Friday, March 27, 2009

அனிதாவின் காதல்கள் ...சுஜாதா இருந்திருக்கலாம் இன்னும் கொஞ்ச நாள்!!!

நேற்று இரவு தான் இந்த புத்தகம் வாசித்தேன் .சுஜாதா இறந்து விட்டதை நினைத்து மிக துக்கமாக உணர்ந்தேன்.ஒரு சாதாரணக் கதை தான் அதை இத்தனை விறுவிறுப்புடன் மிகச் சாதாரண வார்த்தைகளைக் கொண்டு விரித்து விவரிக்க சுஜாதாவுக்கு இணை சுஜாதாவே தான்.ஏன் சுஜாதா இறந்து போனார்? அவரது இடம் என்னைப் பொறுத்தவரை இன்னும் இட்டு நிரப்ப முடியாத இடமாகத் தான் தென்படுகிறது.


எவ்வளவு சீரியஸ் விஷயம் என்றாலுமே எளிமையாக்கி "இதெல்லாம் ஒன்றுமே இல்லை" என்பதைப் போன்ற எண்ணத்தை உருவாக்கும் எழுத்துக்கள். யோசித்தால் மட்டுமே அவர் எழுதி இருக்கும் விசயத்தின் நிஜமும் யதார்த்தமும் புரியக் கூடும்.


சிவாஜி திரைப் படத்தில் "பழகலாம் வாங்க " என்று சாலமன் பாப்பையா சொல்வதை பலரும் பல விதமாக விமர்சித்திருக்கலாம்.ஆனால் விமர்சித்த எல்லோருக்குமே தெரியும் ...பழகுதல் என்பதும் யதார்த்தமே என்று.;தருமியின் ஒரு பதிவில் வாசித்த ஞாபகம்


"இங்கே நம் நாட்டில் நாம் ஏன் வேஷம் போட்டுக் கொண்டே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்" நாம் என்னவோ ரொம்பவும் உத்தமர்கள் என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்வதைப் போலவே தான் சதா எல்லா நேரங்களிலும் பிறர் முன்னிலையில் நம்மை நாம் வெளிப் படுத்திக் கொண்டு இருக்கிறோம் ...விரும்புகிறோம்.இதை தருமி சார் வேறு வார்த்தைகளை சொல்லி இருப்பார்.சரியாக நினைவில் இல்லை ,ஆனால் சாராம்சம் புரிந்தது .


சுஜாதாவின் எல்லாக் கதைகளும் மிக யதார்த்தமானவை .இப்படி நடக்கக் கூடுமோ என்ற "என் இனிய இயந்திரா" கூட நம் வாழ்வியலோடு ஒத்துப் போவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.


சரி இனி அனிதாவின் காதல்களைப் பார்ப்போம்;


அனிதா கனவுகள் நிறைந்த பெண் ,அவளுக்கென்று பிரத்யேகமான கற்பனைகள் உண்டு ..அனிதா ஐ.ஏ.எஸ் ;அனிதா தி பேமஸ் டான்சர் ,திறமையான நடிகை ,ஸ்போர்ட்ஸ் வுமன் இப்படி பலவகையில் சகல கலா வள்ளியாக தான் பிரகாசிக்க வேண்டும் என்ற கனவும் கற்பனையும் அவளுக்கு உண்டு ,இந்த சூழ்நிலையில் அவளது கனவுகள் எங்ஙனம் கலைக்கப் படுகின்றன ,அதிலிருந்து அவள் எங்ஙனம் மீள்கிறாள் என்பதே அனிதாவின் காதல்கள் நாவலின் சாராம்சம் .

அனிதா ஒரு மத்தியதர பிராமணக் குடும்பத்துப் பெண்,ஒரு சின்ன விபத்தின் போது தவறி விழுந்த பர்சை எடுத்து வைத்து பத்திரமாகத் திருப்பிக் கொடுத்ததின் காரணமாக அகில உலக அளவில் தொழில் சாம்ராஜ்யம் நடத்தும் கோடீஸ்வரன் வைரவனின் காதல் எதேஷ்ட்டமாய் அவளுக்குக் கிட்டுகிறது .இது அவளது முதல் காதல் .


அடுத்த காதல் வீட்டில் பார்த்து நிச்சயிக்கப் படும் மாப்பிள்ளை ரகு .அமெரிக்க மாப்பிள்ளை ..டாலர் கனவுகளாலும் உடன் படிக்கும் தோழி மதுமிதாவின் உற்சாகப் படுத்தும் கேலிகளாலும் அனிதா இவனை மணந்து கொள்ளச் சம்மதித்து நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிகிறது இவர்களுக்கு .


அடுத்த காதல் அனிதாவின் மாமா (அம்மாவுடன் பிறந்த கடைக்குட்டித் தம்பி )சீதாராமன் ,இவன் சிறு வயது முதற்க் கொண்டே அனிதாவை விரும்புகிறான், சாதாரண வங்கி கிளார்க்காக இருந்து கொண்டு தேர்வுகளை விடாமல் எழுதி உயர் பதிவை அடைவதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கும் சீதாராமன் அதற்கான உந்து சக்தி என குறிப்பிடுவது அனிதாவையே .இவனை அனிதா காதலிக்கவில்லையே தவிர இவன் மீது அவளுக்கு ஒரு வித நேசம் உண்டு என்பதை சுஜாதா தன் வரிகளில் வித்யாசப் படுத்தியிருப்பார். இது காதல் இல்லை இனம் புரியா நேசம் மட்டுமே அனிதாவைப் பொறுத்தவரை .ஆனால் சீதாராமன் அனிதாவை சின்சியராகவே காதலிக்கிறான் மனதிற்குள்.


அடுத்தும் ஒரு காதல் உண்டு அவன் விஸ்வம் ,சீதாராமனுடன் பணிபுரியும் ஒரு சிநேகிதியின் அண்ணன் அவன்,அவனும் ஒரு கட்டத்தில் அனிதாவை விரும்புவதாகக் கூறுகிறான்.


அப்படி இத்தனை பேர் விரும்ப அனிதாவிடம் என்ன தான் இருக்கிறது?! பெரிய அறிவாளியா அவள்?! அதிரூப சுந்தரியும் இல்லை ,பக்கவாட்டில் பார்த்தால் சுமாராக இருப்பாள் ,அவளது அழகு சாதாரண அழகு ,அவளை விடவும் பல மடங்கு கவர்ந்திழுக்கும் அழகுடனும் ,சுதந்திரமாகப் பழகும் மனோபாவத்துடனும் உடைய தன்னை புறக்கணித்து அனிதாவை வைரவன் விழுந்து விழுந்து (!!!) காதலிப்பதை நினைத்து பொறாமைப் படுகிறாள் மதுமிதா.


பொறாமை இருந்தாலும் கூட இந்த புத்திசாலி மதுமிதா அனிதா பணக்காரி ஆனபின் தோழி என்ற பெயரில் தனக்கு கிடைக்கக் கூடும் அனுகூலங்களை மனதில் கொண்டு அனிதாவை வெறுக்காமல் இணக்கமாகவே இருக்கிறாள் கதையின் முடிவு வரையுளும் கூட;காரணம் பணமும் அதனால் கிடைக்கும் வசதிகளையும் எண்ணித்தான்.


இது இப்படி இருக்க...கதையில் அனிதா மிகக் குழப்பமான பெண்ணாகவே அல்லது சஞ்சல மனதினளாகவே முடிவு வரையிலும் சித்தரிக்கப் பட்டு விட்டு கடைசி நொடியில் ஸ்திரமான முடிவு எடுப்பவலாகக் காட்டப் படுகிறாள்.அதுவும் கூட ஒரு வகையில் சரி என்றே படுகிறது,வாழ்வியல் ஞானம் வாழ்வின் முதற் கட்டத்திலேயே எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை ,வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்களின் மிச்சங்களாகவே தெளிவான திட சிந்தனை கை வரப்பெருகிறது,


அனிதாவுக்கும் அப்படித்தான்...அனிதா மட்டும் அல்ல மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்த எல்லா இளம்பெண்களுக்கும் இதுவே சாத்தியம்,அம்மா அப்பா சொல்வதையே செய்யத் துணியும் மனப் பான்மையே பெரும்பாலான பெண்களுக்கும் இலகுவாகிறது,விதி விலக்குகளும் இருக்கலாம்,இங்கே அனிதாவைப் பொறுத்தவரை அவள் வீட்டுக்கு அடங்கிய பெண் என்ற தோற்றத்தையே விரும்புபவளாகத் தெரிகிறது.


அனிதா மேலே படிக்க விரும்புகிறாள் ,கூடவே வீட்டில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்வதாகத் தெரிய வருகையில் முதல் குழப்பம் ஆரம்பிக்கிறது,படிப்பைத் தொடர்வதா அல்லது கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆவதா என்று.


அடுத்ததாக வைரவன் தன் காதலை பலமுறை தெளிவாக்கிய பின் ரகுவை விட அவன் மீது புத்தி செல்கிறது,கூடவே அவனது காதலின் மீது லேசான பயமும் கூட அவளுக்கு உண்டென்று கதை உருள்கிறது,காரணம் அவனது மித மிஞ்சிய பணமும் செல்வாக்கும் .


நிச்சயிக்கப் பட்ட மாப்பிள்ளை ரகுவை அயல்நாட்டில் இன்னும் உயர் பதவி எனும் ஆசை காட்டி ஒதுங்கி நிற்க வைத்து விட்டு பணத்தையும் சகாயங்களையும் வாரி இறைத்து ஒரு கட்டத்தில் அனிதாவின் பெற்றோரையும் உற்றோரையும் கூட தன் வசமாக்கி வைரவன் அனிதாவை மணக்கிறான்.


திருமணமான சில நாட்கள் இடைவெளியில் அனிதாவுக்கு வைரவனின் குடும்ப சூழல் பிடித்தம் இல்லாமல் போகிறது.அவனிடம் இருக்கும் அளவில்லாப் பணத்தின் சக்தியால் பிறந்த வீட்டில் அனிதாவுக்கு ஏகப்பட்ட மரியாதை செய்தாலும் கூட எல்லாம் அவன் பணத்திற்காகவே என்ற எண்ணம் அனிதாவிடம் படிந்து அவளுக்கு சுதந்திரமான வாழ்க்கையின் மீது ஏக்கம் வருகிறது,


இது இப்படி இருக்க, வைரவனின் தொழில் முறை எதிரிகளால் வீட்டில் ரெய்டு நடந்து பெரும்பாலான சொத்துகளுக்கு சரியான முறையான கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப் படவில்லை என அறிவித்து அவனைக் கைது செய்து தனி விசாரணை என்ற பெயர் அவன் சிறை செல்ல நேர்கிறது,


இந்த வைரவன் கதாபாத்திரம் கொஞ்சம் விசித்திரம் தான் இங்கே. தன் இறந்து போன தாயின் சாயல் உள்ள பெண் என்பதால் மட்டுமே அவன் அனிதாவின் மீது அபிரிமிதமான காதல் கொள்கிறான்.அனிதாவை விட அழகான ...அந்தஸ்தான பல பெண்கள் அவனை மணக்க விரும்பியும் அவன் இவளை மணக்கிறான். இது கொஞ்சம் விசித்திரம் தான்,தாயின் மீது அவனுக்கிருந்த இனம் அறியா பாசம் காரணமாக இருக்கலாம் .


எப்படி அதி தீவிரமாகக் காதலித்தானோ அதே வேகத்தில் தான் சிறையில் அடைபட்டதும் அனிதாவுக்கு விவாகரத்து தரவும் முன் வருகிறான் .தன் செக்ரட்டரி பெண்ணுடன் தாராளமாகப் பழகும் போதாகட்டும் ,சொந்த அக்கா மகளுடன் மற்றவர் பார்வைக்கு வித்யசமாகப் படுவதாகட்டும் வைரவன் மீது அனிதா பயம் கொள்வதில் நியாயமே.


அனிதாவின் குடும்பத்தினர் பணத்திற்கும் செல்வாக்கிற்கும் படிப் படியாக மயங்குவதாகக் காட்டி இருப்பது வெகு யதார்த்தமே. எந்த மனிதனாயினும் அதுவே நிதர்சனம் ,இதில் விதி விலக்குகள் உண்டு என வாதிடுவது விழலுக்கு இறைத்த நீர்!அமெரிக்க மாப்பிள்ளையை விட தொழிலதிபர் மாப்பிள்ளை பெட் என தீர்மானிக்கும் அவர்கள் அவனும் சிறை சென்றதும் மணமான மகளை விவாகரத்து செய்வித்து விட்டு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.


எந்த சூழ்நிலையில் எது பெஸ்ட்டோ அதை தேடுவதும் பெற முனைவதுமே மனித இயல்பு என்பதற்கேற்ப அனிதாவின் வீட்டினர் அடுத்த மாப்பிள்ளை தேடுகின்றனர், இத்தனை செய்பவர்களை ஒரு விஷயத்தை மட்டும் சிந்திக்கவேயில்லை அது அனிதாவின் படிப்பு, காரணம் நம் இந்திய மனப்பான்மை என்று சொன்னால் சாலப் பொருந்தக் கூடும்.


இங்கே பெற்றவர்கள் பெண்கள் படிப்பதைக் காட்டிலும் கை நிறைய சம்பாதிப்பதைக் காட்டிலும் நல்ல வாழ்க்கைத் துணை அமைத்துக் கொடுப்பதே மிக முக்கியம் என்று கருதுகிறார்கள் .அது சரியான நடைமுறையே என்றாலும் ,ஒரு அளவுக்கு மேல் யாரையும் சோதித்துப் பார்த்து தேர்வு செய்ய வாழ்க்கை என்ன அறிவியல் ஆய்வுக் களமா ? வாழும் போது தானே தெரிய வரும்

நிஜமான நிறை குறைகள்,அப்போது திடீரென்று பயந்து போய் வெறுத்து ஓடினால் அந்த ஓட்டத்திற்கு முடிவு ஏது ?


வெளிநாட்டுப் பொருட்களில் மோகம் கொண்ட தம்பி ,கிணற்றுத் தவளை வாழ்க்கையில் சோர்ந்து போன அக்கா ,பெருமைக்காகவேனும் தன் தங்கை ஒரு பெரும் பணக்காரனின் மனைவி என்று பெருமை பேச விரும்பும் இன்னொரு அக்கா,பெண்ணுக்கு கல்யாணமே வாழ்க்கையில் அதி முக்கியம் அதை தவிர வேறு எதுவும் இல்லை என நம்பும் அம்மா ...இவர்களோடு அனிதா எனும் பெண்ணின் கனவுகளும் கற்பனையும் கலந்த வாழ்க்கை . இதுவே அனிதாவின் காதல்கள் கதை.


எந்த நொடியில் அனிதா மனம் மாறுகிறாள் என்று சுஜாதா விவரிக்கும் இடம் கொஞ்சம் டிராமாடிக் ஆக இருந்தாலும் சேக்ஸ்பியர் சொன்னது போல "வாழ்க்கையே ஒரு நாடக மேடை" தானே? அதனால் அனிதா தனக்கும் சீதா ராமனுக்கும் வீட்டினர் ஏற்ப்பாடு செய்திருந்த மறுமணத்தை கடைசி நொடியில் வேண்டாம் என மறுத்து விட்டு சிறையில் இருக்கும் தன் கணவனைத் தேடி போகிறாள்.
சுபம்

21 comments:

நட்புடன் ஜமால் said...

சரிதான்

அது நம்ம கையில இல்லையே!

குடுகுடுப்பை said...

அவரைப்போலவே எழுதும் ஒரு பதிவர் இருக்கிறார் கவலையை விடுங்கள்.

மீதி படிச்சிட்டு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//,பக்கவாட்டில் பார்த்தால் சுமாராக இருப்பாள் //


இதெல்லாம் சுஜாதாவோட பன்ச்சுங்க

ttpian said...

நைலான் கயிறு ....சுஜாதாவை....விறுவிறுப்பு கதாசிரியராக முன்னிறுத்திய நாவல்...
கோ.பதி
காரைக்கால்

gayathri said...

hey kathin mudivu super pa

சந்தனமுல்லை said...

நாவலுக்கு கோனார் உரை எழுதின டவுட் வாழ்க! :-)

நட்புடன் ஜமால் said...

யோசித்தால் மட்டுமே அவர் எழுதி இருக்கும் விசயத்தின் நிஜமும் யதார்த்தமும் புரியக் கூடும்.\\

அப்ப எனக்கு புரியாதா!

KarthigaVasudevan said...

//நட்புடன் ஜமால் said...

சரிதான்

அது நம்ம கையில இல்லையே!//


வாங்க ஜமால் ...
நம்ம கைல இருக்கற விசயங்களைப் பத்தி மட்டும் தான் நாம யோசிக்கறோமா என்ன? ஒரு சின்ன ஆசை தான்.

KarthigaVasudevan said...

//குடுகுடுப்பை said...

அவரைப்போலவே எழுதும் ஒரு பதிவர் இருக்கிறார் கவலையை விடுங்கள்.

மீதி படிச்சிட்டு.//


யாரந்தப் பதிவர்?! படிச்சிட்டு வந்து சொல்லுங்க.

KarthigaVasudevan said...

//SUREஷ் said...

//,பக்கவாட்டில் பார்த்தால் சுமாராக இருப்பாள் //


இதெல்லாம் சுஜாதாவோட பன்ச்சுங்க//

அப்படியாங்க ...சரிங்க.

நட்புடன் ஜமால் said...

அருமையான நாவலை எளிமையா சொல்லி இருக்கீங்க ...

நான் மட்டும் தான் இப்படின்னு நினைச்சேன் - அனிதாவும் இருக்காங்க போல இருக்கு உலகத்தில.

KarthigaVasudevan said...

// ttpian said...

நைலான் கயிறு ....சுஜாதாவை....விறுவிறுப்பு கதாசிரியராக முன்னிறுத்திய நாவல்...
கோ.பதி
காரைக்கால்//

கயிறு இன்னும் வாசிச்சதில்லை கோ.பதி .பகிர்வுக்கு நன்றி .நெட்ல கிடைக்குதான்னு தேடிப் பார்க்கணும்,

KarthigaVasudevan said...

// gayathri said...

hey kathin mudivu super pa

thankx gayathri

KarthigaVasudevan said...

//சந்தனமுல்லை said...

நாவலுக்கு கோனார் உரை எழுதின டவுட் வாழ்க! :-)
//


கோனார் நோட்ஸ் வச்சுப் படிச்சா அனுபவமா முல்லை?!

அம்மா தமிழ் டீச்சர் ...எனக்கு நோட்ஸ் அவங்களே சொல்வாங்க கோனார் நோட்ஸ் தேவைப் படலை .டைரக்டா புக் தான் துணை.

தவிர இது நோட்ஸ் இல்லை ,நாவலைப் பத்தின அலசல் ,அவ்ளோ தான்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சுஜாதாவின் தொடர்கதைகள் மேல் ஒரு ஒவ்வாமையே உண்டு எனக்கு (ஒன்றிரண்டு படித்திருக்கிறேன்). இந்தத் தொடர்கதை படித்ததில்லை.

(அவரது ஒரு சில சிறுகதைகளும், கட்டுரைகளும் பிடிக்கும்).

KarthigaVasudevan said...

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சுஜாதாவின் தொடர்கதைகள் மேல் ஒரு ஒவ்வாமையே உண்டு எனக்கு (ஒன்றிரண்டு படித்திருக்கிறேன்). இந்தத் தொடர்கதை படித்ததில்லை.

(அவரது ஒரு சில சிறுகதைகளும், கட்டுரைகளும் பிடிக்கும்).//

வாஸ்த்தவமே..."ப்ரியா " படத்தின் கதையை நாவலாக லிப்ரரியில் பார்த்ததும் ஆர்வத்துடன் எடுத்து வைத்தேன். ஆனால் அது பெரும் சோதனையாகி விட்டது.படமும் எனக்கு பிடித்தமில்லை...நாவலும் அத்தனை பிடித்தமில்லை.ஏனோ ...சில படைப்புகள் அப்படித்தான் ஆகி விடுகின்றன .இந்த அனிதாவின் காதல்கள் கூட அத்தனை பக்கங்கள் தேவை இல்லையோ என்ற எண்ணம் வந்தது வாசிக்கையில்.

ராமலக்ஷ்மி said...

வெகு அழகான் விமர்சனம் என்பதில் டவுட்டே இல்லை எனக்கு:)!

குடுகுடுப்பை said...

நீங்கதான் அந்த இன்னோரு சுஜாதா.

அது சரி(18185106603874041862) said...

//
"இங்கே நம் நாட்டில் நாம் ஏன் வேஷம் போட்டுக் கொண்டே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்" நாம் என்னவோ ரொம்பவும் உத்தமர்கள் என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்வதைப் போலவே தான் சதா எல்லா நேரங்களிலும் பிறர் முன்னிலையில் நம்மை நாம் வெளிப் படுத்திக் கொண்டு இருக்கிறோம்
//

ஏன்னா யாரும் அவங்களுக்காக வாழ்றதில்லை...பக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்லுவான், எதிர்வீட்டுக் காரன் என்ன சொல்லுவான், சொந்தக்காரனுங்க என்ன சொல்லுவாங்கன்னு அடுத்தவனுக்காக தான் வாழ்க்கையே வாழ்றாங்க...கலாச்சார காவலர்கள் பத்தி ஒங்களுக்கு தெரியாதா??

அது சரி(18185106603874041862) said...

//
வெளிநாட்டுப் பொருட்களில் மோகம் கொண்ட தம்பி ,கிணற்றுத் தவளை வாழ்க்கையில் சோர்ந்து போன அக்கா ,பெருமைக்காகவேனும் தன் தங்கை ஒரு பெரும் பணக்காரனின் மனைவி என்று பெருமை பேச விரும்பும் இன்னொரு அக்கா,பெண்ணுக்கு கல்யாணமே வாழ்க்கையில் அதி முக்கியம் அதை தவிர வேறு எதுவும் இல்லை என நம்பும் அம்மா ...இவர்களோடு அனிதா எனும் பெண்ணின் கனவுகளும் கற்பனையும் கலந்த வாழ்க்கை . இதுவே அனிதாவின் காதல்கள் கதை.
//

இதையே நானும் நினைக்கிறேன்...விழிப்பாக இல்லாவிட்டால் குறுக்கு சந்து குப்புசாமி, மூணாவது தெரு முத்தையா, பெரிய தெரு பொன்னம்மா.....என எல்லாரும் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்க தயாராக இருப்பார்கள்...

அது சரி(18185106603874041862) said...

//
அதனால் அனிதா தனக்கும் சீதா ராமனுக்கும் வீட்டினர் ஏற்ப்பாடு செய்திருந்த மறுமணத்தை கடைசி நொடியில் வேண்டாம் என மறுத்து விட்டு சிறையில் இருக்கும் தன் கணவனைத் தேடி போகிறாள்.
சுபம்
//

நான் இந்த கதை படிக்கலை....(சரி ஒத்துக்கிறேன்...இந்தக் கதையும் படிக்கலை...)...ஆனா சுஜாதா இந்த முடிவை நியாயப்படுத்தி இருக்காரா இல்ல இந்த சமூக சூழ்நிலைல அனிதா மாதிரி இந்தப் பக்கமும் போக முடியாம அந்த பக்கமும் போக முடியாம இருக்க ஒரு பொண்ணு அப்படித்தான் முடிவெடுப்பாள்னு சொல்லிட்டாரா??

நான் ரொம்ப நாளைக்கு முன்னாடி "மனைவியின் காதல்"னு ஒரு தொடர் எழுதினேன்..டைம் கிடைச்சா படிச்சி பாருங்க...கொஞ்சம் இதே மாதிரி கேள்விக்குறிய கதை...ஆனா சுஜாதா எழுதின மாதிரி அவ்ளோ இன்ட்ரஸ்டிங்கா எனக்கு எழுத வரலை!