Thursday, February 19, 2009

பிறிதொருநாள் தூசு தட்டலாம் !!!



கனவின் விழிப்பறையில்

காரடர்ந்த இருட்டறையில்

நெடுந்தூர

பயணக் களைப்பில்

நெல் முனையாய்

ஓய்ந்திருந்தால்

சிற்றெறும்புகள் கடித்தன

செவ்வந்திகள் சிணுங்கின

அத்தனையும்

பொதிந்து வைத்தேன்

நினைவின் இழுப்பறையில்

பிறிதொரு நாள் தூசு தட்ட ...!

24 comments:

நட்புடன் ஜமால் said...

நிறைய தட்டனும்.

நட்புடன் ஜமால் said...

அத்தனையும் பொதிந்து வைத்தேன் நினைவின் இழுப்பறையில் பிறிதொரு நாள் தூசு தட்ட ...!

மிக அழகு.

நட்புடன் ஜமால் said...

\\கனவின் விழிப்பறையில்\\

இந்த வார்த்தை ரொம்ப பிடிச்சிருக்கு...

அபி அப்பா said...

நல்லாத்தான் இருக்கு இதுவும்!

பழமைபேசி said...

//புரியலைனாலும் படிங்க. //

படிக்கலைன்னாலும் புரிஞ்சுக்குங்க.


நல்லா இருக்கு!!

narsim said...

//சிற்றெறும்புகள் கடித்தன செவ்வந்திகள் சிணுங்கின //

சொல்லாடல் அற்புதம்..

முரளிகண்ணன் said...

நல்லா இருக்குங்க (நல்லாவே புரியுதே. அப்புறம் ஏன் இப்படி ஒரு லேபிள்?)

Ungalranga said...

படம் அருமை....




என்ன பாக்கறீங்க.. கவிதைய பத்தி ஒன்னும் சொல்லைனா...

நீங்க.. எது எழுதினாலும் அருமைதான்..
தனியா வேற சொல்லனுமா?

(கடவுள் இருந்தால் என்னை மன்னிக்கட்டும்...அவ்வ்வ் ;)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நினைவின் இழுப்பறையில் எக்கச்சக்கமா வார்த்தைகள் வச்சிருக்கீங்க புதுசு புதுசா.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நினைவென்னும் இழுப்பறையில் நிறைய வார்த்தைகள் வச்சிருக்கீங்க போல புதுசு புதுசா... :)

KarthigaVasudevan said...

// நட்புடன் ஜமால் said...

\\கனவின் விழிப்பறையில்\\

இந்த வார்த்தை ரொம்ப பிடிச்சிருக்கு...//

நன்றி ஜமால்

KarthigaVasudevan said...

// அபி அப்பா said...

நல்லாத்தான் இருக்கு இதுவும்!//



கவிதைய படிச்சிட்டு தான சொல்றீங்க?! டவுட்டாவே இருக்கு இன்னும்?!நன்றி சித்தப்பா .

KarthigaVasudevan said...

// பழமைபேசி said...

//புரியலைனாலும் படிங்க. //

படிக்கலைன்னாலும் புரிஞ்சுக்குங்க.


நல்லா இருக்கு!!//

நல்லா இருக்கே சொல்லாடல் ,அடுத்த கவிதைக்கு யூஸ் பண்ணிகறேன் பழமைபேசி அண்ணே!

KarthigaVasudevan said...

// narsim said...

//சிற்றெறும்புகள் கடித்தன செவ்வந்திகள் சிணுங்கின //

சொல்லாடல் அற்புதம்..

நன்றி நர்சிம். . .
சொல்லாடல் (2 )

KarthigaVasudevan said...

//முரளிகண்ணன் said...

நல்லா இருக்குங்க (நல்லாவே புரியுதே. அப்புறம் ஏன் இப்படி ஒரு லேபிள்?)

புரிந்தாலும்...புரியலைனாலும் படிங்கன்னு தான போட்ருக்கேன். (எனக்கு சில நேரம் நான் என்ன எழுதினேன்னு புரியாம போயிடும் ; அதுக்கு தான் இப்படி ஒரு லேபில்!!! யார் கிட்டயும் சொல்லிட வேண்டாம்...இந்த ரகஷியத்தை !!!)"கவிதைல இதெல்லாம் சகஜமப்பா !(தேங்க்ஸ் டு கவுண்டமணி)
மத்தபடி நன்றி முரளிகண்ணன் தொடர்ந்து கவிதை படிக்கிறதுக்கு .

KarthigaVasudevan said...

//ரங்கன் said...
படம் அருமை....




என்ன பாக்கறீங்க.. கவிதைய பத்தி ஒன்னும் சொல்லைனா...

நீங்க.. எது எழுதினாலும் அருமைதான்..
தனியா வேற சொல்லனுமா?

(கடவுள் இருந்தால் என்னை மன்னிக்கட்டும்...அவ்வ்வ் ;)))
//

யாருய்யா இது இப்படிலாம் புதுசா கிளம்பி வரீங்க!!! நடக்கட்டும் ...கடவுள் வந்து கண்ணைக் குத்திடப் போறார்!?

KarthigaVasudevan said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

நினைவின் இழுப்பறையில் எக்கச்சக்கமா வார்த்தைகள் வச்சிருக்கீங்க புதுசு புதுசா.. :)


முத்துலெட்சுமி-கயல்விழி said...

நினைவென்னும் இழுப்பறையில் நிறைய வார்த்தைகள் வச்சிருக்கீங்க போல புதுசு புதுசா.. :)

வாங்க முத்தக்கா ...ரெண்டு தடவை பாராட்டினதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிக்கா.

புதியவன் said...

//அத்தனையும்

பொதிந்து வைத்தேன்

நினைவின் இழுப்பறையில்

பிறிதொரு நாள் தூசு தட்ட ...!//

மிக அழகு...வார்த்தைகள் விளையாடுகின்றன கவிதையில்...

KarthigaVasudevan said...

//நட்புடன் ஜமால் said...

நிறைய தட்டனும்.
//

தூசு நல்லா தட்டுங்க மெதுவா தட்டுங்க ...இங்க நிறைய பேருக்கு டஸ்ட் அலர்ஜி ஜமால் ! :)

KarthigaVasudevan said...

// அபி அப்பா said...

நல்லாத்தான் இருக்கு இதுவும்!//

அடடா ...நல்லா இருந்தா சரி தான்!:)
அபிஅப்பாவை கவிதை படிக்க வச்சிட்டோம்ல அப்புறம் என்னா?

KarthigaVasudevan said...

// புதியவன் said...
//அத்தனையும்

பொதிந்து வைத்தேன்

நினைவின் இழுப்பறையில்

பிறிதொரு நாள் தூசு தட்ட ...!//

மிக அழகு...வார்த்தைகள் விளையாடுகின்றன கவிதையில்...//

நன்றி புதியவன்...அடிக்கடி வந்து நம்ம கவிதைக்கு இப்படி நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டுப் போங்க பிரதர் .

அன்புடன் அருணா said...

//நினைவின் இழுப்பறையில்

பிறிதொரு நாள் தூசு தட்ட ...!//

தூசு தட்டத்தான் நமக்கெல்லாம் ரொம்பப் பிடிக்குமே...
நல்லாருக்கு...
அன்புடன் அருணா

ராமலக்ஷ்மி said...

எல்லோரையும் போல எனக்கும் கடைசி இரண்டு வரிகள் மிகப் பிடித்தன.

'நினைவின் இழுப்பறையில்..' இவ்வரி தலைப்பாக இருந்தால் வித்தியாசமாய் அருமையாய் இருக்கும்.

KarthigaVasudevan said...

கொஞ்சம் பழைய கவிதை என்றாலும் நான் கேட்டுக் கொண்டதற்காக படித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி மேடம்."நினைவின் இழுப்பறையில்" இந்த தலைப்பும் அருமை தான்...என்னவோ அப்போது அந்த தலைப்பு சரி எனப் பட்டதில் அதை வைத்தேன்.மாற்றிக் கொண்டால் தவறில்லை.