வீதிப் புழுதி
வீட்டுச் சுவர் போர்த்த
பிஞ்சுக் கை அதில்
கொஞ்சிக் கொண்டு கோலமிட
விரலிடுக்கில்
சலவைத் தண்ணீர்
பிசு பிசுத்துக் கச கசக்க
பிய்த்துக் கொண்டு ஓட முயலும்
கொடிக் கயிற்றோடு
சலியாமல் சலித்து
பெண்ணின் கை
மல்லுக்கட்டவெளிவாசல்
திண்ணையோரம்
சட சடக்கும்
பட படப்புடன்
வந்திடுமே ஆ....!!!
( விடுபட்டது ஒரே ஒரு எழுத்து தான் அதை நீங்களே சரியாக நிரப்புங்கள் பார்க்கலாம்?!)
8 comments:
சை
Mazhai:0)
ண்
கவிதை அழகு. ஆ____, நீங்களே சொல்லிடுங்கள்:)!
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
எதைப்போட்டாலும் முற்றுப் பெறலைங்க, நீங்களே சொல்லிடுங்க அந்த ஒத்த வார்த்தைய.
நன்றி ஜமால்
ஆசை தவறான பதில்
மழை இல்லை வல்லிம்மா ...அதில்லை பதில்
குடுகுடுப்பை அண்ணா நீங்க எப்போ சரியான பதில் சொல்லியிருக்கிங்க வழக்கம் போல தவறு .
இப்போ சொல்லிடறேன் ராமலக்ஷ்மி மேடம்
என்ன அமித்துஅம்மா உங்களுக்குமா பதில் கிடைக்கலை ?
அது ஒன்னும் கம்ப சூத்திரம் இல்லை .
நான் கவிதையில் சொல்ல வந்தது "ஆடி " மாதத்தின் வருகையை .
ஆகா மொத்தம் "ஆடி " தான் சரியான பதில்
சொன்னா நம்பவா போறீங்க!!! கடைசி வரி படித்ததும் ஆடி என்று தோன்றிவிட்டது.லேட்டா வந்ததால உங்க பாராட்டை இழந்துட்டேன் :(
Post a Comment