இந்தப் படத்தை நல்லா பார்த்துக்கோங்க முதல்ல ...!
பின்னாடியே ஒரு டெஸ்ட் இருக்கு ...எத்தனை பேர் சரியா ஆன்சர் பண்றீங்கன்னு பார்க்கலாம்?!இது ரவி வர்மா painting அது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்,அதில்லை இப்போ கேள்வி;
இந்தப் பதிவை வாசிக்கறவங்க யாரா இருந்தாலும் சரி ,பொறுமையா கீழே பின்தொடரும் எல்லாப் புடவை படங்களையும் பார்த்துட்டு கடைசியா இங்க கேட்கப் படற கேள்விக்கும் சற்றேறக்குறைய சரியான பதிலை சொல்ல ட்ரை பண்ணிட்டுப் போங்க ...எத்தனை பேருக்கு புடவை நாலேட்ஜ் இருக்குன்னு தான் பார்த்துடுவோமே .
சரியான பதில் சொல்றவங்களுக்கு கண்டிப்பா விருது உண்டு,
அதனால எல்லாரும் வந்து கலந்துகிட்டு விருது வாங்கிட்டு போங்க.
ரெடி ...
ஸ்டார்ட் ;
௧
௨
௩
........................;
இது நம்ம பெங்காளிகள் புடவை ஸ்டைல்!
இது அஸ்ஸாமிகள் புடவை கட்டற ஸ்டைல்!
இது தீர்த்தா புடவை கட்டற ஸ்டைல்லாம் !
இது ஒரிஸ்ஸா...
இது மகாராஸ்டிர ஸ்டைல்லாம் ...
இது குஜராத்தி புடவைக்கட்டாமுங்க!
இது ராஜபுத்திர பெண்கள் புடவை கட்டும் ஸ்டைல் ...இவங்க புடவையை விட நகைகள் தான் வெயிட் ஜாஸ்தி இருக்கும் போல?
இந்த ஸ்டைல் இலங்கை பாரம்பரிய ஸ்டைல் புடவைக் கட்டாம்.இவங்க யாருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சே இருக்கும்...மதிப்பிற்குரிய இந்த முன்னாள் பிரசிடென்ட் பத்தி தகவல் ஒன்னும் காணோமே இப்போலாம்? ஏன்?
இது மத்திய இந்தியா ஸ்டைல்(தக்காணம்னு கூட சொல்லலாம்! பீகார் தக்காணத்துல சேருமோ?மத்தியப் பிரதேசம்னும் சொல்லலாமுங்க...)
இது ஒரிஜினல் மடிசார்...
நம்ம தமிழ்நாட்டுல புடவை ஸ்டைல் எக்கசக்கமா இருக்கு ,வீட்டுக்கு வீடு ஒரு ஸ்டைல் இல்ல பாலோ பண்ணுவோம் நம்ம எல்லாம்?!பின் கொசுவம்...முன்கொசுவம்...எட்டு ப்ளீட்ஸ்...மடிசார்னு இங்க ஏகப்பட்ட வரைட்டி உண்டே!
இப்போ முதல்ல சொன்ன பாயின்ட்டுக்கே போகலாம் .
இது கேள்வி நேரம் .
முதல்ல பார்த்த ரவி வர்மா படத்துல மொத்தம் பதினோரு பெண்கள் பதினோரு விதமா புடவை கட்டிட்டு இருக்காங்க ...ஓகே இப்போ சொல்லுங்க ,
எந்தப் பெண் எந்த மாநில ஸ்டைல் ல புடவை கட்டி இருக்காங்கனு...யார் யார் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவங்கன்னு இதுல இருந்தும் தெரிஞ்சிக்கலாம் இல்லையா?
இதானே நம்ம கலாச்சாரம்"வேற்றுமையில் ஒற்றுமை"
சரி இப்போ எத்தனை பேர் போட்டில கலந்துகிட்டு சரியான பதிலை சொல்லி கலைமாமணி மாதிரி "கலாச்சார மாமணி விருது" வாங்கப் போறீங்கனு பார்க்கலாம்.
14 comments:
\\"ஸ்டைலு...ஸ்டைலு...தான்;இது சூப்பர் ஸ்டைலு தான்...!"\\
ஸ்டைலாதான் இருக்கு பதிவே ...
நல்ல கலெக்ஷன்!
\\.ஓகே இப்போ சொல்லுங்க ,எந்தப் பெண் எந்த மாநில ஸ்டைல் ல புடவை கட்டி இருக்காங்கனு\\
அப்ப எனக்கு வேலையில்லை ...
ரொம்ப கஷ்டமான கேள்வி. புடவை எது, தாவணி எது என்று கேட்டால் கரெக்டாக சொல்லிவிடுவேன்
:-))
// முரளிகண்ணன் said...
ரொம்ப கஷ்டமான கேள்வி. புடவை எது, தாவணி எது என்று கேட்டால் கரெக்டாக சொல்லிவிடுவேன்
//
Training எடுத்திருப்பார் போல!!
சூப்பரான பதிவுங்க டவுட் ஸாரி ஸாரி மிஸ்சஸ் டவுட் :)
புடவை கலெக்ஷன் நல்லா இருந்தது
உள்நாட்டியேலேயே இத்தனை ரகங்களா
மொழிகளால் வேறுபட்டாலும் புடவையால் ஒன்று கூடுவோம் ...
கி கி கி
Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.
http://www.focuslanka.com
இது ரவி வர்மா painting அது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்//
குடுகுடுப்பைன்னு ஒருத்தரு இருக்கறது மறந்திட்டிங்களே டவுட்டு
ஒரு விடை மட்டும் சொல்றேன்,இந்த எல்லா அம்மினிகளையும் சாஜகான் மாதிரி ஒருத்தரே கல்யாணம் கட்டிருந்தாருன்னா அவரு வேட்டி இல்லாம இருப்பாருங் அதுதாங்க நமக்கு தெரிஞ்ச பதிலு
//நட்புடன் ஜமால்
சந்தனமுல்லை
அபிஅப்பா
முரளிகண்ணன்
பூர்ணிமா சரண்
நிலா பிரியன்
குடுகுடுப்பை அண்ணாச்சி
வருகை தந்து கருத்து சொன்ன எல்லாருக்கும் நன்றிங்க
வீணை மாதிரி வாத்யம் வச்சிருக்கிறவங்க கேரளா பக்கம்; வயலின் வாசிக்கறவங்க தமிழ்நாடு. மத்த மாமிங்க ஊரு யூகிக்க கஷ்டமா இருக்கு.. (பதில் சொன்ன 2 புடவைக்கட்டும் கூட டவுட் தான்.)
Post a Comment