கணவன் ஒருபுறம்
மனைவி மறுபுறம்
மேல் கீழென
ஏறி ...இறங்கும்
தாம்பத்யத் தராசு
எப்போதும்
கிடை மட்டத்தில்
நிலை கொண்டால்
யாதொன்றும் பயனிலையே ?!
முட்களின் நகர்வில்
(எடைக்)கற்களின் கனத்தில்
அசையும் தட்டுக்கள்
ஏறலாம்
இறங்கலாம்
தராசின் சுழன்றாடும்
சங்கிலிக்குள் மட்டும் ...
32 comments:
//ஏறலாம்
இறங்கலாம்
தராசின் சுழன்றாடும்
சங்கிலிக்குள் மட்டும் ...//
எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர்கள், வாழ்த்துக்கள் மிஸஸ்.டவுட்.
அந்து விழாத வரைக்கும் கவலையில்லை
இல்லறத்தில் சலசலப்பு மட்டுக்குள் இருக்கணும்னு சொல்றீங்களா
மிஸஸ் டவுட்?
\\ஏறலாம்
இறங்கலாம்
தராசின் சுழன்றாடும்
சங்கிலிக்குள் மட்டும் ...\\
அருமையா உணர்ந்தத சொல்லிட்டீங்க
சங்கிலி அப்படின்னா..
தங்க சங்கிலிதானுங்களே
அந்து விழாத வரைக்கும் கவலையில்லை//
:)))
அந்துவிடாம பார்த்துக்கொள்வதும் தம்பதிகளின் கையில்தானே இருக்கு.
தாம்பத்யத் தராசு அருமையான வரிகள்.
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்... என்னங்க கலக்கறீங்க.. ரொம்ப நல்லா இருக்குங்க...
\\தராசின் சுழன்றாடும்
சங்கிலிக்குள் மட்டும் ...
\\
சூப்பர் டவுட்!எப்படி ஆடினாலும் அந்த சங்கிலிக்கு உள்ளேதான் இருக்கனும் !!! அதான் வாழ்க்கை! சூப்பர் கவிதை!
நல்ல கவிதை
//கணவன் ஒருபுறம்
மனைவி மறுபுறம்
மேல் கீழென
ஏறி ...இறங்கும்
தாம்பத்யத் தராசு
//
50 க்கு 50 இருக்கணும்.. நல்லதுதான்
//
தராசின் சுழன்றாடும்
சங்கிலிக்குள் மட்டும் ...
//
சங்கிலி எத்தனை பவுன்??
//அசையும் தட்டுக்கள் //
சகோதரி வந்துட்டேன்... எதனா சொல்லி ஆகணுமே இப்ப?! இஃகிஃகி!!
’ஆடும் தட்டுகள்’ன்னு வரணும்.
அசையுறது: காற்றில் இலைகள் அசைந்தது.
ஆடுறது: கடிகாரத்தில், ஊசல் ஆடியது.
தட்டுக்கள்: ஒற்று மிக்காது!
//ராமலக்ஷ்மி said...
//ஏறலாம்
இறங்கலாம்
தராசின் சுழன்றாடும்
சங்கிலிக்குள் மட்டும் ...//
எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர்கள், வாழ்த்துக்கள் மிஸஸ்.டவுட்.//
நன்றி ராமலக்ஷ்மி மேடம்
// முரளிகண்ணன் said...
அந்து விழாத வரைக்கும் கவலையில்லை//
அந்து விழுந்தாலும் ஒட்ட வச்சு சரி பண்ணத் தான் சந்தான செல்வங்கள்னு ஒன்னை ஆண்டவன் படைசிருக்கானே முரளிகண்ணன் (நான் குறிப்பிடுவது பெரும்பான்மையான தம்பதிகளின் வாழ்கையை...சங்கிலி அந்து போகாமலும் பார்த்துக்கலாம் இயல்பான நியாயமான புரிதல்கள் இருந்தால் ...சரி தானே?)
// வல்லிசிம்ஹன் said...
இல்லறத்தில் சலசலப்பு மட்டுக்குள் இருக்கணும்னு சொல்றீங்களா
மிஸஸ் டவுட்?//
அதே தான் வல்லிம்மா ...சலசலப்பு மட்டும் இல்லை ,விட்டுக் கொடுத்தாலும் வீம்பும் கூட ஒரு சமயம் கணவன் ஒரு சமயம் மனைவி என மாறி..மாறி இருந்து விடின் ஒரு சலசலப்பு இருந்தாலும் பாதிப்பு இல்லை.
// நட்புடன் ஜமால் said...
\\ஏறலாம்
இறங்கலாம்
தராசின் சுழன்றாடும்
சங்கிலிக்குள் மட்டும் ...\\
அருமையா உணர்ந்தத
சொல்லிட்டீங்க//
வாங்க ஜமால் ...
உணர்ந்து வாழ்வதே வாழ்க்கை ...உணராமல் வாழ்வை பற்றி எது சொல்ல முயற்சி செய்யினும் அதில் வலு இருக்காதே.
// SUREஷ் said...
சங்கிலி அப்படின்னா..
தங்க சங்கிலிதானுங்களே//
வாங்க sureஷ் ...
தங்கச் சங்கிலியே தான்...
// புதுகைத் தென்றல் said...
அந்து விழாத வரைக்கும் கவலையில்லை//
:)))
அந்துவிடாம பார்த்துக்கொள்வதும் தம்பதிகளின் கையில்தானே இருக்கு.
தாம்பத்யத் தராசு அருமையான வரிகள்.
//
சர்வ நிச்சயமாக தம்பதிகளின் கையில் தான் இருக்கிறது சகோதரி .நல்லா சொன்னீங்க புதுகை தென்றல் .
// கவிதா | Kavitha said...
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்... என்னங்க கலக்கறீங்க.. ரொம்ப நல்லா இருக்குங்க...
//
நன்றி கவிதா ...
இப்படியே அடிக்கடி வந்து பார்த்து ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா "பூஸ்ட் கலக்கி "குடிச்சா மாதிரி உற்சாகமா தான் இருக்கும் .
// அபி அப்பா said...
\\தராசின் சுழன்றாடும்
சங்கிலிக்குள் மட்டும் ...
\\
சூப்பர் டவுட்!எப்படி ஆடினாலும் அந்த சங்கிலிக்கு உள்ளேதான் இருக்கனும் !!! அதான் வாழ்க்கை! சூப்பர் கவிதை!
//
வாங்க சித்தப்பா ...
எப்படியோ இந்தக் கவிதைக்கு வழக்கம் போல காமெடி கருத்து சொல்லாம சீரியஸ் கருத்து சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ் .
அமுதா said...
நல்ல கவிதை
நன்றி அமுதா ...
நசரேயன் said...
//கணவன் ஒருபுறம்
மனைவி மறுபுறம்
மேல் கீழென
ஏறி ...இறங்கும்
தாம்பத்யத் தராசு
//
50 க்கு 50 இருக்கணும்.. நல்லதுதான்
ஆமாம் நசரேயன் ,பிரச்சினையே இல்லை பாருங்க
நசரேயன் said...
//
தராசின் சுழன்றாடும்
சங்கிலிக்குள் மட்டும் ...
//
சங்கிலி எத்தனை பவுன்??
அதை அவங்கவங்க தங்கமணிகள் கிட்ட இல்ல கேட்டுத் தெரிஞ்சிக்கணும்.
// பழமைபேசி said...
//அசையும் தட்டுக்கள் //
சகோதரி வந்துட்டேன்... எதனா சொல்லி ஆகணுமே இப்ப?! இஃகிஃகி!!
’ஆடும் தட்டுகள்’ன்னு வரணும்.
அசையுறது: காற்றில் இலைகள் அசைந்தது.
ஆடுறது: கடிகாரத்தில், ஊசல் ஆடியது.
தட்டுக்கள்: ஒற்று மிக்காது!
வாங்க பழமைபேசி அண்ணா ,மனித அசைவுகல்னு சொல்றதில்லையா?! அது மாதிரி கவிதைக்கு ஒரு பொய்யான அழகு தேவைப் பட்டா கொஞ்சம் இலக்கணம் மீறப் படலாம் .இது புதுக்கவிதை தானே. ஆடும் தட்டுகள்னா இங்க வரிகளின் அழகியல் குறைஞ்சிடாதா ?(ஆடு (டூ) கொஞ்சம் கரடு முரடா இருக்கு .அசைவுனா கொஞ்சம் மென்மையா இருக்கும் இல்லையா?
உங்கள் திருத்தம் கவனத்தில் பதிகிறது,அடுத்த கவிதையில் நிச்சயம் பின்பற்றுகிறேன்.
//ஏறலாம்
இறங்கலாம்
தராசின் சுழன்றாடும்
சங்கிலிக்குள் மட்டும் ...//
அப்பாடா....இனிமே சண்டை போட்டா மனசுக்குள்ள குற்ற உணர்வு வராது....ஹி ஹி
நல்ல இருக்குங்க
//
மேல் கீழென
ஏறி ...இறங்கும்
தாம்பத்யத் தராசு
எப்போதும்
கிடை மட்டத்தில்
நிலை கொண்டால்
யாதொன்றும் பயனிலையே ?!
//
மிகவும் அர்த்தமான வரிகள்...அசைவு வளர்ச்சியின் அடிப்படை...வளர்ச்சியில்லா எதுவும் அழியும்....If something doesn't move, then it's possibly dead...
நல்லாருக்கு..
//
வாங்க பழமைபேசி அண்ணா ,மனித அசைவுகல்னு சொல்றதில்லையா?! அது மாதிரி கவிதைக்கு ஒரு பொய்யான அழகு தேவைப் பட்டா கொஞ்சம் இலக்கணம் மீறப் படலாம் .இது புதுக்கவிதை தானே. ஆடும் தட்டுகள்னா இங்க வரிகளின் அழகியல் குறைஞ்சிடாதா ?(ஆடு (டூ) கொஞ்சம் கரடு முரடா இருக்கு .அசைவுனா கொஞ்சம் மென்மையா இருக்கும் இல்லையா?
உங்கள் திருத்தம் கவனத்தில் பதிகிறது,அடுத்த கவிதையில் நிச்சயம் பின்பற்றுகிறேன்.
March 21, 2009 12:39 AM
//
இலக்கணப்படி இருந்தால் அது செய்யுள்...இலக்கண கரைகளை உடைத்து, புதிய திசைகளை உண்டாக்குவது தான் கவிதை...காற்றுக்கு கடைசியாய் வேலி போட்டவர்கள் என்று யாரும் இல்லை...இலக்கணம் வைத்து இலக்கியம் இல்லை...இலக்கியத்தின் அர்த்தம் சொல்ல எழுதப்பட்டது தான் இலக்கணம்...
இலக்கணமும் ஏன் மொழியும் உருவாவதற்கு முன்னரே உருவானது இலக்கியம்...அதனால் இலக்கணம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்பது என் தாழ்வான கருத்து...
//
தட்டுக்கள்: ஒற்று மிக்காது!
//
இரு தடவை பால குமாரன் சொன்னது ஞாபகம் வருது..."இரும்பு குதிரைகள்"ங்கிறது தப்பு..."இரும்புக் குதிரைகள்"னு தான் வரணும்னு யாரோ சொல்லியிருந்தாங்க....அதுக்கு பாலா சொன்னது..."இரும்பு குதிரைகள்" தான் நான் சொல்ல வர்றதை சரியா சொல்லுது...நடுவுல "க்" வர்றது பூமி சுத்துறதுக்கு ப்ரேக் போட்ட மாதிரி இருக்குன்னாரு...
உங்க கவிதைல
"(எடைக்)கற்களின் கனத்தில்
அசையும் தட்டுக்கள்
"
இந்த எடத்தில "அசையும் தட்டுக்கள்"னு சொல்றது தான் நல்லா இருக்கு...அட்லீஸ்ட் எனக்கு பிடிச்சிருக்கு..
நல்ல ஒப்பீடு...
அன்புடன் அருணா
நன்றி நிலா அம்மா ...(சண்டை போடறது நிக்கப் போறதே இல்லையாம்!! பின்ன என்ன குற்ற உணர்ச்சி ?! கூல் மேடம்
)
நன்றி அதுசரி...நீங்க சொல்றதும் சரி தான் அதுசரி ,
நன்றி அருணா
/ஏறலாம்
இறங்கலாம்
தராசின் சுழன்றாடும்
சங்கிலிக்குள் மட்டும் ...//
எனக்கு புரியும் படி ஒரு கவிதை. நல்ல இருந்தது. நிறைய அர்த்தங்களோடு
// குடுகுடுப்பை said...
/ஏறலாம்
இறங்கலாம்
தராசின் சுழன்றாடும்
சங்கிலிக்குள் மட்டும் ...//
எனக்கு புரியும் படி ஒரு கவிதை. நல்ல இருந்தது. நிறைய அர்த்தங்களோடு//
இந்தக் கவிதை புரிஞ்சிடுச்சா உங்களுக்கு ?! ஒரே ஒரு அர்த்தம் வச்சு தான் நான் எழுதினேன் ,வாசிக்கற ஒவ்வொருத்தருக்கும் வேற வேற அர்த்தம் தோணலாம் ,அதான் கவிதை ,கவிதை எழுதறவங்களுக்கு சொந்தமில்லை
ஆகா அருமை, தாம்பத்ய வாழ்க்கையை மிக் அழகா சொல்லியிருக்கீங்க.
//ஏறலாம்
இறங்கலாம்
தராசின் சுழன்றாடும்
சங்கிலிக்குள் மட்டும் ...//
இந்த வரிகளில் கவிதை ஒரு உன்னத நிலையை எய்தியிருக்கிறது.
Post a Comment