லெனின் பிறந்த தினமான இன்று வெளியான மனிதம் மின்னிதழில் எனது கவிதை .வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
பெயர் குழப்பம் வேண்டாம், மிஸஸ் .தேவ் இல் இருக்கும் தேவ் வாசுதேவன் தான்,எதுக்கு நீட்டி முழக்கனும் அன்பா பாசமா தேவ் :) ,இப்படித் தான் கார்த்திகா வாசுதேவன் மிஸஸ்.தேவ் ன்னு ஆனேன் .
திருத்தம்:-
கவிதையில் உள்மனதின் தாழ்ப்பாள் என்பது யூழ்ப்பாள் என்று தவறுதலாகத் அச்சிடப் பட்டு விட்டது போலும் ,வாசிப்பவர்கள் தாழ்ப்பாள் என்றே வாசியுங்கள்.
17 comments:
//அவரவர் நியதிகள் அவரவர்கே//
மிகச் சரி.
//மனிதம் எனும் நீர் கொண்டு
உறவுகள் எனும் வேருக்கு நீர் வார்ப்போம்//
கண்டிப்பாக.
வாசிக்கும் எவரையும் (மாத்தி)யோசிக்க வைக்கும்!
வாழ்த்துக்கள் மிஸஸ். தேவ்.
நீங்க மாஸ்கோல மழை பேஞ்சா மன்னார்குடில குடை பிடிக்கிற ஆளா?
லெனின் ரொம்ப வித்தியாசமான பேர் நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!
சரியாகத்தான் யோசித்திருக்கிறீர்கள்
It’s really very nice and very much true too.
I couldn’t recognize you still. But I also studied in ambai till 8 th standard. May be I am very senior to you Now I can remember only my class mates names that also only very few people I am in touch V.Krishna Ramanujam teacher family, Panjali teacher family, Sarojini Teacher family. Really your words making me feel happy and missing home very much.
வாங்க ராமலக்ஷ்மி மேடம்...
//
ராமலக்ஷ்மி said...
//அவரவர் நியதிகள் அவரவர்கே//
மிகச் சரி.
//மனிதம் எனும் நீர் கொண்டு
உறவுகள் எனும் வேருக்கு நீர் வார்ப்போம்//
கண்டிப்பாக.
வாசிக்கும் எவரையும் (மாத்தி)யோசிக்க வைக்கும்!
வாழ்த்துக்கள் மிஸஸ். தேவ்.
உங்களது தொடர்ந்த வருகை நிறைய எழுத ஊக்கமளிக்கிறது. நன்றி
//குடுகுடுப்பை said...
நீங்க மாஸ்கோல மழை பேஞ்சா மன்னார்குடில குடை பிடிக்கிற ஆளா?
லெனின் ரொம்ப வித்தியாசமான பேர் நல்லா இருக்கு.//
மாஸ்க்கோல இப்ப மழை பெய்யுதாக்கும்? அப்படியே அங்க மழை பெய்தாலும் மயிலாடுதுறைக்காரங்க தான் மன்னார்குடிப் பக்கம் டக்குன்னு ஓடிப் போய் குடை பிடிக்க வசதியா இருக்கும்,சென்னைல இருந்து குடை எடுத்துட்டுப் போறதுக்குள்ள நனைஞ்சு இல்ல போயிடுவாங்க ,லாஜிக் இடிக்குது குடுகுடுப்பை அண்ணா .ஆமாம் நீங்க மாஸ்க்கோவா ...மன்னார்குடியா?
// narsim said...
வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!//
நன்றி நர்சிம்
// SUREஷ் said...
சரியாகத்தான் யோசித்திருக்கிறீர்கள்//
நீங்க சொன்னா சரி தான் டாக்டரே...
:)
// Kiramathan said...
It’s really very nice and very much true too.
//
thankx kiramathan
//Kiramathan said...
I couldn’t recognize you still. But I also studied in ambai till 8 th standard. May be I am very senior to you Now I can remember only my class mates names that also only very few people I am in touch V.Krishna Ramanujam teacher family, Panjali teacher family, Sarojini Teacher family. Really your words making me feel happy and missing home very much.
//
nice to read this, that one of my reader is from my native.i know all the people as u mentioned here,if u like to contact me send ur mail id ,it wont be published here. i already recognized u ,furthur i will mail u later .
எல்லா வரிகளும் அருமை மிஸஸ்.தேவ்.
இப்படித் தான் கார்த்திகா வாசுதேவன் மிஸஸ்.தேவ் ன்னு ஆனேன் . //
இல்ல மிஸஸ்.டவுட் ஆகி அப்புறம் தானே மிஸஸ் தேவ் ஆனீங்க.
மின்னிதழிலில் வந்ததற்கு
வாழ்த்துகள்.
மாத்தி(யாவது) யோசித்தல் நலமே.
அக்கா வாழ்த்துக்கள். உங்க பேரு கார்த்திகா வாசுதேவ் ஆ? ஹிஹி
கவிதை கலக்கல்.
இந்தக் கவிதை நன்றாக இருக்கிறது, ஆனால் வானம்பாடி கவிஞர்களின் கவிதைகள் போலிருக்கிறது,
மன்னிக்கவும் என் மனதிற்கு பட்டதை சொல்கிறேன், தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களின் மற்ற அந்த மூன்று கவிதைகளில் உள்ள உருவ அமைதி, வரிக்கு வரி கவித்துவம், வடிவ அமைதி, சொல்ல வந்ததை மென்மையாக பூடகமாக சொல்லிய விதம் அனைத்தும் இந்தக் கவிதையில் காண முடியவில்லை.
இந்தக் கவிதையில் அட்வைஸ் தொனி அதிகமாக இருக்கிறது. சுருக்கமாக இது வைரமுத்து மேத்தா அப்துல் ரகுமான் ரகக் கவிதை எனச் சொல்லலாம்
மற்ற அந்த மூன்று கவிதைகள் நவீன கவிதைகள். அந்த வடிவத்திலேயே எழுதுங்கள். கவிதை சொல்ல வந்ததை சொல்லக் கூடாது, மறைத்து வைக்க வேண்டும், மறைந்திருபபதை வாசகர்கள் தான் கண்டு பிடிக்க வேண்டும், ஒருத்தருக்கு தங்கம் இன்னொருத்தருக்கு வைரம் மற்றொருவருக்கு வெள்ளி என வெவ்வேறு கிடைக்கலாம். நாம் இதைத் தான் நான் சொல்லவந்தது என அறுதியிட்டு சொல்லிவிடக் கூடாது. இலைமறை காய்மறையாக சொல்லிவிட்டு வாசகர்களும் யூகித்து யோசித்து மண்டை காய்ந்து படைப்பில் பங்கெடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். எப்போதுமே புதிர்ப்பாதைகள் தானே ஸ்வாரஸ்யம்.
பாருங்கள் நிறய பேசிவிட்டேன், இவை என் கருத்து மட்டுமே, தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும். நானும் இம்மாதிரி நிறய கவிதைகள் எழுதியிருக்கிறேன். இவைகள் எனக்கு நானே கூறிக் கொண்டதாகவும் அமைகிறது, அதற்கு உங்க்ள் கவிதை வாய்ப்பாக இருந்தது. மிக்க நன்றி.
Post a Comment