1.
கடிகார பெண்டுலமாய்
அலைவுறும் கனவுகளுக்குள்
முங்கி நீந்துகையில்
காற்றுக் குமிழிகளாய்
வெளியேறும் நிஜங்களை
கண்ணால் துழாவியவாறு
மெல்ல நழுவி
உந்தி எழ விழைகையில் எல்லாம்
காலிடறின தாமரைக் கொடிகளாய்
கடந்தும் கடக்கவியலா
இகபர அக்கப்போர்கள் ...
இன்னும் ஒரு பிறவி!
2.
ஒரு விரல் தேடும் அலுப்பு
பதிவான மூளை செல்கள்
செல்லரித்து சிதறும் முன்
மரணம் .
5 comments:
குடுகுடுப்பை மேடைக்கு வரவும்
தாம்பத்யம்!
இன்னிக்கும் நேத்திக்கும்
போட்ட சண்ட மறக்கனும்
புள்ள பொறந்தாலும் பரவால்ல....
// நசரேயன் said...
குடுகுடுப்பை மேடைக்கு வரவும்//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
//
கடந்தும் கடக்கவியலா
இகபர அக்கப்போர்கள் ...
இன்னும் ஒரு பிறவி!
//
பிறவி என்பதே இது தானே? :))
//
உந்தி எழ விளைகையில் எல்லாம்
//
விழைகையில்??
Post a Comment