Showing posts with label தலையணை சிரிக்குமோ. Show all posts
Showing posts with label தலையணை சிரிக்குமோ. Show all posts

Tuesday, August 4, 2009

சிரிக்கும் தலையணைகள்








தலையணை சிரிக்குமோ?!


தலையணை சிரிக்குமோ?!

வெடித்துச் சிதறியும்

கசிந்து உருகியும்

மௌனச் சிதறல்களாய்

புதைந்து போன

பல துக்கங்களால்

தினம் நனைந்து

தினம் உலர்ந்து

துவண்டு சருகாகி

கசங்கி நசிந்த

தலையணை ஒன்று

கண்ணீர்க் கோடுகளை

வெறுக்கத் துவங்கிய

சிலநாட்களின் பின்

ஏதேனும் ஒருநாளில்

துள்ளத் துடிக்க

கை கால் அசைத்திடும்

சின்னஞ்ச்சிறு

தளிரின் அசைவுகளுக்கு

நழுவாமல் அண்டக் கொடுக்கையில்

குலுங்கிச் சிரிக்கலாம் ...!

தலையணை சிரிக்குமோ?!