Friday, April 17, 2009

"வாழிய விடியல்...வாழிய கதிரோன் "


உள்ளுக்கும் வெளிக்கும்

முயங்கித் தயங்கி

தட்டுத் தடுமாறி

வட்டத்துள் உழலும்

வாட்டம் பறித்து

முக்காலும் மறந்து

ஓடிப் பறந்து

நகர்ந்து முகர்ந்து

மறைந்து தெளிந்து

சட்டென்று மூச்சிரைக்க

நட்டநடு தீவில் நின்றும்

நவரசம் மறக்கா

சித்திரச் சிற்றாடை

துவளத் தழுவும்

பன்னெடும் திக்கில்

செங்கதிர் பரவல்

வாழிய விடியல்

வாழிய கதிரோன் ...

6 comments:

அபி அப்பா said...

முடியல வேண்டாம் விட்டுடு அழுதுடுவேன்!!:-((


நல்லா இருக்குப்ப்பா கவிதை!

ராமலக்ஷ்மி said...

//வாழிய விடியல்.. வாழிய கதிரோன்!//

வார்த்தைகளின் குவியல்
வாழிய கவிதை!

வாழ்த்துக்கள் மிஸஸ்.வாசுதேவன்:)!

பழமைபேசி said...

//சட்டென்று மூச்சிரைக்க//

யாருக்கு மூச்சிரைக்குது? விளங்கலை?!

புதியவன் said...

//நட்டநடு தீவில் நின்றும்

நவரசம் மறக்கா

சித்திரச் சிற்றாடை

துவளத் தழுவும்

பன்னெடும் திக்கில்//

வார்த்தைகள் வியக்க வைக்கின்றன...

Anonymous said...

விடியலுக்கான விவரிப்பா?! நல்லாவே இருக்குங்க!

அது சரி said...

//
உள்ளுக்கும் வெளிக்கும்

முயங்கித் தயங்கி

தட்டுத் தடுமாறி

வட்டத்துள் உழலும்

வாட்டம் பறித்து

முக்காலும் மறந்து

ஓடிப் பறந்து

நகர்ந்து முகர்ந்து

மறைந்து தெளிந்து

சட்டென்று மூச்சிரைக்க
//

வாழ்க்கையை வார்த்தைகள்ல அழகா சொல்லிட்டீங்க!

உங்க எல்லாக் கவிதையிலேயும் எதுகை மோனை அழகா அமையுது...நீங்க எதுனா தமிழ் டீச்சரா??

(நீங்க ஏன் தமிழிஷ்ல இணைப்பதில்லை??)