தொல்காப்பியமும்
நன்னூலும்
அஃறிணையென்று விதித்த
நாயும் பசுவும்
எஜமான விசுவாசம் கொண்டு
பகுத்தறிந்தே வாழ்கின்றன ...
நாயோடும் ,பசுவோடும்
பழகியவர் சொல்லக் கேட்டேன் ;
சிந்தித்தல்
ஆறாவது அறிவென்றால்
இது என்ன?
பழக்க தோசமா ?!
அனிச்சை செயலா ?
நாயும் ... பசுவும்
உயர்தினையென்றால்
இலக்கணம் தவறா ?!
திணை மயக்கமா ?!
வாழ்க்கையே ...
லாஜிக் இல்லா மேஜிக் தானோ?!
7 comments:
நாயும் பசுவும் எஜமான விசுவாசம் கொண்டு பகுத்தறிந்தே வாழ்கின்றன\\
நல்லா கேட்டுள்ளீங்க
\\பழக்க தோசமா ?! அனிச்சை செயலா ?\\
முதலாமானாதா தான் இருக்கும்.
வாழ்க்கையே ...லாஜிக் இல்லா மேஜிக் தானோ?!\\
லாஜிக் இருக்கு சரியா இன்னும் தெரிஞ்சிக்கலை(என்னை சொன்னேன்)
ஆனால் மேஜிக் தெரிந்தே இருக்கு.
//வாழ்க்கையே ...லாஜிக் இல்லா மேஜிக் தானோ?!//
ஹிஹி..ஆமாம்ப்பா ஆமாம்!! :-)
வாழ்க்கையே ...
லாஜிக் இல்லா மேஜிக் தானோ?!//
ஆமாம்ங்க....
வணக்கம்!
//உயர்தினையென்றால் //
உயர்திணை
இஃகிஃகி!!
நல்லா இருக்கு.. :)
நன்றி ஜமால்
நன்றி சந்தன முல்லை
நன்றி பூர்ணிமா சரவணாகுமார்
நன்றி பழமைபேசி அண்ணா
நன்றி முத்துலெட்சுமி அக்கா
Post a Comment