Thursday, February 19, 2009

ஒரு குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் (10) பத்துக் கேள்விகள்(!!!)

ஒரு சுட்டிக் குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் பத்துக் கேள்விகள்...
  1. டெய்லி எதுக்கு மூணு வேலையும் சாப்பாடு ஊட்டி விடறேன்...சாப்பாடு ஊட்டி விடறேன்னு என்னைத் தொல்லை பண்ற? பசிச்சா நான் சாப்பிட மாட்டேனா?
  2. ஐஸ் கிரீம் சாப்பிட்ட சளி பிடிக்கும் வேணாம்...வேணாம்னு சொல்றயே ? சளி பிடிக்காம குழந்தைக்கு ஐஸ் கிரீம் எப்படி ஊட்டலாம்னு நீ ஏன் ஒரு வாட்டி கூட யோசிக்க மாட்டேன்ற உன் குழந்தைக்காக?
  3. பூதம் வருது ...பூச்சாண்டி வருது...கோணிக்காரன் வரான்னு சொல்லி எனக்கு விவரம் தெரியுமுன்னா இருந்து பயமுறுத்தறியே இன்னைக்கு வரை ஒருநாளும் அவங்களைக் காணோமே!!!எப்போ தான் பூதமும்...பூச்சாண்டியும்...கோணிக்காரனும் வருவாங்க?
  4. ஏன் எப்போ பார்த்தாலும் சன் டி.வி ...கே.டி.வி...கலைஞர் டி.வி ..விஜய் டி.வி நு பார்த்து கேட்டுப் போற ...ஏன் என்கூட சேர்ந்து சுட்டி டி.வி பார்த்து அறிவை வளர்க்க ட்ரை பண்ணக் கூடாது?
  5. உனக்கு எவ்வளவோ சொந்தக்காரங்க ..பிரெண்ட்ஸ்னு இருக்கலாம் ...இருந்துட்டுப் போகட்டும் ...ஏன் அவங்க வரும்போதெல்லாம் "பா...பா..ப்ளாக்ஷிப் சொல்லு, "ஜானி...ஜானி எஸ் பாப்பா" சொல்லுன்னு உன் பாப்பாவான என் உயிரை எடுக்கற?
  6. உனக்குத் தூக்கம் வரும் போதெல்லாம் லீவு நாள்ல கூட என்னையும் தூங்கு...தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே இது எப்படி நியாயமாகும்?
  7. அது ஏன் நைட் தூங்கி மார்னிங் எழுந்துக்கச் சொல்லி தினம் என்னை படுத்தற? மார்னிங் தூங்கி நைட் எழுந்தா சாமி வந்து கண்ணைக் குத்துமா என்ன?
  8. எனக்கு எதெல்லாம் சாப்பிடப் பிடிக்கலையோ அதெல்லாம் உலகத்துலேயே ரொம்ப சத்துள்ள உணவுனும் ...எதெல்லாம் சாப்பிட ரொம்ப பிடிக்குமோ அதெல்லாம் சாப்பிடவே கூடாத உணவுண்ணும் அடம் பிடிக்கிறயே அது ஏன்?
  9. தண்ணில விளையாடாத....மண்ணுல விளையாடாத...காத்தடிக்குது ஓடாத தூசு விழும் கண்ல,மழைல விளையாடாத...இதெல்லாம் இல்லாத ஒரு இடம் எங்க இருக்கு ?அதை ஏன் இன்னும் கண்டுபிடிக்கலை நீ ?
  10. ஒரு பங்சனுக்கு கிளம்பினா அந்த டிரஸ் போடு...இந்த டிரஸ் போடுன்னு ட்ரில் வாங்கற ...ஒரு நாளாச்சும் எனக்குப் பிடிச்ச டிரஸ் போட்டுட்டு போக விடறியா நீ? ஏன்மா ...ஏன்...சொல்லும்மா ...ஏன்...ஏன்...ஏன் ???

50 comments:

சந்தனமுல்லை said...

:-)

//தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே //

lol!!

Udhayakumar said...

super... where is the answer?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

super doubt .. டவுட்.. :))

அத்திரி said...

அத்தனை கேள்விகளும் அசத்தல்......... தாய்க்குலங்களே இன்னா சொல்லப்போறீங்க.........

Thamiz Priyan said...

நியாயமான கேள்விகள் தானே? அப்படியே பதிலையும் சொல்லுங்களேன்...

முரளிகண்ணன் said...

அருமை. கூடு விட்டு கூடு பாஞ்சிருக்கீங்க (நன்றி. ரமேஷ் வைத்யா)

அமுதா said...

:-))
நான் இது மாதிரி ஒரு பதிவு உங்க கிட்ட இருந்து வரும்னு எதிர்பார்த்தேன் :-)

ஆனால் பாருங்க கண்டிப்ப அதுங்ககிட்ட 10 இல்ல ...100 கேள்வி இருக்கும் :-)

வெற்றி said...

டவுட்ட எங்களக் கேக்க சொல்லிட்டு நீங்களே டவுட்டக் கேட்டா..........?

இது பதிவுலகின் 10 கேள்வி வா......ரம்.

நட்புடன் ஜமால் said...

அட இங்கையுமா ...

நட்புடன் ஜமால் said...

\\ஐஸ் கிரீம் சாப்பிட்ட சளி பிடிக்கும் வேணாம்...வேணாம்னு சொல்றயே ? சளி பிடிக்காம குழந்தைக்கு ஐஸ் கிரீம் எப்படி ஊட்டலாம்னு நீ ஏன் ஒரு வாட்டி கூட யோசிக்க மாட்டேன்ற உன் குழந்தைக்காக?\\

ஜூப்பரு ...

நட்புடன் ஜமால் said...

\\உனக்குத் தூக்கம் வரும் போதெல்லாம் லீவு நாள்ல கூட என்னையும் தூங்கு...தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே இது எப்படி நியாயமாகும்?\\

இது தங்க்ஸ்ட்டையும் சொல்லலாம்.

நட்புடன் ஜமால் said...

\\தண்ணில விளையாடாத....மண்ணுல விளையாடாத...காத்தடிக்குது ஓடாத தூசு விழும் கண்ல,மழைல விளையாடாத...இதெல்லாம் இல்லாத ஒரு இடம் எங்க இருக்கு ?அதை ஏன் இன்னும் கண்டுபிடிக்கலை நீ ?\\

அட்றா அட்றா ...

www.narsim.in said...

//உனக்குத் தூக்கம் வரும் போதெல்லாம் லீவு நாள்ல கூட என்னையும் தூங்கு...தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே இது எப்படி நியாயமாகும்?//

பளீர் கேள்வி.. நல்லாத்தான் கேட்டீருக்காங்க டீட்டேய்லு

அபி அப்பா said...

நல்ல சிந்தனையை தீண்டும் கேள்விகள் டவுட் அக்கா! நடத்துங்க!

pudugaithendral said...

கலக்கல்.


பாராட்டுக்கள்

ரமேஷ் வைத்யா said...

ஆஹா... கிளம்பிட்டாங்களா..? (கிளப்பிட்டீங்க!)

மணிகண்டன் said...

ஆஹா கலக்கறீங்க.

அ.மு.செய்யது said...

நான் பார்த்த பத்து கேள்வி பதிவுகள்லயே இதாங்க டாப்பு..

ஹா ..ஹா...திரும்ப திரும்ப படித்து ரசித்தேன்..

எல்லா கொஸ்டீனுமே கலக்கல்..சாய்ஸ்ல விடவே முடியாது.

Poornima Saravana kumar said...

யம்மாடி! இந்த குட்டி பயங்கரமான வாலு போல!!!

நசரேயன் said...

பதில் இருந்தா சொல்லுங்க

அது சரி(18185106603874041862) said...

//
டெய்லி எதுக்கு மூணு வேலையும் சாப்பாடு ஊட்டி விடறேன்...சாப்பாடு ஊட்டி விடறேன்னு என்னைத் தொல்லை பண்ற? பசிச்சா நான் சாப்பிட மாட்டேனா?
ஐஸ் கிரீம் சாப்பிட்ட சளி பிடிக்கும் வேணாம்...வேணாம்னு சொல்றயே ? சளி பிடிக்காம குழந்தைக்கு ஐஸ் கிரீம் எப்படி ஊட்டலாம்னு நீ ஏன் ஒரு வாட்டி கூட யோசிக்க மாட்டேன்ற உன் குழந்தைக்காக?
பூதம் வருது ...பூச்சாண்டி வருது...கோணிக்காரன் வரான்னு சொல்லி எனக்கு விவரம் தெரியுமுன்னா இருந்து பயமுறுத்தறியே இன்னைக்கு வரை ஒருநாளும் அவங்களைக் காணோமே!!!எப்போ தான் பூதமும்...பூச்சாண்டியும்...கோணிக்காரனும் வருவாங்க?
//

ம்ம்ம்ம்.....எதுக்கும் நீங்க உங்க கம்ப்யூட்டரை பூட்டி வைக்கிறது நல்லது...பப்பு உங்க பழைய பதிவெல்லாம் படிச்சிட்ட மாதிரி தெரியுது :0))

உண்மைத்தமிழன் said...

படிக்க, படிக்க சுவாரஸ்யமாக இருந்தது..

நன்றாக எழுதுகிறீர்கள்.

தொடருங்கள்..

சரவணகுமரன் said...

சூப்பரு...

Thamira said...

மிக ரசனையான பதிவு.. சூப்பர் மிஸஸ்.!

புதியவன் said...

பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன்...இதுக்கெல்லாம் பதில் எப்படி சொல்வது...?

KarthigaVasudevan said...

//சந்தனமுல்லை said...
:-)

//தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே ////

lol!!


நன்றி சந்தன முல்லை...

KarthigaVasudevan said...

// Udhayakumar said...
super... where is the answer?//


நன்றி உதயகுமார் (பதில் அடுத்த பத்துக்குப் பத்து சீசன்ல போடலாம்னு ஒரு ப்ளான் !?)

KarthigaVasudevan said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

super doubt .. டவுட்.. :))

நன்றி முத்துலெட்சுமி அக்கா (ரொம்ப சந்தோசம் பாராட்டுக்கு !)

KarthigaVasudevan said...

//அத்திரி said...

அத்தனை கேள்விகளும் அசத்தல்......... தாய்க்குலங்களே இன்னா சொல்லப்போறீங்க.........//

நன்றி அத்திரி (உங்க வீட்ல பதில் கேட்கலையா நீங்க இன்னும்?! அடப்பாவமே!)

KarthigaVasudevan said...

// தமிழ் பிரியன் said...

நியாயமான கேள்விகள் தானே? அப்படியே பதிலையும் சொல்லுங்களேன்...
//

நன்றி தமிழ்பிரியன்( என்னப்பா இது ? பதிலை எல்லாம் இங்க வந்து கேட்டுக்கிட்டு?!)

KarthigaVasudevan said...

// முரளிகண்ணன் said...

அருமை. கூடு விட்டு கூடு பாஞ்சிருக்கீங்க (நன்றி. ரமேஷ் வைத்யா)
//

நன்றி முரளிகண்ணன் ...(நான் என்ன திருமூலரா...இல்ல அவர் பேத்தியா கூடு விட்டுக் கூடு பாய?! (இப்படி டவுட் வர வக்கிரீங்ககளே?!)

KarthigaVasudevan said...

// அமுதா said...
:-))
நான் இது மாதிரி ஒரு பதிவு உங்க கிட்ட இருந்து வரும்னு எதிர்பார்த்தேன் :-)

ஆனால் பாருங்க கண்டிப்ப அதுங்ககிட்ட 10 இல்ல ...100 கேள்வி இருக்கும் :-)//

வாங்க அமுதா ...(100 இல்லப்பா 1000 இருக்கு ...இது ஒரு சோறு ஒரு பதம் மாதிரி சும்மா சாம்பிளுக்கு)

KarthigaVasudevan said...

//தேனியார் said...
டவுட்ட எங்களக் கேக்க சொல்லிட்டு நீங்களே டவுட்டக் கேட்டா..........?

இது பதிவுலகின் 10 கேள்வி வா......ரம்//

வாங்க தேனியாரே ...(டவுட் யார் வேணா கேளுங்க...நானும் கேட்பேன்...பின்ன என் டவுட் டை யார் கிட்ட கேட்கறதாம்?!

KarthigaVasudevan said...

// நட்புடன் ஜமால் said...
\\உனக்குத் தூக்கம் வரும் போதெல்லாம் லீவு நாள்ல கூட என்னையும் தூங்கு...தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே இது எப்படி நியாயமாகும்?\\

இது தங்க்ஸ்ட்டையும் சொல்லலாம்.//

வாங்க ஜமால் (அடடா...நீங்க இங்க வந்து ஏன் தங்கமணிகளை வம்புக்கு இழுக்கணும்!)

KarthigaVasudevan said...

// narsim said...
//உனக்குத் தூக்கம் வரும் போதெல்லாம் லீவு நாள்ல கூட என்னையும் தூங்கு...தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே இது எப்படி நியாயமாகும்?//

பளீர் கேள்வி.. நல்லாத்தான் கேட்டீருக்காங்க டீட்டேய்லு//

நன்றி நர்சிம்...
(கேள்விகளை கேட்டாச்சு ....பளீர்னு பதில் சொல்லத்தான் ஆட்களை காணோமாம்?!)

KarthigaVasudevan said...

// அபி அப்பா said...

நல்ல சிந்தனையை தீண்டும் கேள்விகள் டவுட் அக்கா! நடத்துங்க!//


வாங்க சித்தப்பா ...உங்க சிந்தனையை எல்லாமா இந்தக் கேள்விகள் தீண்டிருச்சு...நான் இதை குழந்தை கேட்கறதா இல்ல நினைச்சு எழுதினேன்

KarthigaVasudevan said...

//புதுகைத் தென்றல் said...

கலக்கல்.

பாராட்டுக்கள்

நன்றி புதுகை தென்றல் ...

KarthigaVasudevan said...

//
ரமேஷ் வைத்யா said...

ஆஹா... கிளம்பிட்டாங்களா..? (கிளப்பிட்டீங்க!)//


வாங்க ரமேஷ்வைத்யா அண்ணா ...(முதல் வருகைக்கு நன்றி) நான் யாரைக் கிளப்பினேன்?!

KarthigaVasudevan said...

மணிகண்டன் said...

ஆஹா கலக்கறீங்க.



அ.மு.செய்யது said...

நான் பார்த்த பத்து கேள்வி பதிவுகள்லயே இதாங்க டாப்பு..

ஹா ..ஹா...திரும்ப திரும்ப படித்து ரசித்தேன்..

எல்லா கொஸ்டீனுமே கலக்கல்..சாய்ஸ்ல விடவே முடியாது.//

நன்றி மணிகண்டன்

நன்றி அ.மு.செய்யது

KarthigaVasudevan said...

// Poornima Saravana kumar said...

யம்மாடி! இந்த குட்டி பயங்கரமான வாலு போல!!!//

நன்றி பூர்ணிமாசரண் (ஆமாம் நிஜம் தான் ...!!! உங்களைப் போல!!! )

KarthigaVasudevan said...

//நசரேயன் said...

பதில் இருந்தா சொல்லுங்க

நன்றி நசரேயன் (பதில் அடுத்த சீசன்ல போட்டுடறேன் )

KarthigaVasudevan said...

// அது சரி said...

//
டெய்லி எதுக்கு மூணு வேலையும் சாப்பாடு ஊட்டி விடறேன்...சாப்பாடு ஊட்டி விடறேன்னு என்னைத் தொல்லை பண்ற? பசிச்சா நான் சாப்பிட மாட்டேனா?
ஐஸ் கிரீம் சாப்பிட்ட சளி பிடிக்கும் வேணாம்...வேணாம்னு சொல்றயே ? சளி பிடிக்காம குழந்தைக்கு ஐஸ் கிரீம் எப்படி ஊட்டலாம்னு நீ ஏன் ஒரு வாட்டி கூட யோசிக்க மாட்டேன்ற உன் குழந்தைக்காக?
பூதம் வருது ...பூச்சாண்டி வருது...கோணிக்காரன் வரான்னு சொல்லி எனக்கு விவரம் தெரியுமுன்னா இருந்து பயமுறுத்தறியே இன்னைக்கு வரை ஒருநாளும் அவங்களைக் காணோமே!!!எப்போ தான் பூதமும்...பூச்சாண்டியும்...கோணிக்காரனும் வருவாங்க?
//

ம்ம்ம்ம்.....எதுக்கும் நீங்க உங்க கம்ப்யூட்டரை பூட்டி வைக்கிறது நல்லது...பப்பு உங்க பழைய பதிவெல்லாம் படிச்சிட்ட மாதிரி தெரியுது :0))


நன்றி அதுசரி ...
(என் பழைய பதிவு அவ்ளோ மோசாமாவா இருக்குன்னு சொல்றீங்க ??? ஏன்? ஏன்? ஏன்?

KarthigaVasudevan said...

//
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
படிக்க, படிக்க சுவாரஸ்யமாக இருந்தது..

நன்றாக எழுதுகிறீர்கள்.

தொடருங்கள்..//


நன்றி உண்மைத் தமிழன் (உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி)

KarthigaVasudevan said...

நன்றி சரவணகுமரன்

KarthigaVasudevan said...

//தாமிரா said...

மிக ரசனையான பதிவு.. சூப்பர் மிஸஸ்.!

நன்றி தாமிரா...

KarthigaVasudevan said...

//புதியவன் said...
பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன்...இதுக்கெல்லாம் பதில் எப்படி சொல்வது...?//

நன்றி புதியவன்

(ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சா ஈசியா பதில் சொல்லிடலாமே பிரதர்?!)

Deepa said...

//உனக்கு எவ்வளவோ சொந்தக்காரங்க ..பிரெண்ட்ஸ்னு இருக்கலாம் ...இருந்துட்டுப் போகட்டும் ...ஏன் அவங்க வரும்போதெல்லாம் "பா...பா..ப்ளாக்ஷிப் சொல்லு, "ஜானி...ஜானி எஸ் பாப்பா" சொல்லுன்னு உன் பாப்பாவான என் உயிரை எடுக்கற?//

சிரித்துச் சிரித்துக் க‌ண்க‌ளில் நீர் வ‌ந்து விட்ட‌து! சூப்ப‌ர்!

பட்டாம்பூச்சி said...

எல்லா கேள்வியுமே பட்டய கெளப்புது போங்க :)))

வால்பையன் said...

ஒரு குழந்தையாவே வாழ்ந்துட்டிங்க!

செல்லி said...

//தண்ணில விளையாடாத....மண்ணுல விளையாடாத...காத்தடிக்குது ஓடாத தூசு விழும் கண்ல,மழைல விளையாடாத...இதெல்லாம் இல்லாத ஒரு இடம் எங்க இருக்கு ?அதை ஏன் இன்னும் கண்டுபிடிக்கலை நீ ?//
இப்பிடி ஒரு புத்திசாலி..அடடா.படு சுட்டி! :-)