ஊருக்கு நடுவில்
ஒற்றை நடுகல்
வருடம் ஒருமுறை
காளிகாவதாரம் ...
ஊருக்கு தொலைவில்
பிரம்மாண்ட பேருரு
தினம் தினம்
இரவில்
வேட்டைக்கு குதிரையில் ...
ஜல்..ஜல்...ஜல்
மஞ்சள் நீரும்
பானாக்காரமும் ...
இறைபடும் இருநாள்
கொப்பும் குலையுமாய்
வேம்பிலை ...மாவிலை
ஆடிய தோரணம்
கப்பிக் கிளைத்து
கண் நிறை பச்சை
உறுமும் மேளம்
நடுங்கும் பம்பை
உடுக்கை இடுப்புடன்
ஆடும் சாமிகள் ...
சாமியாடிகள் !?
கூந்தல் பறக்கும்
கண் விழி சிவக்கும்
உருட்டி விழிக்கும்
உன்மத்த நிலையது ...
எங்கே போயின ?
காதில் விழாமல்
கண்ணில் படாமல்
கருத்தில் மறைந்து
ஜல்..ஜல்...ஜல்
எங்கும் இல்லை
சாமியாடிகள் ...!
அது ஒரு காலம் ...
இன்றது அரிதோ ?!
10 comments:
சும்மா
ஜல் ஜல் ஜல்
சத்தம் கேட்குதுங்க
இப்பல்லாம் இல்லை தான் போல
கவிதையா? எனக்குப் படிக்கும் போதே உடுக்கையடிச்சிகிட்டு வரிகளுடன் படிக்கிற மாதிரி இருக்குது.யாராவது நல்ல இசையமைப்பாளர்கள் கண்ணில் பட்டால் தேவலை!
பரவாயில்லை போகட்டும் விடுங்க
ஒரு வெப் சாமியாடி
இது ராம் எடுத்த போட்டோ ஆச்சே :) அவருக்கு ஓகே வா இது ?
வார்த்தைகள் அதிர அதிர வரிகள் உடுக்கைச் சத்தத்தில் நடுங்குகிறதே!! அருமை.
இப்போது காண்பது அரிதா? நான் எப்போதுமே பார்த்ததில்லைங்க. திரைப் படங்களில்தான் கண்டிருக்கிறேன்.
//நட்புடன் ஜமால் said...
சும்மா
ஜல் ஜல் ஜல்
சத்தம் கேட்குதுங்க
இப்பல்லாம் இல்லை தான் போல//
எங்கயாச்சும் ஒன்னு ரெண்டு இடங்கள்ல பார்க்க முடிஞ்சாக் கூட முன்ன இருந்த ஒரு ஒரிஜினாலிட்டி சாமியாடிகள் கிட்ட இல்லை!!! இப்போதும் வைகாசி பொங்கல் சமயம் என் அம்மா பிறந்த ஊரில் சாமியாடிகளைக் காணலாம்,நிஜமோ...இல்லை மருத்துவர்கள் சொல்வது போல நரம்புத் தளர்ச்சியோ எப்படியாயினும் அருள் வந்து அவர்கள் ஆடுவதைக் காணும்போது கண்கள் விரியும்,மனம் நடுங்கும் சில நேரம்.
இப்போது அவை காணக் கிடைப்பது அரிதே .
// ராஜ நடராஜன் said...
கவிதையா? எனக்குப் படிக்கும் போதே உடுக்கையடிச்சிகிட்டு வரிகளுடன் படிக்கிற மாதிரி இருக்குது.யாராவது நல்ல இசையமைப்பாளர்கள் கண்ணில் பட்டால் தேவலை!//
நீங்களே இசை அமைப்பாளர் ஆயிடலாமே ?!
//குடுகுடுப்பை said...
பரவாயில்லை போகட்டும் விடுங்க
ஒரு வெப் சாமியாடி//
என்ன கொடுமை குடுகுடுப்பையாரே இது ? :)
// Jeeves said...
இது ராம் எடுத்த போட்டோ ஆச்சே :) அவருக்கு ஓகே வா இது ?//
கூகிள்ல படம் தேடினப்போ கிடைச்சது இந்தப் படம் ;நல்லா இருக்கேன்னு இந்தக் கவிதைக்கு எடுத்து போட்டேன் ,ராம் எனக்கு தெரியாது,உங்க நண்பர்னா நீங்களே அனுமதி கேட்டுட்டு பின்னூட்டத்துல சொல்லிடுங்க...மாத்தனும்னா மாத்திடலாம் ...நோ ப்ராப்ளம்
// ராமலக்ஷ்மி said...
வார்த்தைகள் அதிர அதிர வரிகள் உடுக்கைச் சத்தத்தில் நடுங்குகிறதே!! அருமை.
இப்போது காண்பது அரிதா? நான் எப்போதுமே பார்த்ததில்லைங்க. திரைப் படங்களில்தான் கண்டிருக்கிறேன்//
வாங்க ராமலக்ஷ்மி மேடம் ,நிஜ சாமியாடிகளைப் பார்க்கணும் அவ்வளவு தானே?!இந்த வைகாசி பொங்கலுக்கு என் பாட்டியின் ஊருக்குப் போகையில் வீடியோ எடுக்க முடிஞ்சா எடுத்து வந்து என் ப்ளாக்ல பதியறேன் ...வீடியோ இல்லனாலும் அட்லீஸ்ட் போட்டோ ட்ரை பண்றேன்.கிராமத்து நினைவுகள் மாதிரி இருந்துட்டு போகட்டும்
Post a Comment