Tuesday, January 20, 2009

கார்ட்டூன் சானல்கள் லிஸ்ட் ...(விவாத மேடை)

எவ்ளோ தேடியும் எனக்கு கிடைத்த கார்ட்டூன் டி.வி. சானல் லிஸ்ட் இவ்ளோ தான் ...

 1. சுட்டி டி.வி
 2. போகோ சானல்
 3. டூன் டிஸ்னி
 4. ஜெட்டிக்ஸ்

சரி இப்போ இந்த லிஸ்ட்ல உள்ள சானல்களில் முதலில் அதிக குழந்தைகளின் விருப்ப சானலான சுட்டி மற்றும் போகோ பற்றி பார்க்கலாம்.ஜெட்டிக்ஸ் பற்றி கேட்கவே வேண்டாம்...அது வன்முறையைத் தூண்டுவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு நெடு நாட்கள் ஆகின்றன.

சுட்டி டி.வி நிகழ்ச்சி பட்டியல்:-

 1. அபி அண்ட் எபி
 2. பாபி
 3. டோரா தி எக்ஸ்ப்ளோரர்
 4. அறிவோம் ஆயிரம்
 5. குளோரியாவின் வீடு
 6. சூப்பர் சுஜ்ஜி
 7. கடல் இளவரசிகள்
 8. மைக்கேல் தாத்தா
 9. ஹானாஸ் ஹெல்ப் லைன்
 10. சிரிப்பு கோழிகள்(பெயர் சரியானு தெரியலை...பாப்பூ சொன்னதை வச்சு டைப் பண்றேன்!)
 11. செட்ரிக்
 12. உலக சிறுகதைகள்
 13. காட்சிலா
 14. ஜாக்கி ஷான்
 15. ஹீமேன்
 16. சியாமா அக்காவும் சின்ன சின்ன கிராப்ட்சும்
 17. லிட்டில் ஷோபீ

இப்போதைக்கு இந்த தொடர்கள் மற்றும் இந்த ஒரு சானல் பத்தி விவாதம் நடக்கட்டும்.மீதியை இதற்குப் பிறகு தொடரலாம்.இந்தப் பட்டியலில் இருக்கும் தொடர்கள் எல்லாம் "சுட்டிகளுக்கு " தேவையான விசயங்களை மட்டுமே தான் கற்பிக்கின்றனவா? இந்தத் தொடர்களில்

 1. எது அருமையானது?
 2. எது சுமாரானது?
 3. எது தேவை இல்லாதது?
 4. எது நீக்கத் தகுந்த தொடர்?
 5. எது கண்டிக்கத் தகுந்தது?
 6. எது நம் குழந்தைகள் பார்க்கத் தகுந்தது?
 7. உங்கள் ஓட்டு எந்த நிகழ்ச்சிக்கு ?(தமிழ்மணத்துல ஓட்டு...ஓட்டு ன்னு எல்லாரும் கேட்கராங்களா அந்தப் பாதிப்பு தான்...ஹி...ஹி ..ஹி )

சரி இப்போ விவாதத்தை ஆரம்பிங்கப்பா !!!

11 comments:

முரளிகண்ணன் said...

காட்ஸில்லா மற்றும் ஜாக்கி சான் தொடர்கள் இந்த சானலில் புகழ் பெற்றவை. அவற்றையும் சேருங்கள்.

நட்புடன் ஜமால் said...

டாம் & ஜெர்ரி எங்கே ...

அமுதா said...

நான் என் குழந்தைகளுடன் பார்ப்பது அவ்வப்பொழுது ஜாக்கி சான் & அவதார். எனவே டி.வி பார்த்து என் குழந்தைகளிடம் நான் காணும் பாதிப்புகளைக் கூறுகிறேன்.
1. என் குழந்தைகள் மிக அமைதியானவர்கள். அவர்களையும் குதிக்க வைத்தது ஜெட்டிக்ஸ். ஸோ, அதற்கு எங்கள் வீட்டில் ஜெட்டிக்ஸ் "நோ எண்ட்ரி".

2. அடுத்து அவர்களை பாதிப்பது டோரா. ஆனால் இதில் இருந்து அவர்கள் தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பது கண்டு எனக்கு மகிழ்ச்சி. "உனக்கு உதவி செய்யவா அம்மா" என்று அவள் கேட்பது இனிமை. இப்பொழுதெல்லாம் எங்கு சென்றாலும் "எங்க நாம போறோம்" என்று கற்பனையுடன் பாடி வாழ்வை இரசிப்பது எனக்கு பிடிக்கும்.

3. மற்ற தொடர்களை அவர்கள் பார்த்தாலும் ரொம்ப பாதிப்பு தெரியவில்லை. ஏதோ ஒன்றிலிருந்து "மொட்டை தலையாரே" என்ற பதம் அடிக்கடி உபயோகிக்கப்படுவது தவிர

எனது முக்கியமான கவலை அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு அடிமை ஆவது. வெளியில் வராது டி.வியில் ஆழ்ந்து போவது போன்ற விஷயங்கள். எனவே என்னால் முடிந்த வரை அவர்களை டி.வி.யில் இருந்து வெளியே இழுப்பேன். டி.வி பார்க்க சில நேரம் மட்டும் ஒதுக்கி உள்ளேன். முன்பெல்லாம் பண்டலேரு விரும்பி பார்ப்பார்கள். அதில் வரும் காதல் எல்லாம் இவர்க்ளை எப்படி பாதிக்கும் என்று யோசித்து இருக்கிறேன். ஆனால், மாற்றம் பார்த்ததில்லை.

சந்தனமுல்லை said...

ஹாய் டவுட்! சுட்டியில் எல்லா (டீன் வரைன்னு ஒரு அனுமானம்)வயதினருக்கேற்றவாறுதான்
போடுகிறார்கள்!

//குளோரியாவின் வீடு// பார்த்தீங்கன்னா பக்கத்து வீட்டு பையனுக்கு குளோரியாவின் அக்கா மீது க்ரஷ் மாதிரி காட்டுவாங்க!

//ஹானாஸ் ஹெல்ப் லைன் சிரிப்பு கோழிகள்//

இது குட்டீஸ்-க்கு ஜாலியாவே இருக்கும்!

நான் பப்புவை டோரா தவிர இன்னும் எதுவும் பார்க்க அனுமதிக்கவில்லை! அவளும் ரொம்ப கீன் இல்லை! ஒருவேளை பாப்பு வயசு வரும்போது தெரியும்!

ஆனா, அவங்க எது போட்டாலும், ரிமோட் நம்ம கிட்டேதானே இருக்கு! :-)

ராஜேஷ், திருச்சி said...

நான் பார்ப்பது டோரா புஜ்ஜி மட்டுமே..

மிஸஸ்.டவுட் said...

//முரளிகண்ணன் said...

காட்ஸில்லா மற்றும் ஜாக்கி சான் தொடர்கள் இந்த சானலில் புகழ் பெற்றவை. அவற்றையும் சேருங்கள்.

January 21, 2009 7:55 AM

அதையும் சேர்த்தாச்சு முரளிகண்ணன் .

மிஸஸ்.டவுட் said...

//நட்புடன் ஜமால் said...

டாம் & ஜெர்ரி எங்கே ...

இதோ சேர்த்துடறேன் அதையும் ...டாம் ...ஜெர்ரி பார்க்காத குழைந்தைகளும் உண்டோ!!!

மிஸஸ்.டவுட் said...

//அமுதா said...

நான் என் குழந்தைகளுடன் பார்ப்பது அவ்வப்பொழுது ஜாக்கி சான் & அவதார். எனவே டி.வி பார்த்து என் குழந்தைகளிடம் நான் காணும் பாதிப்புகளைக் கூறுகிறேன்.
1. என் குழந்தைகள் மிக அமைதியானவர்கள். அவர்களையும் குதிக்க வைத்தது ஜெட்டிக்ஸ். ஸோ, அதற்கு எங்கள் வீட்டில் ஜெட்டிக்ஸ் "நோ எண்ட்ரி".

அதே தான் இங்கேயும் பாப்பு ரொம்பவும் அமைதி எல்லாம் கிடையாது...பிறகு கேட்கவும் வேண்டுமா?ஜெட்டிக்ஸ் பற்றி அவளுக்கு இன்னமும் சரியாகத் தெரியாது...அப்படி ஒரு சேனல் பார்க்கும் ஆர்வம் இல்லை பாப்புவுக்கு .சுட்டி...போகோவோடு நிறுத்தி விடுகிறாள்.முடிந்தவரையில் இது ஒரு நன்மை.

2. அடுத்து அவர்களை பாதிப்பது டோரா. ஆனால் இதில் இருந்து அவர்கள் தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பது கண்டு எனக்கு மகிழ்ச்சி. "உனக்கு உதவி செய்யவா அம்மா" என்று அவள் கேட்பது இனிமை. இப்பொழுதெல்லாம் எங்கு சென்றாலும் "எங்க நாம போறோம்" என்று கற்பனையுடன் பாடி வாழ்வை இரசிப்பது எனக்கு பிடிக்கும்.

அருமையாகச் சொன்னீர்கள்....டோரா தமிழ் என்று புது தமிழ் வந்து விடும் பாருங்கள் இன்னும் சில நாட்களில் ...எல்லா குழந்தைகளும் டோராவால் தமிழில் பேசுவது அந்த தொடரால் விளைந்த நன்மை தானே!?

3. மற்ற தொடர்களை அவர்கள் பார்த்தாலும் ரொம்ப பாதிப்பு தெரியவில்லை. ஏதோ ஒன்றிலிருந்து "மொட்டை தலையாரே" என்ற பதம் அடிக்கடி உபயோகிக்கப்படுவது தவிர

எனது முக்கியமான கவலை அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு அடிமை ஆவது. வெளியில் வராது டி.வியில் ஆழ்ந்து போவது போன்ற விஷயங்கள். எனவே என்னால் முடிந்த வரை அவர்களை டி.வி.யில் இருந்து வெளியே இழுப்பேன். டி.வி பார்க்க சில நேரம் மட்டும் ஒதுக்கி உள்ளேன். முன்பெல்லாம் பண்டலேரு விரும்பி பார்ப்பார்கள். அதில் வரும் காதல் எல்லாம் இவர்க்ளை எப்படி பாதிக்கும் என்று யோசித்து இருக்கிறேன். ஆனால், மாற்றம் பார்த்ததில்லை.

January 22, 2009 12:53 AM

கார்ட்டூன்களில் வரும் காதல்கள் குழந்தைகளை பெரும்பாலும் பாதிப்பது இல்லை என்றே நம்ப வேண்டியிருக்கிறது....ஆனாலும் நேற்று நான் ஆ.வி யில் வாசித்த
செய்தி ஒன்று அதிர்ச்சி அளிக்கிறது.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழு வயது பையன் ஒருவன் தன் தோழியான ஐந்து வயதுப் பெண் குழந்தையை (வேறு எப்படி சொல்வதாம்?) ரெஜிஸ்டர் மனம் புரிய ஏர்போர்ட் வரை அழைத்துச் சென்று விட்டானாம்.பிறகு காவல் துறை அவர்களைக் கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைததாம்.அவர்கள் நாட்டுக் கலாச்சாரம் வேறு என்று சிலர் முழங்கினாலும் கூட "குழந்தைகள் எல்லா இடங்களிலும் குழந்தைகளாகவே " வாழ அனுமதிக்கப் பட வேண்டும்.பெரியவர்களின் செயல்பாடுகள் அவர்களின் பிஞ்சு நெஞ்சில் பாதிப்பை ஏற்படுத்தும்வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.சுட்டியில் "செட்ரிக் என்று ஒரு தொடர் வருகிறது.பாப்பு இன்னும் சில வருடங்களாவது அதை தவிர்க்க வேண்டும் என நினைக்கிறேன் நான் .

மிஸஸ்.டவுட் said...

//சந்தனமுல்லை said...
ஹாய் டவுட்! சுட்டியில் எல்லா (டீன் வரைன்னு ஒரு அனுமானம்)வயதினருக்கேற்றவாறுதான்
போடுகிறார்கள்!

//குளோரியாவின் வீடு// பார்த்தீங்கன்னா பக்கத்து வீட்டு பையனுக்கு குளோரியாவின் அக்கா மீது க்ரஷ் மாதிரி காட்டுவாங்க!

//ஹானாஸ் ஹெல்ப் லைன் சிரிப்பு கோழிகள்//

இது குட்டீஸ்-க்கு ஜாலியாவே இருக்கும்!

நான் பப்புவை டோரா தவிர இன்னும் எதுவும் பார்க்க அனுமதிக்கவில்லை! அவளும் ரொம்ப கீன் இல்லை! ஒருவேளை பாப்பு வயசு வரும்போது தெரியும்!

ஆனா, அவங்க எது போட்டாலும், ரிமோட் நம்ம கிட்டேதானே இருக்கு! :-)
//

ரீமோட்டை இயக்கத் தெரிந்த குழந்தைகளை என்ன செய்வது முல்லை?

மிஸஸ்.டவுட் said...

//ராஜேஷ், திருச்சி said...

நான் பார்ப்பது டோரா புஜ்ஜி மட்டுமே..

இந்த விவாத மேடை சுட்டிகளைப் பற்றியது...

சந்தனமுல்லை said...

//ரீமோட்டை இயக்கத் தெரிந்த குழந்தைகளை என்ன செய்வது முல்லை?
//

நான் சொல்ல வந்தது, அவர்கள் டீவி பார்க்கும் நேரத்தை நாம் கையாள முடியுமென்றுதான். அந்த கண்ட்ரோல் கண்டிப்பா பெற்றோர் கையில் உண்டு. ரிமோட் தான் இப்போ ஒன்றரை வயசுக் குழந்தைக்குக் கூட இயக்கத் தெரிகிறதே!