Monday, December 8, 2008

இந்த வார ஜூனியர் விகடனில் வெளிவந்த பயனுள்ள தகவல்

இந்த வார ஜூனியர் விகடனில் வந்த பயனுள்ள செய்தி :-

சென்னை அண்ணாநகர் சிந்தாமணியில் கிளினிக் வைத்திருக்கும் பல் டாக்டர் .கோபி கிருஷ்ணன் புதிதாக ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறார்.இதற்காக அவரை மருத்துவக் கழகம் பாராட்டியதோடு அவரது கண்டுபிடிப்பையும் பொது மக்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளது .

சிறுவயதில் எல்லோருக்கும் முளைத்த பால் பற்கள் ஆறிலிருந்து ஏழு வயதிற்குள் விழுந்து அதன் பின் மறுமுறை பல் முளைக்கும் ,இது எல்லா மனிதர்களுக்கும் இயற்க்கை .இப்படி இரண்டாவதாக முளைத்த பற்கள் ஏதேனும் விபத்திலோ அல்லது தற்செயலாகவோ உடைந்து விட வாய்ப்பிருக்கும்...அப்படி உடையும் பற்கள் இயற்கையாக மறுபடி முளைக்க வாய்ப்பு இல்லை .

உடைந்த பற்களை எடுத்துக் கொண்டு பல் டாக்டர்களிடம் ஓட வேண்டும்.குறிப்பிட்ட நேரத்துர்க்குள் அந்தப் பற்களை மறுபடி ஈறுகளில் வைத்து பொருத்த இயலாவிடில் செயற்கைப் பல் செட் தான் பொருத்த வேண்டும். முன்பெல்லாம் இப்படி விபத்தில் பல் உடைந்தவர்கள் உடைந்த பற்களை ஐஸ் ...அல்லது பாலிதீன் பைகளில் போட்டு எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் ஓடுவார்கள் .

குறிப்பிட்ட நேரத்திற்குள் போய் சேர முடியாவிடில் அந்தப் பற்களை மறுபடி பொருத்த முடியாதே...அவற்றின் உயிர் செல்கள் இறந்து விடும்.பிறகு குப்பையில் தான் போட வேண்டும் .ஆனால் இப்போது டாக்டர் கோபி கிருஷ்ணன் கண்டுபிடித்த முறையின் படி குறைந்தது இரண்டிலிருந்து ஆறு மணி நேரம் வரை உடைந்த பற்களின் உயிர் செல்களைப் பாதுகாக்கலாம் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது .

பற்கள் உடைந்ததும் அவற்றை உடனடியாக இளநீரில் போட்டு எடுத்துக் கொண்டு மருத்துவரை அணுகலாம் .இளநீரில் உள்ள உயிர் சத்துக்கள் உடைந்த பற்களின் உயிர் செல்களை இறந்து விடாமல் காக்க உதவுகின்றனவாம் .இது ஆராய்ச்சி மூலம் நிரூபணமாகி உள்ளது .

1 comment:

Athisha said...

ரொம்ப லேட்டு...

15 வருஷத்துக்கு முன்னால சொல்லிருந்தா பிரயோசனமா இருந்திருக்கும்..