வெயிலின் நிறம் மஞ்சளாமே!?
வெளிர் மஞ்சள்
மேற்சுவரும்
அடர் மஞ்சள்
ஜன்னல்களும்
அழுக்கு மஞ்சள்
அடிச் சுவரும்
இருப்பதனால் மட்டுமே
அந்த
வீடொன்றும்
வெயில் நிறத்து வீடில்லை
மஞ்சள் மினுங்கும்
பளிங்கு முக
மஞ்சுளா
மணமாகிப் போகும் வரை
வெயில் போலும்
மஞ்சள் நிறப் பூசணிப்பூ
தினமொன்றாய்
வாசலில் இட்டதால்
இடுகுறிப் பெயராயிற்று இன்றும் !
இனி என்றென்றும் ...!
வண்ணங்கள் மாறின
வழக்கங்கள் மாறவில்லை
எப்போதும்
அவ்வீடு
வெயில் நிறத்து வீடே !
மஞ்சுளா
இல்லாதேபோனாலும்...;
19 comments:
வெயில் பட்ட வீடு மஞ்சளா நல்லா இருக்கு. அது மஞ்சுளா மஞ்சளா வீடு தான் .அழகா இருக்குப்பா.இன்னும் உங்க பெயர்க்காரணம் புரியாத......
இப்பிடி மறந்து போன மஞ்சுளாவை எல்லாம் கிளறி விட்டு, எங்க மனசை நனைய விடுறதுல உங்களுக்கு ஒரு மகிழ்ச்சீசீ.... என்னா வில்லத்தனம்?? என்னா வில்லத்தனம்????
அபிஅப்பா மான்யம் 1000 பொற்காசுகள்!
நல்லா இருக்கு கவிதை! ஆனா அதே வீடு காலை நேரம் விடிந்தும் விடியாம கொஞ்சம் பசுமஞ்சளா, பனித்துளி வியர்வையோடு இன்னும் அழகா தெரியும்!
உங்க கவிதை எல்லாமே ஒரு மார்கமா இருக்குங்க. புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கு.. ஆனா நல்லா இருக்கு
மஞ்சள் மினுங்கும்
பளிங்கு முக
மஞ்சுளா
மணமாகி\\
அழகான வர்ணனை.
இந்த கவிதை அருமை
ஆஹா, மஞ்சள் வீட்டுக்கு இப்படி ஒரு அர்த்தமா...கவிதை வித்தியாசமா இருக்கு...
நாலு வாரமா நிறைய எழுதி இருக்கீங்க...இன்னும் படிக்கலை...படிச்சிட்டு சொல்றேன்...
உங்கள் அனுபவமா????? ஆ/////
மஞ்சள் நிறத்து வீட்டுக்கு இன்னிக்கு ஒரு கவிதத எழுதியிருக்கீங்க>>>>
நாளைக்கு என்ன நிற வீடோ?? (சும்மா!!! சும்மா!!)
கவிதை நல்லா இருக்குங்க.... ஒரு சைட் அடிச்ச அனுபவம் கவிதையயல் இழைந்தோடுது..
வாங்க வல்லிசிம்ஹன் ...
வல்லிசிம்ஹன் said...
உங்களுக்கு ஏன் டவுட்னு பேரு??
இதுதான் எனக்கு டவுட். அதுவும் மிசஸ் டவுட்:))
மிஸஸ்.டவுட் said...
// வல்லிசிம்ஹன் said...
உங்களுக்கு ஏன் டவுட்னு பேரு?? இதுதான் எனக்கு டவுட். அதுவும் மிசஸ் டவுட்:))
ஸ்ரீ வில்லிபுத்தூர்ல இருந்து வந்தா இப்படிலாம் டவுட் வருமா என்ன?
பக்கத்து ஊர்க்காரங்களா போய்டீங்க அதனால உங்க டவுட்டைக் கிளியர் பண்ணித்தான் ஆகணும்.பரணி கயல் இது ரெண்டும் என் நிக் நேம்ஸ் ,இந்தப் பேர்ல எழுதும் போது யாரும் என் ப்ளாக்கை ரீட் பண்ணதா தெரியலை,சும்மா ஒரு தமாசுக்கு வச்ச பேர் தான் மிசஸ்.டவுட். அவ்ளோ தான் ,என்ன உங்க டவுட் .
வல்லிசிம்ஹன் said...
ஓ தீர்ந்தது.
கயல், பரணி. ம்ம்ம்ம்ம்.
சரி இனிமே ரெகுலரா படிக்கறேன்ன்.
அழகரும் குதிரையும்,
கவிதையும் நல்லா இருந்ததுப்பா
வல்லிசிம்ஹன் said...
தங்க்கவேலுகிட்ட எம்.சரோஜா 'அடுத்தவீட்டுப் பெண்ணி'லகேப்பாங்க...''.வேஷத்தை இத்தோட நிறுத்தப் போறீஇங்களா. இல்லை இத்தோட முடிச்சுக்கறதா??அப்டீன்னு:)
வாழ்த்துகள். நாங்க திருனெல்வேலிங்க. வில்லிபுத்தூர்ல பாசம். இப்ப சென்னை.
மிஸஸ்.டவுட் said...
// வல்லிசிம்ஹன் said...
சரி இனிமே ரெகுலரா படிக்கறேன்ன்.
அழகரும் குதிரையும்,
கவிதையும் நல்லா இருந்ததுப்பா.
நன்றி வல்லிசிம்ஹன்....
வல்லிசிம்ஹன் said...
தங்க்கவேலுகிட்ட எம்.சரோஜா 'அடுத்தவீட்டுப் பெண்ணி'லகேப்பாங்க...''.வேஷத்தை இத்தோட நிறுத்தப் போறீஇங்களா. இல்லை இத்தோட முடிச்சுக்கறதா??அப்டீன்னு:)
வாழ்த்துகள். நாங்க திருனெல்வேலிங்க. வில்லிபுத்தூர்ல பாசம். இப்ப சென்னை.
இது வேசமில்லைங்க,எழுத்துக்கள் மேல உள்ள பாசம்!எல்லாருக்குமே நாம எழுதற விஷயம் யாருக்காவது போய் சேரணும்னு குறைந்தபட்ச விருப்பம் இருப்பது நியதி,மத்த பெயர்கள்ல எழுதும்போது கவனிக்கப்படலை,இந்தப் பெயர் கவனிக்கப் பட்டது ,அவ்ளோ தான் ,எப்படியோ நாம எழுதறதை நாலு பேர் படிச்சா சரி தானே!
பேர்ல என்னாங்க இருக்கு!!!
திருநெல்வேலியா நீங்க? தகவலுக்கு நன்றி .
வல்லிசிம்ஹன் said...
ஒரு நல்லது நடக்கும்னா பேரை மாத்திக்கைறதுல என்ன தப்பு மிஸஸ.டவுட்:)
அந்தப் படத்தில முருகன், வள்ளியைக் கல்யாணம் கட்ட வேடனாய் விருத்தனாய் வருவதைப் போல மாறி மாறி வருவார். எல்லாம் வள்ளிஎன்னும் நற்பலனை அடையவே.
அதுபோல உங்கள் பதிவும் மேலும் சிறக்க வாழ்த்துகள். ஓகேயா.
இவ்ளோ சொல்லிட்டு இப்போ மறுபடியும் பெயர்காரணம் முதல்ல இருந்து ஆரம்பிக்கறீங்களே?! இது நியாயமா?
// பழமைபேசி said...
இப்பிடி மறந்து போன மஞ்சுளாவை எல்லாம் கிளறி விட்டு, எங்க மனசை நனைய விடுறதுல உங்களுக்கு ஒரு மகிழ்ச்சீசீ.... என்னா வில்லத்தனம்?? என்னா வில்லத்தனம்????//
ஓ...அப்படிப் போகுதா கதை?! சரி கோகிலான்னு இன்னொரு கவிதைல ஏதாச்சும் பேர் போட வேண்டி வந்தா அங்கயும் வந்து இப்பிடி தான் சொல்லுவீங்களா பழமைபேசி அண்ணே.இதொண்ணும் சரியில்லை ...இப்பவே சொல்லிப்போட்டேன்.
//அபி அப்பா said...
அபிஅப்பா மான்யம் 1000 பொற்காசுகள்!
நல்லா இருக்கு கவிதை! ஆனா அதே வீடு காலை நேரம் விடிந்தும் விடியாம கொஞ்சம் பசுமஞ்சளா, பனித்துளி வியர்வையோடு இன்னும் அழகா தெரியும்!
//
வர்ணனை எல்லாம் அப்பால பார்த்துக்கிடலாம் .மொதல்ல பொற்காசு என்னிக்கி அனுப்பறீங்கா அதை சொல்லுங்க சித்தப்பூ ;பொட்டி காலி சீக்கிரம் நிரப்புங்க .ஆயிரம் பொன் காசுனா கிராம் 1250 ரூபாய் இல்லையா இப்போ!!! கணக்குப் போட்டு அனுப்புங்க ...
// வீ. எம் said...
உங்க கவிதை எல்லாமே ஒரு மார்கமா இருக்குங்க. புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கு.. ஆனா நல்லா இருக்கு//
எப்படியோ கவிதை நல்லா இருக்குன்னு சொன்னீங்களே ...அப்போ சரி தான்.
// நட்புடன் ஜமால் said...
மஞ்சள் மினுங்கும்
பளிங்கு முக
மஞ்சுளா
மணமாகி\\
அழகான வர்ணனை.
நன்றி ஜமால்
//முரளிகண்ணன் said...
இந்த கவிதை அருமை
நன்றி முரளிகண்ணன்
//அது சரி said...
ஆஹா, மஞ்சள் வீட்டுக்கு இப்படி ஒரு அர்த்தமா...கவிதை வித்தியாசமா இருக்கு...
நாலு வாரமா நிறைய எழுதி இருக்கீங்க...இன்னும் படிக்கலை...படிச்சிட்டு சொல்றேன்...//
நன்றி அதுசரி....
அதுக்கென்ன போய் பார்த்துட்டு மெதுவாவே வாங்க ...ஆனா மறக்காம கருத்து சொல்லிட்டுப் போகணும்....ஆமாம் .
// ஆதவா said...
உங்கள் அனுபவமா????? ஆ/////
மஞ்சள் நிறத்து வீட்டுக்கு இன்னிக்கு ஒரு கவிதத எழுதியிருக்கீங்க>>>>
நாளைக்கு என்ன நிற வீடோ?? (சும்மா!!! சும்மா!!)
கவிதை நல்லா இருக்குங்க.... ஒரு சைட் அடிச்ச அனுபவம் கவிதையயல் இழைந்தோடுது..//
என்ன கொடுமை சார் இது ? நான் மிசஸ்.டவுட் நான் எப்படி மஞ்சுளாவை சைட் அடிக்க முடியும் ?நீங்களும் கன்பியுஸ் ஆகி அடுத்து வரவங்களையும் கன்பியுஸ் பண்ற மாதிரி இருக்கே கமெண்டு . கவிதையை பாராட்டினதுக்கு நன்றி ஆதவா .
அய்ய, சாரிப்பா. இனிமே உங்க பெயர்க்காரணம் கேக்க மாட்டேன்:)
மிஸஸ் கயல் பரணி டவுட்:)
நல்லாருக்கு டவுட்..கவிதையும் படமும்!
லேபிளும் நல்லாதான் இருக்கு :-))
இதுவும் மிக நல்ல கவிதை. மஞ்சுளாக்கள் எப்போதும் ஆயுள் முழுக்க மஞ்சள் நிறத்து வீடுகளில் இருக்க முடிவதில்லை, மஞ்சுளா இல்லாத மஞ்சள் வீடு மென்சோகத்தை மஞ்சளாய் பூசி நிற்கிறது.
யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் நாவல் படிச்சிருக்கீங்களா, படிக்க வில்லையெனில் அவசியம் வாங்கி படிங்க, சந்தியா பதிப்பகம் னு நினைக்கறேன்.
Post a Comment