Wednesday, January 7, 2009

வால்பாறை...வட்டப்பாறை...மயிலாடும் பாறை...மஞ்சள் பாறை...பாறை!!!

மலை ஏற

ஆசை ...!

வால் பாறை

வட்டப்பாறை

வழுக்குப்பாறை

நொடியில் தாண்டி

இலைப்பச்சை

தளிர்பச்சை

கரும் பச்சை

மரச்செடிகள்

கண் காணாப் புறந்தள்ளி

ஓடோடி சிகரம் தொட்டேன் ;

என் வீட்டு மொட்டை மாடி காண...

மலை ஏறிய பின் தான்

பின் தான் ...

பின் தான் ...

தெரிந்தது !

மாடியிலிருந்த

பிரம்மாண்டமிங்கே

மலையிலிருந்த

எலிப் புழுக்கை முன்

செத்துச் சுண்ணாம்பாக

ஏமாற்றத்தில் துவண்டு

மேலிருந்து கீழ் நோக்க

உச்சி மீது வானிடிந்து வீழ்ந்ததடா...

வந்த வழி தான் மறந்து போனதடா ...

இதோ

காத்திருக்கிறேன்

ஆடு மேய்க்கும்

சிறுவர்களுக்காய்...?!

6 comments:

தேவன் மாயம் said...

உச்சி மீது வானிடிந்து வீழ்ந்ததடா...

வந்த வழி தான் மறந்து போனதடா ...

இதோ

காத்திருக்கிறேன்

ஆடு மேய்க்கும்

சிறுவர்களுக்காய்...?!///

நல்லா இருக்கு !!!

குடுகுடுப்பை said...

கவிதை நல்லா இருக்கு

நானும் காத்திருக்கிறேன்
சிறுவன் மேய்க்கும் ஆட்டுக்காக:))))))

நட்புடன் ஜமால் said...

ம்ம்ம் ...

நல்லா இருக்குங்க.


(வால்பாறை வட்டப்பாறை - ஏதோ பாட்டு இருக்கு தானே)

KarthigaVasudevan said...

//thevanmayam said...

உச்சி மீது வானிடிந்து வீழ்ந்ததடா...

வந்த வழி தான் மறந்து போனதடா ...

இதோ

காத்திருக்கிறேன்

ஆடு மேய்க்கும்

சிறுவர்களுக்காய்...?!///

நல்லா இருக்கு !!!//

நன்றி தேவன்மயம்

KarthigaVasudevan said...

//குடுகுடுப்பை said...
கவிதை நல்லா இருக்கு

நானும் காத்திருக்கிறேன்
சிறுவன் மேய்க்கும் ஆட்டுக்காக:))))))//

குடுகுடுப்பை அண்ணா ஆட்டுக் கறிக்கு இப்படியா அலைவாங்க!!!? அடடா

KarthigaVasudevan said...

//நட்புடன் ஜமால் said...
ம்ம்ம் ...

நல்லா இருக்குங்க.


(வால்பாறை வட்டப்பாறை - ஏதோ பாட்டு //

பாட்டு இருக்கு,மால்குடி சுபா பாடினது ,ரொம்ப பாப்புலர் ,எனக்கு அந்தப் பாட்டு லிங்க் தெரியலை youtube ல தேடுங்க கிடைக்கும்,