Showing posts with label புரியலைனாலும் படிங்க(சும்மா). Show all posts
Showing posts with label புரியலைனாலும் படிங்க(சும்மா). Show all posts

Thursday, February 12, 2009

வெயில் நிறத்து வீடு


வெயிலின் நிறம் மஞ்சளாமே!?

வெளிர் மஞ்சள்
மேற்சுவரும்
அடர் மஞ்சள்
ஜன்னல்களும்

அழுக்கு மஞ்சள்

அடிச் சுவரும்

இருப்பதனால் மட்டுமே

அந்த

வீடொன்றும்

வெயில் நிறத்து வீடில்லை

மஞ்சள் மினுங்கும்

பளிங்கு முக

மஞ்சுளா

மணமாகிப் போகும் வரை
வெயில் போலும்

மஞ்சள் நிறப் பூசணிப்பூ

தினமொன்றாய்

வாசலில் இட்டதால்

இடுகுறிப் பெயராயிற்று இன்றும் !

இனி என்றென்றும் ...!

வண்ணங்கள் மாறின

வழக்கங்கள் மாறவில்லை

எப்போதும்

அவ்வீடு

வெயில் நிறத்து வீடே !

மஞ்சுளா

இல்லாதேபோனாலும்...;