Friday, June 8, 2012

இந்திரா பார்த்தசாரதியின் "கிருஷ்ணா,கிருஷ்ணா"

இந்திரா பார்த்தசாரதியின் "கிருஷ்ணா,கிருஷ்ணா"




லைட் ரீடிங் ஆனா ஹெவி கன்டென்ட். கடினமான விசயங்களை இத்தனை எளிமையா சொல்லத் தெரிஞ்சிருக்கறது ஒரு ப்ராப்தம்.சுஜாதா வைப் போலவே இ.பா வையும் ஜஸ்ட் லைக் தெட் வாசித்துக் கடக்க முடிவது வாசகர்களுக்கு சந்தோசமான அனுபவமாக இருக்கலாம்.
இந்த சியமந்தக மணி பத்தின கதை முழுசா தெரியாமலே இருந்தது எனக்கு ,இதென்ன இப்டி ஒரு கிளைக் கதை பாரதத்துல எங்க வருது ,ஏன் வருதுன்னு பல நாள் யோசிச்சும் தேடிப் படிக்கத் தோணல,இதை வாசிச்சதும் தீர்ந்தது.அதே போல ஜரா சாந்தன் கதை .எல்லாக் கிளைக் கதைகளையும் படிச்சு முடிச்சதும் ஒரு சின்ன ஜெர்க்.அடடா எல்லாக் கதையையும் தான் சிறுவர் மலர் படக்கதையா அப்போவே Try பண்ணி இருக்காங்களே.அதெல்லாம் தனித் தனிக் கதைன்னு இல்ல இருந்தோம்,ஆகா இதெல்லாம் மகா பாரதத்துல இருந்தும் பாகவதத்துல இருந்தும் பிச்சு போட்ட பரோட்டான்னு தெரிஞ்சதும் இன்னும் சந்தோசமா இருந்தது.

அப்படி பிச்சுப் போட்டப் பட்ட பரோட்டாக்கள் இதோ;

அநிருத்தன் உஷா கதை
காந்தாரி கல்யாணக் கதை
சியமந்தக மணி /ஜாம்பவதி கதை
சத்ய பாமா/நரகாசுரன் கதை
ருக்மிணி கல்யாணம்
ஹிடிம்பி /கடோத்கஜன் கதை
அபிமன்யூ வத்சலா கல்யாணம்
பிருகன்னளை கதை
உத்தரா கல்யாணம்
காளியமர்த்தனம்
பிரத்யும்னன் கதை etc ...etc ...

இதுல என்ன விசேஷம்னா தினம் பெட் டைம் ஸ்டோரிஸ் சொல்ல கதைப் பஞ்சம் தீர்ந்தது .குழந்தைக்கு சொல்ல மாரலாவும் சில விஷயங்கள் "கிருஷ்ணா,கிருஷ்ணா" தேடி எடுக்க முடியுது. 

அது சரி எப்போ பார் மாரல்...மாரல் ..மாரல் தானா.அது இல்லாம கதையே சொல்ல முடியாதா,இதென்னா எந்திரத் தனம்னு நினைச்சிடப் படாது மாரல் இல்லைன்னா உலகமே இல்லை,மனுஷங்க இல்லை.நீங்க இல்லை,நான் இல்லை ஏன் நண்டு சுண்டு கூட இருக்க முடியாது.இங்க கிருஷ்ணன் மாறல்னு எதைச் சொல்றான் தெரியுமா ? எது நமக்கு சௌகர்யமானதோ அது நியாயம் ,அதுவே தர்மம் ,எது நமக்கு அசௌகர்யம் தரக் கூடியதோ அது அநியாயம்,அதர்மம் .என்று. இது எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய வார்த்தையாச்சே. சௌகர்யமா இருக்கத்தானே எல்லாரும் விரும்பறோம்.பிறகென்ன இது நல்ல மாரல் தான். 

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் ஓவியர் ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் நாவலில் "நச்" ரகம் .

வெளியீடு -கிழக்கு பதிப்பகம் 
விலை ரூ -90