Monday, April 20, 2009

சுபாங்கனியின் ஜாமன்றி பாக்சும் ...அம்ருதாவும் ...

சுபாங்கனியின் ஜாமன்றி பாக்ஸ் தொலைந்து போனதால் தான் அம்ருதா அதை தேடிக் கண்டுபிடித்து எடுத்து வரும் பொருட்டு தன் மகளின் பள்ளிக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது .போன வாரம் தான் ரகுராமன் அந்த ஜாமன்றி பாக்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தார் சுபாங்கனிக்கு ...அதை மகளின் கையில் கொடுக்கும் போதே ஏகப் பட்ட அறிவுரைகளோடு எப்போதும் போல பல (பஞ்சப்) பாட்டுக்களுடனும் தான் கொடுத்திருந்தார்.

சுபாங்கனிக்கு சந்தோசம் பிடிபடவில்லை...தன் அப்பாவா இது? புது ஜாமன்றி பாக்ஸ் கேட்டு முக்கால் வருடம் தாண்டி வாங்கிக் கொடுப்பார் என்று அவள் தான் எதிர்பார்க்கவே இல்லையே!!!சும்மா கேட்டு வைப்போம் என்று தான் அவளும் ஒரு வார்த்தை போட்டு வைத்தால் அப்பாவின் செவியில் ...அவர் நிஜமாகவே வாங்கிக் கொடுத்ததும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போய் விட்டால் பாவம்?!

அந்த ஜாமன்றி பாக்ஸ் தான் இப்போது காணோம் ...விலை 125 ரூபாய்கள் ...

அப்பாவை நினைத்தால் அடிவயிற்றில் பயப் பந்து உருண்டது ...தொண்டை உலர்ந்து மூச்சுத் திணறி கண்களில் நீர் கரை கட்டி நின்றது எப்போதடா கரை மீறி உருளலாம் என; ரகுராமன் அத்தனைக்கு மோசம் என்று சொல்ல முடியாது தான் ...மனிதன் கஷ்டப் பட்டு முன்னேறிக் கொண்டிருப்பவன் ...(கவனிக்கவும்...முன்னேறிக் கொண்டிருப்பவன் தான் இன்னும் முன்னேறியவன் ஆகவில்லை ரகுராமன் ...

ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குப் பார்த்தே ஆக வேண்டிய சூழல் அவனுக்கு உண்டு ...அவனது மனைவியும் ...மகளும் ஆகிப் போன காரியத்தால் அந்த சூழல் சுபாங்கனிக்கும் ... அம்ருதாவுக்கும் கூட உண்டு தானே என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கை.

தவறுதலாகவோ அல்லது கவனக் குறைவாகவோ எது நடப்பினும் அதற்க்கு காரணம் எவராக இருப்பினும் ரகுராமனின் மிக நீண்ட அறிவுரைகளை அந்த வீட்டினரின் காதுகள் கேட்டே தீர வேண்டும் ,அம்மாவோ மகளோ தவறு செய்திருப்பின் அறிவுரைகளாக ஆரம்பிக்கும் பேச்சு தவறுதல் ரகுராமானது என்று வரும்போது இடை விடாத புலம்பல்களாக மாறி விடும் .உங்களுக்கெல்லாம் அறிவுரை ஆயிரக் கணக்கில் சொல்லி விட்டு என்னைப் பார் இப்படி செய்து விட்டு வந்து நிற்கிறேன் என்று அதற்கும் புலம்பி...புலம்பி பேசிப் பேசி கொல்வான் ...

ஆக மொத்தத்தில் ரகுராமனின் புலம்பலில் இருந்து தப்பிக்கவும் ...வீட்டுச் சூழலில் 125 ரூபாய் ஜாமன்றி பாக்சை அநியாயமாய் தொலைத்து விட்டு வந்து நிற்க்கிராலே இந்த பாதகத்தி எனும் குமைச்சலிலும் அம்ருதா வேக..வேகமாய் பள்ளி காம்பவுண்டை நெருங்கினாள்.

சுபாங்கனியின் ஜாமன்றி பாக்ஸ் தொலைந்து போனதால் தான் அம்ருதா அதை தேடிக் கண்டுபிடித்து எடுத்து வரும் பொருட்டு தன் மகளின் பள்ளிக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது .

ஆரம்பிக்கும் பேச்சு தவறுதல் ரகுராமானது என்று வரும்போது இடை விடாத புலம்பல்களாக மாறி விடும் .உங்களுக்கெல்லாம் அறிவுரை ஆயிரக் கணக்கில் சொல்லி விட்டு என்னைப் பார் இப்படி செய்து விட்டு வந்து நிற்கிறேன் என்று அதற்கும் புலம்பி...புலம்பி பேசிப் பேசி கொல்வான் ...ஆக மொத்தத்தில் ரகுராமனின் புலம்பலில் இருந்து தப்பிக்கவும் ...வீட்டுச் சூழலில் 125 ரூபாய் ஜாமன்றி பாக்சை அநியாயமாய் தொலைத்து விட்டு வந்து நிற்க்கிராலே இந்த பாதகத்தி எனும் குமைச்சலிலும் அம்ருதா வேக..வேகமாய் பள்ளி காம்பவுண்டை நெருங்கினாள்.

வாட்ச்மேனைக் காணோம்...ஒரு ஐந்து நிமிடம் காத்திருந்து பார்த்தும் வாட்ச்மேன் வந்தபாடில்லை...பள்ளி பெரிய கேட் மூடப் பட்டு சின்ன கேட் தான் ஒருக்களித்து திறந்திருந்தது,அம்ருதா படித்த காலத்திலிருந்தே அந்தப் பள்ளியில் பெரிய கேட் திறந்திருந்தால் தான் அது பள்ளி நேரம் ,மற்றபடி பள்ளி நேரம் முடிந்த பின் மாலை மற்றும் அதிகாலை வேளைகளில் நிர்வாகிகள் அல்லது ஆசிரியர்கள்வர மட்டுமே சின்ன கேட் திறப்பு பயன்படுத்தப் படும்...

வேறு யாரும் அத்து மீறி அந்தப் பாதையில் நுழையக் கூடாது என்பது பள்ளி விதிகளில் ஒன்று . என சொல்லிக் கொண்டிருந்தேன் ?ஆம் அம்ருதாவும் இதே பள்ளியில் தான் படித்தாள் பிளஸ் டூ வரையிலும்,

சுற்றும் முற்றும் இருமுறை பார்த்து விட்டு சட்டென்று அந்த சிறு கேட் வழியே உள்ளே விறு ...விறுவென்று நுழைந்து விட்டாள்,அவள் மனம் முழுக்க ஜாமன்றி பாக்ஸ் சுபாங்கனியின் வகுப்பறையில் எங்காவது ஓரிடத்தில் கிடைத்து விட வேண்டும் என்ற வேண்டுதல் தான் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

ரகுராமனின் புலம்பல்களுக்கு இன்னும் அம்ருதாவின் அம்மா சொல்வதைப் போல் "மாப்பிள்ளையின் தொண தொணப்பிலிருந்தும் ...நச்சரிப்பிலிருந்தும் அம்ருதா தப்பிக்க வேண்டுமென்றால் அவளுக்கு ஜாமன்றி பாக்ஸ் கிடைத்தே ஆக வேண்டும் .

8 th standard "B" SECTION மாடியில் அல்லவா இருக்கிறது ?!

முறையாக வாட்ச்மேனிடம் அனுமதி வாங்கி வந்திருந்தாலும் பரவாயில்லை ...யாருக்கும் தெரியாமல் அல்லவா உள்ளே நுழைய வேண்டியதாகி விட்டது ?! அம்ருதாவுக்கு யாரேனும் தன்னை பார்த்து விட்டு தவறாகக் கருதி சத்தம் போட்டு மானத்தை வாங்கி விடக் கூடாதே என்ற பதை பதைப்பு வேறு கூடிக் கொண்டே போக அந்த பின் மாலை நேரத்து சிலு...சிலு காற்றிலும் வியர்த்துக் கொட்டியது .

பள்ளியின் கேட் தாண்டி உள்ளே வந்ததும் முதலில் கண்ணில் பட்டது தலைமை ஆசிரியரின் "பர்னாசாலை" போன்ற குடிசை தான் ..எத்தனை முறை மேப் எடுக்கவும் ..சாக் பீஸ் எடுக்கவும் ...மண்பானை நீர் எடுத்துப் போகவும் வந்திருக்கிறோம் ...

டீச்சர்களுக்கு மண் பானை நீர் சொம்பில் எடுத்துக் கொண்டு போய் கொடுக்க அம்ருதாவுக்கும் ...சுமதிக்கும் தான் எப்போதும் போட்டி ..யார் முதலில் ஓடிப் போய் தண்ணீர் கொண்டு வருகிறார்களோ அவர்களே ராஜம் டீச்சர் குடிமையியல் வகுப்பில் முதலில் பாடம் வாசிக்கத் தகுதி பெறுவார்கள் ...

இது அந்த டீச்சராகச் சொல்லவில்லை,பிள்ளைகளே அப்படி ஒரு முடிவு கட்டிக் கொண்டு தினம் ..தினம் இந்த போட்டி நடைபெறும் அப்போது....

சுமதியைக் காரைக்குடியில் கட்டிக் கொடுத்திருப்பதாக அம்மா சொன்ன ஞாபகம் மூளைக்குள் மின்னி மறைய நடையை எட்டிப் போட்டால் அம்ருதா ,

பத்தாம் வகுப்புக் கட்டிடத்திற்கு முன்னே சவுக்கு பாத்திகளுடன் உள்ளே ஒரு சின்ன பூங்கா போன்ற அமைப்பு உண்டு அந்தப் பள்ளியில் அதைக் காணோம் இப்போது ...அங்கே தான் அம்ருதா பரீட்சை சமயங்களில் உட்கார்ந்து படிப்பாள்...கடைசி பெல் அடித்த பின் மெயின் ஹால் பத்தாம் வகுப்புக் கட்டிடமே என்பதால் எழுந்து ஓடிப் போய் தன் பதிவு எண் பார்த்து அமர வசதி என்பதால் வேறு யாருக்கும் அந்த இடத்தை அம்ருதா விட்டுத் தந்ததே இல்லை ...

இந்தப் பக்கம் பத்தாம் வகுப்புக் கட்டிடம்...அந்தப் பக்கம் தலைமை ஆசிரியரின் பர்னாசாலை ...நடுவே பூங்கா ...அதில் வலது மூலையில் ஒரு பழைய வேப்ப மரம் அதன் தூரின் பிசினை நோண்டிக் கொண்டோ அல்லது பிளவு பட்ட பட்டைகளை உறித்துக் கொண்டோ ...தரையைக் குச்சியால் கிளறிக் கொண்டோ தான் அம்ருதா எப்போதும் பரீட்சைக்குப் படிப்பது வழக்கம் .

அதைத் தாண்டி உள்ளே நடந்தால் பிளே கிரவுண்டு ...அங்கே தான் மார்னிங் பிரேயர் நடக்கும் ..கொடிக் கம்பத்தைச் சுற்றிலும் ஒரு சின்ன ரோஜாத் தோட்டம் ..அதைத் தோட்டம் என்று சொல்ல முடியாது ..ஒரு சின்ன பாத்தியில் சில நூறு ரோஜாச் செடிகளை நட்டு அது அங்கே பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் ஆண்டு முழுதுமே...

பிளஸ் டூ வில் அம்ருதா தான் ஸ்கூல் பீபில் லீடர் ...அந்த ஆண்டு அரைப் பரீட்சை முடியும் வரை அவள் தான் "தாயின் மணிக் கொடி பாரீர் ..அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் " பாடல் முடிந்ததும் கொடி ஏற்றுவாள் .அந்த கொடிக் கம்பம் இருக்கிறது ..ரோஜாப் பாத்தியைத் தான் காணோம்...அதற்க்கு பதிலாக அந்த இடத்தில் பேஸ்கட் பால் ஆடுதளம் சிமென்ட் பூசப் பட்டு நீண்டு போய் பார்வையில் பட்டது .

ஐயோ ...ஜாமன்றி பாக்ஸ் கிடைக்குமா ?

கிடைச்சிட்டா தேவலை !!!

சுபாங்கனி கூட வரவில்லை ..அப்பா வரும் நேரம்...அம்மா..மகள் ரெண்டு பேருமே வீட்டில் இல்லாததைக் கண்டால் கோபம்பொத்துக் கொண்டு வரும் ரகுராமனுக்கு ;

அம்மா காய் வாங்க கடைக்குப் போயிருக்கிறாள் என்று சொல்லி சமாளிக்க அன்னையை பள்ளிக்கு அனுப்பி விட்டு மகள் வீட்டில் இருந்தால் வீட்டுப் பாடம் செய்து கொண்டு !?

எட்டாம் வகுப்புக்கு போக மாடிப் படி ஏற வேண்டும் ...நல்ல கருங்கல் கட்டிடம் ...படிகள் நல்ல வலுவான கற்கள் ...ஒரு முறை ஏழாம் வகுப்பு முழுப் பரீட்சை முடிந்து கடைசி பெல் அடித்ததும் மாடியில் இருந்து அடித்துப் பிடித்து ஓடி வரும் போது நான்கைந்து படிகள் தாண்டும் ஸ்ரீதரன் காலை இடறியதில் அம்ருதா தலை குப்புற விழுந்து வைத்ததில் ஏற்ப்பட்ட வடு இன்னும் கூட அவளது முன் நெற்றியில் உண்டு ,

ஸ்ரீதரன் திருநெல்வேலிக்காரப் பையன் ,அம்மாவைப் பெற்ற பாட்டி தாத்தா இந்த ஊர் என்பதால் ஐந்திலிருந்து எட்டு வரை செல்லமாய் பாட்டி வீட்டில் இருந்து படித்தான் ,எட்டாம் வகுப்பு லீவில் ஊருக்குப் போனவன் தான் பிறகு டி.சி வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கே அவனை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்,அவனது தாத்தா ..பாட்டி இருக்கும் வரை லீவுக்கு ரெண்டு வருடம் வரை வந்து கொண்டிருந்தான்,அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவே இல்லை,அவனால் ஏற்ப்பட்ட வடு மட்டும் அவனை ஞாபகப் படுத்திக் கொண்டு அம்ருதாவுடன் தங்கி விட்டது போலும்!?

முதல் மாடி ஏறி வந்தாயிற்று ...இந்த வராண்டாவின் கடைசி அரை தான் எட்டாம் வகுப்பு ..பி செக்சன் ...மொத்தம் ஆறு அறைகள் ...முதல் அரை ஏழாம் வகுப்பு எ செக்சன் ...

அங்கு கஸ்தூரி டீச்சர் தான் கிளாஸ் டீச்சர் ...அம்ருதாவுக்கு கஸ்தூரி டீச்சரை ரொம்பப் பிடிக்கும். டீச்சருக்கு நீளமான பின்னல் ...வெள்ளிக் கிழமைகளில் தலைக்கு ஊற்றிக் கொண்டு தளர்வாய்ப் பின்னி கூந்தலில் உச்சியில் துளி மல்லிகைப் பூ கிள்ளி வைத்துக் கொண்டு வருவார் ...

பிள்ளையார் கோயிலுக்குப் போய் வந்ததற்கு சாட்சியாய் நெற்றியில் சின்னக் கீற்றாக திருநீறு, மெலிதாக மஞ்சள் பூசிய அடையாளம் தெரியும் ,எப்போதும் டீச்சர் வட்டப் பொட்டு வைத்துக் கொண்டு அம்ருதா பார்த்ததில்லை நீட்டப் பொட்டு தான் இப்போதும் கூட!

டீச்சரின் தூரத்துச் சொந்தம் தான் ரகுராமன் என்பதால் அவள் டீச்சரை எப்போதாவது குடும்ப விஷேசங்களில் பார்ப்பது உண்டு இப்போதும்...

அதெல்லாம் போகட்டும் ...இப்போது ஜாமன்றி பாக்ஸ் ...ஐயோ...அது கிடைக்க வேண்டுமே ?!

அதற்குத் தானே பல வருடங்கள் கழித்து இப்போது இந்தப் பள்ளிக்குள் நுழைந்தோம் !!!

ஞாபகங்கள் மின்னி மின்னி மறைய எல்லாவற்றையும் உதறி விட்டு எட்டாம் வகுப்பு பி. செக்சனுக்குள் ஒரு வழியாய் அம்ருதா நுழைந்து விட்டாள்.வலது புறம் மூன்றாவது பெஞ்சில் நான்காவது இடம் தான் சுபாங்கனியின் இடம் !!!

அதே வலது புறம் இரண்டாவது பெஞ்சில் ஜன்னலோரம் முதல் இடம் அம்ருதாவின் இடமாக இருந்தது முன்னொரு நாளில் !?

அதே மர பெஞ்சுகள் ..டெஸ்க்குகள் ...வகுப்பறையின் சிமென்ட் தரை ...கரும் பலகை ...சாக் பீஸ் வைக்கும் சின்ன மரப் பெட்டி ,

"அங்கிங்கெனாத படி எங்கும் பிரகாசமாய் ஆனந்த ஜோதியாகி ..."

"ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்"

"இந்தியாவில் அதிகமாய் மழை பொழியும் இடம் சிரபுஞ்சி "

"உலகின் கூரை திபெத் ""ஏய் சண்முகப் பிரியா உன் இடத்தில பென்சில் துருவிப் போட்ரீ ஏன் டெய்லி என் இடத்துல போடற ? டீச்சர் கிட்ட சொல்லித் தாரேன் இன்னைக்கு பாரு நீ...

போய்ச் சொல்லிக்க போடீ (இது அந்த சண்முகப் பிரியா )

பாண்டிச் செல்வி எனக்கு இண்டர்வெல்ல மாங்க பத்தை வாங்கித் தா...நேத்து நான் கொய்யாப் பழம் வாங்கிக் கொடுத்தேன் இல்ல..இன்னைக்கு உன் முறைடீ ஞாபகம் இருக்கு இல்ல?!

கலவையாய் பல குரல்கள் காற்றில் பரவி செவியில் வந்து மோத...

அம்ருதா ஜாமன்றி பாக்சை மறந்து போக முடிவு செய்யாமலே தானாய் அது நினைவில் இருந்து நழுவி ஓடியது போலும்?!

அம்ருதா ஏன் மேத்ஸ்ல மார்க் கம்மி ? சயின்ஸ் ல மட்டும் 98 வாங்கியிருக்க ? என் பாடம் உனக்கு வேப்பங்காயா இருக்காக்கும்? மேத்ஸ் டீச்சர் அனுராதா தான் இது?!

விடுங்க டீச்சர் அடுத்ட பரீட்சைல பாருங்க அம்ருதா மேத்ஸ்ல 100/100 வாங்குவா பாருங்க..இது சயின்ஸ் வாத்தியார் முருகன் ...

கடைசியில் அம்ருதா எதில் 100/100 வாங்கினாள்?!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!(&) !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

18 comments:

www.narsim.in said...

//அப்பாவை நினைத்தால் அடிவயிற்றில் பயப் பந்து உருண்டது ...தொண்டை உலர்ந்து மூச்சுத் திணறி கண்களில் நீர் கரை கட்டி நின்றது எப்போதடா கரை மீறி உருளலாம் என//

கண் முன் நின்ற காட்சி..

ஆமா எதில் 100?

ராமலக்ஷ்மி said...

கதையின் நடையும் கருவும் முடிவும்...என்ன சொல்ல.. வெகு அருமை மிஸஸ். தேவ்.

Suresh said...

ஆமா எதில் 100?

நல்ல பதிவு

i liked ur blog and have become ur follower.

You can also visit my blog and if you like it u can be my follower :-)

Hope u like it

வல்லிசிம்ஹன் said...

பிரமாதம் மிஸஸ்.தேவ். நானும் பள்ளிக்குப் போய்ப் பார்க்கவேணும். கதை என்னாச்சுபா.

ஜாமெண்டரி பாக்ஸ் கிடச்சுதா. :)

மாதேவி said...

சொல்லும் விதம் அருமை.

"ஐயோ ...ஜாமன்றி பாக்ஸ் கிடைக்குமா ?கிடைச்சிட்டா தேவலை" !
ஆதங்கம் நன்கு வெளிப்படுகிறது.

பழமைபேசி said...

வந்தேன்...இனிதான் படிக்கணும்...

ரவி said...

////அப்பாவை நினைத்தால் அடிவயிற்றில் பயப் பந்து உருண்டது ...தொண்டை உலர்ந்து மூச்சுத் திணறி கண்களில் நீர் கரை கட்டி நின்றது எப்போதடா கரை மீறி உருளலாம் என//

கண் முன் நின்ற காட்சி..

ஆமா எதில் 100?///

How to Read and comment a Short Storly Short ?

Read First Few Lines. Copy something. read at the end. copy that too.

paste matter 1
..insert karthu..
paste matter 1
..ask question..

Done !!

:)))))))))))))))))))

Narsim, LOL..

அது சரி(18185106603874041862) said...

என் பொண்ணோட ஜாமன்றி பாக்ஸ் காணாப் போயிடுச்சா...அதை தேடிப் போனேன்னா...இதே மாதிரி நான் படிச்சப்ப என்ன நடந்திச்சின்னா.....

இப்படி சிங்கிள் டைமென்ஷனில் எழுதாமல், இயல்பான மன அலைவில்....

ஆஹா....ஒரே தாவல்ல அடுத்த தளத்துக்கு போயிட்டீங்க...

வாழ்த்துக்கள்...

KarthigaVasudevan said...

நன்றி நர்சிம்
எதில் 100?
அது வாசிப்பவர்களின் யூகத்துக்கே விடப் படுகிறது.
நீங்களே கண்டு பிடிச்சிக்கோங்க...

KarthigaVasudevan said...

//ராமலக்ஷ்மி said...
கதையின் நடையும் கருவும் முடிவும்...என்ன சொல்ல.. வெகு அருமை மிஸஸ். தேவ்.
//

நன்றி ராமலக்ஷ்மி மேடம் ,
உங்க இன்றைய பதிவின் பின்னூட்டத்துல கேட்டு இருந்தேன் கல்கி போட்டிகள் பற்றி, சிறுகதையா? கவிதையா? தலைப்பு என்ன? போட்டித் தேதி போன முறை மாதிரி முடிஞ்சு போச்சா ...இல்ல இன்னும் எழுதி அனுப்பலாமா ? இந்த தகவல்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க.

KarthigaVasudevan said...

//Suresh said...

ஆமா எதில் 100?

நல்ல பதிவு//

நன்றி சுரேஷ் .
உங்கள் கருத்துக்கும்...வருகைக்கும் ,
உங்கள் வலைப்பூ நன்றாக இருக்கிறது சுரேஷ் , முடிந்தவரையிலும் தவற விடாமல் படிக்க முயல்கிறேன் ,

KarthigaVasudevan said...

//வல்லிசிம்ஹன் said...
பிரமாதம் மிஸஸ்.தேவ். நானும் பள்ளிக்குப் போய்ப் பார்க்கவேணும். கதை என்னாச்சுபா.

ஜாமெண்டரி பாக்ஸ் கிடச்சுதா. :)//

வாங்க வல்லிம்மா...
ஜாமன்றி பாக்ஸ் கிடைச்சுதோ இல்லையோ?! அம்ருதாவோட இயந்திரத் தனமான வாழ்க்கைல அவளோட பழைய பள்ளிக்குப் போய் வந்த பின்ன அந்த ஞாபகங்கள் மூலமா அவ மனசு நிறைஞ்சு சந்தோசமா இருக்கறா.இதோட நான் முடிச்சுட்டேன்,மீதி உங்க கற்பனைக்கே.

KarthigaVasudevan said...

//மாதேவி said...

சொல்லும் விதம் அருமை.

"ஐயோ ...ஜாமன்றி பாக்ஸ் கிடைக்குமா ?கிடைச்சிட்டா தேவலை" !
ஆதங்கம் நன்கு வெளிப்படுகிறது.
//

நன்றி மாதேவி ,
முதல் தடவையா வரிங்க போல,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

அடிக்கடி வாங்க .

KarthigaVasudevan said...

// பழமைபேசி said...

வந்தேன்...இனிதான் படிக்கணும்...//


வாங்க பழமைபேசி அண்ணா
சரி வந்துட்டிங்க ...இப்போ படிச்சிங்களா இல்லையா?

KarthigaVasudevan said...

//செந்தழல் ரவி said...

////அப்பாவை நினைத்தால் அடிவயிற்றில் பயப் பந்து உருண்டது ...தொண்டை உலர்ந்து மூச்சுத் திணறி கண்களில் நீர் கரை கட்டி நின்றது எப்போதடா கரை மீறி உருளலாம் என//

கண் முன் நின்ற காட்சி..

ஆமா எதில் 100?///

How to Read and comment a Short Storly Short ?

Read First Few Lines. Copy something. read at the end. copy that too.

paste matter 1
..insert karthu..
paste matter 1
..ask question..

Done !!

:)))))))))))))))))))

Narsim, LOL..//

கதைக்கு தான் கமென்ட் சொல்வாங்க , கமென்ட் போட்டவங்களைப் பத்தியா கமென்ட் சொல்வாங்க ?
என்ன கொடுமை செந்தழல் அண்ணா இது?
கதையப் படிங்க சார்,

KarthigaVasudevan said...

நன்றி அதுசரி...
நீங்க வேதாளம் கதையை ஆரம்பிச்சிங்களா ...இன்னும் இல்லையா?

குசும்பன் said...

எம்மாம் பெரிய சிறுகதை? எம்மா பெரிய பள்ளிக்கூடம்:)

சரி எதில் 100/100 எனக்கு தெரிஞ்சு டால்மியா சிமெண்டுக்குதான் 100/100

psycho said...

அம்ருதாவின் ஜாமின்றி பாக்ஸ் தேடலை போல நானும் அவ்வப்போது தேடிக்கொள்கிறேன் கதையினூடே,என் பெயர் பொறித்த டெஸ்க்கயும்,மரத்தின் நிழலில் வரைந்த கோலத்தையும்.

நன்றி.நினைவுகளை தூண்டியதற்கு.