//The childhood shows the manAs morning shows the day.~John Milton, Paradise Regained//
// If you carry your childhood with you, you never become older. ~Tom Stoppard//
குழந்தையாகவே இருந்திருக்கலாம்
அம்மாவின் முந்தானையை விடாது பற்றிக் கொண்டு
அப்பாவின் தோள் சவாரி எனக்கு தான் முதல் என்று
தம்பி தங்கைகளிடம் போட்டி போட்டுக் கொண்டு
நானும் வருவேன் என்று முந்திரிகொட்டையாய் வயலுக்கு ஓடி
பாட்டியோடு தூக்குப் போணி மூடியில்
பிடிப் பிடியாய் பப்பு புவ்வா சாப்பிட்டுக் கொண்டு
சுண்டு விரல் பிடித்து
மிளகாய் களத்துக்கும் வரப்பு மேட்டுக்குமாய்
தாத்தாவோடு தோட்டம் அளந்து கொண்டு
பெரிய கேரியர் வைத்த சைக்கிளில்
மாமாக்களோடு சர்கஸ் பார்க்கப் போய்க் கொண்டு
சித்தியோடும் அத்தைகளோடும் வாயாடிக் கொண்டு
தாயமும் பல்லாங்குழியும் கலைத்துக் போட்டு
கூட இரண்டு கொட்டுகளை உபரியாய் வாங்கி
திண்ணையில் உட்கார்ந்து அழுது கொண்டு
அழுத கண்ணீர் காயும் முன்னே
ஊர்ப் பிள்ளைகளோடு தெருமுக்கு காலி இடத்தில்
பாண்டி ஆடிக் கொண்டு பட்டம் விட்டுக் கொண்டு
கிட்டிப் புள் கோலால் தெருவளந்து ஊர்அளந்து
உத்தமக் கண்ணன் கோயில் மார்கழி பிரசாத கியூக்களில்
ராஜியோடும் பாமாவோடும் டூ விட்டுக் கொண்டு
டூ விட்டு டூ விட்டு பழம் விட்ட வாழ்க்கை
ருசியாகத்தான் இருந்தது ... இருக்கிறது
இன்னும் நாக்கின் அடியில் இனிக்கும் தேனாய்
மனம் எங்கும் அந்த நாட்கள் .
நூலறுந்த பட்டங்களாய்
வாலறுந்த தும்பிகளாய் ...

//Old age lives minutes slowly, hours quickly; childhood chews hours and swallows minutes. ~Malcolm de Chazal //
4 comments:
ரசணை...
தித்திக்கும் இந்த நினைவுகள் , ஆழமான உறக்கத்தில் கனவுகளை ஏக்கமாய் விதைக்கின்றன. சிறு பிள்ளை பிராயத்திற்கு காற்றிலே பறக்கும் உலர்ந்த சறுகு என கனவுகளின் தோள் மீது ஏறிச் செல்லுவதும் இனிமை. நினைவூட்டலுக்கு நன்றி.
தம்பி தங்கைகளிடம் போட்டி போட்டுக் கொண்டு
வீட்டுக்கு மூத்தவகளோ,
இன்னும் நாக்கின் அடியில் இனிக்கும் தேனாய்
no expiry date :)
நன்றி கவிதை வீதி சௌந்தர் :)
நன்றி சாகம்பரி :)
நன்றி ஜமால் :)
Post a Comment