Thursday, January 29, 2009

பொன்னியின் செல்வன் ரசிக சிகாமணிகளுக்கு சமர்ப்பணம்

அது ஒரு நாவலாக இருக்கட்டும் அல்லது சிறுகதையாக இருக்கட்டும் வாசிக்கும் போதே அதன் கேரக்டர்களோடு நாம் மனதளவில் நெருங்கி விடுவோம்,சில கேரக்டர்கள் சட்டென்று தோழமை ஆகி மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடும் ...

சில கேரக்டர்கள் வெறுப்பைத் தரும் ...வெகு சில பிரமிப்பைத் தரும்...இன்னும் சில கேரக்டர்கள் பிரமிப்பைத் தந்து அவர்களைப் பின்பற்றலாம் என்ற உணர்வைத் தரும் .சில கேரக்டர்கள் ரொம்பவே புத்திசாலித்தனத்துடன் வந்து நம்மை சபாஷ் போட வைக்கும்.

சில அனுதாபப் பட வைக்கும் ...சில கேரக்டர்கள் வெடித்துச் சிரிக்க வைக்கும் .சரி ...சரி விட்டால் இப்படியே பிளேடு போட்டுக் கொண்டு போகலாம் தான் ...விசயத்துக்கு வருகிறேன் இப்போது ;

பொன்னியின் செல்வன் நாவல் வாசித்து அதன் ரசிக சிகாமணிகளானவர்களுக்கு இந்தப் பதிவை சமர்பிக்கிறேன் .பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கினால் இப்போதைக்கு பீல்டில் இருக்கும் எந்தெந்த நடிகர்கள் எல்லாம் ஓரளவுக்கேனும் பொருந்துவார்கள் என்ற கற்பனை தான் இந்தப் பதிவு .

படிச்சிட்டு திட்றவங்க திட்டுங்கோ உங்களுக்குள்ள ....!

பாராட்றவங்க எல்லாம் பாராட்டுங்கோ எல்லாருக்கும் தெரியறாப்பில?!

போலாமா ...பதிவுக்கு தாங்க !

சரி முதல்ல கேரக்டர்களை வரிசைப் படுத்தலாம் .

  1. வந்தியத்தேவன் கமல்...கமல் ..கமல் (வேற யாரும் பொருந்தலை )
  2. குந்தவை ரம்யாகிருஷ்ணன்
  3. நந்தினி ஐஸ்வர்யா ராய்
  4. அருண் மொழி பிரபாஸ் (தெலுகு ஹீரோ )
  5. வானதி சரண்யா மோகன் (பாலக்காட்டு மோகினி)
  6. அமுதன் பரத்
  7. பூங்குழலி பிரியாமணி
  8. மணிமேகலை அசின் ;அசின் கிடைக்கலைனா மீரா ஜாஸ்மின்
  9. சுந்தர சோழர் அவினாஷ் (சந்திரமுகில சாமியாரா வருவாரே அவரு தான்)
  10. வானவன் மாதேவி ஜெயந்தி
  11. வீர பாண்டியன் - நெப்போலியன்
  12. செம்பியன் மாதேவி - லக்ஷ்மி
  13. கண்டராதித்தர் - விஜய குமார்
  14. மலையமான் -
  15. பெரிய பழுவேட்டரையர் -சத்யராஜ்
  16. சின்ன பழுவேட்டரையர் - சரத் குமார்
  17. மந்தாகினி(ஊமை ராணி) - சுஜாதா
  18. மதுராந்தகன் - சரத்பாபு (அப்பாஸ் கூட ஓகே தான் ஆனால் குந்தவைக்கு சித்தப்பானா கொஞ்சம் இடிக்கும் அதான் சரத்பாபுகாரு )
  19. அநிருத்த பிரம்மராயர் - மோகன்லால்
  20. ஆழ்வார்க்கடியான் - பிரகாஷ் ராஜ் இல்லனா அவர் சகலை ஸ்ரீஹரி நல்லா பொருந்துமோ!
  21. ஆதித்த கரிகாலன் விஷால்
  22. கந்தமாறன் ஸ்ரீமன்
  23. பார்த்திபேந்திரன் கரண்
  24. ரவிதாசன் அப்பாஸ்
  25. குடந்தை சோதிடர்- டெல்லி கணேஷ் (வேற யாருங்க பொருந்துவாங்க இந்த கேரக்டருக்கு?)
  26. கடம்பூர் சம்புவரையர் ராதாரவி
  27. கோடியக்கரை பூங்குழலியின் அப்பா - நாசர்
  28. சேந்தன் அமுதனின் தாய் சாந்தி கிருஷ்ணா (பன்னீர் புஷ்பங்கல்ல வருவாங்க இல்ல அவங்க தான் )

இதுக்கு மேலயும் கல்கி அதுல நிறைய கேரக்டர்ஸ் உலவ விட்ருக்கார்...அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம் ...இதுவரைக்கும் சொன்ன கேரக்டர்ஸ் பத்தி யோசிச்சு பாருங்க...

கொஞ்சம் பொருந்தலாம் .

உங்கள் பொன்னான கருத்துக்களையும் ...இந்தப் பதிவு பற்றிய விவாதங்களையும் வரவேற்கிறேன் .

வந்து ஏதாச்சும் சொல்லிட்டுப் போங்கப்பா !!!

சும்மா ஒரு கற்பனை தான்?????!!!!!

எல்லாரும் உங்க மண்டைக்குள்ள இருக்கற பல்ப்பை கொஞ்சம் எரிய வுடுங்க !

25 comments:

நட்புடன் ஜமால் said...

நான் இரசிகன் தான்

சிகாமணி இல்லை

நட்புடன் ஜமால் said...

\\சரி ...சரி விட்டால் இப்படியே பிளேடு போட்டுக் கொண்டு போகலாம் தான் ...விசயத்துக்கு வருகிறேன் இப்போது\\

நல்ல வேளை இப்பதான் மூச்சு வந்துது.

நட்புடன் ஜமால் said...

பூங்குழலி பிரியாமணி

மந்தாகினி (ஊமை ராணி )- சுஜாதா

கந்தமாறன் - ஸ்ரீமன்

இதெல்லாம் அருமை.

(ஆமா என்ன நிறைய தெலுங்கு வாட வீசுதே.)

Unknown said...

no place for Surya(Kakka Kakka), Vikram ? !! :)

அபி அப்பா said...

இல்லை டவுட் அக்கா! நான் இந்த பதிவிலிருந்து வெளிநடப்பு செய்கின்றேன். ஆனா வெளியே இருந்து ஆதரவு தாரேன்!

ஏன்னா வெந்தயதேவனா நான் இல்லியா, அய்யகோ! இது அடுக்குமா! தகுமா! நியாயமா!

அபி அப்பா said...

இந்த பதிவினிலே என் இந்த பின்ன்னூட்டத்துக்கு அம்பி வந்து என்ன பதில் சொல்ல போறாரோன்னு கவலையா இருக்கு!

அபி அப்பா said...

சரி துளசி ரீச்சர்! பொ.செ க்கு நம்ம பதிவர்கள்ல யார் யார் பொருத்தமா இருப்பாங்கன்னு சொல்லுங்க! ஆனா தொப்பை இருப்பதால் ஆழ்வார்கடியனை கோவியார்ன்னு சோல்ல கூடாது! அம்புட்டுதேன்!

முரளிகண்ணன் said...

மிக சுவையான ரசிக்கும்படியான தேர்வுகள்

நசரேயன் said...

படத்தை டைரக்ட் செய்ய எனக்கு தான் வாய்ப்பு கொடுக்கணும்

அமுதா said...

ரொம்ப யோசிக்கிறீங்க... சில கேரக்டர்ஸ் எனக்கு ஒப்புதல் இல்லை... இருந்தாலும் முயற்சிக்கு பாராட்டுக்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஹா... ஹா...


எல்லா பாத்திரங்களுக்கும் கமல் கமல் கமல்.................

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நான் இப்படி ஒரு பதிவிட்டு இன்னும் திட்டு வாங்கி கொண்டே இருக்கிறேன்.

தேவன் மாயம் said...

உங்கள் பொன்னான கருத்துக்களையும் ...இந்தப் பதிவு பற்றிய விவாதங்களையும் வரவேற்கிறேன் .

வந்து ஏதாச்சும் சொல்லிட்டுப் போங்கப்பா !!!

சும்மா ஒரு கற்பனை தான்?????!!!!!

எல்லாரும் உங்க மண்டைக்குள்ள இருக்கற பல்ப்பை கொஞ்சம் எரிய வுடுங்க !///

சின்ன மாற்றம்!!!
பெரிய வாய்ப்பு உங்களுக்கு தருகிறேன்.எனக்கு சின்ன சான்ஸ் தரணும், சரியா!
வந்தியத்தேவன்(தெவா) ரோல் எனக்கு,உங்களுக்கு ப்ரொடுயுசர் சான்ஸ்!!!
எப்படி?
தேவா...வந்தியத்தேவா...
இந்த வசனமும் உண்டு..

தேவன் மாயம் said...

பணம் ரெடி பண்ணிட்டு
ஃபோன் பண்ணுங்க!!!

மேவி... said...

நல்ல தினக் பண்ணுரிங்க..
எப்படி இப்பிடி எல்லாம் முடித்து உங்களால் மட்டும்.....

வீ. எம் said...

எங்களின் கனவுக்கன்னி நமீதாவை இருட்டடிப்பு செய்த உங்களை கண்டிக்கிறோம்..

BY THE WAY where is the "comitted" Ganapathy Vaathiyaar????

ராஜ நடராஜன் said...

//வந்தியத்தேவன் கமல்...கமல் ..கமல் (வேற யாரும் பொருந்தலை )//

பதிவைப் படித்தவுடன் வந்தியத்தேவன் கமல் மனசுக்குள் வந்துச்சு.

ராஜ நடராஜன் said...

முழுப்பட்டியலையும் இப்ப படிச்சேன்.படம் ரிலீஸான மாதிரிதான்:)

குடுகுடுப்பை said...

வந்தியத்தேவனாக ஒரு சோழன் தான் நடிக்கமுடியும் அந்த வகையில் நான் பொருத்தமாக இருப்பேன் என நினைக்கிறேன்.:-))))))))

narsim said...

எல்லாமே ஓக்கே..ஆனா கமலுக்கு பதில் ஜேகே ரித்தீஸ் தான் கரெக்ட்டா இருப்பார்னு வித்யா சொன்னாங்க..

தமிழ்தினா said...

கமலை ரசிக்க நானும் தயாரே என்றாலும், வந்தியத்தேவரின் குறும்பு கொப்பளிக்கும் நடையிலான கதாப்பாத்திரமும், இளமையும்... ம்ஹூம்.. கமல்... :)

நான் கமல் ரசிகன்/ ரசிகை என சண்டைக்கு வருபவர்கள்... தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்... வந்தியத்தேவருக்கு இளமை வேண்டும்.. உண்மையான இளமை...

சூர்யா சரியாக இருப்பார்.. விக்ரமும் சரியாக இருப்பார்தான் என்றாலும், அவரும் கூட வந்தியத்தேவருக்கான வயது கடந்துவிட்டார்.

மந்தாகினி - சுஜாதா...!? நந்தினியாக.. ஐஸ்வர்யா ராய் எனும்போது, மந்தாகினி எப்படி சுஜாதா...!? ஐஸ்வர்யா ராய் என்ன சுஜாதா போலவா இருக்கிறார்..!? மந்தாகினியும், நந்தினி தேவியும் ஒரே போல் இருப்பதாக வந்தியத் தேவர் முதல் ஆழ்வார்க்கடியான் வரைத் தடுமாறுவதாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது...

ரவிதாஸனாக.. அப்பாஸ்... வேண்டாம்.. வலிக்கிறது... அந்த கதாப்பாத்திரம், மிக வலிவான ஒரு மனிதர் நடிக்க வேண்டியது.. சாக்லேட் பேபி அல்ல...

மணிமேகலையாக அசின்...!???? மணிமேகலை கருப்பழகி என்பதாக வருமே.. மீரா ஜாஸ்மின் வயது அதிகமாகத் தெரியும் வாய்ப்புண்டு..

எனக்கென்னவோ மணிமேகலை என்றவுடன் சின்னத்திரை நடிகை ஸ்ரீவித்யா ( கோலங்கள் ‘ஆர்த்தி’ க்கு கறுப்பு நிறமடித்தே தோன்றும்... )

நந்தினி மற்றும் மந்தாகினியாக நடிக்க ஷில்பா ஷெட்டி சரியாக இருப்பார் எனத் தோன்றுகிறது.

மேலும், பழைய காலத்திலேயே இருக்க வேண்டாமே.. இப்போது தமிழில் நடிக்கும் பல திறமையான நடிகர்கள் உங்கள் கண்களுக்குப் படாதது ஆச்சர்யம்...

பிரசன்னா, பிருத்விராஜ், நந்தா, நரேன்... அனுபவத்தில் குறைவானவர்களாய் இருக்கலாம்.. அவரவர் நடித்தப் படங்களில் அவரவர் வேலையை மிகச் சரியாக செய்த நடிகர்கள்... பருத்திவீரன் ‘ கார்த்தி’
.... கமலுக்கும் கிடைக்காத முதல் பட வரவேற்பு, நடிகர் திலகத்திற்கு பிறகு கிடைத்த ஒரே நடிகர்...

சுந்தர சோழராக, சிவக்குமார் நடிக்கலாமே...முதன்மந்திரி அநிருத்தராக.. நெப்போலியன், வீரபாண்டியனாக சத்யராஜ், கற்றது தமிழ் ‘ஜீவா’ பார்த்திபேந்திரராய் சரியாக இருப்பார்.

பெரிய பழுவேட்டரையராகவோ, சின்ன பழுவேட்டரையராகவோ விஜயகுமார் அவர்களும், ராஜ்கிரண் அவர்களும் நடித்தால் நன்றாக இருக்கும்..

ஆழ்வார்க்கடியானாக ஆந்திர நடிகர் பிரம்மானந்தம் “மொழி” செகரட்டரி நன்றாக இருப்பார் எனப் படுகிறது.

இவையெல்லாம் என் சொந்தக் கருத்துகள் மட்டுமே..

தெலுங்கு நடிகர் “பிரபாஸ்” நல்ல தேர்வு.

சம்புவரையராக ‘ராதாரவி’ யும் நல்ல தேர்வு.

குந்தவைக்கு ‘சித்தப்பா’ வாக ‘பரத்’ வந்தால் பர்வாயில்லையா என்ன..!? ஆனால் ‘ சேந்தன் அமுதன்’ பொருந்துவார்...

இன்னும் இன்னும் சொல்ல நிறைய...

நன்றிகள் தங்களுக்கு....

அது சரி(18185106603874041862) said...

//
ஆதித்த கரிகாலன் விஷால்
///

கரிகாலன் விஷால்......இது சூப்பர் நக்கலா இருக்கே....:0)))

உங்க செலக்ஷன்லாம் ரொம்ப நல்லாருக்கு.....ஒரு ப்ரொட்யூசரா நீங்க உங்க சாய்ஸை சொல்லிட்டீங்க....ஆனா ஒரு டைரக்டரா எனக்குன்னு ஒரு உரிமை இருக்குல்ல?? :0))

வந்தியத் தேவன் : "தமிழ்நாட்டுப் புலி" விக்ரம்

குந்தவை: ரம்யா கிருஷ்ணன்?? ரொம்ப ஓல்டுங்க...எங்க அப்பா காலத்து ஃபிகரு... அதனால ஐஸ்வர்யா ராய்...

நந்தினி: கொஞ்சம் வில்லத்தனமான ரோல்...அதனால தீபிகா படுகோன்...

அருண்மொழி: அப்பப்ப வர்ற உப்புக்கு சப்பாணி ரோல்...அதனால எங்க அண்ணன் அஜீத்!

வானதி: எனக்கு ரொம்ப பிடிச்ச பேரு...அதனால சரண்யா மோகனே இருக்கட்டும்..

அமுதன்: பரத் ஓக்கே...ஆனா அவரு இந்தப் படத்துக்கு அப்புறம் நடிக்கிறதை விட்றணும்!


பூங்குழலி: ம்ம்ம்....போட் எல்லாம் ஓட்டணும்...நயந்தாரா...


மணிமேகலை: அசின்??? ம்ம்ம்ம்.....வேணாம்...கதைப்படி அவங்க கருப்பா இருக்கணும்....மேக்கப் இல்லாம கருப்பா இருக்கறது....ஸ்னேகா...

பீப்பீ (எ) பெரிய பழுவேட்டரையர்: சத்யராஜ் சூப்பர்!

ரவி தாசன்: சாமி படத்துல ஒருத்தர் வில்லனா நடிச்சாரே அவரு...இல்லாட்டி ஆசிஷ் வித்யார்த்தி...(கில்லி படத்துல விஜய் அப்பாவா வருவாரே அவர் தான்)

கதை: கல்கி கிருஷ்ணமூர்த்தி...

தயாரிப்பு: மிஸ்டர் & மிஸஸ் தேவ்


வசனம், பாடல்கள், இயக்கம்: அது சரி..

தேவ் மூவிஸ்

பொன்னியின் செல்வன்....

டிசம்பர்ல ரிலீஸ் பண்ணிரலாம்...சீக்கிரம் ஃபைனான்ஸ் ரெடி பண்ணுங்க...காசு எதுனா பிரச்சினைன்னா நம்ம குடுகுடுப்பை சாரை கேளுங்க! :0))

GIRIJAMANAALAN said...

இங்கே எனது முதல் வருகை இது!
நகைச்சுவைக்கென்று என் நண்பர் களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டிய தளங்களில் ஒன்று இது! மகிழ்ச்சி!

- கிரிஜா மணாளன்
www.girijamanaalan-humour.blogspot.com
www.girijanandha-humour.blogspot.com
www.humour-garden.blogspot.com

Thamiz Priyan said...

மந்தாகினி & நந்தினி = Shwetha Menon
http://en.wikipedia.org/wiki/Shwetha_Menon

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தமிழ் பிரியன் said...

மந்தாகினி & நந்தினி = Shwetha Menon
http://en.wikipedia.org/wiki/Shwetha_Menon
//

அப்படி ஒன்றும் விக்கியில் போடவில்லையே தல