"சும்மாவா சொன்னாங்க ...பெரியவங்க -பட்டாபி "சில நாட்களுக்கு முன் இணையத்தில் வாசிக்கக் கிடைத்த புத்தகம் இது ,அருமையான பல விஷயங்கள் அள்ளித் தரப் பட்ட அழகான புத்தகம் .சரி புத்தகத்தை விடுங்கள் அதை நீங்களே இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளுங்கள் .
இதிலிருந்து எனக்கொரு சின்ன பொறி கிடைத்தது,அதைப் பகிந்து கொள்ளவே இந்தப் பதிவு ,
தினம் காலையில் அரிசி அளக்க எவர்சில்வர் உழக்கு வைத்திருக்கிறோம் இல்லையா ?அது முன்பெல்லாம் பித்தளையில் வரும் ...இப்போதெல்லாம் எவர்சில்வர் தான் பார்க்க பெரிய சைஸ் டம்ளர் போலவே இருக்கும் .
அகஸ்மாத்தாக சில நேரங்களில் (பல நேரங்களிலும் தான்... !!! :) ;அதையே டம்ளர் ஆகப் பாவித்து தண்ணீர் பிடித்தோ அல்லது மொண்டு குடித்திருப்போம் .
வீட்டில் பாட்டியோ ...அம்மாவோ...அத்தையோ இருந்து நாம் எவர்சில்வர் உழக்கு டம்ளர்ரில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்து விட்டால் சட்டென்று சொல்வார்கள் ,
உழக்கில் தண்ணீர் பிடித்துக் குடிக்கவே கூடாது ...படுத்த படுக்கையாக இருப்பவர்கள் சாவை நெருங்கி விட்டால் அவர்களுக்குத் தான் படுக்கையில் படுத்த நிலையில் உழக்கில் தண்ணீர் விடுவார்கள் .நன்றாக இருப்பவர்களெல்லாம் உழக்கில் தண்ணீர் குடிக்கவே கூடாது என்று பயமுறுத்துவார்கள் .
நானும் வெகு நாட்கள் மற்ற டம்ளர்கள் சிங்கில் கழுவாமல் கிடக்கும் போது சோம்பலாக கை எவர்சில்வர் உழக்கு எடுக்கப் போகும் போதெல்லாம் பாட்டியும் அம்மாவும் சொன்னதை எண்ணி மெனக்கெட்டு (!!!) வேறு டம்ளர் கழுவி பிறகு தண்ணீர் பிடித்துக் குடிப்பேன் . ஒரு பயம் தான் என்றே வைத்துக் கொள்ளலாம்.
இப்போது யோசித்ததில் தினம் தினம் அரிசி அளக்க எவர்சில்வர் உழக்கு தான் பயன்படுத்துகிறோம் ,அரிசி மட்டும் அன்றி அந்த உழக்கு அளவு வைத்து தான் 1:2
அளவில் அரிசியும் நீரும் கலந்து குக்கர் வைக்கிறோம் .அதனால் உழக்கு கொஞ்சம் ஈரப் பதமாக இருக்கக் கூடும் ,ஆனாலும் அப்படியே உலர விட்டால் மறுநாள் காலைக்குள் ஈரம் உலர்ந்து விடும் .
இதை விடுத்து டம்ளர் மாதிரி இருக்கிறதென்று அடிக்கடி தண்ணீர் மொண்டு குடிக்க ஆரம்பித்தால் உழக்கில் ஈரம் நிலைத்து விடும் ஈரப் பதம் போக வழியில்லை .இதனால் என்ன ஆகும் ? அரிசி அளக்கும் போது மொத்த அரிசியிலும் அந்த ஈரம் பரவும் ...இதனால் அரிசியில் பூஞ்சை பிடித்து மூட்டை அரிசியும் கெட்டுப் போகக் கூடும் .
விஞ்ஞானப் பூர்வமான இந்த காரணத்தையும் விளக்கத்தையும் சொன்னால் நாம் உடனே சரி என்று ஏற்றுக் கொள்ளப் போகிறோமா என்ன ? அதே சமயம் பயம் தோன்றும் வகையில் எதையேனும் சொல்லி வைத்தால் கிடக்கிறது.அந்த பயத்திலாவது உழக்கில்ஈரம் உலர வழி கிடைத்ததே என்று தான் இப்படி சொன்னார்கள் போல !?
இது நான் நினைத்த காரணம் மட்டுமே ...இதற்க்கு வேறு காரணங்களும் கூட இருக்கலாம்.அப்படி ஏதேனும் இருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் .
20 comments:
கலக்கல்! நல்ல ஆராய்ச்சி!
மிஸஸ் டவுட் இப்போ டவுட்டை க்ளியரும் பண்ணிடறாங்கடோய்! ஹிஹி. உண்மையில, பல நம்பிக்கைகளுக்குப் பின்னால ஏதோ பாடங்கள் (அந்த நாட்களில் தேவையாக இருந்தவை) இருக்கு. (ராத்திரி பெருக்கக் கூடாது: இருட்டுல விழுந்திருக்கிற நல்ல சாமானையும் பெருக்கிடுவோமோ? மாதிரி...) இன்னொரு பக்கம்: சின்னப்புள்ளயிருந்து நான் டம்ளர் தூக்கிக் குடிப்பது வழக்கம். என் தோழிகள் அப்படியில்லை. உழக்கை வேறு மாதிரி பயன் செய்யாமல் இருக்க, சுத்தபத்தமும் காரணமாயிருக்கலாம். உழக்கில் அரிசியின் துகள்கள் (புழு கூட) இருக்கலாம்.
துளசி டீச்சர் பதிவுல உழக்குன்னு (உழக்குல கிழக்கு மேற்கு) சொல்லியிருந்தாங்க, அதை என் ரங்கமணி கிட்ட சொன்னா, உழக்குக்கு ஹான்டில் இருக்காதான்னு கேட்டாரு:-) ஹாஹா. அதுக்கு தான் அவர ப்ளாக் பக்கம் விடறது இல்லை:-)
மிஸஸ் தேவ் ன்னு பேரை மாத்தியதால் டவுட்டை க்ளியர் பண்ராங்க கெக்கே பிக்குணி.. :))
மிஸச் தேவ் .. எங்கவீட்டுல எல்லாம் உழக்குல அரிசி அளந்துட்டு .. வேற டம்ளர்ல தான் தண்ணி ஊத்துவோம்.. 1:4 (தண்ணிக்குடிக்கிற டம்ளர்)
டவுட் ன்னு ஈஸியா கூப்பிட்டுட்டு இருந்தேன் இப்ப மிஸஸ் தேவ் ன்னு ரெண்டு ஷிப்ட் போட்டு அடிக்கவச்சிட்டீங்களே...
எந்த ஒரு விடயத்திலும் ஏதோ ஒரு காரணம் இருக்கும்.
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க
நிச்சியம் விடை கிடைக்கும்.
இன்னொரு காரணமும் இருக்கலாம் மிஸஸ் தேவ்...உழக்குல பெரும்பாலும் கைப்பிடி இருக்காது (அது ஏன்??)..அப்ப தண்ணி எடுக்க கைவிட்டா தண்ணியெல்லாம் கைவிட்டு அலம்புற மாதிரி ஆயிடும்.. அதனாலக் கூட இருக்கலாம்
நாங்களும் யோசிப்போம்ல? :0))
அப்புறம் இன்னொரு விஷயம்..
கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார் மயானங் குறுகியப்பால்
எட்டியடி வைப்பரோ இறைவா கச்சியேகம்பனே..
இன்னொரு கமெண்ட்ஸ்ல பார்த்தேன்..பட்டினத்தார் பாடல்கள் பற்றி கேட்ருந்தீங்க..
ப்ரஜெக்ட் மதுரைன்னு ஒரு வெப் சைட் இருக்கு...அதுல திருக்குறள்ல இருந்து, பட்டினத்தார், கல்கி அப்படின்னு நிறைய புக்ஸ் இருக்கு. வேணும்னா டவுன்லோட் கூட செஞ்சிக்கலாம்..
இது தான் லிங்க்..
http://www.projectmadurai.org.vt.edu/pmworks.html
//அது முன்பெல்லாம் பித்தளையில் வரும் //
இப்போவும் கிடைக்குது, சாதாரணமா இந்தப் படி எல்லாம் (மதுரைப்பக்கம் படினு தான் சொல்லுவோம்) வீட்டிலே மற்ற வேலைகளுக்குப் பயன்படுத்தறதில்லை. குறிப்பிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் தவிர, ஸ்ரீ குடி இருப்பது இவற்றிலே தான் என்பதாலும், வெள்ளிக்கிழமைகளில் இவற்றிற்குச் சந்தனம், குங்குமம் வைப்பதுண்டு. நிறைநாழி வைக்கும் நாட்களில் பூஜை அறையில் இடம்பெறும். பெண்களுக்கான சில விசேஷ நிகழ்ச்சிகளில், பூப்புனித நீராட்டுவிழா, திருமணம், வளைகாப்பு, ஸ்ரீமந்தம் போன்றவற்றில் ஏத்தி இறக்குதல் என்றொரு நிகழ்ச்சி உண்டு, அதுக்கும் தேவைப்படும். குழந்தை பிறந்ததும், அந்தச் சின்னக் குழந்தையை வேறொரு சின்னக் குழந்தையின் மடியில் உட்கார்த்தி வைத்து, காசும், கொழுக்கட்டையும் இந்தப் படிகளிலே நிரப்பிக் குழந்தைக்குக் கொட்டுவதுண்டு. அதற்குப் பயன்படும். ஆகவே பாரம்பரியமான பித்தளை அல்லது துத்தநாக உழக்குகள்(உங்க மொழியிலே) இப்போவும் பயன்பாட்டில் இருக்கின்றன. மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளும் தான் எங்க வீட்டு விசேஷங்களிலே இப்போவும் உண்டு! பதில் நீஈஈஈஈளமாப் போச்சு. உஷாவின் பதிவிலே இருந்து வந்தேன். பேரை மாத்திட்டு இருக்கிறதாயும் பார்த்தேன், முன்னாலே என்ன பெயர்??
//
சந்தனமுல்லை said...
கலக்கல்! நல்ல ஆராய்ச்சி!//
நன்றி முல்லை ...
எங்க வீட்டில எல்லாம் மர உழக்கு தான் மிஸஸ்.தேவ்வ். அதனால
அதில தண்ணீர் குடிக்கிற பழக்கம் இல்லை:)
இன்னும் நிறைய எழுதுங்க. நல்லா இருக்கு. அந்த லின்கை கொடுக்கக் கூடாதோ:((
கெக்கே பிக்குணி said...
//மிஸஸ் டவுட் இப்போ டவுட்டை க்ளியரும் பண்ணிடறாங்கடோய்! ஹிஹி. //
அந்த டவுட் பேரை விடமாட்டிங்க போல இருக்கே!?
அது சும்மா என் எழுத்துக்களை எல்லாரும் படிக்கனும்னு வச்ச பேர் ...சும்மா கவனம் கவர்வதற்காக...இப்போ தான் நீங்கலாம் நான் எழுதறதைப் படிக்கறீங்களே...அதான் மாத்தியாச்சு .
//உழக்கை வேறு மாதிரி பயன் செய்யாமல் இருக்க, சுத்தபத்தமும் காரணமாயிருக்கலாம். உழக்கில் அரிசியின் துகள்கள் (புழு கூட) இருக்கலாம்.//
அர்த்தமுள்ள காரணம் தான்...அப்படியும் இருக்கலாம் .நன்றி கெக்கேபிக்குணி
// முத்துலெட்சுமி-கயல்விழி said...
மிஸஸ் தேவ் ன்னு பேரை மாத்தியதால் டவுட்டை க்ளியர் பண்ராங்க கெக்கே பிக்குணி.. :))
மிஸச் தேவ் .. எங்கவீட்டுல எல்லாம் உழக்குல அரிசி அளந்துட்டு .. வேற டம்ளர்ல தான் தண்ணி ஊத்துவோம்.. 1:4 (தண்ணிக்குடிக்கிற டம்ளர்)
1:4 னா சாதம் ரொம்ப கஞ்சி மாதிரி ஆயிடாதா?
உழக்குல அளக்காம சாதா டம்ளர்ல அளக்கரதால இந்த வித்யாசமா ?!
முத்துலெட்சுமி-கயல்விழி said...
டவுட் ன்னு ஈஸியா கூப்பிட்டுட்டு இருந்தேன் இப்ப மிஸஸ் தேவ் ன்னு ரெண்டு ஷிப்ட் போட்டு அடிக்கவச்சிட்டீங்களே...
நல்லா சாப்டுட்டு வந்து தெம்பா டைப் பண்ணுங்க முத்து அக்கா .ரெண்டே வார்த்தைகள் தான்.
// நட்புடன் ஜமால் said...
எந்த ஒரு விடயத்திலும் ஏதோ ஒரு காரணம் இருக்கும்.
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க
நிச்சியம் விடை கிடைக்கும்.//
நீங்களும் கேளுங்க ஜமால் ...ஏதாச்சும் காரணம் கிடைக்கலாம்.
//அது சரி said...
இன்னொரு காரணமும் இருக்கலாம் மிஸஸ் தேவ்...உழக்குல பெரும்பாலும் கைப்பிடி இருக்காது (அது ஏன்??)..அப்ப தண்ணி எடுக்க கைவிட்டா தண்ணியெல்லாம் கைவிட்டு அலம்புற மாதிரி ஆயிடும்.. அதனாலக் கூட இருக்கலாம்
நாங்களும் யோசிப்போம்ல? :0))//
கிளம்பிட்டாங்கையா ...கிளம்பிட்டாங்க... நல்லா யோசிங்க அதுசரி ...இன்னும் நல்லா ...தெளிவா புதுசா ஒரு காரணம் கண்டு பிடிச்சு சொல்லுங்க,உழக்குக்கு ஏன் கைப்பிடி இல்லைன்னு ?! :)
அது சரி said...
ப்ரஜெக்ட் மதுரைன்னு ஒரு வெப் சைட் இருக்கு...அதுல திருக்குறள்ல இருந்து, பட்டினத்தார், கல்கி அப்படின்னு நிறைய புக்ஸ் இருக்கு. வேணும்னா டவுன்லோட் கூட செஞ்சிக்கலாம்..
இது தான் லிங்க்..
http://www.projectmadurai.org.vt.edu/pmworks.html//
நன்றி அதுசரி...பட்டினத்தார் பாடல்கள் தரவிறக்கம் பண்ணியாச்சு.
//கீதா சாம்பசிவம் said...
உஷாவின் பதிவிலே இருந்து வந்தேன். பேரை மாத்திட்டு இருக்கிறதாயும் பார்த்தேன், முன்னாலே என்ன பெயர்??//
கீதாம்மா நீங்களுமா அதே கேள்வி !!!???
முதல்ல மிஸஸ்.டவுட் அப்படிங்கற பேர்ல எழுதிட்டு இருந்தேன்,இப்போ மிஸஸ்.தேவ் அவ்ளோ தான் வித்யாசம்.இனி பேர மாத்தறதா இல்லை.அபிஅப்பா சொல்லி முன்னமே உங்க சிதம்பர ரகசியம் தொடர் படிக்க ஆரம்பிச்சேன் ...முடிக்கலை,ஆன்மீக மணம் கம கமக்குது உங்க பதிவுகள்ள .இப்போதான் முதல் முறை என் பதிவு படிக்கறீங்கன்னு நினைக்கறேன்...சுமாரா எழுதுவேன் ...தொடர்ந்து படிங்க..உங்க கருத்துக்களை சொல்லுங்க .நன்றி கீதாம்மா .
கீதா சாம்பசிவம் said...
//இந்தப் படி எல்லாம் (மதுரைப்பக்கம் படினு தான் சொல்லுவோம்) வீட்டிலே மற்ற வேலைகளுக்குப் பயன்படுத்தறதில்லை. குறிப்பிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் தவிர, ஸ்ரீ குடி இருப்பது இவற்றிலே தான் என்பதாலும், வெள்ளிக்கிழமைகளில் இவற்றிற்குச் சந்தனம், குங்குமம் வைப்பதுண்டு. நிறைநாழி வைக்கும் நாட்களில் பூஜை அறையில் இடம்பெறும். பெண்களுக்கான சில விசேஷ நிகழ்ச்சிகளில், பூப்புனித நீராட்டுவிழா, திருமணம், வளைகாப்பு, ஸ்ரீமந்தம் போன்றவற்றில் ஏத்தி இறக்குதல் என்றொரு நிகழ்ச்சி உண்டு, அதுக்கும் தேவைப்படும். குழந்தை பிறந்ததும், அந்தச் சின்னக் குழந்தையை வேறொரு சின்னக் குழந்தையின் மடியில் உட்கார்த்தி வைத்து, காசும், கொழுக்கட்டையும் இந்தப் படிகளிலே நிரப்பிக் குழந்தைக்குக் கொட்டுவதுண்டு. அதற்குப் பயன்படும். ஆகவே பாரம்பரியமான பித்தளை அல்லது துத்தநாக உழக்குகள்(உங்க மொழியிலே) இப்போவும் பயன்பாட்டில் இருக்கின்றன//
நீளமான விளக்கம் வெகு அருமை. நாங்க படின்னும் சொல்லுவோம்..உழக்குன்னும் சொல்லுவோம் .படிக்கிறவங்க படின்னா எடைக்கல்னு நினைசிடுவாங்கலோனு தான் உழக்கு ன்னு எழுதினேன் .மதுரைப் பக்கம் தான் அரைக்காப் படி...முக்காப்படி...காப்படி ...இது வழக்கத்தில் இருக்கும் வார்த்தைகள் .
// வல்லிசிம்ஹன் said...
எங்க வீட்டில எல்லாம் மர உழக்கு தான் மிஸஸ்.தேவ்வ். அதனால
அதில தண்ணீர் குடிக்கிற பழக்கம் இல்லை:)
இன்னும் நிறைய எழுதுங்க. நல்லா இருக்கு. அந்த லின்கை கொடுக்கக் கூடாதோ:((//
பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா ...எந்த லிங்க்கை கேட்கறீங்க ? பட்டாபியோட சும்மாவா சொன்னாங்க பெரியவங்க புக் லிங்க்கா ? மெயில் id சொல்லுங்க அட்டச் பண்ணி அனுப்பிடறேன்
உழக்கு எங்க பக்கம் படின்னு சொல்லுவாங்க. பித்தளை படி இப்பவும் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் வாசல்ல கிடைக்கும். படியால் அளந்து போட்டு வேற டம்ப்ளர்ல தான் எங்க வீட்டிலும் தண்ணி ஊத்துவாங்க!
Post a Comment