Showing posts with label விவாதமேடை. Show all posts
Showing posts with label விவாதமேடை. Show all posts

Tuesday, January 20, 2009

கார்ட்டூன் சானல்கள் லிஸ்ட் ...(விவாத மேடை)

எவ்ளோ தேடியும் எனக்கு கிடைத்த கார்ட்டூன் டி.வி. சானல் லிஸ்ட் இவ்ளோ தான் ...

  1. சுட்டி டி.வி
  2. போகோ சானல்
  3. டூன் டிஸ்னி
  4. ஜெட்டிக்ஸ்

சரி இப்போ இந்த லிஸ்ட்ல உள்ள சானல்களில் முதலில் அதிக குழந்தைகளின் விருப்ப சானலான சுட்டி மற்றும் போகோ பற்றி பார்க்கலாம்.ஜெட்டிக்ஸ் பற்றி கேட்கவே வேண்டாம்...அது வன்முறையைத் தூண்டுவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு நெடு நாட்கள் ஆகின்றன.

சுட்டி டி.வி நிகழ்ச்சி பட்டியல்:-

  1. அபி அண்ட் எபி
  2. பாபி
  3. டோரா தி எக்ஸ்ப்ளோரர்
  4. அறிவோம் ஆயிரம்
  5. குளோரியாவின் வீடு
  6. சூப்பர் சுஜ்ஜி
  7. கடல் இளவரசிகள்
  8. மைக்கேல் தாத்தா
  9. ஹானாஸ் ஹெல்ப் லைன்
  10. சிரிப்பு கோழிகள்(பெயர் சரியானு தெரியலை...பாப்பூ சொன்னதை வச்சு டைப் பண்றேன்!)
  11. செட்ரிக்
  12. உலக சிறுகதைகள்
  13. காட்சிலா
  14. ஜாக்கி ஷான்
  15. ஹீமேன்
  16. சியாமா அக்காவும் சின்ன சின்ன கிராப்ட்சும்
  17. லிட்டில் ஷோபீ

இப்போதைக்கு இந்த தொடர்கள் மற்றும் இந்த ஒரு சானல் பத்தி விவாதம் நடக்கட்டும்.மீதியை இதற்குப் பிறகு தொடரலாம்.இந்தப் பட்டியலில் இருக்கும் தொடர்கள் எல்லாம் "சுட்டிகளுக்கு " தேவையான விசயங்களை மட்டுமே தான் கற்பிக்கின்றனவா? இந்தத் தொடர்களில்

  1. எது அருமையானது?
  2. எது சுமாரானது?
  3. எது தேவை இல்லாதது?
  4. எது நீக்கத் தகுந்த தொடர்?
  5. எது கண்டிக்கத் தகுந்தது?
  6. எது நம் குழந்தைகள் பார்க்கத் தகுந்தது?
  7. உங்கள் ஓட்டு எந்த நிகழ்ச்சிக்கு ?(தமிழ்மணத்துல ஓட்டு...ஓட்டு ன்னு எல்லாரும் கேட்கராங்களா அந்தப் பாதிப்பு தான்...ஹி...ஹி ..ஹி )

சரி இப்போ விவாதத்தை ஆரம்பிங்கப்பா !!!

கார்ட்டூன் சேனல்கள் செய்வது சரியா தவறா?(விவாத மேடை)

என்னுடைய குவிஸ் பதிவுல பதில்களை சொன்ன எல்லோருக்கும் நன்றி...வழக்கமா வந்து கருத்து சொல்ற சிலரை இன்னும் காணோமே???இன்னும் த்ரீ டேஸ் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்.யாருக்கு ராமாயணம்...மகாபாரதம் மேல நிறைய ஆர்வம் இருக்குன்னு. !!!

துளசி டீச்சரை காணோமே அவங்க எல்லாக் கேள்விக்கும் சூப்பரா பதில் சொல்வாங்கன்னு எதிர்பார்த்தேன்.அதுசரியையும் காணோம்.சுரேஷ் குவிஸ் பதிவைப் பாக்கலையா இன்னும்?சந்தனமுல்லை உங்களையும் காணோமே!!!அபிஅப்பா சொன்னாரே நான் புள்ளி வச்சிருக்கேன் கோலம் போட நிறைய பேர் வருவாங்கன்னு ...அவருக்கு புள்ளி மட்டும் தான் வைக்கத் தெரியுமாம்...கோலம் போட இது வரைக்கும் வந்தவுங்களுக்கெல்லாம் மிக்க நன்றி...

முக்கியமா டோண்டு அய்யா...முரளிகண்ணன்...குடுகுடுப்பை(பிரம்படி இருக்கு இதிகாசத்துல்ல முட்டை...முட்டையாவா...வாங்குவாங்க!?) அமுதா(கொஞ்சம் இன்ட்ரெஸ்ட் எடுத்து யோசிக்கங்கபா ...குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது தப்பு தப்பா பெயர்களை மாத்தி சொல்லிடப் போறீங்க!?)முரளிகண்ணன்...மீதி கேள்விக்கு எப்போ வந்து பதில் சொல்லப் போறீங்க?ஜமால் நீங்க நல்லா ஆன்சர் பண்ணுவீங்கன்னு நினைச்சிட்டிருந்தேன் நான்!!!நீங்களும் முட்டை மார்க் தானா?

முக்கியக் குறிப்பு:

பாப்புவோட டான்ஸ் டீச்சர் ராமாயணம்...பாரதக் கதைகளை பத்தி கேள்வி கேட்டு அங்க இருந்த எல்லா பெற்றோர்களையும் நேத்து செம ட்ரில் வாங்கிட்டாங்க.யாருக்குமே நிறைய கேள்விகளுக்கு சரியான பதில் தெரியலை.அம்மா...அப்பாக்களுக்கே தெரியலைனா குழந்தைகள் பாவம் என்ன செய்வாங்களாம்?அவங்களுக்குப் பாவம் டோராவும்...புஜ்ஜியும் தான் தெரியுது.கார்டூன் சேனல்கள் செய்வது சரியா...தவறான்னு கூட ஒரு பதிவு போடலாம் போல இருக்கே?அந்த ரேஞ்ச்ல போயிட்டு இருக்கு நம்ம பாரம்பர்ய மறக்கடிப்பு.

பேசமா இதை ஒரு விவாத பொருளா எடுத்துகிட்டு நாமலே ஒரு பதிவு போட்ட என்னான்னு யோசிச்சதுல தான் இந்த பதிவு வந்தது. சரி இப்போ நம்ம கார்டூன் சேனல்களைப் பற்றி யார் யாருக்கு எண்ணலாம் தோணுதோ அதை வந்து தெரிவிக்கலாம் இங்கே..அதற்க்கு பதில் சொல்றவங்களும் சொல்லலாம்..எதிர்ப்பு தெரிவிக்கரவங்களும் சொல்லலாம் .

Thursday, January 15, 2009

ஸ்டைலு...ஸ்டைலு...தான்;இது சூப்பர் ஸ்டைலு தான்...!


இந்தப் படத்தை நல்லா பார்த்துக்கோங்க முதல்ல ...!
பின்னாடியே ஒரு டெஸ்ட் இருக்கு ...எத்தனை பேர் சரியா ஆன்சர் பண்றீங்கன்னு பார்க்கலாம்?!இது ரவி வர்மா painting அது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்,அதில்லை இப்போ கேள்வி;
இந்தப் பதிவை வாசிக்கறவங்க யாரா இருந்தாலும் சரி ,பொறுமையா கீழே பின்தொடரும் எல்லாப் புடவை படங்களையும் பார்த்துட்டு கடைசியா இங்க கேட்கப் படற கேள்விக்கும் சற்றேறக்குறைய சரியான பதிலை சொல்ல ட்ரை பண்ணிட்டுப் போங்க ...எத்தனை பேருக்கு புடவை நாலேட்ஜ் இருக்குன்னு தான் பார்த்துடுவோமே .
சரியான பதில் சொல்றவங்களுக்கு கண்டிப்பா விருது உண்டு,
அதனால எல்லாரும் வந்து கலந்துகிட்டு விருது வாங்கிட்டு போங்க.
ரெடி ...
ஸ்டார்ட் ;



........................;


இது நம்ம பெங்காளிகள் புடவை ஸ்டைல்!
இது அஸ்ஸாமிகள் புடவை கட்டற ஸ்டைல்!


இது தீர்த்தா புடவை கட்டற ஸ்டைல்லாம் !


இது ஒரிஸ்ஸா...

இது மகாராஸ்டிர ஸ்டைல்லாம் ...


இது குஜராத்தி புடவைக்கட்டாமுங்க!
இது கூர்க் இனத்து பெண்கள் புடவை கட்டும் முறையாம்...
இது ராஜபுத்திர பெண்கள் புடவை கட்டும் ஸ்டைல் ...இவங்க புடவையை விட நகைகள் தான் வெயிட் ஜாஸ்தி இருக்கும் போல?


இந்த ஸ்டைல் இலங்கை பாரம்பரிய ஸ்டைல் புடவைக் கட்டாம்.இவங்க யாருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சே இருக்கும்...மதிப்பிற்குரிய இந்த முன்னாள் பிரசிடென்ட் பத்தி தகவல் ஒன்னும் காணோமே இப்போலாம்? ஏன்?

இது மத்திய இந்தியா ஸ்டைல்(தக்காணம்னு கூட சொல்லலாம்! பீகார் தக்காணத்துல சேருமோ?மத்தியப் பிரதேசம்னும் சொல்லலாமுங்க...)


இது ஒரிஜினல் மடிசார்...

இது சினிமா மடிசார்.(ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி தான்...என்ன ஒரு பெர்பெக்சன் பாருங்க?!
நம்ம தமிழ்நாட்டுல புடவை ஸ்டைல் எக்கசக்கமா இருக்கு ,வீட்டுக்கு வீடு ஒரு ஸ்டைல் இல்ல பாலோ பண்ணுவோம் நம்ம எல்லாம்?!பின் கொசுவம்...முன்கொசுவம்...எட்டு ப்ளீட்ஸ்...மடிசார்னு இங்க ஏகப்பட்ட வரைட்டி உண்டே!
இப்போ முதல்ல சொன்ன பாயின்ட்டுக்கே போகலாம் .
இது கேள்வி நேரம் .
முதல்ல பார்த்த ரவி வர்மா படத்துல மொத்தம் பதினோரு பெண்கள் பதினோரு விதமா புடவை கட்டிட்டு இருக்காங்க ...ஓகே இப்போ சொல்லுங்க ,
எந்தப் பெண் எந்த மாநில ஸ்டைல் ல புடவை கட்டி இருக்காங்கனு...யார் யார் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவங்கன்னு இதுல இருந்தும் தெரிஞ்சிக்கலாம் இல்லையா?
இதானே நம்ம கலாச்சாரம்"வேற்றுமையில் ஒற்றுமை"
சரி இப்போ எத்தனை பேர் போட்டில கலந்துகிட்டு சரியான பதிலை சொல்லி கலைமாமணி மாதிரி "கலாச்சார மாமணி விருது" வாங்கப் போறீங்கனு பார்க்கலாம்.





































Tuesday, December 23, 2008

லிப்ஸ்டிக் !!! ஆண்களுக்கா? பெண்களுக்கா? யாருக்காக இந்த லிப்ஸ்டிக் ?



இப்படித்தான் ஆரம்பிக்கணும்!












பெண்கள் லிப்ஸ்டிக் போட்ட இப்படி இருக்குமாம் !?



ஆண்கள் லிப்ஸ்டிக் போட்ட இப்படித்தான் இருக்குமாம் !?
இது எப்படி இருக்கு? இப்படி ஒரு பதிவு போடக் காரணம் நான் இல்லை .
பொம்மலாட்டம் படம் தான் காரணம்.ஆண்கள் லிப்ஸ்டிக் போடக்கூடாதுங்கறார் நானா படேகர் ...வாஸ்தவம் தானே!!
ஆனா நம்ம அந்தக் கால எம்.ஜி.ஆர் ல இருந்து சிவாஜில இருந்து யார் தான் லிப்ஸ்டிக் போடலை ? இதுல எம்.ji.ஆரெல்லாம் கண்மை போடாம நடிச்சதே இல்லை .அசோகன்...நம்ம துக்ளக் சோ எல்லாம் லிப்ஸ்டிக்கும் ...கண்மையும் இல்லனா பாவம் எப்படித் தான் திரைல வந்திருக்க முடியும்?
கண்மை மீசை....கண்மை புருவம் இதான் பல சூபர் ஸ்டார்களை காப்பாற்றி இருக்கு .அதைப் போயி வேணாம்னு ஒரு இயக்குனரு சொல்லிட்ட ஆச்சா?
நாளைல இருந்து எந்த ஹீரோவும் லிப்ஸ்டிக் போட்டு நடிக்கவே மாட்டாரா என்ன?


பாருங்க இவ்ளோ கலர்ல லிப்ஸ்டிக் இருக்கு இதெல்லாம் பின்ன யார் தான் போடரதாம் ? பொண்ணுங்க மட்டுமே போட்ட லிப்ஸ்டிக் பிசினஸ் படுத்துராதா?
சரி இப்ப விசயத்துக்கு வரேன்.
ஆண்கள் லிப்ஸ்டிக் போடக் கூடாத என்ன?
போடலாம்னு சொல்றவங்க எத்தனை பேர்?
போடக்கொடாதுனு சொல்றவங்க எத்தனை பேர் ?
வாங்க வந்து வரிசையா உங்க கருத்துக்களை சொல்லி விவாதத்தை ஆரம்பிச்சு வச்சிட்டுப் போங்க .