Tuesday, August 4, 2009

நானிருப்பது ஈழத்திலோ ?!

திடுக் திடுக்
திருப்பங்களில்
தடக் தடக்கென
தட தடக்கும் இதயங்களுக்குச்
சொந்தக்காரர்களாகிப் போனதால்
இலை அசையும் போதெலாம்
இடி இடிக்கக் கூடுமெனும்
அனுமானம் தீர்மானமாய்
மிஞ்சிப் போன
பயக் காடுகளாயின
எம் நாடாயின காடு .
கூடுகள் எங்கே ???!!!
எம் வீடுகள் எங்கே ???!!!
நானிருப்பது ஈழத்திலோ ?!

9 comments:

சந்தனமுல்லை said...

//மிஞ்சிப் போன பயக் காடுகளாயின எம் நாடாயின காடு . கூடுகள் எங்கே ???!!! //

:(

நட்புடன் ஜமால் said...

வருத்தமாக இருக்கின்றது ...

KarthigaVasudevan said...

ஆமாம் வருத்தமாய்த் தான் இருக்கிறது ஜமால்...

நன்றி முல்லை(உங்களை சில மாதவிடுமுறைக்குப் பின் என் வலைப்பக்கம் பார்த்ததும் சந்தோசமாய் உணர்ந்தேன் ) பப்பு நலம் தானே.

குடுகுடுப்பை said...

எப்போது தீரப்போகிறதோ இந்த சோகம்.

துபாய் ராஜா said...

//எம் நாடாயின காடு .
கூடுகள் எங்கே ???!!!
எம் வீடுகள் எங்கே ???!!!
நானிருப்பது ஈழத்திலோ ?!//

வலி தரும் வரிகள்.

Muruganandan M.K. said...

'இலை அசையும் போதெலாம் இடி இடிக்கக் கூடுமெனும் அனுமானம் " எவ்வளவுதான் எம் உள்ளங்களை ரணமாக்கியுள்ளன என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Anonymous said...

//எம் வீடுகள் எங்கே ???!!! //

வீடு இருந்தாலும் அங்கே வசிக்க அனுமதியில்லை அவர்களுக்கு :(

அமிர்தவர்ஷினி அம்மா said...

இலை அசையும் போதெலாம் இடி இடிக்கக் கூடுமெனும் அனுமானம் தீர்மானமாய் மிஞ்சிப் போன பயக் காடுகளாயின எம் நாடாயின காடு . கூடுகள் எங்கே ???!!!

காலங்கள் பல கடந்தாலும் ஜீரணித்துக்கொள்ளமுடியாத ஒரு சோகம் ஈழமாகத்தான் இருக்கமுடியும்

:((((((

KarthigaVasudevan said...

@ குடுகுடுப்பை அண்ணா ...

நிகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் இது தீரா சோகமாகத் தான் தோன்றுகிறது.

@துபாய் ராஜா


உண்மை தான் துபாய் ராஜா

நன்றி

@Dr.எம்.கே.முருகானந்தன்...

துக்கம் கூட தீர்ந்த பின் பார்த்தால் அழகாய் தோன்றுமோ என்னவோ?! ஆனால் தீர வேண்டுமே?!

@ சின்ன அம்மிணி

மீளா ஏக்கம் ...சொல்வதற்க்கில்லை வார்த்தைகள் .