Friday, November 21, 2008

சிரி...சிரி...சிரி...சிரி(அட சும்மா சிரிங்க சார்)

சிரி...சிரி...சிரி...சிரி!!!சிரிக்கத் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்று பெயர் !!!
யாரு சொன்னா? அப்போ நாங்கலாம் யாராம்? எங்களுக்கும் சிரிப்பு வரும்ல ?நாங்களும் சிரிப்போம்ல?

ஏய் பூனைக்குட்டி அக்கா வாய மூடிட்டு சத்தம் போடமா சிரிக்கத் தெரியாதாக்கும்!இந்தா பாரு இங்கன ...ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...இப்பிடித்தான்....இப்பிடித்தான்...சிரி...சிரி...சிரி...சிரி... !!!
அடங்கொக்கா...மக்கா....இன்னாத்துக்கு வாய மூடிக்கனும்? நான் இப்பிடித்தான் சிரிப்பேன்...இன்னான்றீன்ங்க இப்போ?
சிரிக்கிறதுல என்னப்பா பாலிடிக்சு? என்னைய மாதிரி கூட சிரிச்சுட்டு போங்களேன்!
எந்நேரமும் தண்ணியிலேயே இருக்கான்டான்னு திட்ராகளே நாட்டுக்குள்ள? தண்ணில கிடக்கற சுகமே சுகம்...அதான் இந்தச் சிரிப்பு...சும்மா சிரிச்சுப் பழகலாம் வாங்கண்ணா...!!!
புலி புல்லைத்தான் திங்க கூடாதுன்னு சொன்னாங்க,சிரிக்கக் கூடாதுன்னு எல்லாம் யாரும் சொல்லலை!!! எங்கே என் முன்னாடி வந்து யாராச்சும் சிரிக்காதேன்னு சொல்லித்தான் பாருங்களேன் ...ஒரு தடவை மட்டும் ப்ளீஸ் !!!

அந்தப் புலிப்பய சிரிக்கான் பாரு ...நான் சிங்கம்யா...சிங்கம் சிரிக்காட்டிப் போனா வெங்கம் பயனு சொல்லிருவாக அது வேற அசிங்கம் !!! அதான் இந்தச்சிரிப்பு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
டிஸ்கி: இந்தப் புகைப் படத் தொகுப்புக்குச் சொந்தகாரி என் அருமை பாப்பு மட்டுமே!!! இதிலுள்ள உப்புச் சப்பில்லாத கமெண்டுகள் மட்டுமே எனக்குச் சொந்தம் .
எத்தனை நாட்களுக்குத் தான் சீரியஸ் பதிவுகள் மட்டுமே போட்டுக் கொண்டு இருப்பது ?
கொஞ்சம் போர் அடித்தால் இப்படித்தான் ஆகி விடுகிறது சமீப காலங்களாய்...!
பாப்பு வந்து இன்றைக்கு என் போட்டோ கலெக்சனை வைத்து ஒப்பேற்றி விட்டாயே அம்மா !!! என்று சொன்னாலும் பரவாயில்லை !
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்?
மனிதர்களின் சிரிப்பை விட விலங்குகளின் சிரிப்பு நன்றாகத்தான் இருக்கிறது .
அதென்னவோ முன்பு என் அப்பா...பிறகு என் கணவர் ...வேலையில் சேர்ந்த பிறகு இப்போது என் தம்பியும் கூட (வேலையில் சேருவதற்கு முன் அவன் பாரபட்சமே இல்லாமல் எல்லா சேனல்களிலும் பாட்டு மட்டுமே கேட்பான்) இப்படி என் வீட்டு ஆண்கள் எல்லோருமே காமெடி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் தான் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் ...சிரிக்க வேண்டும் ...எப்பாடு பட்டாவது சிரித்தே ஆகவேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன்,என்றைக்கோ எந்திர மயமாகி விட்ட இந்த உலகில் மூச்சு விடவும்...முழுகிப் போகாமல் மீண்டு எழவும் அந்த நேரம் பயன்படுகிறதோ என்னவோ?உலகம் சுற்றும் வாலிபனில் "வாத்தியார்" பாடுவார் பாருங்கள்"சிரித்து வாழ வேண்டும்பிறர் சிரிக்க வாழ்ந்திடாதேசிக்கு...மங்கு...சிக்கு...மங்கு சிக்க பாப்பா "பாட்டு தான் ஞாபகம் வருகிறது .அதெல்லாம் சரி ;இப்போது டவுட் நேரம்..."பாப்பா சரி ...அதென்ன சிக்கு...மங்கு...சிக்கு...மங்கு ..சிக்க பாப்பா?"யாருக்காவது புரிந்திருந்தால் இங்கு வந்து பின்னூடத்தில் தெரிவியுங்கள்...அந்தப் பாட்டை கேட்கும் போதெல்லாம் இந்த டவுட் வந்து கொண்டே இருக்கிறது .














5 comments:

யூர்கன் க்ருகியர் said...

சிங்கம் சிரிக்கறது சூப்பர்!
(ஒருவேளை கேமரா மேன பார்த்து இன்னிக்கு ஒருத்தன் சிக்கிட்டான்டானு சிரிசிருக்குமோ!)

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஹா...ஹா..ஹா..

எனக்கு மிருகமென்று பெயர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஹா...ஹா..ஹா..

எனக்கு மிருகமென்று பெயர்

சந்தனமுல்லை said...

பாப்புவின் கலெக்ஷன் நல்லாருக்கு!

//இப்படி என் வீட்டு ஆண்கள் எல்லோருமே காமெடி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் தான் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் //

ஆண்கள் மட்டுமல்ல..பொதுவாக எல்லாருமே அதில் ஆர்வம் காட்டுவதாக தோன்றுகிறது எனக்கு!

அப்புறம் கமெண்ட்ஸ்ம் ஒகே! அந்த நாகரத்தின கதையை எப்போ முடிக்கப் போறீங்க?

KarthigaVasudevan said...

வாங்க ஜூர்கேன்...
//ஒருவேளை கேமரா மேன பார்த்து இன்னிக்கு ஒருத்தன் சிக்கிட்டான்டானு சிரிசிருக்குமோ!)//
அந்த கேமரா மேன் நீங்களாமே!!! அப்படியா?

வாங்க டி.வி ராதாகிருஷ்ணன் சார்
//ஹா...ஹா..ஹா..
எனக்கு மிருகமென்று பெயர்//
எத்தனை பேர் சார் இப்படி உண்மையை ஒத்துப்பாங்க !!!

வாங்க சந்தனமுல்லை
//ஆண்கள் மட்டுமல்ல..பொதுவாக எல்லாருமே அதில் ஆர்வம் காட்டுவதாக தோன்றுகிறது எனக்கு! //
ஒத்துக்கறேன் மேடம் ,
//அந்த நாகரத்தின கதையை எப்போ முடிக்கப் போறீங்க?//
கூடிய சீக்கிரமே?!