Wednesday, March 25, 2009

இட்லி
இட்லி என்று பதிவுக்கு தலைப்பு வைத்தாகி விட்டது ,இட்லி பற்றி என்ன எழுதுவது...ஒன்றுமே இல்லையா என்ன? இட்லி வேக வைத்து சமைக்கப் படும் ஒரு வகை தென்னிந்திய உணவு ,இதில் எண்ணெய் சத்து துளியும் இல்லை ,கைக்குழந்தைகள் முதல் பிறர் கை பிடித்தோ கோல் ஊன்றியோ நடக்கும் கைகோல் குழந்தைகள் வரை யார் வேண்டுமானாலும் உன்பதற்க்கேற்ற எளிய இனிய உணவு ,

இது அரிசியை மற்றும் உளுந்தை ஊற வைத்து அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் அரைத்த மாவை புளிக்க வைத்து பின் அடுப்பை பற்ற வைத்து இட்லி குண்டான் எனும் ஸ்பெசல் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி கால் பாகம் தண்ணீர் ஊற்றி அடி கருக்காமல் இருக்க அரை மூடி எலுமிச்சம் பழமோ அல்லது துளியூண்டு புளி கிள்ளி எடுத்தோ பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கொதித்ததும் இட்லித் தட்டுக்கள் எனும் ஸ்பெசல் தட்டுக்களை தேடி எடுத்து...

(அட தேடி என்ற சொல் எதற்க்கென்றால் அது சென்ற முறை இட்லி அவித்த பின் எங்காவது மூலையில் மறந்து போய் போட்டு வைத்திருக்கக் கூடும் சில வீடுகளில் (என் வீட்டில் அப்படி செய்வது வழக்கமே இல்லை ...நிஜம் ...நம்புங்கள்!!!)சரி..சரி இட்லித் தட்டுக்களை ஒரு வழியாய் தேடி எடுத்தாயிற்று அல்லவா?! இனி பேச நேரம் இல்லை சரசரவென்று இரண்டு தட்டோ இல்லை ஒரே ஒரு பெரிய தட்டோ இட்லிப் பள்ளங்களில் அல்லது குழிகளில் அரைத்து வைத்த முக்கியமாக புளிக்க வைத்த இட்லி மாவை அங்கே ஊற்ற வேண்டும் .

ஏனோ ..தானோ என்றெல்லாம் ஊற்றி விடக் கூடாது இட்லி மாவை இட்லித் தட்டின் பள்ளங்களில் ..அதற்கென்று ஒரு ஸ்பெசல் முறை இருக்கிறதாம் என் பாட்டி சொல்லியிருக்கிறார்கள் ...........அது வந்து எப்படி என்றால் ...அதாவது ...அதாவது...அதாகப் பட்டது ...அது எப்படி என்றால்...!!!...அது வந்து ....

சரி ...சரி ....யாரும் பொறுமை இழக்க வேண்டாம் .

இதோடு இட்லி அவிப்பதை நிறுத்தி விட்டு ;

அடுத்த விஷயத்திற்குப் போய் விடலாம் ...அதுவே பதிவுக்கும் பதிவருக்கும் நலம் .

அதாகப் பட்டது இப்படியாகப் பட்ட பலவித சிரமங்களைப் பொருட்படுத்தாமல் நாம் (அம்மா ...அக்கா...அண்ணி...பாட்டி!!! இவர்களில் ஒருவர் தான் இந்த நாம் ...நாம் என்றால் நாம் இல்லை அந்த நாமில் என்ன தெளிவாகப் புரிகிறதா இல்லையா?!) தயாரிக்கும் இட்லிகளை உப்புச் சப்பில்லாத சில காம்பிநேசன்களில் சாப்பிட்டு வைக்கக் கூடவே கூடாது

(இந்நாள் வரையிலும் நாம் அப்படித் தானே செய்து கொண்டிருக்கிறோம் என்கிறீர்களா? இனி அப்படிப் பட்ட துரோகத்தை இட்லிக்கு நாம் கனவிலும் செய்யத் துணியக் கூடாது )

இட்லிக்கு எது சரி மேட்சிங் என்று ஒரு வரையறை செய்து விட முடியுமா நம்மால் ?அது உண்பவர்களைப் பொறுத்த விஷயம் ஆயிற்றே!?சரி புடவைக்கு எப்படி பொருத்தமாக மேட்சிங் பார்க்கிறோமோ அதே வகையில் இட்லிக்கு மேட்ச்சிங் பார்ப்போம் இப்போது நம்மால் இயன்றவரையிலும்,


இட்லி-சாம்பார் (இது கணவன் மனைவி உறவு போன்றதென்று வைத்துக் கொள்ளலாம் ...அருமையான மேட்சிங் )

இட்லி-மிளகாய்ப் பொடி பிளஸ் நல்லெண்ணெய்

இட்லி -தேங்காய் சட்னி

இட்லி -வெங்காயச் சட்னி

இட்லி-காரச் சட்னி

இட்லி-தக்காளிச் சட்னி

இட்லி-கொத்துமல்லி சட்னி

இட்லி -கோஷ்மல்லி

இட்லி - பாசிப் பருப்பு சட்னி

இட்லி- தயிர் பிளஸ் சர்க்கரை

இட்லி -நெய் பிளஸ் சர்க்கரை (அஸ்க்கா போட்டா நல்லாத்தான் இருக்கும் ப்ரிஸ்க்கா)

இட்லி- சிதம்பரம் கொத்சு (அபிஅப்பா தான் போடா சொன்னார் ...சித்தப்பா சொல்லைத் தட்டலாமோ!)

இட்லி - ஊறுகாய் (எங்கயாவது பஸ் நடுவழியில நின்னுட்ட ஊறுகாய் வச்சும் இட்லி சாப்பிடுவாங்களாம் எதோ கதைல படிச்சேன் )

இட்லி- மீந்து போன பருப்பு (எங்க பக்கத்து வீட்ல ஒரு அம்மா இப்படித் தான் இட்லிக் கொடுமை செய்றாங்க பல நேரம் ...இட்லி அழற சத்தம் என் காதில் விளராப்பல ஒரு பீல் )

இட்லி -மீன் குழம்பு (முள்ளும் மலரும் படத்துல ஒரு பாட்டு வருமே ...


"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு

நெய் மணக்கும் கத்தரிக்காய்

நேத்து வச்ச மீன் குழம்பு

என்னை இழுக்குதடி ...."நெல்லுச் சோறுக்கு மட்டும் இல்லை இட்லிக்கும் கூட இழுக்கும் தான்)


கட்டக் கடசியா என்னோட இட்லி மேட்சிங் பத்தியும் சொல்லனுமே !?(யாரும் கேட்கலைனாலும் கூடத் தான் சொல்லியே ஆகணும்)


இட்லிக்கு என்ன தான் எல்லாரும் சாம்பார் ..சட்னி...கொத்சு ...மிளகாய்ப் பொடி பிளஸ் ஜோதிகா (நல்லெண்ணெய்யாம் !!!) நான் சொல்லலை அபிஅப்பா சொன்னார் .இன்ன பிற வஸ்துக்களை எல்லாம் வளைச்சு மாட்டினாலும் கூட ;

நம்ம பேவரிட் கோழிக் குழம்பு தான் .

என்ன ஒரு ஜோரா இருக்கும் தெரியுமா ?!

என்ன நான் சொல்றது சரி தானே?!!!

வந்து சொல்லிட்டுப் போங்கப்பா உங்க இட்லி நினைவுகளை .

39 comments:

நட்புடன் ஜமால் said...

நீங்களே கடையில வாங்கியதா

நட்புடன் ஜமால் said...

\\அட தேடி என்ற சொல் எதற்க்கென்றால் அது சென்ற முறை இட்லி அவித்த பின் எங்காவது மூலையில் மறந்து போய் போட்டு வைத்திருக்கக் கூடும் சில வீடுகளில் (என் வீட்டில் அப்படி செய்வது வழக்கமே இல்லை ...நிஜம் ...நம்புங்கள்!!!)\\

ஹா ஹா ஹா

narsim said...

//இட்லிக்கு என்ன தான் எல்லாரும் சாம்பார் ..சட்னி...கொத்சு ...மிளகாய்ப் பொடி பிளஸ் ஜோதிகா (நல்லெண்ணெய்யாம் !!!)//

ம். பகடி பின்றீங்களே..

சந்தனமுல்லை said...

இட்லி + நண்டு கிரேவி இட்லி + சிக்கன்/மட்டன் குழம்பு, பயணங்களில் இட்லி + தக்காளி தொக்கு அல்லது இட்லி + ஜாம்! இதான் என்னுடைய நினைவுகள் அல்லது சாய்ஸ்!

அபி அப்பா said...

வாவ் ஒரு அருமையான பதிவு!

இட்லியும் சிதம்பரம் கொத்சும் செம காம்பினேஷன் என்னை பொருத்தவரை அதான் புதுசா கல்யாணமான ஜோடி, பின்ன ஒரு குழந்தை பிறந்த பின்னே இட்லியும் தட தட சாம்பாரும் ஓக்கே, பின்னே முதல் குழந்தைக்கும் 2 வது குழந்தைக்கும் இடையே இட்லியும் வெங்காய கார சட்னி சரியான ஜோடியா ஆகிடும்.

பின்ன ஒரு மாதிரியா சமாதானம் ஆன பின்னே கொஞ்சம் நைஸ் பண்ண காரம் அதிகம் இல்லாம தக்காளி சட்னி(ஆனா தக்காளியை மிக்சில போட்டு உரு தெரியாம செஞ்சுடனும்)

நடு நடுவே ஊடல் வந்தா இட்லி பொடியும் ஜோவும் ஜோடி போட்டு முழுங்கி விக்கி விக்கி சாகனும். அப்ப தலையில் தட்டி கொடுக்கும் மனைவி "என்னங்க மாங்கா ஊருகாய் தான் இனி இட்லிக்கு, என்னால வித விதமா முடியலை"

அடுத்து 3 மாசம் கழிச்சு "இல்லடா கொத்தமல்லி சட்னி செஞ்சா உனக்கும் குழந்தைக்கும் நல்லது"(ஓ இது 5ம் மாதம் மருந்து கொடுக்கும் நேரமோ)

"சரிங்க, இப்ப பாப்பா சாப்பிடுவது போலவே நாமும் இட்லிக்கும் நெய், வெண்ணெய் எதுனா தொட்டுக்கலாம், என்னால முடியலை"

பின்ன குழந்தை பிறந்தாச்சு. அப்ப "அந்த பத்திய மிளகு குழம்பு வச்சு 2 வாய் ஊட்டி விடுங்க"

பின்ன 'என்னங்க இன்னிக்கு மதியம் தான் கோழி குழம்பாச்சே, அதிலே உங்களுக்கு தான் ரெக்கை பீஸ் எல்லாம் பிடிக்காதே அதை போட்டு கொஞ்சம் தண்ணியா வேற மாதிரி இட்லிக்கு தொட்டுக்க பண்ணிடவா?"


ஓ இன்னும் இட்லி பிளஸ் காம்பினேஷன் பத்தி சொல்லிகிட்டே போகலாம்!!

ராஜ நடராஜன் said...

உங்கள் பெயர் பதிவர்களின் பின்னூட்டங்களில் அறிமுகமாயிருந்தாலும் இப்படி இட்லி சுடுவீங்கன்னு தெரிஞ்சது இப்பத்தான்.

ராஜ நடராஜன் said...

//இதோடு இட்லி அவிப்பதை நிறுத்தி விட்டு ;

அடுத்த விஷயத்திற்குப் போய் விடலாம் ...அதுவே பதிவுக்கும் பதிவருக்கும் நலம் .//

உங்களுக்கு இட்லி சுடத்தெரியுமான்னு திடீர்ன்னு சந்தேகம் வந்துருச்சு!ம்!படிச்சுகிட்டே வாரேன்.

புதுகைத் தென்றல் said...

இட்லியை வெச்சு ஒரு பதிவா.

நடத்துங்க.

புதுகைத் தென்றல் said...

நானும் தம்பியும் இதை அரிசிக்கட்டி என்போம்.

வெகுதூரப் பயணத்தில் இதுதான் எடுத்து போகச் சிறந்தது.

நல்லெண்ணெய் + இட்லி மிளகாய்ப்பொடியில் இட்லியை புரட்டி கட்டி கொடுப்பாங்க.

ராஜ நடராஜன் said...

//நாம் என்றால் நாம் இல்லை அந்த நாமில் என்ன தெளிவாகப் புரிகிறதா இல்லையா?!) //

புரிஞ்சது புரிஞ்சது!முந்தைய பின்னூட்டத்தில சந்தேகப்பட்டது சரியாத்தான் இருக்கு:)

புதுகைத் தென்றல் said...

இட்லியோட இன்னும் சில காம்பினேஷன்கள்:

இட்லி + குருமா.

இட்லி + தேங்காய்த் துவையல்

இட்லி + உளுந்து, மிளகாய்வத்தல், வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த துவையல்.

புதுகைத் தென்றல் said...

இட்லியை வெச்சு வேற ரெசிப்பிக்கள் செய்யலாம்.

அதெல்லாம் பேரண்ட்ஸ் கிளப்பில் பதிவாக இருக்கு.

ராஜ நடராஜன் said...

மெனு ரொமப நீளமா இருக்குது.பாஸ்க்கு இட்லி வேணுமாம்.இல்ல ரிப்போர்ட் வேணுமாம்.அப்புறம் வந்து சட்னி வகைகளை ருசி பார்க்கிறேன்:)

அது சரி said...

நேத்து சைனீஸ் வாங்கினேன்...சாப்பிட கடுப்பா இருந்துச்சி...அதனால அப்படியே வச்சிட்டு தூங்கிட்டேன்...இன்னைக்கு அதை வாங்கவும் சோம்பேறித் தனம்...அதனால நேத்து வாங்கின சைனீஸை சூடு பண்ணி சாப்பிடலாமான்னு யோச்சிச்சிக்கிட்டு இருக்கேன்....நீங்க இப்ப போயி அழகா இட்லி படம் போட்டு அதை எப்படி செய்றதுன்னு வேற சொல்றீங்க...ம்ம்ம்.....

இட்லிக்கு சரியான காம்பினேஷன்....சாமி படத்துல விக்ரம் இட்லி சாப்பிட போவாரு...எனக்கு சட்னி சாம்பாரு வேணாம்னு சொல்லிட்டு...வேணாம் அப்புறம் திட்டுவீங்க.... :0))

எனக்கு பிடிச்சது இட்லியும், பச்சை மிளகாய் சட்னியும் தான்...அதுவும் ரொம்ப காரமா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்...

goma said...

இட்லியை வச்சு ஒரு தொடர் பதிவே போட்டிருக்கிறேன் இங்கே சென்று பார்க்க
http://haasya-rasam.blogspot.com/2007/11/blog-post_14.html

என்னதான் சொல்லுங்க நம்ம இட்லியை மிஞ்ச ஆளே கிடையாது.சூப்பர் ஆய்வு.

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப காலத்துக்கு முன்னால உப்புமா பதிவு போட்டு இருந்தார் ஒருத்தார்:)
அப்புறம் இன்னோருத்தர் பிரியாணினு பதிவு போட்டா. கொத்துபரோட்டா போட்டாங்க.
இப்ப இட்லி காலமா:))))
கயலு நடத்துங்க.....

நானானி said...

'சந்தேகமே இல்லை' இட்லியை நல்லா பிரிச்சு...இல்லையில்லை நல்லா அரைச்சு அவிச்சு மேஞ்சிருக்கீங்க.

என்னோட சூப்பர் காம்பினேஷன்:
இட்லி-மிளகாய்பொடி-எண்ணெய்-தேங்காச் சட்னி-கட்டித்தயிர் மேலே கொஞ்சம் சீனித் தூவி. ம்ம்ம்!

இட்லி-ரயில் சட்னி
"அப்போ இட்லியா?" 2007-ல் எழுதிய பதிவு பாருங்கள்
காபி பேஸ்ட் தகராறு.

மாதேவி said...

சாம்பார்,வறுத்த தேங்காய்துருவல் சேர்த்த பொடி சம்பல் இத்துடன் பச்சை மிளகாய் சட்னியும்.மூன்றும் இருந்தால் சுப்பர்தான்.

ராஜ நடராஜன் said...

திங்கறதுக்குன்னா திரும்பவும் வந்துடுவாங்களேன்னு நினச்சுக்க வேண்டாம்:) நேத்தைக்கு ரெண்டு மூணூ சட்னியத் தொட்டுக்க மறந்து போனேன் அதுதான்!

மிஸஸ்.டவுட் said...

// நட்புடன் ஜமால் said...
நீங்களே கடையில வாங்கியதா//

ஜமால் ...கடைல இல்லை கூகுள்ள எடுத்தது .

மிஸஸ்.டவுட் said...

// narsim said...
//இட்லிக்கு என்ன தான் எல்லாரும் சாம்பார் ..சட்னி...கொத்சு ...மிளகாய்ப் பொடி பிளஸ் ஜோதிகா (நல்லெண்ணெய்யாம் !!!)//

ம். பகடி பின்றீங்களே..//

பகடின்னா என்ன அண்ணன் ???!!!

மிஸஸ்.டவுட் said...

// சந்தனமுல்லை said...

இட்லி + நண்டு கிரேவி இட்லி + சிக்கன்/மட்டன் குழம்பு, பயணங்களில் இட்லி + தக்காளி தொக்கு அல்லது இட்லி + ஜாம்! இதான் என்னுடைய நினைவுகள் அல்லது சாய்ஸ்!//

இதுல இட்லி ஜாம் மட்டும் பிடிக்காத டேஸ்ட் நண்டு கிரேவி இன்னும் ட்ரை பண்ணி பார்க்கலை ,மத்ததெல்லாம் ஓகேப்பா

மிஸஸ்.டவுட் said...

//அபி அப்பா said...

வாவ் ஒரு அருமையான பதிவு!//


நன்றி சித்தப்பா

வருங்கால முதல்வர் said...

சாதாரணமா இருபது சாப்பிடுவேன். தக்காளி சட்னி , சாம்பாரு ரெண்டும் இருந்தா இன்னும் ரெண்டு கூட சாப்பிடுவேன்

கூடுகூடுப்பை

ஆயில்யன் said...

//இட்லி-மிளகாய்ப் பொடி பிளஸ் நல்லெண்ணெய் //
தின்னுக்கிட்டே இருக்கலாம் கடைசி சொட்டு எண்ணெய் +மிளகாய்பொடி இருக்கும்மட்டும் (கடைசின்னா எப்பன்னு கேக்குறீங்களா?அதான் தெரியாது!)

//இட்லி -தேங்காய் சட்னி //

கண்டிப்பா கடுகு தாளிச்சு கொட்டியிருக்கணும்! வெங்காய வடகமும் கொஞ்சம் பொறிச்சு போட்டா ஒஹோதான்...!


//இட்லி -வெங்காயச் சட்னி //
காரம் இருக்கணும் :)


//இட்லி-காரச் சட்னி //

கண்டிப்பா இட்லி அப்படியே அவிச்சு எடுத்த அடுத்த செகண்ட் தட்ல,சட்னி தொட்டு உடனே தட்டணும் :)


//இட்லி-தக்காளிச் சட்னி//
ஒரே கண்டிஷன் இனிப்பு தூக்கலா இருக்ககூடாது!


//இட்லி-கொத்துமல்லி சட்னி//
கடுகு தாளிச்சு உப்பு கரீக்டா இருக்கணும்!


//இட்லி- தயிர்//
இட்லி சூடா இருக்கணும் தயிர் நல்லா கெட்டியா இருக்கணும்!


//இட்லி- சிதம்பரம் கொத்சு (அபிஅப்பா தான் போடா சொன்னார் ...சித்தப்பா சொல்லைத் தட்டலாமோ!)//

அதிகம் எங்க ஊரு பக்கம் கல்யாண வீடுகளில்தான் இதை திங்க முடியும் :(

நீங்க மிஸ் பண்ணியதா நான் நினைக்கிற இன்னும் இரண்டு காம்பினேஷன்

இட்லி+பீர்க்கங்காய் சட்னி

சூப்பரேய்ய்ய்

இட்லி +கடப்பா (இது எந்த ஊரு புராடெக்ட் தெரியல பட் நல்லா இருக்கும்)அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ
எனக்கு இப்பவே இதெல்லாம் சாப்பிட தோணுதேஏஏஏ.....

ஆயில்யன் said...

ஆசைப்பட்டு நிறைய அவிச்சுக்கொட்டின இட்லி திங்க முடியாம மீந்து போச்சுன்னா......

அதுக்கும் ஒரு ஐட்டம் இருக்கு


அதுதான் இட்லி - உப்புமா :)))

முரளிகண்ணன் said...

இட்லி யை வச்சு இப்படி அசத்திட்டீங்களே.

பின்னூட்டங்கள் கூடுதல் சுவை

மிஸஸ்.டவுட் said...

@ அபிஅப்பா ...

பின்னூட்டமே இவ்ளோ பெருசா இருந்தா நான் எவ்ளோ பெரிய நன்றியை சொல்ல முடியும்? ஆனால் சொல்லப் பட்ட விஷயங்கள் அருமை ,உங்க "சிதம்பரம் கொத்சு "சமையல் குறிப்பை மட்டும் தனியா பிரிச்சு எடுத்து வச்சிருக்கேன் செஞ்சு பார்க்கத் தான்.

மிஸஸ்.டவுட் said...

// ராஜ நடராஜன் said...

உங்கள் பெயர் பதிவர்களின் பின்னூட்டங்களில் அறிமுகமாயிருந்தாலும் இப்படி இட்லி சுடுவீங்கன்னு தெரிஞ்சது இப்பத்தான்.


அட அறிவுக் கொழுந்துகளா ?! சொல்லணும் இப்போ நான் இட்லி சுட மாட்டாங்க சார்,இட்லி அவிப்பாங்க குண்டான்ல வச்சு. தோசையைக் கூட வார்ப்பாங்கன்னு தான் கேள்வி . சுடறது அப்பளம் தான்,அதைக் கூட முக்கால்வாசிப் பேர் பொரிச்சு தான் சாப்பிடறது வழக்கம் ..

மிஸஸ்.டவுட் said...

// புதுகைத் தென்றல் said...

நானும் தம்பியும் இதை அரிசிக்கட்டி என்போம்.//

மாவுக் கட்டின்னு சொல்வோம்பா நாங்க.சில நேரம் கல்லுக்குப் பதிலா இட்லிய வச்சுக் கூட மண்டையை உடைக்கலாம்னு சொல்வான் என் தம்பி

மிஸஸ்.டவுட் said...

//ராஜ நடராஜன் said...

//நாம் என்றால் நாம் இல்லை அந்த நாமில் என்ன தெளிவாகப் புரிகிறதா இல்லையா?!) //

புரிஞ்சது புரிஞ்சது!முந்தைய பின்னூட்டத்தில சந்தேகப்பட்டது சரியாத்தான் இருக்கு:)
//
புதுசா இங்க வந்தாலும் கூட ஒரு முடிவோட தான் வந்திருக்கீங்க போல நீங்க...!!!
என் முந்தைய பதிவுகளையும் எதுக்கும் ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடுங்க ராஜ நடராஜன் .

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இட்லிக்கு நானானி சொன்னமாதிரி நான் தயிர் தொட்டுப்பேன் சட்னி வித் தயிர் சூப்ப்ரா இருக்கும்.. நாலு இட்லிய சேமிச்சு வச்சு அதை அப்பறமா இட்லி உப்புமாவா ஆக்கினா அது சூப்ப்ரோ சூப்பரா இருக்கும்..

மிஸஸ்.டவுட் said...

@ புதுகைத் தென்றல் said...
இட்லியை வெச்சு வேற ரெசிப்பிக்கள் செய்யலாம்.

அதெல்லாம் பேரண்ட்ஸ் கிளப்பில் பதிவாக இருக்கு.

சரிப்பா போய் பார்க்கறேன் .

மிஸஸ்.டவுட் said...

@ வல்லிசிம்ஹன் said...

ரொம்ப காலத்துக்கு முன்னால உப்புமா பதிவு போட்டு இருந்தார் ஒருத்தார்:)
அப்புறம் இன்னோருத்தர் பிரியாணினு பதிவு போட்டா. கொத்துபரோட்டா போட்டாங்க.
இப்ப இட்லி காலமா:))))
கயலு நடத்துங்க.....

சரி இந்த இட்லி பதிவுக்கு அப்புறம் நீங்க வேணா இடியாப்பம்னு ஒரு பதிவு போடுங்களேன் வல்லிம்மா ...இடியாப்பத்துக்கு என்னென்ன சூப்பர் காம்பினேசன்கள் இருக்குன்னு எல்லாரும் வந்து சொல்லட்டும்.டெய்லி ஒண்ணா ட்ரை பண்ணலாம் இல்ல???!!!

மிஸஸ்.டவுட் said...

@ வருங்கால முதல்வர் said...
சாதாரணமா இருபது சாப்பிடுவேன். தக்காளி சட்னி , சாம்பாரு ரெண்டும் இருந்தா இன்னும் ரெண்டு கூட சாப்பிடுவேன்

கூடுகூடுப்பை

இப்படில்லாம் தின்னே தீர்த்தா வருங்கால முதல்வரா எல்லாம் எப்படி ஆகறது?! இட்லியோ ...சப்பாத்தியோ சாப்பாட்டை தியாகம் பண்ணனும் கூடுகூடுப்பை அண்ணா ,அதென்ன கு ...கூ வாயிடுச்சே இங்க?!என்னவோ போங்க?

மிஸஸ்.டவுட் said...

@ முரளிகண்ணன் said...
இட்லி யை வச்சு இப்படி அசத்திட்டீங்களே.

பின்னூட்டங்கள் கூடுதல் சுவை

நன்றி முரளிகண்ணன் ... ஆமாம் நீங்க இட்லி சாப்பிட மாட்டீங்களா என்ன? உங்க இட்லி காம்பினேசன் பத்தி ஒன்னும் சொல்லக் காணோமே?!

மிஸஸ்.டவுட் said...

@அதுசரி ...

//எனக்கு பிடிச்சது இட்லியும், பச்சை மிளகாய் சட்னியும் தான்...அதுவும் ரொம்ப காரமா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்.

ஆமாமாம் ...ரொம்ப நல்லாத் தான் இருக்கும் .

மிஸஸ்.டவுட் said...

ஒரு சாதாரண இட்லி மேட்டர்க்கு இவ்ளோ பேர் ஆதரவு தருவீங்கன்னு நினைக்கலையே நான் .எவ்ளோ பேர் புதுசா வந்து கருத்து சொல்லிட்டுப் போயிருக்காங்கன்னு பார்த்த பின்ன தான் இட்லி மகிமை புரியுது .

@ராஜ நடராஜன் (இட்லி சுடர அம்மா இல்லைங்க நான் )

@ஆயில்யன் (அபிஅப்பா சொன்ன அதே சிதம்பரம் கொத்சு ...கண்டிப்பா இதை ஒரு கை பார்க்காம விடறதா இல்லை ...சமையல்லங்க,
இட்லி உப்புமா பண்றதுக்காகவே என் அத்தை இட்லி நிறைய அவிச்சு முதல் நாள் நைட் முத்து அக்கா சொன்னாபோல சேமிச்சும் வைப்பாங்க
பீர்க்கங்காய் சட்னி பண்ணதில்லை இன்னும் ...செஞ்சு பார்த்திடலாம் நெக்ஸ்ட் டைம் ...கடப்பா ஆந்திரால இருக்கிற ஒரு ஊராச்சே )

@கோமா (உங்க இட்லி தொடர் பதிவை கண்டிப்பா பொய் பார்க்கிறேன் கோமா,நிஜம் தான் நம்ம இட்லி யை அடிச்சுக்க வேற என்ன இருக்கு?!)

@மாதேவி (புதுசு ...புதுசா...சொல்றீங்களேப்பா இட்லி காம்பினேசன் ...இதையும் ட்ரை பண்ணிப் பார்க்கறேன் )

நானானி (கட்டித் தயிர் இட்லி தேவ் ஸ்பெசல் ,சீனி சேர்க்க மாட்டார்,உங்க இட்லி பதிவை போய் பார்க்கறேன் நானானி)

மிஸஸ்.டவுட் said...

@முத்துலெட்சுமி-கயல்விழி said...

இட்லிக்கு நானானி சொன்னமாதிரி நான் தயிர் தொட்டுப்பேன் சட்னி வித் தயிர் சூப்ப்ரா இருக்கும்.. நாலு இட்லிய சேமிச்சு வச்சு அதை அப்பறமா இட்லி உப்புமாவா ஆக்கினா அது சூப்ப்ரோ சூப்பரா இருக்கும்..

சட்னி வித் தயிரா ? என்ன ஒரு அபாரமான டேஸ்ட் பாருங்க!? இட்லி உப்புமா எனக்கும் ரொம்ப பிடிக்கும்.நான் ஜாஸ்தி இட்லி உப்புமா பண்றதில்லை இங்க.அம்மா வீட்ல பண்ணுவாங்க,கொஞ்சம் காய்கறிகளும் சேர்த்து தக்காளி போட்டு வதக்கின இட்லி உப்புமா என்னோட ஃபேவரிட். .