Thursday, August 6, 2009

பலூன்களும்...கனவுகளும்



பலூன்கள்


உடைபடும்


நேரத்தில்


கனவுகள்


கலைக்கப் படுகையில்


சர்ரென்று சீறிடும்


கோபத்தின் ஆயுள்


அடுத்த பலூன்


ஊதப்படும் வரையோ ?!


உடைக்கப் படுதலும்


ஊதப்படுதலுமாய்


நகர்கின்றன கனவுகள்


பலூன்களை நோக்கி...!

8 comments:

நட்புடன் ஜமால் said...

போன கவிதைக்கும் இதற்கும் ஒரு தொடர்பு உள்ளது போல் இருக்கு.

நல்ல கனவுகள் ...

ராமலக்ஷ்மி said...

//உடைக்கப் படுதலும்

ஊதப்படுதலுமாய்

நகர்கின்றன கனவுகள்

பலூன்களை நோக்கி...!//

உண்மைதான். அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் மிஸஸ் டவுட்!

nila said...

யதார்த்தம்

அது சரி(18185106603874041862) said...

//
உடைக்கப் படுதலும்
ஊதப்படுதலுமாய்
நகர்கின்றன கனவுகள்
பலூன்களை நோக்கி...!
//

நல்லாருக்கு...உடைந்து போவதற்காகவே ஊதப்படுகின்றனவா என்று எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம்!

(அப்பிடியே நம்ம கடைப்பக்கமும் வந்துட்டு போறது? :0))

அமுதா said...

/*கோபத்தின் ஆயுள்
அடுத்த பலூன்
ஊதப்படும் வரையோ*/
:-)... பலூன் கோபம்

/*உடைக்கப் படுதலும்
ஊதப்படுதலுமாய்
நகர்கின்றன கனவுகள்
பலூன்களை நோக்கி...!*/
அருமை

சந்தனமுல்லை said...

//உடைக்கப் படுதலும்
ஊதப்படுதலுமாய்
நகர்கின்றன கனவுகள்
பலூன்களை நோக்கி...!//

:-) நல்லாருக்கு கவிதை!!

Saranya said...

Nice!
your thoughts through balloons...

Unknown said...

என்ன சொல்ல வர்றீங்கங்கறத கொஞ்சம் நேரடியாவே சொல்லலாமே? எதுக்கு கிசுகிசு மாதிரி? இந்தக் கவிதைய படிச்சு அர்த்தம் புரியறதுக்கு விகடன் இதைப் படிக்காதீங்கவே தேவல போலருக்கு.