Tuesday, January 19, 2010

க்விஸ்...(check your knowledge)

க்விஸ்...

1.தமிழ் இலக்கணப்படி மாத்திரை அளவீட்டில் ஒற்று எழுத்துக்கு எத்தனை மாத்திரை?

2. நேர்..நேர் =தேமா ...இந்த வரிசையில் நிரை நிரைக்கு என்ன வாய்ப்பாடு?

3. ஐ வகை நிலங்களில் நிலமும் நிலம் சார்ந்த பகுதியும் எவ்விதம் அழைக்கப் படுகிறது?

4. பெண்ணின் பெருமை இந்த நூலின் ஆசிரியர் யார்?

5. குற்றாலக்குறவஞ்சியை இயற்றியது யார்?

6.சேக்ஸ்பியரின் "மெர்ச்சன்ட் ஆப் வெனிசில்" வில்லன் பெயர் என்ன?

7.அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு வாங்கித்தந்த ஆங்கில நாவலின் பெயர் என்ன?

8.ஷாஜகானின் அப்பா பெயர் சலீம் சரியா தவறா?

9.தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்?

10.ராமாயணக் கதையில் வரும் கிஷ்கிந்தை இப்போதைய எந்த நிலப்பகுதியில் வருகிறது?

11.துத்தநாகத்தின் அறிவியல் குறியீடு என்ன?

12."மண்ணில் இந்தக் காதலன்றி " இந்தப் பாடலை எழுதியவர் யார்?

13.பல்லவர் காலத்து காபாலிகர்கள்,காளாமுகர்கள் இவர்கள் சார்ந்திருந்த இந்து மதப் பிரிவு எது? ( 1 st கேள்வி தப்பாக் கேட்டுட்டேன் போல!!!)?

14.முகலாயர் வரலாற்றில் மதாம் அங்கா யார்?

15.இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?

இப்போதைக்கு இந்தக் கேள்விகள் போதும் , யாரெல்லாம் பதில் சொல்றாங்கன்னு பார்த்துட்டு சரியான பதில்கள் இறுதியில் வெளியிடப்படும்.

check your knowledge .

30 comments:

R.Gopi said...

அடடா.... விடுகதையா... எனக்கு கேள்வி கேட்டு தானே பழக்கம்....

விடுகதையா இந்த வாழ்க்கை, விடை தருவார் யாரோ??

//1.தமிழ் இலக்கணப்படி மாத்திரை அளவீட்டில் ஒற்று எழுத்துக்கு எத்தனை மாத்திரை?//

ஒன்றே ஒன்று என்று நினைக்கிறேன்..

//2. நேர்..நேர் =தேமா ...இந்த வரிசையில் நிரை நிரைக்கு என்ன வாய்ப்பாடு?//

நிரை நிரை = புளிமா??

//ஐ வகை நிலங்களில் நிலமும் நிலம் சார்ந்த பகுதியும் எவ்விதம் அழைக்கப் படுகிறது?//

மருதம்....

//4. பெண்ணின் பெருமை இந்த நூலின் ஆசிரியர் யார்?//

திரு.வி.க...

//5. குற்றாலக்குறவஞ்சியை இயற்றியது யார்?//

திரிகூட ராசப்ப கவிராயர்

//6.சேக்ஸ்பியரின் "மெர்ச்சன்ட் ஆப் வெனிசில்" வில்லன் பெயர் என்ன?//

ஷைலாக்

//7.அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு வாங்கித்தந்த ஆங்கில நாவலின் பெயர் என்ன?//

THE GOD OF SMALL THINGS

//8.ஷாஜகானின் அப்பா பெயர் சலீம் சரியா தவறா?//

ஜஹாங்கீர்

//9.தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்?//

ஜானகி ராமசந்திரன்

//10.ராமாயணக் கதையில் வரும் கிஷ்கிந்தை இப்போதைய எந்த நிலப்பகுதியில் வருகிறது?//

இந்த கேள்விக்கு நான் அபீட்டு

//11.துத்தநாகத்தின் அறிவியல் குறியீடு என்ன?//

Zn

//12."மண்ணில் இந்தக் காதலன்றி " இந்தப் பாடலை எழுதியவர் யார்?//

பாவலர் வரதராசன் (இளையராஜாவின் மூத்த சகோதரர்)

13 & 14 - சாய்ஸ்ல விட்டாச்சு

//15.இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?//

ஹாக்கி

தமிழையும், வரலாறையும் கிளற வைத்ததற்கு மிக்க நன்றிங்கோ....

மிக நல்ல இடுகை.... இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்....

நீங்கள் இந்த பாடலுக்கு மட்டும் என்ன அர்த்தம் என்று சொல்லுங்கள் பார்ப்போம்....

யக்கக்க
ஜக்க
ஜகக்க
மக்கக்க
டக்கா
நண்டு...

Vidhoosh said...

மெய்யெழுத்து / ஒற்றெழுத்து - அரை மாத்திரை (ஆய்தவெழுத்துக்கும்தான்)

நேர் நேர் என இரண்டு அசை சேர்ந்து வந்தால் அது தேமா [தே + மா . . . நேர் + நேர் ]
நிரை நேர் என்பது புளிமா [புளி + மா . . . = நிரை + நேர்]
நேர் நிரை எனபது கூவிளம் [கூ + விளம் = நேர் + நிரை]
நிரை நிரை என்பது கருவிளம் [கரு + விளம் = நிரை + நிரை ]

முல்லை

ஒஷோ (வா? அல்லது வும் எழுதியிருக்கார்)

திரிகூடராசப்பகவிராயர்

ஷைலாக்

காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்

தவறு. அப்பா பேர் ஜகாங்கீர் (வரலாற்று ஷாஹ்ஜஹான் தான??)

அம்மா-வுக்கு "ஜெ"

துங்கபத்திரையின் தென்கரையில், ஹம்பியிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருக்கும் அநெகுந்தி கிராமம், கிஷ்கிந்தை என்று நம்பப் படுகிறது (அஞ்சனாத்ரி மலை அனுமன் பிறப்பிடமாகக் கருதுகிறார்கள். ரிஷ்யமுக பர்வதமும் இதற்கு அருகில்தான் அமைந்துள்ளதால் நம்பிக்கை வலுப்படுகிறது!!)

Cadmium Cd

பாவேந்தர் பாரதிதாசன்

ஹிந்து மதம் (என்னங்க கேள்வி???)

ஆதம் கானின் தாய் - அக்பரின் வளர்ப்புத் தாய்/தாதி. இவள் ஆதிக்கம் செலுத்தப் பட்ட காலம் "பெட்டிகோட் கவர்ன்மென்ட்" என்று அழைக்கப் பட்டதும் உண்டு. ராவணன் போல நான் வியக்கும் வரலாற்று காரெக்டர்களில் இவளும் ஒருவள். மதுரா ரோடு புராணா கிலாவிற்கு எதிரில் இருக்கும் மதராசா இவள் நிறுவிய கைரூல் மஞ்சில் ஆகும் என்பது கூடுதல் தகவல். (எனக்கும் பழங்கதை பிடிக்கும்ங்க)

ஹா ஹா ஹா...ஹாக்கி

--வித்யா

(லட்சம் கட்டி வராகன் பொன் முடிப்பை நேரில் பெற்றுக் கொள்ளவா?).

Vidhoosh said...

எப்போ ரிலீசு?

Vidhoosh said...

///ஜானகி ராமசந்திரன்//
அட ஆமால்ல... :))

KarthigaVasudevan said...

நன்றி R.Gopi

நன்றி Vidhoosh...

பதில்களை நாளை வெளியிடுகிறேன்.

:)

R.Gopi said...

ஆஹா... வித்யா, நீங்க இருக்கறதையே மறந்து விட்டு “கோதா”வில் குதித்த இந்த சிறுவனை ஷமிக்கணும்.....

உங்கள் தமிழ் ஆளுமை நாடறிந்த / வலையறிந்த ஒன்று... நாங்க எல்லாம், உங்கள பார்த்து தான், தமிழையே மறுபடி படிக்க ஆரம்பிச்சோம்...

//(லட்சம் கட்டி வராகன் பொன் முடிப்பை நேரில் பெற்றுக் கொள்ளவா?)//

சொல்லி அனுப்புங்க... கூடவோ, குறைச்சலோ, அப்படியே ஏதாவது எனக்கும்......

R.Gopi said...

வித்யா ....

முல்லை என்பது காடும், காடு சார்ந்த நிலமும் அல்லவா??

நான் குறிப்பிட்ட மருதம் என்பது வயலும், வயல் சார்ந்த நிலமும்...

எது சரி என்பதை டீச்சர் நாளை சொல்லட்டும்....

அண்ணாமலையான் said...

அடடே இன்னிக்கும் நல்ல நாள்தான்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏதோ நீங்க, கோபி, விதூஷ் புண்ணியத்துல இன்னிக்கு பொது அறிவை வளர்த்துக்கிட்டேன் ;)))))

அடிக்கடி இது மாதிரி ஏதாச்சும் போடுங்க.

நட்புடன் ஜமால் said...

அமித்து அம்மா அழகா எஸ்கேப்பு - நானும் ...

மோனிபுவன் அம்மா said...

அட 10-ம் வகுப்பு பாடத்தையும் இந்த இலக்கணம் எனக்கு வராமல் நான் அடிவாங்கியதும், அதன் பிறகு என் தமி்ழ் ஆசிரியர் எனக்கு கற்று தந்ததும் பிறகு நல்ல மார்க் நான் வாங்கியதும் என் நினைவுக்கு வந்தது.

முகிலன் said...

1. அரை மாத்திரை
2. கருவிளம்
3. மருதம்
4. பாரதிதாசன்
5. திரிகூட ராசப்ப கவிராயர்
6. சைலாக்
7. God of Small things
8. அப்படியும் சொல்லலாம் (மொகல்-எ-ஆசம் படத்தின் படி). ஜாஹாங்கீர் என்பதே சரியான விடை.
9. திருமதி. ஜானகி ராமச்சந்திரன்
10. ஒரிசா?
11. Zn
12. பாவலர். வரதராசன்
13. சமணம்
14. அக்பரின் வளர்ப்புத்தாய் - தேங்க்ஸ் டு ஜோதா அக்பர்
15. ஹாக்கி (கிரிக்கெட்னு மாத்திரலாம்)

அது சரி said...

பிட்டடிக்காம பதில்கள்:

1. அரை மாத்திரை (ஒன்றரைன்னு சொல்லி அறை வாங்கிருக்கேன்)

2. நிரை நிரை= புளி மா...இப்படியே தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய், புளிமாங்கனி, தேமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனின்னு போகும்...இதெல்லாம் எதுக்குன்னு சொல்ல வேண்டியது உங்களுக்கான கேள்வி...

3.மருதம்

4. பெண்ணின் பெருமை...ம்ம்ம்ம்...ரமணிச் சந்திரன் இல்ல...பாரதி தாசன்?

5. குற்றாலக் குறவஞ்சி...அண்ணன் உண்மைத் தமிழனோட அப்பன் முருகன் சொல்ல சொல்ல அவ்வையார் நோட்ஸ் எடுத்தாங்களோ?? தெரியலையே...

6. அது யாரு ஷேக்ஸ்பியர்?

7. God of little things

8. இல்ல‌. ஷாஜஹானின் அப்பா பேர் ஜஹாங்கீர்

9. ஜானகி ராமச்சந்திரன் (அவங்களுக்கு ஓட்டுக் கேட்டு அந்த காசுல பொரி வாங்கி தின்னுருக்கேன்)

10. தெரியலப்பா. அது தீம் பார்க் ஆயிடுச்சில்ல?

11. Zn (Zinc)

12. பாவலர் வரதராஜன்...இளையராஜாவோட அண்ணா...எல்லாம் தேனி மக்கள் தான்...

13. காளாமுகம்...சைவத்தின் ஒரு பிரிவு...சிவனை சுடுகாட்டு மண்டையனாக நொங்கெடுத்தல்...

14. தெரியலை..

15. அஃபிஷியலா ஹாக்கி....ப்ராக்டிக்கலா கரப்ஷன்...

அது சரி said...

//
Vidhoosh said...
//
முல்லை
//

தப்பு...காடும் காடு சேர்ந்த இடமும் முல்லை...மலையும் மலை சேர்ந்த இடமும் குறிஞ்சி...கடலும் கடல் சேர்ந்த இடமும் நெய்தல்...மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை...நிலமும் நிலம் சேர்ந்த இடமும்?? மருதம்!

//
அம்மா-வுக்கு "ஜெ"
//

இல்லியே...அவங்களுக்கும் முந்தியே ஜானகி சி.எம். ஆயிட்டாங்க..

//
Cadmium Cd
//

உண்மையை சொல்லுங்க வித்யா...நீங்க கெமிஸ்ட்ரில ஃபெயில் தான?? :0)))
துத்தநாகம் Zinc...Zn.

//

அது சரி said...

//
முகிலன் said...
//
2. கருவிளம்
//

தப்பு...கருவிளம்னு எதுவுமே இல்லை!

நிரை நிரை= புளிமா...நிரை நிரை நிரை= கருவிளங்காய்

//
13. சமணம்
//

தப்பு...காபாலிகர், காளாமுகர்னு பேரை பார்த்தாலே தெரியலை? :0)))...கபாலம்ங்கிற வார்த்தைலருந்து வந்தது காபாலிகம்...கபாலம்னா சிவனை குறிப்பது...

முகிலன், நீங்க ஃபெயில்! :0)))))

அது சரி said...

On second thought, For question 8, I think Shajahan's dad name is Saleem is correct. Jehangir's given name is Saleem...Am I correct?

முகிலன் said...

//தப்பு...கருவிளம்னு எதுவுமே இல்லை!

நிரை நிரை= புளிமா...நிரை நிரை நிரை= கருவிளங்காய்
//

அதுசரி... இதுக்குத்தான் தமிழ் க்ளாஸ் கட்டடிச்சிட்டு வேதாளத்தோட பலான படத்துக்குப் போகக்கூடாதுங்கறது..

நேர்நேர் - தேமா
நிரைநேர் - புளிமா
நேர்நிரை - கூவிளம்
நிரைநிரை - கருவிளம்


சமணம்ங்கறது தப்பான பதில்தான். முதல்ல என்ன மதம்னு கேட்டிருக்கவும் குழம்பிட்டேன்.. ஹி ஹி ஹி

டீச்சர், உங்க அனுமதியோட 3 வது கேள்வியோட பதிலை அடிச்சிட்டு வேற பதில் சொல்லிக்கிறேன்.

3. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை - எல்லாமே நிலங்களோட வகைகள் தானே? அதுல என்ன தனியா நிலமும் நிலம் சேர்ந்த பகுதி? ஸோ, ஐந்தும் அப்பிடிங்கிறது என்னோட புது ஆன்ஸர்.

முகிலன் said...

அதுசரி,

//தப்பு...கருவிளம்னு எதுவுமே இல்லை!

நிரை நிரை= புளிமா...நிரை நிரை நிரை= கருவிளங்காய்
//

நேர்நேர் - தேமா
நிரைநேர் - புளிமா
நேர்நிரை - கூவிளம்
நிரைநிரை - கருவிளம்.

இதுக்குத்தான் தமிழ் கிளாஸ் கட் அடிச்சிட்டு வேதாளத்தோட பலான படம் பாக்கப் போகக்கூடாதுங்கறது.

சமணத்துல சறுக்கிட்டேன் ஹி ஹி ஹி

டீச்சர்: உங்க அனுமதியோட மூணாவது கேள்விக்கான என் பதிலை அடிச்சிட்டு மாத்தி எழுதிக்கிறேன்.

3. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை - ஐந்துமே நிலத்தோட வகைகள் அப்பிடிங்கிறப்போ அதுக்குள்ள என்ன நிலமும் நிலம் சார்ந்ததும் உட்பிரிவு?
ஸோ என்னோட பதில் ஐந்தும்.

முகிலன் said...

அதுசரி,

//தப்பு...கருவிளம்னு எதுவுமே இல்லை!

நிரை நிரை= புளிமா...நிரை நிரை நிரை= கருவிளங்காய்
//

நேர்நேர் - தேமா
நிரைநேர் - புளிமா
நேர்நிரை - கூவிளம்
நிரைநிரை - கருவிளம்.

இதுக்குத்தான் தமிழ் கிளாஸ் கட் அடிச்சிட்டு வேதாளத்தோட பலான படம் பாக்கப் போகக்கூடாதுங்கறது.

சமணத்துல சறுக்கிட்டேன் ஹி ஹி ஹி

டீச்சர்: உங்க அனுமதியோட மூணாவது கேள்விக்கான என் பதிலை அடிச்சிட்டு மாத்தி எழுதிக்கிறேன்.

3. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை - ஐந்துமே நிலத்தோட வகைகள் அப்பிடிங்கிறப்போ அதுக்குள்ள என்ன நிலமும் நிலம் சார்ந்ததும் உட்பிரிவு?
ஸோ என்னோட பதில் ஐந்தும்.

அரங்கப்பெருமாள் said...

1. 1/2 மாத்திரை

2.நிரை நிரை = கருவிளம்

3. மருதம் (வயலும் வயல் சார்ந்தப் பகுதி)

4. திரு.வி.க

5. திரிகூட ராசப்ப கவிராயர் (வசந்த வல்லி பந்தாடியது ஞாபகம் இருக்கு,சரிதானே)

6. ஷைலாக்

7. the god of small things

8. ஜஹாங்கீர் (மாடிப் படில தவறி விழுந்து இறந்தாரே, நன்றி: வந்தார்கள்..வென்றார்கள்.. - மதன்)

9. ஜானகி ( இரட்டைப் புறா சின்னத்திலே நின்னு தோத்தாங்களே)

10. (சென்னையில இருக்கிற தீம் பார்க் தான் தெரியும்)

11. zn (மயில் துத்தம் - 10-ம் அறிவியல படிச்ச மாதிரி தெரியுது)

12. பாவலர் வரதராஜன் (இப்பிடிததான் சொல்லுறாங்க,ஆனா..உண்மையில் கங்கை அமரன்)

13.

14.

15. ஹாக்கி

Vidhoosh said...

///உண்மையை சொல்லுங்க வித்யா...நீங்க கெமிஸ்ட்ரில ஃபெயில் தான?? :0)))///

ஆமாங்க அது சரி :))

KarthigaVasudevan said...

விடைகள்:

1.அரைமாத்திரை

2.கருவிளம்

3.மருதம்(வயலைப் பேச்சு வழக்கில் நிலம் என்றும் சொல்வதால்)

4.தி.வி.க(திருவாரூர் விருத்தாசல முதலியார் மகன் கல்யாணசுந்தரனார்)

5.திரிகூடராசப்பக் கவிராயர்

6.ஷைலாக்

7.God Of Small Things

8.சலீம் என்பது ஜகாங்கீரின் இளம் வயதுப்பெயர் ஆக விடை சரியே .


9.ஜானகி ராமச்சந்திரன்(எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்கள் தமிழக முதல்வராக இருந்த முதல் பெண்மணி இவரே)

10.ஒட்டுமொத்தமாக ஆந்திரப்பிரதேசம் என்றும் சொல்லலாம்.

11.Zn

12.கங்கை அமரன் என்பதே சரியான பதில்(ஆனால் பாடலின் தரத்தினால் பாவலர் வரதராஜனைத் தான் குறிப்பிடுகிறார்கள் பலரும் என்று எஸ்.பி.பி ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்,கங்கை அமரன் மிக அருமையான பல பாடல்களை எழுதியிருக்கிறார்,அதிலொன்று இதுவும். )

13.சைவம்

14.அக்பரின் வளர்ப்புத்தாய்

15.ஹாக்கி

@ R.Gopi ...

உங்க மார்க் 9 /15 ...

@ Vidhoosh...

உங்க மார்க் 9/15 ...

@ முகிலன்...

உங்க மார்க் 11 /15

@ அதுசரி

உங்க மார்க் 7 /15

அதுசரி...ஆணித்தரமா சொன்னா தப்பான விடை சரியான விடை ஆயிடாது அதுசரியாரே :)))).


போட்டில கலந்துக்காம சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துட்டுப் போன மக்களே ...

அண்ணாமலையான்...
அமித்து அம்மா ...
நட்புடன் ஜமால்...
மோனிபுவன் அம்மா ...

உங்க வருகைக்கும் நன்றிங்க.

KarthigaVasudevan said...

@ அரங்கப்பெருமாள்...

உங்க மார்க் 12 /15 ...

அறிவன்#11802717200764379909 said...

பதில்கள் எல்லாம் பெரும்பாலும் சரியாகச் சொல்லி விட்டார்கள் போல...

{தசரதன் வேட்டைக்குப் சென்றிருக்கையில் ஒருமுறை சிராவணன் எனும் சிறுவனின் மேல் அம்பெய்து கொன்று விடுகிறான். திட்டமிட்டு சிராவணனை கொல்லும் நோக்கம் தசரதனுக்கு}

அவன் சிரவணன் இல்லையா ? புதிதாக இன்னொரு ராவணனை உருவாக்குகிறீர்களே...

அரங்கப்பெருமாள் said...

டீச்சர், நாந்தான் கிளாஸ் ஃப்ர்ஸ்ட்...ஆனா நீங்க அத சொல்லவே இல்லயே?.

அது சரி said...

//
@ அதுசரி

உங்க மார்க் 7 /15
//

விடைத்தாள் திருத்தலில் சரித்திரம் காணா ஊழல் நடந்திருப்பதாக தெரிய வருவதால், இந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது!

அது சரி said...

//
அதுசரி...ஆணித்தரமா சொன்னா தப்பான விடை சரியான விடை ஆயிடாது அதுசரியாரே :)))).
//

நாங்க கடைசி பெஞ்சு பசங்கெல்லாம் அப்படித் தான்...தப்பா சொன்னாலும் சும்மா தயங்காம சொல்லுவோம்...ஆணித்தரமென்ன, பக்கத்துல இருக்கவனை அடிச்சிக் கூட சொல்லுவோம் :0)))

அது சரி said...

//
முகிலன் said...
அதுசரி,

//தப்பு...கருவிளம்னு எதுவுமே இல்லை!

நிரை நிரை= புளிமா...நிரை நிரை நிரை= கருவிளங்காய்
//

நேர்நேர் - தேமா
நிரைநேர் - புளிமா
நேர்நிரை - கூவிளம்
நிரைநிரை - கருவிளம்.

இதுக்குத்தான் தமிழ் கிளாஸ் கட் அடிச்சிட்டு வேதாளத்தோட பலான படம் பாக்கப் போகக்கூடாதுங்கறது.
//

அய்யய்ய...இந்த மொத பெஞ்சு கோஷ்டி தொல்லை தாங்க முடியல சாமி...சரி, நான் அன்னிக்கி இஸ்கூலு போகலை...அதுக்காக அதை மூணு தடவை சொல்லிக் காட்டணுமா??

வெளிய வந்தா இருக்கு உங்களுக்கு....:0)))

அது சரி said...

//
5.திரிகூடராசப்பக் கவிராயர்
//

அது என்ன பேரு திரி கூட ராசப்ப கவி ராயர்???

பேரே அதிரி புதிரியா இருக்கே...யாருப்ப்பா அவரு??

அது சரி said...

//
8.சலீம் என்பது ஜகாங்கீரின் இளம் வயதுப்பெயர் ஆக விடை சரியே .
//

இது தப்பு...ஷாஜஹான் பொறந்தப்ப அவங்க அப்பா பேரு ஜஹாங்கீர் தான்...அவரு அடிக்கடி பேரை மாத்திக்கிட்டாருங்கிறதுக்காக நாங்க என்ன செய்றது டீச்சர்??