Wednesday, September 16, 2009

கண்ணில் மழை...சூன்யம்...குருவியாய்ப் பிற...லயிப்பு(கவிதைகள்)


1
தங்கக் கடுக்கனும்
தவிட்டு நிற
முண்டா பனியனும்
மஞ்சள் பையும்
மட்டுறுத்தப் படாத கோவணமுமாய்
வாழ்ந்து முடிந்து விட்ட தாத்தாவுக்கு
பாடையில் வைத்துக் கட்டப் பட்டது
வெறும் வாக்கிங் ஸ்டிக் மட்டுமே !!!
பாட்டிக்கும் வருத்தமோ
என்னைப் போலவே!
சாம்பல் ஆற்றிய பொழுதில்
விரல்களில் இடறிய
பித்தளைப் பூண் பார்த்து
கண்ணில் மழை !

2

சாங்கோ பாங்கமாய்
பூரண விளக்கமாய்
சட்டி உடைப்பதாய்
சுட்டிக் காட்டி
விளக்கப் படவேயில்லையோ
எங்கேயும்... எப்போதும் ...
தாம்பத்யம் ?!
யாகாவராயினும் நா காக்க
காவாக்கால்
குடும்பநல கோர்ட்டில்
சொல்லிழுக்குப் பட்டு
சொந்த செலவில் சூனியம் தேடுக ...

3

சிட்டுக் குருவியின்
முறி சிறகேறி
பட்டுத் தலையில்
மெல்லக் குட்டி
விட்டு விடுதலை ஆவதெப்படி?
விளக்கம் கேட்டால்
விருட்டென்று பறந்தது
எம்பி எழுந்து ;
உதறி விழுந்தேன்
உதிர் மணல் போலே ...
உதற முடியுமோ ?
குருவியல்லால் ...
குருவியாய்ப் பிற!

4

நேற்றும்
இன்றும்
நாளையுமான
யோசனைகளைப்
பிய்த்துப் போட்டு விட்டு
கொஞ்சம் இளைப்பாறவே
அண்ணாந்து பார்க்கிறேன்
ஆகாய விமானத்தை ...
என்னை மறந்த நான்
லயித்தல் சுகம் .

11 comments:

சந்தனமுல்லை said...

வாவ்..அசத்தல்ங்க!!

அது சரி(18185106603874041862) said...

//
உதற முடியுமோ ?
குருவியல்லால் ...
குருவியாய்ப் பிற!
//

இது ரொம்ப நல்லாருக்கு...

அது சரி(18185106603874041862) said...

ஒரே பால்ல ச்சே ஒரே நாள்ல ஃபோரா?? :0))

பித்தனின் வாக்கு said...

ரொம்ப நல்லா இருக்கு, இந்த புதுக்கவிதைகளில் தமிழ் பாடத்தில் வர்ர மாதிரி விளக்கவுரையும் கீல எளுதுனா என்னை மாதிரி டியுப்லைட்டுக்கும் நல்லா புரியும்.

Several tips said...

நல்ல பிளாக்

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு..



அன்புடன்,

அம்மு.

Chandravathanaa said...

ம்... நன்றாக இருக்கிறது.

அது சரி(18185106603874041862) said...

கடைக்கு லீவ் விட்டுட்டூங்களா?? ரொம்ப நாளா திறக்க எதுவும் எழுதலையே???

அது சரி(18185106603874041862) said...

கடை உரிமையாளர் எங்கிருந்தாலும் உடனே கடையை திறக்கவும் :0)

அது சரி(18185106603874041862) said...

என்னப்பா...இது....இனிமே இந்தக் கடையை திறக்கிற மாதிரி இல்லியா...நெம்ப நாளா மூடியிருக்கே....

நேசமித்ரன் said...

நல்லாருக்குங்க