1
"உன் எண்களைத்
தாங்கி வரும்
அலைபேசி
அழைப்புகளை
உனக்கும்
எனக்குமான
உரையாடலுக்குத் தக்க
என் வீட்டு மனிதர்கள் முன்பு
அமைதியாக
"ம்" கொட்டியோ
உரக்கப் பேசி
சிரித்துக் கொண்டாடியோ
இயல்பாய்
கையாழவே
என்றும் எனக்கு ஆசை !!!
ஆனால் ...
நட்பை
நட்பாய்மட்டுமே நோக்க
யாருக்கு இங்கே ஆசை!!!
ஓசையின்றி
அலைபேசியோடு
தனியிடம் நாடும்
ஒவ்வொரு முறையும்
வலிக்கத்தான் செய்கிறது
எனக்கும்
நம் நட்புக்கும் ?!"
2
இல்லையென்று
மறுப்பதற்கில்லை
ஐ லவ் பாரதி
ஐ லவ் ரஜினி
ஐ லவ் மணிரத்னம்
ஐ லவ் கார்ல்மார்க்ஸ்...,
ஐ லவ் டால்ஸ்டாய்
ஐ லவ் ஆல் !
சொன்ன நிமிடங்களில்
அவள் ஒரு திருமதி ;
மறுக்கப் பட்ட
ஒரு காதலுக்கு ஈடாக
இன்று பல காதல்கள்
இது ஒரு புதுக்(பொது)காதல்!!!
3
காதலைப் போல
காமத்தைப் போல,
நட்பும் ஒரு சுகமே...
எல்லைகள்
நிர்ணயிக்கப்படும் வரை!?
4
அவனுக்குள்
தனியாக
ஓராயிரம்
கனவுகள்
அவளுக்குள்
தனியாக
ஈராயிரம்
கனவுகள்
கனவுகளுடனான
தனித்தனிப் பயணங்களில்
கால் தடுக்கி
குப்புற விழும்
அபாயம் வரும் முன்
கல்யாணமென்ற
ட்ராபிக் ஜாமில்
நின்று
நிதானமானார்கள்
"...? ? ? ? ? ...."
அவர்கள்
தம்பதிகள் !!!
28 comments:
நம்ம பாரதி தானே.
\\நட்பை
நட்பாய்மட்டுமே நோக்க
யாருக்கு இங்கே ஆசை!!!\\
ஆஹா அருமை.
\\ஓசையின்றி
அலைபேசியோடு
தனியிடம் நாடும்
ஒவ்வொரு முறையும்
வலிக்கத்தான் செய்கிறது
எனக்கும்
நம் நட்புக்கும் ?!\\
ஏன்?
\\காதலைப் போல
காமத்தைப் போல,
நட்பும் ஒரு சுகமே...
எல்லைகள்
நிர்ணயிக்கப்படும் வரை!? \\
ரொம்ப அருமை.
நிதர்சனம் ...
:-) நல்லாருக்கு உங்க கவிதைகள்!
/கல்யாணமென்ற
ட்ராபிக் ஜாமில்
நின்று
நிதானமானார்கள்
"...? ? ? ? ? ...."
அவர்கள்
தம்பதிகள் !!!/
:-))
\\அவனுக்குள்
தனியாக
ஓராயிரம்
கனவுகள்
அவளுக்குள்
தனியாக
ஈராயிரம்
கனவுகள்
கனவுகளுடனான
தனித்தனிப் பயணங்களில்
கால் தடுக்கி
குப்புற விழும்
அபாயம் வரும் முன்
கல்யாணமென்ற
ட்ராபிக் ஜாமில்
நின்று
நிதானமானார்கள்
"...? ? ? ? ? ...."
அவர்கள்
தம்பதிகள் !!!\\
நல்லாயிருக்கு
//நட்பை
நட்பாய்மட்டுமே நோக்க
யாருக்கு இங்கே ஆசை!!!//
இங்கே பல நண்பர்களுக்கே அந்த ஆசை இல்லை.
//எல்லைகள்
நிர்ணயிக்கப்படும் வரை!?
//
ஒன்னுமே புரியலேங்க
//அவர்கள்
தம்பதிகள் !!!//
அற்புதம்.
ரொம்ப நாளா வரணும்னு நினைச்சு இன்னிக்குதான் வர்றேன். இந்தக்கவிதைகளை ரசித்தேன். பழச படிக்கலாம்னா இவ்ளோளோளோ.. எழுதிருக்கீங்களே.. எப்ப படிக்கிறது.?
கொஞ்சம் புரியமாட்டேங்குது...
ஒருவேளை என்னோட அறிவு அவ்ளோதானோ என்னவோ ?
//அவனுக்குள்
தனியாக
ஓராயிரம்
கனவுகள்
அவளுக்குள்
தனியாக
ஈராயிரம்
கனவுகள்
//
நிஜமே ..
ஆண்களை விட பெண்களின் கனவுகளே அதிகம் என்பேன்!!
//கால் தடுக்கி
குப்புற விழும்
அபாயம் வரும் முன்
கல்யாணமென்ற
ட்ராபிக் ஜாமில்
//
வலிமை:)
//மறுக்கப் பட்ட
ஒரு காதலுக்கு ஈடாக
இன்று பல காதல்கள்//
:)
வாங்க ஜமால் ...
//நம்ம பாரதி தானே.//
நம்ம எட்டயபுரத்து பாரதியே தான் ...,
// சந்தனமுல்லை said...
:-) நல்லாருக்கு உங்க கவிதைகள்!
/கல்யாணமென்ற
ட்ராபிக் ஜாமில்
நின்று
நிதானமானார்கள்
"...? ? ? ? ? ...."
அவர்கள்
தம்பதிகள் !!!/
:-))//
நன்றி உங்கள் பாராட்டுக்கு ...
நிஜம் தானே சந்தனமுல்லை?!
////நட்பை
நட்பாய்மட்டுமே நோக்க
யாருக்கு இங்கே ஆசை!!!//
இங்கே பல நண்பர்களுக்கே அந்த ஆசை இல்லை.//
உண்மையைப் போட்டு உடைத்ததற்கு நன்றி சுரேஷ் .
////எல்லைகள்
நிர்ணயிக்கப்படும் வரை!?
//
ஒன்னுமே புரியலேங்க//
அட விடுங்க சுரேஷ்
எனக்கு மட்டும் புரியுதா என்ன?(தமாசு தான்...நம்பணும்!!!)
////அவர்கள்
தம்பதிகள் !!!//
அற்புதம்.//
அட இது புரிஞ்சிடுச்சே!!!! தேறீட்டிங்க sureஷ்!
//கல்யாணமென்ற
ட்ராபிக் ஜாமில்
நின்று
நிதானமானார்கள்
"...? ? ? ? ? ...."
அவர்கள்
தம்பதிகள் !!!\\
நல்லாயிருக்கு//
மறுபடியும் நன்றி ஜமால்.
//தாமிரா said...
ரொம்ப நாளா வரணும்னு நினைச்சு இன்னிக்குதான் வர்றேன். இந்தக்கவிதைகளை ரசித்தேன். பழச படிக்கலாம்னா இவ்ளோளோளோ.. எழுதிருக்கீங்களே.. எப்ப படிக்கிறது.?//
அட இங்கயும் வந்திருகிங்க போல வாங்க...வாங்க ...
எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சிடுங்க அண்ணே !
அப்போ தான பரீட்சைல பாஸ் பண்ண முடியும்?
இன்னும் நான் எவ்ளோ எழுத வேண்டி இருக்கு? நீங்களாம் எவ்ளோ படிக்க வேண்டியிருக்கு? கஷ்டப்பட்டு படிச்சா தானே முன்னுக்கு வரமுடியும்???(ஹா...ஹா..ஹா..நீங்க இல்ல நான் தான்!!!)
//செந்தழல் ரவி said...
கொஞ்சம் புரியமாட்டேங்குது...
ஒருவேளை என்னோட அறிவு அவ்ளோதானோ என்னவோ?//
அட விடுங்க செந்தழல் இல்லாத விசயத்துக்குப் போய் இப்பிடி பீல் பண்ணிக்கிட்டு???
"slow and steady win the race "
நீங்க நிதானமா தெரிஞ்சிக்கலாம்...அறிவு வளர்ந்தப்புறம்...!?இப்ப என்ன அவசரம்?
வாங்க பூர்ணிமாசரண்...
உங்கள் முதல்வரவு நல்வரவு ,
//PoornimaSaran said...
//அவனுக்குள்
தனியாக
ஓராயிரம்
கனவுகள்
அவளுக்குள்
தனியாக
ஈராயிரம்
கனவுகள்
//
நிஜமே ..
ஆண்களை விட பெண்களின் கனவுகளே அதிகம் என்பேன்!!//
repeattu( more than 100 times)
////கால் தடுக்கி
குப்புற விழும்
அபாயம் வரும் முன்
கல்யாணமென்ற
ட்ராபிக் ஜாமில்
//
வலிமை:)//
again thankx poornima;
////மறுக்கப் பட்ட
ஒரு காதலுக்கு ஈடாக
இன்று பல காதல்கள்//
:)//
:):):)
////கால் தடுக்கி
குப்புற விழும்
அபாயம் வரும் முன்
கல்யாணமென்ற
ட்ராபிக் ஜாமில்
//
வலிமை:)//
again thankx poornima;
////மறுக்கப் பட்ட
ஒரு காதலுக்கு ஈடாக
இன்று பல காதல்கள்//
:)//
:):):)
//
ஐ லவ் ரஜினி
//
இப்பிடி சொல்ற எல்லாரும் நல்லாருக்கணும்....
//
காதலைப் போல
காமத்தைப் போல,
நட்பும் ஒரு சுகமே...
எல்லைகள்
நிர்ணயிக்கப்படும் வரை!?
//
நண்பனிடன் இதை சொல்லக்கூடாது என்ற எல்லை வகுக்கும் போது அங்கு நட்பு உடனடியாக மரணமடைகிறது!
காதலையும், காமத்தையும் சீரழிவாக பேசும் ஒரு கலாச்சாரத்தில் நட்பு என்றால் என்ன என்றே தெரிந்து கொள்வது கடினம்...
தோன்றுவதற்கு முன்னே மரித்து போயிருந்தாலும்...வாழ்க கலாச்சாரம்!
//நட்பும் ஒரு சுகமே...
எல்லைகள்
நிர்ணயிக்கப்படும் வரை!?
//
நட்புக்கெல்லாம் எல்லையே இல்லேனு நம்ம சினிமாகாரவுக சொல்றாக.. நீங்க இப்பிடி சொல்றீங்க.. எது உம்மை.
டவுட்டுக்கே.. டவுட்டா
அதுசரி ...அதுசரி...
//ஐ லவ் ரஜினி
//
இப்பிடி சொல்ற எல்லாரும் நல்லாருக்கணும்....
//
ஹை அப்போ நாங்க குடும்பத்தோட நல்லா இருப்போம்னு சொல்லுங்க!!!
வி லவ் ரஜினி,
//நண்பனிடன் இதை சொல்லக்கூடாது என்ற எல்லை வகுக்கும் போது அங்கு நட்பு உடனடியாக மரணமடைகிறது!
காதலையும், காமத்தையும் சீரழிவாக பேசும் ஒரு கலாச்சாரத்தில் நட்பு என்றால் என்ன என்றே தெரிந்து கொள்வது கடினம்...
தோன்றுவதற்கு முன்னே மரித்து போயிருந்தாலும்...வாழ்க கலாச்சாரம்!//
என்னவோ சொல்ல வரீங்கன்னு புரியுது ...என்னான்னு தான் தெரியலை!
வாங்க ஆளவந்தான்...
மெல்ல...மெல்லத்தான் புரியும்...டோன்ட் வொர்ரி!!!
Post a Comment