Monday, July 18, 2011

Sweet Moments 4 : ( எம்பொண்ணாக்கும் ...)

Sweet Moments 4 : ( எம்பொண்ணாக்கும் ...)

இன்னைக்கு எம் பொண்ணுக்கு செகண்ட் யூனிட் டெஸ்ட் ஆரம்பம் ,முதல் நாள் மேத்ஸ் டெஸ்ட் ,நேத்து நல்லா Revisionபண்ணிட்டா ,டெஸ்ட் எழுத சொல்லி கரெக்சன் பண்ணி முடிச்சதும் எனக்கு திருப்தியா இருந்தது,எல்லாத்தையும் விட காலைல குளிச்சு கிளம்பினதும் வேன் க்கு போறதுக்கு முன்னால அம்மா ,அப்பா இங்க வாங்கன்னு கூப்ட்டா . "டைம் ஆச்சு ஹரிணி வேன் வந்துடும் சீக்ரம் வா "ன்னு கத்திட்டு இருந்தேன் நான்.காலை நேர டென்சன் !

"இரும்மா வரேன் ..அப்பா ப்ளீஸ் சீக்கரம் வந்து அம்மா கிட்ட நில்லுங்களேன்ப்பா"

"என்னடி குட்டி இது இந்நேரம் விளையாடிட்டு இருக்க ,இங்க வா நான் கீழ போறேன் TIME ஆச்சு ."

"இரேன்ம்மா ..."

அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு தேவ் இடம் போய் அவரது கையைப் பிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து என் அருகில் நிற்க வைத்தாள். தேவ் என்னவோ ரிபோர்ட் அனுப்பிக் கொண்டிருந்தார் அவரது ஹெட் ஆபிசுக்கு .அந்த டென்சன் அவருக்கு .

"என்னடா இப்டி பண்ற ஸ்கூல் க்கு கிளம்பற நேரத்துல என்ன விளையாட்டு இது? " - மனமில்லாமல் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார் .

ஒருவழியாக நாங்கள் சேர்ந்து வந்து அவள் முன் நின்றதும் ;

ஹரிணியின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .

எங்க தீபா மிஸ் EXAM DAY அன்னைக்கு பேரன்ட்ஸ் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்க , என்ன Bless பண்ணுங்கம்மா ,Bless பண்ணுங்க டாடி .

ஹேய் ...குட்டி என்னடா இது ! எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.

"ஹே குட்டி இதெல்லாமா உங்க மிஸ் சொல்லித் தராங்க ,நல்ல மிஸ் தாண்டா .... " சிரித்துக் கொண்டே மகளிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்த பார்வை சொன்னது ,

"எம்பொண்ணாக்கும்! "

ஐயே ...நல்ல அப்பா நல்ல பொண்ணு ரொம்பத் தான் அலம்பல். :)))

3 comments:

அன்புடன் அருணா said...

A bouqet!

தமிழரசி said...

நெகிழ்ச்சி..படிக்கும் போதே நினைச்சேன் அவ படுசுட்டியாச்சே கார்த்திக்கா என்ன என்பொண்ணாக்குமுன்னு சொல்றாங்க அவ அப்பா பொண்ணாச்சேன்னு..படிச்சதும் தான் தெரிந்தது அவ அப்பா பொண்ணே தான்னு....அத்தையின் முத்தங்கள் அம்முகுட்டிக்கு..

KarthigaVasudevan said...

@ அன்புடன் அருணா
பூங்கொத்துக்கு நன்றி அருணா

@ தமிழரசி
அவ அப்பா பொண்ணே தான் தமிழரசி,தமிழ் அத்தையின் விசாரிப்பை சொல்லிடறேன் அவளுக்கு :))