என்னுடைய குவிஸ் பதிவுல பதில்களை சொன்ன எல்லோருக்கும் நன்றி...வழக்கமா வந்து கருத்து சொல்ற சிலரை இன்னும் காணோமே???இன்னும் த்ரீ டேஸ் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்.யாருக்கு ராமாயணம்...மகாபாரதம் மேல நிறைய ஆர்வம் இருக்குன்னு. !!!
துளசி டீச்சரை காணோமே அவங்க எல்லாக் கேள்விக்கும் சூப்பரா பதில் சொல்வாங்கன்னு எதிர்பார்த்தேன்.அதுசரியையும் காணோம்.சுரேஷ் குவிஸ் பதிவைப் பாக்கலையா இன்னும்?சந்தனமுல்லை உங்களையும் காணோமே!!!அபிஅப்பா சொன்னாரே நான் புள்ளி வச்சிருக்கேன் கோலம் போட நிறைய பேர் வருவாங்கன்னு ...அவருக்கு புள்ளி மட்டும் தான் வைக்கத் தெரியுமாம்...கோலம் போட இது வரைக்கும் வந்தவுங்களுக்கெல்லாம் மிக்க நன்றி...
முக்கியமா டோண்டு அய்யா...முரளிகண்ணன்...குடுகுடுப்பை(பிரம்படி இருக்கு இதிகாசத்துல்ல முட்டை...முட்டையாவா...வாங்குவாங்க!?) அமுதா(கொஞ்சம் இன்ட்ரெஸ்ட் எடுத்து யோசிக்கங்கபா ...குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது தப்பு தப்பா பெயர்களை மாத்தி சொல்லிடப் போறீங்க!?)முரளிகண்ணன்...மீதி கேள்விக்கு எப்போ வந்து பதில் சொல்லப் போறீங்க?ஜமால் நீங்க நல்லா ஆன்சர் பண்ணுவீங்கன்னு நினைச்சிட்டிருந்தேன் நான்!!!நீங்களும் முட்டை மார்க் தானா?
முக்கியக் குறிப்பு:
பாப்புவோட டான்ஸ் டீச்சர் ராமாயணம்...பாரதக் கதைகளை பத்தி கேள்வி கேட்டு அங்க இருந்த எல்லா பெற்றோர்களையும் நேத்து செம ட்ரில் வாங்கிட்டாங்க.யாருக்குமே நிறைய கேள்விகளுக்கு சரியான பதில் தெரியலை.அம்மா...அப்பாக்களுக்கே தெரியலைனா குழந்தைகள் பாவம் என்ன செய்வாங்களாம்?அவங்களுக்குப் பாவம் டோராவும்...புஜ்ஜியும் தான் தெரியுது.கார்டூன் சேனல்கள் செய்வது சரியா...தவறான்னு கூட ஒரு பதிவு போடலாம் போல இருக்கே?அந்த ரேஞ்ச்ல போயிட்டு இருக்கு நம்ம பாரம்பர்ய மறக்கடிப்பு.
பேசமா இதை ஒரு விவாத பொருளா எடுத்துகிட்டு நாமலே ஒரு பதிவு போட்ட என்னான்னு யோசிச்சதுல தான் இந்த பதிவு வந்தது. சரி இப்போ நம்ம கார்டூன் சேனல்களைப் பற்றி யார் யாருக்கு எண்ணலாம் தோணுதோ அதை வந்து தெரிவிக்கலாம் இங்கே..அதற்க்கு பதில் சொல்றவங்களும் சொல்லலாம்..எதிர்ப்பு தெரிவிக்கரவங்களும் சொல்லலாம் .
19 comments:
யோசிச்சி பதில் சொல்ல நேரமின்மை தான் காரணம்.
கார்ட்டூன் மூலம் - ‘சில' நல்லதும் நடக்கத்தான் செய்கிறது ...
கார்ட்டூன் சேனல்கள் list ஒன்னு வெளியிடுங்க
பிறகு துவங்கிடுவோம் விவாத மேடைய
(இதற்கு மட்டும் comment moderation எடுத்துவிட்டா எளிதா இருக்கும்)
மார்கெட்டிங் மேனேஜ்மென்ட்ல பின்றீங்களேக்கா..
நேத்து பாப்பாவுக்கு லீவு எனக்கு ஆபிஸ்,ஆனா நானும் லீவு எதுக்கு பாப்பா கார்ட்டூன் சேனல் பாக்க,ஆனா பாருங்க நேத்து பார்னி வரலை, அதுனால அம்மாகிட்ட சொல்லிட்டா அப்பா ஒரே போர். டே கேர் போயிருந்தா ஐ ஷூட் ஹேவ் மோர் பன் அப்படின்னு.
உங்களுக்கு ஒரு கேள்வி. வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக்கில் பொருள் குற்றம் ஒன்று உண்டு. அது என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹாய் மிஸஸ்.டவுட்!
நான் அந்தப் போஸ்டை பார்த்தேன். உணமியில் அந்தப் பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேனேயொழிய, அதைப் பற்றிய அறிவு எனக்கு சுத்தமா கிடையாது!
//அந்த ரேஞ்ச்ல போயிட்டு இருக்கு நம்ம பாரம்பர்ய மறக்கடிப்பு//
அப்புறம், ராமாயணம், மகாபாரதம் எல்லாம் மித்! அதைப் பாரம்பரியம்னு என்னால ஒப்புக் கொள்ள முடியாது!
இது என் தனிப்பட்ட கருத்து! அதே சமயம், கண்டிப்பா பப்புவிற்கு இதை நான் சொல்லித்தர மாட்டேன், இதுதான் நம் கலாச்சாரம்-ன்னு! பாடத்துல வந்து, இல்ல அவ படிக்கறக் காலத்துல தேடிப்போய் படிச்சா, மறுக்க மாட்டேன்!
/*கார்ட்டூன் சேனல்கள் list ஒன்னு வெளியிடுங்க
பிறகு துவங்கிடுவோம் விவாத மேடைய */
ரிப்பீட்டு...
போகோ சேனல்ல வர்ற ஆஸ்வால்ட், தாமஸ் ட்ரைன், நாடி போன்ற கார்டூன்கள் குழந்தைகளுக்கு நல்லது. அதை காமிச்சு அவங்களை ஆற்றுப் படுத்த முடியுது. டோரா,புஜ்ஜியும் ஓகே.
ஆனா கார்டூன் நெட்வொர்க்கில் வரும் பீன், மற்ற சண்டை சம்பந்தமான கார்டூன்கள் அவங்க மனச மாத்துர மாதிரி தெரியுது. ஜெடெக்ஸ் எல்லாம் மோசம்.
கார்ட்டூன்கள் அவங்க மனச விசாலப் படுத்துறனால தேவை தான். ராமாயனம், அனுமான், கிருஷ்ணா, சோட்டா பீம்னு கலாசார கார்டூன்களும் தான் வருதே.
கார்டூன்கள் (வன்முறை எண்ணத்தை விதைக்காத) தேவையே குழந்தைகளுக்கு
உங்கள் பதிவுகள் மிக அருமையாக உள்ளது. உங்கள் எழுத்து நடை மிக அருமை.
வாழ்த்துக்கள். என் மின்னஞ்சல் முகவரி, உங்கள் பார்வைக்கு மட்டுமே..
almighty.is.all@gmail.com
//நட்புடன் ஜமால் said...
யோசிச்சி பதில் சொல்ல நேரமின்மை தான் காரணம்.
பரவாயில்லை ஜமால்.
கார்ட்டூன் மூலம் - ‘சில' நல்லதும் நடக்கத்தான் செய்கிறது ...
ஆமாம் உண்மை தான்.
சுட்டி டி.வியால் நிறைய குழந்தைகள் நல்ல தமிழில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்(உபயம்-டோரா,ஹீமேன்)
அபி அண்ட் எபியில் வனவிலங்குகள்...பறவைகள்...பாலைவனங்கள் என்று பல தரப் பட்ட பொது அறிவு சார்ந்த விவரங்கள் சொல்லப் படுகின்றன.
சுட்டிச் செய்திகளும் ஓகே தான்.
குளோரியாவின் வீடு தொடர்.அக்கம் பக்கம் நல்ல நட்பை வளர்த்துக் கொள்ள சொல்லித் தருகிறது.அதில் காட்டப் படும் இரண்டு குடும்பங்களும் அருமை.கதாபாத்திரங்களும் அருமை.பிரபு..கவிதா கதாபாத்திரங்களும் கூட அவர்கள் வயதுடைய(டீன்)வர்களுக்கு நல்லதொரு பாடத்தினையே சொல்லித்தருகின்றன.
உதாரணமாக கவிதா இத்தொடரில் ஒரு புத்திசாலி மாணவியாகவும்.அவளை விரும்பும் பிரபு ஒரு சராசரி மாணவனாக இருப்பினும் கவிதாவுக்காக அவனும் தன்னை புத்திசாலியாக மாற்றிக் கொள்ள விரும்புவதுமான காட்சி அமைப்புகள் ஓகே.
கார்ட்டூன் சேனல்கள் list ஒன்னு வெளியிடுங்க
பிறகு துவங்கிடுவோம் விவாத மேடைய
லிஸ்ட் ஏற்கனவே வெளியிட்டாகி விட்டதே.
(இதற்கு மட்டும் comment moderation எடுத்துவிட்டா எளிதா இருக்கும்)
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...
//narsim said...
மார்கெட்டிங் மேனேஜ்மென்ட்ல பின்றீங்களேக்கா..//
வாங்க நரசிம்...
இப்ப தான் முதல் தடவை இங்க உங்களைப் பார்க்கறேன்.
எப்படியோ ...வந்துட்டீங்க இல்ல ...அப்போ சரி தான்.
என்னது மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்ல பின்றனா...!
அட எனக்கு நிஜமாவே கூடை கூட பின்னத் தெரியாது (என்னைப் போய் இப்படிலாம் சொல்லலாமா?)
//குடுகுடுப்பை said...
நேத்து பாப்பாவுக்கு லீவு எனக்கு ஆபிஸ்,ஆனா நானும் லீவு எதுக்கு பாப்பா கார்ட்டூன் சேனல் பாக்க,ஆனா பாருங்க நேத்து பார்னி வரலை, அதுனால அம்மாகிட்ட சொல்லிட்டா அப்பா ஒரே போர். டே கேர் போயிருந்தா ஐ ஷூட் ஹேவ் மோர் பன் அப்படின்னு.
//
நல்ல பாப்பா தான்...குடுகுடுப்பை அண்ணா ...பாப்பாவை சந்தோசப் படுத்த...உற்சாகப் படுத்த நீங்க புதுசு...புதுசா ஏதாவது கேம்ஸ் கத்துகோங்களேன். why டோண்ட் u ட்ரை ? ஒயிலாட்டம்...மயிலாட்டம்? தேவராட்டம்? கிண்டல் இல்லை...நிஜமாத்தான் சொல்றேன்.இந்தக் கலைகள் நம்ம தமிழர் பாரம்பர்யக் கலைகள் இல்லையா?(அட்லீஸ்ட் சி.டி. லயாச்சும் போட்டுக் காண்பிங்க?!
// dondu(#11168674346665545885) said...
உங்களுக்கு ஒரு கேள்வி. வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக்கில் பொருள் குற்றம் ஒன்று உண்டு. அது என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாங்க டோண்டு அய்யா...
இந்தக் கேள்விக்கு பதில் இன்னும் தேடிட்டு தான் இருக்கேன்.எங்கயாவது பதில் கிடைக்கும்...கிடைத்ததும் சொல்றேன்.
//சந்தனமுல்லை said...
ஹாய் மிஸஸ்.டவுட்!
நான் அந்தப் போஸ்டை பார்த்தேன். உணமியில் அந்தப் பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேனேயொழிய, அதைப் பற்றிய அறிவு எனக்கு சுத்தமா கிடையாது!
அதனால என்ன இப்போ இந்த போஸ்ட் வழியா தெரிஞ்சிகோங்க முல்லை.
//அந்த ரேஞ்ச்ல போயிட்டு இருக்கு நம்ம பாரம்பர்ய மறக்கடிப்பு//
அப்புறம், ராமாயணம், மகாபாரதம் எல்லாம் மித்! அதைப் பாரம்பரியம்னு என்னால ஒப்புக் கொள்ள முடியாது!
இது என் தனிப்பட்ட கருத்து!
உங்கள் தனிப்பட்ட கருத்துக்கு மதிப்பளிக்கப் படுகிறது,ராமாயணம்...மகாபாரதம் மித் தான் .ஆனால் அதை பாரம்பரியம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வதாம்?
பாரம்பர்யம் என்றால் என்ன? பரம்பரை என்ற வார்த்தைக்கும் பாரம்பர்யாத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?! ஹோமரின் "இலியட்...ஒடிசி போல தமிழில் "ராமாயணமும்...பாரதமும் "இதில் நாம் மறுக்கும் ...ஏற்றுக் கொள்ள தேவையற்ற பல விஷயங்கள் இருந்தாலும் நல்ல விசயங்களும் நிறையவே உண்டு.தேடிப் பார்த்தால் தெரிய வரும்.(நல்ல விசயங்களை நாம் தானே தேடி கற்க வேண்டும்) கைகேயி .தசரதர் கணவன் மனைவி உறவு சித்தரிக்கப் பட்ட விதம் போரில் தன் கணவருக்கு சரி பாதியாக நின்று அப்பெண்மணி உதவி இருக்கிறார்.
ராமனின் செயல்கள் குறித்து ஆயிரம் விவாதங்கள் இருக்கலாம்.ஆனாலும் கற்றுக் கொள்ள விசயமும் இருக்கிறது அங்கே(குகனோடு ஐவரானோம்)
இங்கே அவர் ஒரு வேடுவனை தன் உடன் பிறந்தானைப் போல ஏற்றுக் கொள்கிறாராம்.கூடவே அடுத்து சுக்ரீவனையும் அப்படியே ...ஆகா மொத்தத்தில் அடிப்படையில் ஒற்றுமையின் தேவை இங்கே உணர்த்தப் படுகிறது,(ராமனின் பரந்த மனப்பான்மை என்று இதை எடுத்துக் கொள்ளத் தேவையே இல்லை...அவனுக்கு இவர்களின் உதவி தேவை அதனால் அப்படி என்று பொருள் கொள்ளலாம்,)இதை ஒரு கற்பனைக் கதை என்று பாராமல்...அதில் வரும் எல்லா விசயங்களையும் வாழ்வோடு பொருத்திப் பாருங்கள் பல புதிய கோணங்கள் கிடைக்கும் ராமாயணம் பற்றி.
மித் என்பது கற்பனைகதை என்று வைத்துக் கொண்டால்...கர்ண பரம்பரைக் கதைகளும் அப்படிப் பட்டவையே...அவையெல்லாம் நமது பாரம்பர்யத்துடன் சம்பந்தப்படவில்லையா?
அதே சமயம், கண்டிப்பா பப்புவிற்கு இதை நான் சொல்லித்தர மாட்டேன், இதுதான் நம் கலாச்சாரம்-ன்னு! பாடத்துல வந்து, இல்ல அவ படிக்கறக் காலத்துல தேடிப்போய் படிச்சா, மறுக்க மாட்டேன்!
எதையும் யாரிடத்திலும் அது குழந்தையாக இருந்தாலும் கூட திணிப்பது சாத்தியமே இல்லை .பாப்புவோ இல்லை பப்புவோ அவர்கள் விரும்பினால் மட்டுமே மித் ஆனாலும் சரி ...பாரம்பர்யம் ஆனாலும் சரி அவர்கள் அதை தேடிப் போய் கற்றுக் கொள்வார்கள்.ஆனால் எல்லாவற்றையும் அப்படி தேடிப் போய் கற்றுக் கொள்ளட்டும் என்று விட்டு விட முடியாதே.இந்தக் கதைகள் அவர்களது கற்பனை வளத்தை ஒருவேளை விரிவடையச் செய்யலாம்! ராமாயண புஷ்பக விமானம் தான் இன்றைய நமது உலோக விமானங்கள் கண்டுபிடிக்கப் படக் காரணமாக இருந்தனவோ ? என்ற எண்ணம் பரவலாக உண்டு.
கும்ப கர்ணனின் செஞ்சோற்றுக் கடன் உணர்வு
ஹனுமனின் பக்தி
தசரதனின் பொறுப்பு மிக்க தந்தை பாசம்(தன் காதோரம் ஒரு முடி நரைத்ததும் மகனுக்குப் பட்டம் கட்ட நினைத்த அற்புதமான தகப்பன் அல்லவா அவர்?!)
லக்குமணனின் பிரதிபலன் கருதா தொண்டு (எத்தனை தம்பிகள் இப்படி இருக்க முடியும்?)
பரதனின் குற்ற உணர்வு
சீதையின் தவறுகள் (லக்குவன் அறிவுறுத்தியும் பின்விளைவு பற்றி யோசியாமல் அவள் மாயமான் மீது கொண்ட ஆசையே ராம ...ராவண யுத்தத்திற்கு காரணமானது) யோசியாமல் எதையும் செய்யத் தகாது என்ற பாடத்தை சீதை மூலம் நாம் கற்றுக் கொள்ளலாம்.
வாலி வதை மூலமாக எவ்வளவு பலசாலியும் தான் செய்த தவறுக்குத் தக்க நேரடியாகவோ..மறைமுகமாகவோ தண்டிக்கப் படுவான் என்பதை அறியலாம்.சூழ்நிலைகளோடு பொருத்திப் பார்த்தால் ராமனின் செயல் சரியாக்கப் பட்டு விடும் வாய்ப்பு நிறைய உண்டு இங்கே.
இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
சரி இனி உங்கள் பதிலுக்கு வரலாம்.
"எல்லாமும் பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் வலுவான எண்ணம்.
பாப்புவுக்கு நான் பாசிடிவ்வாக எல்லாவற்றையும் கூடுமானவரை விளக்கிச் சொல்வதுண்டு அவளுக்குப் பிடிக்கும்வகையில்(வரையில்)
இதில் மனிதர்க்கு மனிதர் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்.
"அவரவர் கருத்து அவரவர்க்கே"
//முரளிகண்ணன் said...
போகோ சேனல்ல வர்ற ஆஸ்வால்ட், தாமஸ் ட்ரைன், நாடி போன்ற கார்டூன்கள் குழந்தைகளுக்கு நல்லது. அதை காமிச்சு அவங்களை ஆற்றுப் படுத்த முடியுது. டோரா,புஜ்ஜியும் ஓகே.
ஆனா கார்டூன் நெட்வொர்க்கில் வரும் பீன், மற்ற சண்டை சம்பந்தமான கார்டூன்கள் அவங்க மனச மாத்துர மாதிரி தெரியுது. ஜெடெக்ஸ் எல்லாம் மோசம்.
கார்ட்டூன்கள் அவங்க மனச விசாலப் படுத்துறனால தேவை தான். ராமாயனம், அனுமான், கிருஷ்ணா, சோட்டா பீம்னு கலாசார கார்டூன்களும் தான் வருதே.
கார்டூன்கள் (வன்முறை எண்ணத்தை விதைக்காத) தேவையே குழந்தைகளுக்கு//
உங்களது இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியது.நிச்சயமாக இப்படிப் பட்ட கார்ட்டூன்கள் குழந்தைகளுக்கு நன்மையே செய்கின்றன.வன்முறை தூண்டப் படாத...கல்மிஷம் இல்லாத தொடர்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு ஏற்றவையே .
//ராஜேஷ், திருச்சி said...
உங்கள் பதிவுகள் மிக அருமையாக உள்ளது. உங்கள் எழுத்து நடை மிக அருமை.
வாழ்த்துக்கள். என் மின்னஞ்சல் முகவரி, உங்கள் பார்வைக்கு மட்டுமே..
almighty.is.all@gmail.com//
நன்றி ராஜேஷ்
எனக்கு இந்த பதிவு வந்ததே தெரியாது..
மின் அஞ்சலாவது அனுப்ப்பியிருக்கலாம்
//செந்தழல் ரவி said...
எனக்கு இந்த பதிவு வந்ததே தெரியாது..
மின் அஞ்சலாவது அனுப்ப்பியிருக்கலாம்//
உங்களது மின்னஞ்சல் முகவரி எனக்கெப்படி தெரிய முடியும் நீங்கள் சொல்லாமல் ?
அப்புறம் இன்னொரு விஷயம் "பாலோயர்ஸ் லிஸ்ட்டில் உங்கள் பெயரும்இருக்கிறதே...எப்படி இந்தப் பதிவை பார்க்காமல் போனீர்கள்?
Post a Comment