ஓவியர் பெனிட்டா - தனது நண்பர் வீட்டில் பார்த்த "Handmade in india " என்ற புத்தகம் பற்றி சென்ற வார விகனில் 'வாங்கிய பொருள்' எனும் தலைப்பில் கூறி இருந்தார்.
சிலைக்கு சுவாமி மலை பிரசித்தி என்பது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பூர்வீகம் இருக்கும்,அப்படி இந்தியா முழுதும் பாரம்பரிய முக்கியத்துவம் உள்ள பொருட்களை,அந்தப் பொருட்களுக்கான பூர்வீக இடங்களில் எப்படித் தயாரிக்கிறார்கள்,அவை எங்கெங்கே கிடைக்கும் என்ற வரைபடங்களுடன் அந்தப் புத்தகத்தில் இருக்கிறதாம் .
புத்தகத்தின் விலை ரூ 3 ,700 .
அந்தப் புத்தகத்தை தேடிப் பிடித்து வாங்கிப் படித்த பிறகு தான் தன்னால் அடுத்த வேலையைப் பார்க்க முடிந்ததென்று பெனிட்டா கூறி இருந்தார், அவர் கூறி இருந்ததைப் படித்ததில் இருந்து எனக்கும் கூட அந்தப் புத்தகத்தை உடனே வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகமிருக்கிறது தான். ஆனால் புத்தகக் கண்காட்சிக்கு வாங்கப் போகும் மொத்தப் புத்தகங்களின் அடக்க விலையே 1500 க்கு மேல் தாண்டக் கூடாதென்று கடந்த பல நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்யலாம்?!
"சொல்வதைக் கேள் மனமே கேள். வேண்டாம் இந்தப் புத்தக ஆசை " என்று எஸ்கேப் ஆக வேண்டியது தான்.
முதலில் இந்தப் புத்தகம் எந்தப் பதிப்பகத்தில் கிடைக்கும் எனத் தெரியவில்லை. விருப்பமிருப்பவர்கள் வாங்கிப் படிக்கலாம் . மிகப் பயனுள்ள சுவாரஸ்யமான புத்தகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment