஏர் கலப்பை :சேகரித்துக் கொண்டு காடுகளில் அலைந்து திரிந்து ஆநிரைகளை (கால்நடைகளை மேய்த்துக் கொண்டு) நாடோடிகளாக வாழ்ந்த பூர்வ குடிமக்கள் காடுகளைத் திருத்தி விவசாய நிலங்களாக மாற்றுகையில் ஏர்கலப்பை முக்கியத்துவம் பெறுகிறது,பூர்வ பழங்குடியினர் நாடோடி வாழ்வு முறையை விட்டு பழங்குடி விவசாய முறைகளைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த காலம் என இதைக் கணக்கில் எடுத்தால் பலராமனுக்கு ஏர்கலப்பை ஆயுதம் பொருந்தி வருகிறது தானே!
கிருஷ்ணன் மதுராவை ஒட்டிய கோகுலத்தை விட்டு தன் கூட்டத்தாரோடு பூலி பெயர்சிக்காக (இதற்கு தனியே விளக்கம் தர வேண்டும் )
பூலி பெயர்ச்சி :
கால்நடைகளை மேய்த்துக் கொண்டு காடுகளில் வேட்டையாடியும் இயற்கையாய் கிடைத்த பழங்களை உண்டும் வாழ்ந்த மனித கூட்டம் அல்லது குழுக்கள் மாரிக் காலத்தின் போது முன்னர் இருந்த இடங்களை விட்டு அதிகமாக ஈரம் தங்காத தரைப் பகுதிகளை நோக்கி இடம் பெயர்வதையே பூலி பெயர்ச்சி என்கிறார்கள்) இந்த பூலித் தடங்கள் பின்னாட்களில் மிகச் சிறந்த வர்த்தகப் பாதைகளாக மாறினவாம். மிகச் சிறந்த உதாரணங்கள் ;
தட்சிணா பாதம் (தெற்கு நோக்கிய காலடித் தடங்கள் அல்லது பாதைகள்) ராமனின் தெற்கு நோக்கிய பயண வழிகளைக் கூறலாம் .
உத்திரா பதம் (மேற்கு நோக்கிய காலடித் தடங்கள்)
வடக்கே மௌரிய சாம்ராஜ்யம் நிலை பெற்ற போது தெற்கில் அத்தகைய சாம்ராஜ்யங்கள் அமையாமல் போனதற்கு தெற்கை (தீப கற்பத்தை ) அடைய வடக்கில் இருந்து வருபவர்கள் கோதாவரி நதியை ஒட்டிய அடர் வனங்களையும் கர்னாடக குடகு மலைக் காடுகளையும் தாண்டி வர வேண்டிய சூழல் இருந்தது .காடுகளை அழிப்பது அத்தனை லேசுப் பட்ட காரியமில்லை அதனால் தெற்கில் நிலையான அரசுகள் தோன்ற சற்றே காலங்கள் நீண்டிருக்கலாம்.
கிருஷ்ணனைப் பற்றி பேசவாரம்பித்து விட்டு எங்கோ போய்விட்டேன்.
கிருஷ்ணன் கோகுலத்தை விட்டு இப்படி பூலி பெயர்ச்சியாக அடுத்து சென்ற இடத்தின் பெயர் பிருந்தா வனம் (விருந்தா வனம் ) விருந்தா தான் பிருந்தா என்றானது. பிருந்தா அல்லது விருந்தா என்பவள் ஒரு தெய்வீக கன்னி.அல்லது எதோ ஒரு தாய் தெய்வத்தின் மனித வாரிசு எனக் கொள்க . இந்தப் பெண்ணை கிருஷ்ணன் மணந்து கொண்டு பிருந்தாவனத்தை அடைகிறான். இந்த பிருந்தாவின் பிரதிநிதியாக தெய்வீக துளசி செடி குறிப்பிடப் படுகிறது. ஆண்டு தோறும் தவறாது கிருஷ்ணன் இந்த துளசி செடியை மணக்கும் சம்ரதாயம் இப்போதும் வழக்கத்தில் இருக்கிறதாம்.
இந்த கதைக்கான பூர்வ மூலம் பண்டைய மனிதர்கள் பின்பற்றிய பலி சடங்குகளில் இருந்து ஆரம்பமாகிறது. அதைப் பற்றி பிறகு பேசலாம்.
ஜாதி வந்த கதை : (Pages From History ...)
பூர்வ இந்தியப் பழங்குடி வம்சங்கள் :
மோர் ஓரான் சந்தால் வஜ்ஜா தாங்கர்கள் லிச்சாவிகள்
மேற்சொன்ன மோர் வம்சத்தில் மோர் என்ற சொல் மயிலைக் குறிக்கிறது. மேலும்
இந்த மோர் பூர்வ பழங்குடியினர் தான் மகதத்தில் முதல் விஸ்தீரணமான நிலையான இந்தியப் பேரரசை அமைத்த மௌரியர்கள் .இவர்கள் மூர் வம்சத்தார் என்றும் அழைக்கப் பட்டார்கள். பூர்வ இந்தியப் பழங்குடி மன்னன் சந்திர குப்த மௌரியர் இந்தோ ஆரியப் பழங்குடி வம்சமான லிச்சாவி இளவரசி குமார தேவியை மணக்கிறார். இந்த சந்திரகுப்தரின் அவையில் இருந்த மதியூக பிராமண அமைச்சர் கௌடில்யர். இவர் எழுதியதே " அர்த்தசாஸ்திரம் ".
மகத ராஜ்யத்தைப் பற்றி பிறகு பேசலாம்.
" மூர் " பழங்குடி சார்ந்து மேலும் சில செய்திகள் ;
அதாவது இந்தப் பழங்குடிப் பெயர்கள் அனைத்துமே முதன் முதலில் மனிதன் வேட்டையாடி உணவைச் சேகரித்து காட்டுக்குள் அலைந்து திரிந்து வாழ்ந்த காலத்தே ஒரு குழு பிற குழுக்களிடம் இருந்து வேறுபடுத்த தங்களது வேட்டைப் பொருளை அல்லது பிராணியை வைத்து குலச் சின்னங்களை உருவாக்கிக் கொண்டார்கள் என்பது தான் வர்ணாசிரம முறைக்கு அடிப்படை.
அப்படியானால் மேற்கண்ட தகவல்களை வைத்துப் பார்த்தால் மோர் வம்சத்தை அல்லது குலத்தை சார்ந்த பழங்குடிகள் ஆதியில் மயில் வேட்டையில் பிரசித்தி பெற்றவர்களாக இருந்திருக்கலாம்.
மோர் வம்சத்தினர் ஆண்ட பகுதி மகதம் தற்கால பீகார் மாநிலம் ,இதன் தலைநகர் பாட்னா தான் அப்போதும் பிரதான தலைநகராக இருந்துள்ளது, இது தவிர தட்ச சீலம் மற்றும் உஜ்ஜயினி எனும் இரண்டு துணை தலைநகரங்களும் இருந்தன மௌரியர்களுக்கு .சந்திர குப்த மௌரியரின் மூன்றாம் தலைமுறையாக அசோகர் வருகிறார். இவரது தந்தை பிந்து சாரர்.
சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவுக்கு படை எடுத்து வந்த அலெக்சாண்டர் தாம் வென்ற இந்தியப் பகுதிகளின் பிரதிநிதியாக செல்யூகஸ் நிகேடரை நியமித்து விட்டு அவர் மாசிடோநியாவுக்குப் பயணித்து இடையில் பாபிலோனியாவில் நோய் வாய்ப்பட்டு மலேரியாவில் இறந்து போகிறார்.
அந்த செல்யூகஸ் நிகேடரின் மகளை பிந்து சாரர்(சந்திர குப்தரின் மகன்) மணந்து கொள்கிறார். இதனால் கிரேக்க மௌரிய உறவு பலபடுகிறது. ஆனால் சக்ரவர்த்தி அசோகரின் தாய் ஒரு கிரேக்கப் பெண்ணாய் இருக்க வாய்ப்பில்லை என சரித்திரம் குறிப்பிடுகிறது .
மகதர்கள் பெரிதாய் ஜாதிகளை மதிக்கிறவர்களாக இல்லை ,அவர்கள் தங்களது ராஜீய விஸ்தீரனத்திற்காக பழங்குடிகளிலும் திருமண உறவு வைத்துக் கொண்டார்கள் .குப்தர்களும் அப்படியே உதாரணம் பிந்துசாரரின் கிரேக்க மனைவி .பண்டைய கிரேக்கர்களைப் போல அல்லாது எல்லைப் புறத்து மாசிடோனியர்கள்(அலெக்சாண்டர் ) கூட பெரிதான ஜாதிப் பற்றுடையவர்கள் அல்லர்.