Tuesday, March 24, 2009

ஒளடதமானது மஞ்சம்


மஞ்சள் மாறா

சுகந்தம் கொஞ்சும்

அஞ்சுக மங்கை

தங்க முகம் தான்

கெஞ்சுமோ

இன்னும்

மிஞ்சுமோ ?!

வேங்கை போலொரு

வேந்தன் அவனென

அஞ்சுவதல்லா

பிஞ்சு மனம் போல்

ஆசை களிற்றை

அடக்கி மீண்டதும்

ஒளடதமானது மஞ்சம்

அஞ்சனம் திருமஞ்சனம்

பஞ்சனை காணும் மந்திரம்

வந்தனம்

சங்கத் தமிழோ

காவியமோ

மின்னற் பொழுதின்

ஓவியமோ

பேசாப் பொருளின்

தூரிகையோ

காந்தள் மலரே

கண் துயிலாய்

எஞ்சும் காலை பொழுதே வா

வெளிச்சக் கதிர்கள் விரியட்டும்

வெயில் நிறம் இங்கே பரவட்டும்

மஞ்சள் முகங்கள் மினுங்கட்டும்

தங்கக் கனவுகள் பலிக்கட்டும் ...

16 comments:

நட்புடன் ஜமால் said...

\\சுகந்தம் கொஞ்சும்

அஞ்சுக மங்கை \\

வார்த்தைகள் அழகு

நட்புடன் ஜமால் said...

கெஞ்சுமோ
இன்னும்
மிஞ்சுமோ ?!\\

எதுகையும்
மோனையும்

போடுது போட்டி

எது மிஞ்சுமோ எது கெஞ்சுமோ

நட்புடன் ஜமால் said...

ஒளடதமானது மஞ்சம் \\

நல்ல வார்த்தை தெரிவு...

நட்புடன் ஜமால் said...

\\மின்னற் பொழுதின்
ஓவியமோ
பேசாப் பொருளின்
தூரிகையோ \\

மிகவும் இரசித்தது (இன்று)

நட்புடன் ஜமால் said...

\வெயில் நிறம் இங்கே பரவட்டும்
மஞ்சள் முகங்கள் மினுங்கட்டும் \\

ஏற்கனவே படித்தது போலுள்ளது

(உங்க பகுதியில் தான்)

சந்தனமுல்லை said...

:-)

//எஞ்சும் காலை பொழுதே வா
வெளிச்சக் கதிர்கள் விரியட்டும்
வெயில் நிறம் இங்கே பரவட்டும்
மஞ்சள் முகங்கள் மினுங்கட்டும்
தங்கக் கனவுகள் பலிக்கட்டும் ...
//
நல்லாருக்கு!

ஆ.சுதா said...

பின்னிட்டிங்க

காந்தள் மலரே
கண் துயிலாய்
எஞ்சும் காலை பொழுதே வா

எல்லா வரிகளுமே அழகுதான்
அதில் பொருக்கியது

அது சரி(18185106603874041862) said...

//
சங்கத் தமிழோ

காவியமோ

மின்னற் பொழுதின்

ஓவியமோ

பேசாப் பொருளின்

தூரிகையோ

காந்தள் மலரே

கண் துயிலாய்
//

சங்கத் தமிழ்....காந்தள் மலர்....ஏதோ கலைஞர் எழுதுன கவிதை மாதிரி இருக்குங்க!

வார்த்தையில விளையாட்டு உங்களுக்கு நல்லா வருது....

Arasi Raj said...

சங்கத் தமிழோ

காவியமோ

மின்னற் பொழுதின்

ஓவியமோ

பேசாப் பொருளின்

தூரிகையோ

காந்தள் மலரே

கண் துயிலாய்
///////////////
அழகு வார்த்தைகள் ...

பழமைபேசி said...

அபாரம்.... கணனி அழுதது, நெகிழ்ச்சியாலன்னு இப்பத்தான் தெரியுது!

புதியவன் said...

//பிஞ்சு மனம் போல்

ஆசை களிற்றை

அடக்கி மீண்டதும்

ஒளடதமானது மஞ்சம்//

மஞ்சம் மருந்தாகிறதா...?...வார்த்தைகள் விளையாடுகின்றன...கவிதை வெகு அழகு...

ராமலக்ஷ்மி said...

அருமை அருமை.

//எஞ்சும் காலை பொழுதே வா

வெளிச்சக் கதிர்கள் விரியட்டும்

வெயில் நிறம் இங்கே பரவட்டும்

மஞ்சள் முகங்கள் மினுங்கட்டும்

தங்கக் கனவுகள் பலிக்கட்டும் ...//

வார்த்தைகள் கொஞ்சுகின்றன. ஒன்றையொன்று மிஞ்சுகின்றன.

வாழ்த்துக்கள்.

அபி அப்பா said...

நல்லா தான் இருக்கு. ஆனா புரியதான் மாட்டகுது !

அமிர்தவர்ஷினி அம்மா said...

பொருள் பொதிந்த தலைப்பு...

கவிதையை சுவைத்தேன்.

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
சங்கத் தமிழோ

காவியமோ

மின்னற் பொழுதின்

ஓவியமோ

பேசாப் பொருளின்

தூரிகையோ

காந்தள் மலரே

கண் துயிலாய்
//

சங்கத் தமிழ்....காந்தள் மலர்....ஏதோ கலைஞர் எழுதுன கவிதை மாதிரி இருக்குங்க!//

அப்படியே எனக்கு தொன்றியதும் இதுதான்.

நீங்க திமுகவா சூரியன வரச்சொல்லி எலெக்சன் நேரத்துல கவிதை எழுதறீங்க

KarthigaVasudevan said...

கவிதைக்கு கருத்து தெரிவிச்ச எல்லாருக்கும் நன்றிங்க...கொஞ்சம் லேட் ஆயிடுச்சு நன்றி சொல்ல தப்பா எடுத்துக்காதீங்க .கலைஞரோட ஒப்பிடற அளவுக்கு நான் கவிதை எழுதறேனா?!!! இதென்ன பாராட்டறீங்களா இல்ல சும்மா என்னை என்கரேஜ் பண்ண சொல்றீங்கலானு பெரிய டவுட் எங்க வீட்ல.