இழுத்து இழுத்து
போர்த்தினாலும்
தொடரும் பகலால்
உரிக்கப் பட காத்திருக்கும்
கன்னங்கரிய துப்பட்டி ...
இருட்டு ;
வெளிச்சப் பொட்டுக்கள்
திகட்டும் போது
ஒவ்வொருநாளும்
மீளும் சொர்க்கம்
இருள் ...
இனியதே !?
Note: படம் கூகுளில் இருந்து எடுத்து பயன்படுத்தப் பட்டது ,நன்றி கூகுள்.
8 comments:
ஆம்!
வெளிச்சம் என்று ஒன்றை நமக்கு அடையாளம் காட்டுவதே
இருள் தான் ...
//இழுத்து இழுத்து
போர்த்தினாலும்
தொடரும் பகலால்
உரிக்கப் பட காத்திருக்கும்
கன்னங்கரிய துப்பட்டி ...
இருட்டு ;//
அருமை.அருமை.
//வெளிச்சப் பொட்டுக்கள் திகட்டும் போது ஒவ்வொருநாளும் மீளும் சொர்க்கம் இருள் ... இனியதே//
நிச்சயம் இனிக்கும் சொர்க்கமே.
கவிதைக்காற்று தொடர வாழ்த்துக்கள்.
இழுத்து இழுத்து போர்த்தினாலும் தொடரும் பகலால் உரிக்கப் பட காத்திருக்கும்
ரசித்த வரிகள்
நன்றி ஜமால் :)
நன்றி துபாய் ராஜா :)
நன்றி அமித்து அம்மா :)
அட..நல்லாருக்கே!!!
கூகுலுக்கெல்லம் நன்றி சொல்லுவாங்களா..?
:)
கூகுள் நம்ப வீடு மாதிரி :)
நன்றி அன்புடன் அருணா
அப்படியா முருகேசன் ?! நீங்க சொன்னா சரி தான்.
நல்லா இருக்குங்க. இருட்டு நல்ல விசயம்தான் எங்கள மாதிரி சனங்களுக்கு
Post a Comment