Friday, May 14, 2010

மரம்


விரையும் பேருந்தின் ஜன்னலில் ஓடி கடக்கும்
பெயர் தெரியா பசு மரங்கள்
யார் நட்டனவோ !
அம்மாவும் இல்லை
அப்பாவும் இல்லை
ஓயாது விறு விறுக்கும் காற்றின் பேரோசையில்
துண்டால் இறுக்கிய தொண்டைக்குழிக்குள் நசுங்கித்
திணறும் குரல்வளையாய்
எங்களுக்கோர் சொந்தமென்று எவருமில்லையே !
ஆர்ப்பரித்துப் புலம்பின காண் ;
வீட்டுக்கோர் மரம் வளர்ப்போம் !

12 comments:

ராமலக்ஷ்மி said...

மிக அருமை கார்த்திகா.

அன்புடன் நான் said...

கவர்ந்தன... கவிதையும் கருத்தும்....

பாராட்டுக்கள்.

நேசமித்ரன் said...

நல்லாருக்கு உங்க எண்ணத்தை வெளிப்படுத்திய விதம்

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு கார்த்திகா.

Unknown said...

மரத்துக்குள்ள எல்லாம் உக்காந்து யோசிக்கிறீங்களே கார்த்திகா..

அன்புடன் அருணா said...

அருமை!

க.பாலாசி said...

நல்ல கவிதைங்க... வளர்ப்போம்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை

ஜெய்லானி said...

சிந்தனை வாழ்க!!!!

அது சரி(18185106603874041862) said...

நல்லாருக்கு...

அகநாழிகை said...

நல்ல கருத்து. உயரிய சிந்தனை.

KarthigaVasudevan said...

நன்றி ராமலக்ஷ்மி

நன்றி சி.கருணாகரசு

நன்றி நேசன்

நன்றி பா.ரா

நன்றி முகிலன் (மரம் மட்டுமில்லை மனமிருந்தால் வேருக்குள்ளும் நீருக்குள்ளும் கூட உட்கார்ந்து யோசிக்கலாம் முகிலன் :)

நன்றி அருணா

நன்றி க.பாலாசி (வார்க்கலாம் பாலாசி...மரத்தடிக் காற்றை அனுபவித்தவர்களுக்கு மரங்களை இழந்த வலி நிச்சயம் புரியக் கூடும்)

நன்றி முத்துலெட்சுமி

நன்றி ஜெய்லானி

நன்றி அதுசரி

நன்றி அகநாழிகை (உயரிய சிந்தனை என்பதை விட உகந்த சிந்தனை என்பதே பொருந்தக் கூடும்)