Saturday, January 24, 2009

மரத்துப் போன மரப்படிகள் ...!

உடைந்த கண்ணாடிகளாய்

சிதறிய உறவுகள்

ஒட்ட வைக்க முயன்றாலும்

கிட்டுவதெல்லாம்

ஒழுங்கில்லா பிம்பங்களே

முக்கோணத்தின் மூலை விட்டமாய்

ஒட்டாமல் உதறிபிரிந்தவற்றை

சட்டமாய் ஒதுக்கித்தள்ள

மனமில்லாவிட்டாலும்

சற்றேனும்

மறந்த்திருக்க

வேலைகளும் காத்திருக்க

சட்டென்று வீசி எறிந்தேன்

உச்சிப்பரண் மீது

லேசாகிபோனது போல்

நடித்த மனதுடன்

நடந்து கடந்தேன்

என் வீட்டு பரணின் மரப்படிகளை ...!!!

மரத்துப் போகும் மனக்காயங்கள்

என்ற

உளுத்துப் போன நம்பிக்கையோடு ...?!

6 comments:

பழமைபேசி said...

வணக்கம்! நல்லா இருக்கு!!


வீட்டுப்பக்கம் வந்தீங்க...நான் அப்ப, வேலையா வெளில போய்ட்டேன்... கோவப்பட்டுடாதீங்க...

அபி அப்பா said...

super kathai! nallaa irukku. mudivum nallaa irukku:-))

தாரணி பிரியா said...

supera irukkunga mrs. doubt. mudivu summa nachunu irukku

நசரேயன் said...

நல்லா இருக்கு

புதியவன் said...

//உடைந்த கண்ணாடிகளாய்

சிதறிய உறவுகள்

ஒட்ட வைக்க முயன்றாலும்

கிட்டுவதெல்லாம்

ஒழுங்கில்லா பிம்பங்களே//

அருமையான வரிகள் மன உணர்வுகளை படம் பிடித்தது போல் இருக்கிறது வார்த்தைகள்...

ராமலக்ஷ்மி said...

//லேசாகிபோனது போல்

நடித்த மனதுடன் //

ரசிக்க வைக்கின்றன வரிகள். கனக்க வைக்கிறது கவிதை.