தலையணை சிரிக்குமோ?!
தலையணை சிரிக்குமோ?!
வெடித்துச் சிதறியும்
கசிந்து உருகியும்
மௌனச் சிதறல்களாய்
புதைந்து போன
பல துக்கங்களால்
தினம் நனைந்து
தினம் உலர்ந்து
துவண்டு சருகாகி
கசங்கி நசிந்த
தலையணை ஒன்று
கண்ணீர்க் கோடுகளை
வெறுக்கத் துவங்கிய
சிலநாட்களின் பின்
ஏதேனும் ஒருநாளில்
துள்ளத் துடிக்க
கை கால் அசைத்திடும்
சின்னஞ்ச்சிறு
தளிரின் அசைவுகளுக்கு
நழுவாமல் அண்டக் கொடுக்கையில்
குலுங்கிச் சிரிக்கலாம் ...!
தலையணை சிரிக்குமோ?!
7 comments:
அட ...
அருமையான சிந்தனைங்க ...
:-) நல்லாருக்கு கவிதை....மிஸஸ்.தேவ்!
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
நன்றி ஜமால்...
நன்றி முல்லை(உங்களை சில மாதவிடுமுறைக்குப் பின் என் லை ப்பக்கம் பார்த்ததும் சந்தோசமாய் உணர்ந்தேன் ) பப்பு நலம் தானே.
அருமை.
நழுவாமல் அண்டக் கொடுக்கையில்
குலுங்கிச் சிரிக்கலாம் ...!
தலையணை சிரிக்குமோ?!
ரொம்ப நல்லா இருக்குப்பா.
எனக்கும் தலையணை அண்டக்கொடுக்கும்போது கொஞ்சம் வேற மாதிரி தோணும் !!!
நன்றி துபாய் ராஜா
நன்றி அமித்துஅம்மா
உங்களுக்கு என்ன தோணும்? அதைக் கவிதையா பின்னூட்டம் போட்டிருக்கலாமேப்பா.
Post a Comment