Monday, December 8, 2008

இந்த வார ஜூனியர் விகடனில் வெளிவந்த பயனுள்ள தகவல்

இந்த வார ஜூனியர் விகடனில் வந்த பயனுள்ள செய்தி :-

சென்னை அண்ணாநகர் சிந்தாமணியில் கிளினிக் வைத்திருக்கும் பல் டாக்டர் .கோபி கிருஷ்ணன் புதிதாக ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறார்.இதற்காக அவரை மருத்துவக் கழகம் பாராட்டியதோடு அவரது கண்டுபிடிப்பையும் பொது மக்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளது .

சிறுவயதில் எல்லோருக்கும் முளைத்த பால் பற்கள் ஆறிலிருந்து ஏழு வயதிற்குள் விழுந்து அதன் பின் மறுமுறை பல் முளைக்கும் ,இது எல்லா மனிதர்களுக்கும் இயற்க்கை .இப்படி இரண்டாவதாக முளைத்த பற்கள் ஏதேனும் விபத்திலோ அல்லது தற்செயலாகவோ உடைந்து விட வாய்ப்பிருக்கும்...அப்படி உடையும் பற்கள் இயற்கையாக மறுபடி முளைக்க வாய்ப்பு இல்லை .

உடைந்த பற்களை எடுத்துக் கொண்டு பல் டாக்டர்களிடம் ஓட வேண்டும்.குறிப்பிட்ட நேரத்துர்க்குள் அந்தப் பற்களை மறுபடி ஈறுகளில் வைத்து பொருத்த இயலாவிடில் செயற்கைப் பல் செட் தான் பொருத்த வேண்டும். முன்பெல்லாம் இப்படி விபத்தில் பல் உடைந்தவர்கள் உடைந்த பற்களை ஐஸ் ...அல்லது பாலிதீன் பைகளில் போட்டு எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் ஓடுவார்கள் .

குறிப்பிட்ட நேரத்திற்குள் போய் சேர முடியாவிடில் அந்தப் பற்களை மறுபடி பொருத்த முடியாதே...அவற்றின் உயிர் செல்கள் இறந்து விடும்.பிறகு குப்பையில் தான் போட வேண்டும் .ஆனால் இப்போது டாக்டர் கோபி கிருஷ்ணன் கண்டுபிடித்த முறையின் படி குறைந்தது இரண்டிலிருந்து ஆறு மணி நேரம் வரை உடைந்த பற்களின் உயிர் செல்களைப் பாதுகாக்கலாம் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது .

பற்கள் உடைந்ததும் அவற்றை உடனடியாக இளநீரில் போட்டு எடுத்துக் கொண்டு மருத்துவரை அணுகலாம் .இளநீரில் உள்ள உயிர் சத்துக்கள் உடைந்த பற்களின் உயிர் செல்களை இறந்து விடாமல் காக்க உதவுகின்றனவாம் .இது ஆராய்ச்சி மூலம் நிரூபணமாகி உள்ளது .

சுவாமியின் சிநேகிதர்கள் (சுவாமி அண்ட் ஹிஸ் பிரெண்ட்ஸ்-அத்தியாயம் ஒண்ணு)

இந்த திங்கக் கிழமை வரலேன்னு யார் அழுதா?

எப்போ பாருங்க ஞாயிற்றுக் கிழமை முடிஞ்சதும் டாண்ணு திங்கட்கிழமை வந்துடறது!?

பாவம் சுவாமிக்கும் திங்கட்கிழமை பிடிக்கவே இல்லை போல அதான் "கதையோட ஆரம்ப அத்தியாயத்திலேயே கண்ணை இருக்க மூடிண்டு சேர்ல உட்கார்ந்து யோசிச்சுண்டு இருக்கான்.இருக்கறது வெறும் ரெண்டே மணி நேரம் தான் அதுக்குள்ளே எல்லா வீட்டுப் பாடமும் செய்து முடிச்சு பாடசாலைக்கும் (பள்ளிக் கூடம் தான்) கிளம்பியாகணும் .எப்படி முடியும்?

இதப் பத்தி அந்த கணக்கு வாத்தியார் நெருப்புக் கண் வேத நாயகமாச்சும்...இல்லாட்டி அந்த பைபிள் வாத்தியார் எபனேசராச்சும் ஒரு நாளாவது நினைச்சுப் பார்த்திருப்பாங்களா?பையன்களின் கஷ்டத்தை நினைச்சுப் பார்க்காத வாத்தியார்கள்!(இவங்களுக்கு நம்ம மணி ஸ்டைல் ல சேர்ல உட்கார இடத்துல முள்ளோ ...ஆணியோ வச்சாக் கூட தப்பில்லையோ?!)

இதுக்கு சரித்திர வாத்தியார் டி.பிள்ளை எவ்வளவோ தேவலை ...அவரே எல்லாப் பாடத்தையும் எடுத்தா எவ்ளோ நல்லா இருக்கும்?அவர் சரித்திரக் கிளாஸ் எடுக்கறச்சே இந்தக்கிளைவ் ,வாஸ்கோடகாமா,எல்லாரும் நம்ம சொந்தக்காரா போல இல்ல தோண வெச்சிடறார்.ஒரே ஒரு பாட வேலைல ஒன்பது கதை சொல்லிடுவாரே!!!அவரைக் கண்டா மாத்திரம் இந்த "ஆல்பர்ட் மிசன் ஸ்கூல் ஹெட் மாஸ்டருக்கு ஏன் தான் இத்தனை துக்கம் வரணுமோ?மொத்தத்துல ஸ்கூல் பையன்கள் சிரிச்சுகிட்டே சந்தோசமா பாடம் கேட்டா உலகத்து ஹெட் மாஸ்டர்ஸ் யாருக்கும் பிடிக்காதோ என்னவோ?(ஹெட் மாஸ்டர் டவுன்...டவுன்...)

சுவாமி பாவம் ஒரு அப்பாவி பையன் !!!அவன் பாட்டுக்கு தானுண்டு ,தன் சிநேகிதாள் உண்டுன்னு இருந்தவன் தான்...எல்லாம் இந்தக் கணக்கு வாத்தியார் நெருப்புக் கண்ணால வந்தது .அன்னைக்கு வீட்டுப் பாடக் கணக்கு எல்லாமே தப்புன்னு மூஞ்சில நோட்டை வீசி அடிச்சுத் தொரத்தினாரோ இல்லியோ? அன்னைக்கு தான் இன்னொன்னும் நடந்ததுங்கறேன் ,

அடுத்து பைபிள் பாடம் எடுக்க எபனேசர் வாத்தியார் வந்தார்.அவர் எப்பவும் போல பைபிள் கதைகள் சொல்லிட்டு முடிச்சுட்டுப் போரவரே இல்லை ...எப்போ பார்த்தாலும் ஹிந்து கடவுள்களைப் பத்தியும் எதுனாச்சும் விமர்சனம் பண்ணிண்டே இருப்பார் ...!?

அன்னிக்கு நம்ம சுவாமிக்கு என்ன தான் ஆச்சோ?

அவர் பாட்டுக்கு நம்ம ஸ்ரீ கிருஷ்ணனை வம்புக்கு இழுத்துப் பேசினதோட இல்லாம?உங்க கிருஷ்ணர் உண்மைலேயே கடவுளா இருந்தார்னா ஏன் வெண்ணெய் திருடினார்?பல பெண்களோட நாட்டியமாடிக் கூத்தடிச்சார்...?இவரா உங்களை சொர்கத்துக்கு கூட்டிட்டிப் போவார்னு நீங்க நம்பறிங்க?

அதே எங்க இயேசு கிறுஸ்துவைப் பாருங்க...அவர் வியாதியஸ்தர்களை சொஸ்தப் படுத்தறார்.(சுகமாக்குகிறார்)...சொர்கத்துக்குப் போக வழி காட்டறார்!? உங்க ஹிந்து கடவுள்கள் எல்லாம் உண்மையில் சக்தி இருந்தா கஜினி முகம்மது கோயில் சிலைகளை உடைச்சு தன் வீட்டுப் படியா பயன்படுத்தினப்போ ஏன் அவனை ஒண்ணுமே பண்ணலைனு மட்டமா கேட்டுட்டார் .இது சுவாமிக்குத் தாங்கலை...அவனும் பதிலுக்கு ;

இயேசு தான் உண்மையான கடவுள்னா அவரை ஏன் சிலுவைல அறைஞ்சாங்கானு பதிலுக்குக் கேட்டான்.அப்படியே விட்ருந்தா பிரச்சினையே இல்லை .பைபிள் வாத்தியார் சுவாமி அப்படிக் கேட்டதுக்காக அவனைத் திட்டாம நீ தனியா வந்து கேளு நாம் விளக்கமா சொல்றேன் சொன்னதும் அவனுக்கு தைரியம் வந்து இன்னொரு கேள்வியும் கேட்டுட்டன் .

இயேசு கிருஸ்த்து தான் நல்ல கடவுள்னா அவர் ஏன் .மீனும் ,மாமிசமும் சாப்பிட்டார் ? சாராயம் குடித்தார் ? அப்படின்னு கேட்டுட்டான்.இதுக்கும் சாந்தமா பதில் சொல்லியிருந்தார்னா தான் பைபிள் வாத்தியார் நல்ல வாத்தியார்!!!அவரோ அதுக்குப் பதிலா சுவாமியோட (சுவாமி நாதன்) இடது காதைப் பிய்த்துப் போடப் பார்த்தார் ,

இது ஒரு நல்ல உபாத்தியாயர் செய்யற காரியமா என்ன?(இவங்களுக்கு சேர்ல கண்டிப்பா முள்ளு வச்ச என்ன தப்பாம்?!)இது சுவாமியோட அப்பாக்கு தெரிஞ்சதும் அவர் பங்குக்கு அவர் ஆல்பர்ட் மிசன் ஸ்கூல் ஹெட் மாஸ்டருக்கு ஒரு லெட்டர் கொடுத்து விடறார் அந்த பைபிள் வாத்தியாரோட செயலைக் கண்டிச்சு .அப்புறம் ஹெட் மாஸ்டர் சுவாமியை அது பத்தி விசாரிக்க கூப்பிட்டு அனுப்பறார்.

இதுக்கு நடுவுல கொஞ்சம் நாம சுவாமியோட சிநேகிதர்கள் பத்தியும் பாத்துருவோமே?சாதாரண ச்நேகிதர்களா அவங்க எல்லாம் ?

முதல்ல

சட்டாம் பிள்ளை சோமு :-இவன் எந்தக் காரியத்தையும் சாதிக்கக் கூடிய நம்பிக்கையும் ,சாந்தமும் கொண்ட நண்பன்,வாத்தியார்களுக்கேல்லாம் அவனை ரொம்பப் பிடிக்குமாம்,அந்த அளவுக்கு இவன் கெட்டிகாரனும் இல்லை ...ஆனாலும் வகுப்பில் இவனை மட்டும் எந்த வாத்தியாரும் கேள்வியே கேட்டதில்லை இதுவரை .பள்ளிக்கூடப் பையன்கள் எல்லாருக்கும் ஒரு சந்தேகம் இந்த சட்டாம் பிள்ளை சோமுவை அந்த ஸ்கூல்ல கண்டிக்கக் கூடிய ஒரே ஆள் ஹெட் மாஸ்டர் மட்டும் தானோ ? இதான் டவுட் ,ஒவ்வொரு ஸ்கூல்லயும் இப்படிப் பட்ட பையன்கள் கண்டிப்பா இருப்பாங்க போல இருக்கே? நான் ஸ்கூல் படிக்கற காலத்துலயும் இப்படி உண்டு தான் .அந்தப் பசங்க எப்படித் தான் எல்லா வாத்தியாரையும் கைக்குள்ள போட்டுப்பாங்களோ?

அடுத்தவன் ...
நம்ம ஆள் ...உதவாக்கரை மணி :-

மணியைப் பத்தி நாளைக்கு எழுதறேன்...மணி நம்ம கவுண்டமணி ரேஞ்சுக்கு உதார் காட்டற ஆள் ...கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணி தான் அவனைப் பத்தி சொல்லணும் .

விரைவில் தொடரும் ...ஸ்கூல் டேய்ஸ்

அதுக்குள்ளே இதைப் படிக்கக் கூடிய பெரும் பேரு கிடைத்த நல்லவர்களும் வல்லவர்களும் இந்தப் பதிவு பத்தி உங்க கருத்துக்களை கொஞ்சம் இங்க குத்திட்டு போனா நல்லாத் தன்இருக்கும் ...உங்க வசதி எப்படி?அதெல்லாம் செய்வீங்க ...இதைக் கூடவா செய்ய மாட்டீங்க?