Tuesday, March 17, 2009

சந்திரிகாவின் நியாயங்கள் (பார்ட்- 2 )

சந்திரிகா அப்படி என்ன சொன்னாள் ?

சுறு சுறுப்பாக இருப்பவளைப் போல வெளிப் பார்வைக்குப் பட்டாலும் பாவம் அவள் கண்களை தூக்கம் தின்று கொண்டிருப்பதைப் போல எனக்கொரு பிரமை .

அவள் சொன்ன பதில் இது தான் .

தேவராஜ் மாமா வீட்டுக் கட்டில் மாதிரி ஊருல எங்கயும் இல்லை பாட்டி ,அங்க இருந்து தான் வரேன்;படுத்தா எந்திரிக்க மனசே வரலை ,வெளிநாட்டுல இருந்து கப்பல்ல இல்ல வர வச்சு வாங்கி இருக்காராம்.

பொண்ணு காலேஜுக்குப் போயிருச்சு இல்ல ...அதான். இல்லனா இந்நேரம் கூப்புட மாட்டார்.

100 ரூவா தந்தார் ,எவ்ளோ நாளைக்கு வெறும் 100 ரூவாயே வாங்கிட்டு இருப்பேன் ,கூட ஒரு அம்பது குடுங்க மாமானா ...அவரு ,

இதுவே அதிகம்டீனுட்டார்.

என்ன இப்பிடி சொல்றீங்கனு கேட்டாக்க ...

இந்த மாதிரி கட்டில்ல படுக்க நீ தான் எனக்கு காசு தரனும்.இந்த ஊருக்குள்ள இப்பிடியாப் பட்ட கட்டில் எங்கனாச்சும் பார்த்திருக்கியாங்கறார் !!!

கண்ணன் ஸ்கூல்ல எங்கயோ சுற்றுலா போறாங்களாம் ...பணம் கொடும்மான்னு ஒரே நச்சரிப்பு ஒரு வாரமா ; அதான் போயிட்டு வந்தேன் .

இதைச் சொல்லும் பொது அவள் முகத்தில் " தான் செய்த செயலைப் பற்றியஎந்த ஒரு வித்யாசமான உணர்வையும் நான் காண முடியவில்லை .

வெறும் ஒரு ஸ்கூல் டூர் !!!

அதற்கு எதை பண்டமாற்று செய்திருந்தால் என்பதைப் பற்றி அவளுக்கேதும் இரண்டாம் பட்சக் கருத்தோ ...குழப்பமோ இல்லவே இல்லை .

சந்திரிகா தொடர்வாள் ...(இப்போ என்ன அவசரம் ? நாளைக்கு சொல்றேன் மீதிய)

17 comments:

சந்தனமுல்லை said...

//(இப்போ என்ன அவசரம் ? நாளைக்கு சொல்றேன் மீதிய)//

ஹ்ம்ம்..ஓக்கே!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இப்பத்தான் லேபிளைப்பார்த்தேன் நிஜம் கலந்த கதையா.. அதான் சொல்வன்மை கொஞ்சம் கூடவே இருக்கு.. ( இதை மைனஸ் பாயிண்டா எடுக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்)

நட்புடன் ஜமால் said...

என்னங்க இவ்வளவு சின்னதா சொல்லிட்டீங்க ...

தேனியார் said...

நெஞ்சை கனக்க செய்யும் உண்மை, பொட்டில் அறைந்தார் போல சொல்லி இருக்கிறீர்கள்.

அனைத்துக்கும் காரணம் வறுமை.

RAMYA said...

//
சுறு சுறுப்பாக இருப்பவளைப் போல வெளிப் பார்வைக்குப் பட்டாலும் பாவம் அவள் கண்களை தூக்கம் தின்று கொண்டிருப்பதைப் போல எனக்கொரு பிரமை .
//

உங்களுக்கே பிரமையா சரிங்க அப்பூ
அப்போ சரியாதான் இருக்கும்!!!

RAMYA said...

//
தேவராஜ் மாமா வீட்டுக் கட்டில் மாதிரி ஊருல எங்கயும் இல்லை பாட்டி ,அங்க இருந்து தான் வரேன்;படுத்தா எந்திரிக்க மனசே வரலை ,வெளிநாட்டுல இருந்து கப்பல்ல இல்ல வர வச்சு வாங்கி இருக்காராம்.
//

வாங்கி அனுபவிக்க முடியாத ஆனால் வேறு இடத்தில் இடத்தில்,

அனுபவித்ததால் ஏற்பட்ட ஏக்கம்.

மறுபடியும் அனுபவிக்க சின்னதாய் ஒரு எதிர்பார்ப்பு மனதிற்குள்.

RAMYA said...

//
இந்த மாதிரி கட்டில்ல படுக்க நீ தான் எனக்கு காசு தரனும்.இந்த ஊருக்குள்ள இப்பிடியாப் பட்ட கட்டில் எங்கனாச்சும் பார்த்திருக்கியாங்கறார் !!!
//

உண்மையின் நிதர்சனம் பளிச்!!

RAMYA said...

//
சந்திரிகா தொடர்வாள் ...(இப்போ என்ன அவசரம் ? நாளைக்கு சொல்றேன் மீதிய)//

சீக்கிரம் சொல்லுங்க, படிக்க காத்திரிக்கின்றோம் சரியா???

செந்தழல் ரவி said...

டிவி மெகா சீரியல் எழுத ஒரு எழுத்தாளர் இங்க இருக்காங்கடோய்...

அத்திப்பூக்கள், வசந்தம், கோலங்கள் வரிசையில் சந்திரிகா அப்படீன்னு ஒரு நாடகம் உட்டுடலாம்..

உண்மைத்தமிழனிடம் எதுக்கும் சொல்லி வைங்க..அவர்தான் கதை தேட்க்கிட்டிருக்கார்..

ராமலக்ஷ்மி said...

தலைப்பைத் தொடுகிறது கதை இங்கு. தொடரட்டும்.

மிஸஸ்.டவுட் said...

சந்தனமுல்லை said...

//(இப்போ என்ன அவசரம் ? நாளைக்கு சொல்றேன் மீதிய)//

ஹ்ம்ம்..ஓக்கே!

சரிப்பா முல்லை.

மிஸஸ்.டவுட் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

இப்பத்தான் லேபிளைப்பார்த்தேன் நிஜம் கலந்த கதையா.. அதான் சொல்வன்மை கொஞ்சம் கூடவே இருக்கு.. ( இதை மைனஸ் பாயிண்டா எடுக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்)//

மைனஸ் பாயிண்டா எடுத்துக்க மாட்டேன்.பிளஸ் தான் உங்க கமென்ட் .

மிஸஸ்.டவுட் said...

// நட்புடன் ஜமால் said...

என்னங்க இவ்வளவு சின்னதா சொல்லிட்டீங்க ...//
வாங்க ஜமால்...தொடரும் போட்ருக்கேன்ப்பா ;

மிஸஸ்.டவுட் said...

// தேனியார் said...

நெஞ்சை கனக்க செய்யும் உண்மை, பொட்டில் அறைந்தார் போல சொல்லி இருக்கிறீர்கள்.

அனைத்துக்கும் காரணம் வறுமை.//

வாங்க தேனியாரே...
வறுமையும் ஒரு காரணம் ...ஆனால் அது மட்டுமே முழுக்காரணம் இல்லை...மீதிக் கதையை படிங்க புரியும் உங்களுக்கு .

மிஸஸ்.டவுட் said...

//RAMYA said...
//
தேவராஜ் மாமா வீட்டுக் கட்டில் மாதிரி ஊருல எங்கயும் இல்லை பாட்டி ,அங்க இருந்து தான் வரேன்;படுத்தா எந்திரிக்க மனசே வரலை ,வெளிநாட்டுல இருந்து கப்பல்ல இல்ல வர வச்சு வாங்கி இருக்காராம்.
//

வாங்கி அனுபவிக்க முடியாத ஆனால் வேறு இடத்தில் இடத்தில்,

அனுபவித்ததால் ஏற்பட்ட ஏக்கம்.

மறுபடியும் அனுபவிக்க சின்னதாய் ஒரு எதிர்பார்ப்பு மனதிற்குள்.//

சந்திரிகா கதையை நான் எழுதுவதற்கு காரணம் வறுமையை விளக்கவோ அல்லது அவளின் நிறைவேறாத ஏக்கத்தை சொல்லவோ அல்ல ரம்யா, தொடர்ந்து வாசியுங்கள் பிறகு புரியும்.அவளது நியாயங்கள்.

மிஸஸ்.டவுட் said...

//செந்தழல் ரவி said...
டிவி மெகா சீரியல் எழுத ஒரு எழுத்தாளர் இங்க இருக்காங்கடோய்...

அத்திப்பூக்கள், வசந்தம், கோலங்கள் வரிசையில் சந்திரிகா அப்படீன்னு ஒரு நாடகம் உட்டுடலாம்..

உண்மைத்தமிழனிடம் எதுக்கும் சொல்லி வைங்க..அவர்தான் கதை தேட்க்கிட்டிருக்கார்..//

இது நாடகம் இல்லை செந்தழல் அண்ணா. எனக்குத் தெரிய வந்த ஒரு நிஜ சம்பவத்தில் சிறிது கற்பனை கலந்து எழுதுகிறேன் அவ்வளவு தான். அத்திப் பூக்கள் ...வசந்தம் கதைகளோடு இதை ஒப்பிட முடியாது. சந்த்ரிகா ஒரு சாமானியப் பெண்.இவளது கதை ஒரு பாடம் மற்றவர்களுக்கு சொல்லப் போனால் குறிப்பாக இளம்பெண்களுக்கு.அவ்வளவே.
உண்மைத் தமிழன் இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் பார்த்தால் அவரே வந்து சொல்லட்டும் இதற்கும் மெகா..மெகா சீரியல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று.

மிஸஸ்.டவுட் said...

// ராமலக்ஷ்மி said...

தலைப்பைத் தொடுகிறது கதை இங்கு. தொடரட்டும்//

வாங்க ராமலலக்ஷ்மி மேடம்...
கதை இன்ன வழியில் தான் பயணிக்கப் போகிறது என்பதை நான் சொல்லாமலே தலைப்பை வைத்துப் புரிந்து கொண்டமைக்கு நன்றி ராமலக்ஷ்மி மேடம்.செந்தழல் என் கதை "அழுகாச்சி" கதைகளில் ஒன்று என்று சொன்ன பிறகு உங்கள் பின்னூட்டம் ஆறுதல்.