ரொம்ப நாட்களாக எழுத நினைத்த விஷயம் தான் ...
ஆனால் எழுத நினைத்த ஒவ்வொரு முறையுமே "என்ன இருக்கிறது இதைப் பற்றி எழுத? என்று ஒரு நொடி தோன்றும் அடுத்த நொடியில் "எவ்வளவோ இருக்கிறதே இதில் எதையென்று விரித்து எழுத என்றும் தோன்றும்.ஒரே நேரத்தில் ஒன்றுமே விஷயம் இல்லாததைப் போலவும்...ஏராளமாய் விஷயம் இருப்பதைப் போலவும் தோன்ற வைப்பதில் தி.ஜா எப்போதுமே வல்லவர் .
கதை என்று எடுத்துக் கொண்டால் மிகச் சாதாரணமாக ஒரே பத்தியில் சொல்லி முடித்து விடலாம் .அலங்காரம் , தண்டபாணி தம்பதிகளின் மகனான அப்பு சுந்தரத்தின் வேத பாடசாலையில் பாடம் கற்றுக் கொள்ள சிறு வயதிலேயே தன் தகப்பனாரால் கொண்டு விடப் படுகிறான்.இதற்க்கு காரணமாக இருப்பவள் அவனது அம்மா அலங்காரம்.
அந்த வேத பாடசாலை பவானியம்மாளுக்குச் சொந்தம் ,பவானியம்மாளின் தம்பி மகள் இந்து பால்ய விவாகம் செய்விக்கப் பட்டு குறை நாட்களில் தன் கணவனை இழந்து விதவையாக அத்தை வீட்டுக்கே மறுபடி மீள்கிறாள்.அவளுக்கு அப்புவின் மீதே அதிகப் பிரியம் அவள் தனது வாழ்வை தான் விவரம் அறிந்த காலம் முதல் அப்புவுடனே மனதளவில் பிணைத்துக் கொண்டவளாகவே கதை நெடுகிலும் காட்டப் படுகிறாள்.
அவள் சிறு பிராயத்திலிருந்தே மனதுக்குள் அப்புவையே தன் கணவனாக வரித்துக் கொண்டவள் என்பதும்...அப்புவுக்கும் அவள் மீது அலாதியான நேசம் என்பதும் புரிந்தே இருந்தாலும் "கைம்பெண்ணுக்கு கல்யாணம் "என்ற விஷயம் அப்போது சர்ச்சைக்கு உரிய ஒன்றே. இந்துவை விரும்பினால் அம்மா என்ன நினைத்துக் கொள்வாளோ ? பவானியம்மால் என்ன நியானைத்துக் கொள்ளக் கூடுமோ ?! இப்படியாக அப்பு தனியாக தனக்குள் விவாதித்துப் பார்த்து கடைசியில் தன் அம்மாவின் பொருட்டு அவளது நன்மதிப்பைப் பெறும் ஆவலில் இந்துவை தன் மனதில் இருந்து விலக்க நினைக்கிறான்.
ஆனால் இந்துவோ அவன் விலக ...விலக...விலக்க ...விலக்க நெருங்கி ...நெருங்கி வருகிறாள். இது மனித சுபாவம் போலும்!? இதை வென்றிட்டால் உலகை வென்ற மாதிரி அல்லவா? உணர்வுகளைக் கொள்ள விருப்பமில்லாதவளாய் இந்து அப்புவை தேடி வரும் ஒவ்வொரு முறையும் அவன் மிகச் சலனமுற்றவனாய் எங்கே தன்னையும் அறியாமல் இந்துவை தொட நேருமோ என குறுகிப் போனவனாய் (மயக்கம்...மோகம்...இன்னபிற சொல்லாடல்களைக் கூட இங்கே பயன்படுத்திக் கொள்ளலாம் ...அதற்குப் பெயரே தன்னை அறியாமல் அல்லது தன்னை இழத்தல் என்பதாக இருக்கக் கூடும்!) அவள் மீது கடும் கோபம் கொண்டவனாகிறான்.
அப்புவின் கோபம் இந்து மீதான விருப்பமின்மையாக இல்லாமல் பெரும்பான்மையும் "எங்கே அவள் மீது உள்ளூர இருக்கும் நேசத்தை வெளிப்படுத்திக் கொண்டால் தான் "குற்றவாளி" போல பிறரால் பார்க்கப் படலாம் என்ற சுயநலமே பிரதானமாகத் தெரிகிறது.
ஆனால் இந்து அவனை இன்னுமொருமுறை இழக்க மனமில்லாமலோ அல்லது தன்னை அவன் மட்டமாக குறைத்து மதிப்பிட்டு விட்டானே என்ற தன்மானத் தூண்டலிலோ ஏதோ ஒரு நிமிடத்தில் இந்து அப்புவின் அம்மா அலங்காரத்தைப் பற்றி தனக்குத் தெரிந்த அந்தரங்கமான உண்மை ஒன்றை அவனிடம் போட்டு உடைத்து அப்புவை தனது விருப்பத்துக்கு பணிய வைக்க முயல்கிறாள்.
அம்மாவுக்காக என்றால் "அந்த அம்மாவே இரட்டை வாழ்வை ஒன்றென மயங்கிப் போய் நிற்கிறாள்,ஊரை ஏமாற்றி தன்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள் ,சிவசுவுடன் அப்புவின் அம்மாவுக்கு நீடிக்கும் பழக்கத்தை அவள் இப்போதும் விட்டாளில்லை ...ஊரறிந்த ரகஸ்யம் இது ,உனக்குத் தெரியாதா இது ? என்று அப்புவிடம் இந்து கடும் வாதம் செய்கிறாள்.
கூடவே அம்மா என்ற பிம்பத்தின் மீது அப்பு உருவாக்கி வைத்த "அப்பழுக்கில்லாத" "பரிசுத்தமான" நிர்மலமான " இன்னபிற உருவங்கள் எல்லாம் உடையும் படி அல்லது அந்த உருவங்கள் எல்லாமே அவளாலேயே உடைக்கப்படும் படி இந்து அப்புவின் அம்மா "அலங்காரத்தைப்" பழித்துக் கூறும் போது கோபத்தில் அவன் அவளை தகாத சொல்லால் திட்டுவதோடு அடிக்கவும் செய்கிறான்.
மீதிய அப்புறம் சொல்றேன் ...
33 comments:
100க்கு முதல் வாழ்த்து.
தி. ஜா. கதைகளோட லிங்க் கொடுங்க மேடம்,
வாழ்த்துக்கள் 100
சதத்துக்கு வாழ்த்துக்கள்!
விமர்சனம் நன்று.
வாழ்த்துக்கள்...
செஞ்சுரி அண்ட் நாட் அவுட்...
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் 100க்கு
தி.ஜா வின் படைப்பிற்கு நல்ல பதிவு.. மரப்பசுவைப்பற்றியும் முடிந்தால் எழுதுங்கள் மேடம்
\\ஆனால் இந்துவோ அவன் விலக ...விலக...விலக்க ...விலக்க நெருங்கி ...நெருங்கி வருகிறாள். இது மனித சுபாவம் போலும்!? \\
சரியே!
\\இதை வென்றிட்டால் உலகை வென்ற மாதிரி அல்லவா?\\
இயலுமா!
அப்பு காவேரிக்கரையில் அந்த மரத்தடியில் உட்கார்ந்து சூழ்நிலையை அனுபவிக்கும் போது நாமும் அங்க போய்விடுவோமே.
இன்னும் ஒரு தி.ஜா வருவாரா.
100ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.
மிஸஸ்.டவுட்
என்ன ஒரு அருமையான நாவல் தி.ஜா.வின் அம்மா வந்தாள்.எத்தனை முறை படித்தாலும் ஏதோ ஒன்று புதிதாக அறிந்து கொள்வது போல் ஓர் உணர்வு.இது காலத்தால் அழியாத எழுத்து.உங்கள் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
கரைந்த நிழல்கள்
படித்ததுண்டா
by Asokamithran
வாழ்த்துக்கள். சமீபத்து பதிவுகளில் உங்கள் பிளாக் அருமையாய் இருக்கிறது. வாசிப்பு, அனுபவ பகிர்வுகள் என்று அமர்க்களமாய் இருக்கிறது. தொடருங்கள்.
sureஷ், திண்ணை இணைய தளத்தில் தி.ஜானகிராமன் சிறுகதைகள் பார்த்த நினைவு. ஆனால் நாவல்கள் இணையத்தில்
கிடைக்குமா என்பது சந்தேகமே!
//நட்புடன் ஜமால் said...
100க்கு முதல் வாழ்த்து.//
நன்றி ஜமால்
SUREஷ் said...
தி. ஜா. கதைகளோட லிங்க் கொடுங்க மேடம்,
எனக்கு தெரிந்த வரையில் தி.ஜா .கதைகள் இணையத்தில் இலவசமாக காணக் கிடைப்பதில்லை,சங்கப் பலகை யில் தேடிப் பாருங்கள் .சென்ற வருட புத்தகத் திருவிழாவில் ஐந்திணைப் பதிப்பகத்தில் தி.ஜா புத்தகங்கள் கிடைத்தன. இந்த வருடம் அந்த ஸ்டாலுக்கு நான் போக இயலவில்லை.
// SUREஷ் said...
வாழ்த்துக்கள் 100//
நன்றி sureஷ்
// ராமலக்ஷ்மி said...
சதத்துக்கு வாழ்த்துக்கள்!
விமர்சனம் நன்று.//
நன்றி ராமலக்ஷ்மி மேடம்.
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
வாழ்த்துக்கள்...//
நன்றி முத்துலெட்சுமி அக்கா
//தேனியார் said...
செஞ்சுரி அண்ட் நாட் அவுட்...
வாழ்த்துக்கள்.//
நன்றி தேனியாரே...
// narsim said...
வாழ்த்துக்கள் 100க்கு
தி.ஜா வின் படைப்பிற்கு நல்ல பதிவு.. மரப்பசுவைப்பற்றியும் முடிந்தால் எழுதுங்கள் மேடம்
//
நன்றி நர்சிம்...'மரப்பசு' இன்னும் வாசித்ததில்லை ;வாசித்ததும் எழுதுகிறேன்.
//நட்புடன் ஜமால் said...
\\ஆனால் இந்துவோ அவன் விலக ...விலக...விலக்க ...விலக்க நெருங்கி ...நெருங்கி வருகிறாள். இது மனித சுபாவம் போலும்!? \\
சரியே!
\\இதை வென்றிட்டால் உலகை வென்ற மாதிரி அல்லவா?\\
இயலுமா!//
இயன்றால் வென்றிடலாம்..."முயன்றால் முடியாதது என்பதும் ஒன்று உண்டோ?!
நாவலில் அப்புவாலும் முடியவில்லை ...அவன் அம்மாவாலும் முடியவில்லை.அது நிஜத்தின் சாயலில் அமைந்த கதை.நிஜம் வேறாகக் கூட இருக்கலாம்.வாழ்க்கை சகலத்தையும் அடித்துக் கொண்டு செல்லும் பிரயாகை அல்லவா?!
//வல்லிசிம்ஹன் said...
அப்பு காவேரிக்கரையில் அந்த மரத்தடியில் உட்கார்ந்து சூழ்நிலையை அனுபவிக்கும் போது நாமும் அங்க போய்விடுவோமே.
இன்னும் ஒரு தி.ஜா வருவாரா.//
ம்ம்ம் ...அப்புறம் அந்த எஸ் கட்டுப் பின்னலை மறக்க முடியுமா என்ன? வேதம் புதிது படத்தில் அந்த சின்ன பையன் போட்டுக் கொண்டிருப்பானே அது தான் எஸ் கட்டுப் பின்னலா வல்லிம்மா? இன்னும் நிறைய அழகான சொல்லாடல்கள் உண்டே தி.ஜா வில் .இன்னொரு தி.ஜா வருவாரா? வந்தால் நன்றாகத் தான் இருக்கும் வாசிப்பாளர்களுக்கு.பார்க்கலாம்.
துணிவாக சொல்ல வந்த விஷயத்தை வெகு இயல்பாக ரசிக்கத் தக்க வகையில் சொல்லிக் கொண்டு போகும் எழுத்தாளர்கள் நிறைய இருக்கிறார்கள்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல்.
தேர்ந்தெடுத்து வாசிக்கும் உரிமை நம் கையில்.தி.ஜா விழும் முரண்பட்டவர்கள் உண்டு தான்.
//வல்லிசிம்ஹன் said...
100ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.
மிஸஸ்.டவுட்
நன்றி வல்லிம்மா...
தி ஜாவின் மாஸ்டர் பீஸ் அம்மா வந்தாள் எனத் தோன்றுமெனக்கு.
// பாஸ்கர் said...
என்ன ஒரு அருமையான நாவல் தி.ஜா.வின் அம்மா வந்தாள்.எத்தனை முறை படித்தாலும் ஏதோ ஒன்று புதிதாக அறிந்து கொள்வது போல் ஓர் உணர்வு.இது காலத்தால் அழியாத எழுத்து.உங்கள் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி பாஸ்கர் .நீங்கள் சொல்வது நிஜமே .
// முரளிகண்ணன் said...
100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்//
நன்றி முரளிகண்ணன்
// ttpian said...
கரைந்த நிழல்கள்
படித்ததுண்டா
by Asokamithran//
இன்னும் வாசிக்கவில்லை ttpian .
//ramachandranusha(உஷா) said...
வாழ்த்துக்கள். சமீபத்து பதிவுகளில் உங்கள் பிளாக் அருமையாய் இருக்கிறது. வாசிப்பு, அனுபவ பகிர்வுகள் என்று அமர்க்களமாய் இருக்கிறது. தொடருங்கள்.
//
உங்கள் வாழ்த்துக்கள் உற்சாகமளிக்கிறது .மிக்க நன்றி உஷா மேடம்
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
தி ஜாவின் மாஸ்டர் பீஸ் அம்மா வந்தாள் எனத் தோன்றுமெனக்கு//
பலரும் அப்படித் தான் சொல்கிறார்கள் ஜ்யோவ்ராம் சுந்தர். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆர்.கே .நாராயணின் "சுவாமி அண்ட் பிரெண்ட்ஸ் போல ,சாவியின் "வாசிங்கடனில் திருமணம் "போல, இது தி.ஜா வின் ''மாஸ்டர் பீஸ் ".
வருகைக்கு நன்றி ,தொடர்ந்து வாங்க.
100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
//அமிர்தவர்ஷினி அம்மா said...
100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்//
நன்றி அமித்து அம்மா
Post a Comment