Tuesday, November 25, 2008

தொடர்கிறது...ஷாக்...ஷாக்...ஷாக்...!?

முதலில் சொன்ன பாயிண்டுக்கே வருவோம் என்று முடித்தேன் இல்லையா அன்றைக்கு ...
சரி இனி மேலே தொடர்வோம்,
யாருக்குத்தான் புதிது புதிதாக வீட்டு உபயோகப் பொருட்களை அல்ட்ரா மாடர்னாக வாங்கித் தள்ள வேண்டும் என்று ஆசை இல்லாது போகும்?எல்லாமே தானியங்கி என்று ஆகிவிட்டால் சொல்லவே வேண்டாம்...என்னை வாங்கு...வாங்கு என்று தினம் தினம் நொடிக்கு நொடி டி.வி யில் வந்து வேறு நம் உயிரை வாங்கித் தொலைக்கும் .அதை விட்டுத் தள்ளுங்கள் கையில் பணம் புரளும் போது அதையெல்லாம் வாங்கித் தானே தீருவோம் என்கிறீர்களோ...அதுவும் சரி தான் .
சரி வாங்குவது என்று முடிவெடுத்த பிறகு சில கொள்கைகளை நமக்கு நாமே வகுத்துக் கொண்டால் நமக்கும் பாதுகாப்பு,நமது பர்சுக்கும் பாதுகாப்பு !
என்னென்ன கொள்கைகள் என்று பார்ப்போம் ;
  1. எந்தப் பொருளாக இருந்தாலும் ஐ.எஸ்.ஐ. முத்திரை இடப் பட்டதா என்று சோதித்து தரமானதாகவே வாங்குவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்(கடைக்குள் நுழையும் முன்பு இருக்கும் உறுதி...பொருளின் வெளி அலங்காரத்தில் மயங்கி மாறி விட்டால் நீங்கள் கொள்கை தவறியவர்கள் என்று அறிவிக்கப்படுவீர்கள்).
  2. எந்தக் கடையிலும் பொருளை வாங்குவதற்கு முன்பு கடையின் நம்பகத் தன்மையையும் ஒரு முறைக்கு இருமுறை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. விழாக்காலங்களில் ஒன்றுக்குப் பத்தாக இலவசமாகத் தரப் படும் லோக்கல் அசெம்பிள்டு பொருட்களை வாங்கி ஏமாறக் கூடாது.
  4. வாரண்டி...கியாரண்டி கார்டுகளை கவனமாகப் பத்திரப் படுத்த வேண்டும் .
  5. வாங்கும் பொருட்களில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய சர்வீஸ் சென்டர் போன் நம்பர்கள்...அட்ரஸ் போன்றவற்றை மறக்காமல் கேட்டு வாங்கி பத்திரப் படுத்த வேண்டும்.
  6. எல்லாவற்றையும் விட முக்கியம்...கடைகளில் பொருட்களோடு வழங்கப் படும் மேனுவல் கைடுகளையும்,கியாரண்டி கார்டுகளில் "கன்டீசன்ஸ் அப்ளை" என்று போடி எழுத்தில் அச்சிடப் பட்டவற்றையும் கஷ்டப் பட்டாவது படித்துப் பார்த்து கடையிலிருந்து வீட்டுக்குப் பொருட்களை எடுத்து வரும் முன்பாகவே நமது சந்தேகங்களை விற்பனையாளர்களிடம் கேட்டு தீர்த்துக் கொள்வது மிக்க நல்லது.
  7. கட்டக் கடைசியாக "யானைக்கு அங்குசம் போல" விலை ரசீதுகளை (பில்...ரிசிப்ட்) பொக்கிஷம் போல பத்திரப் படுத்த மறக்க வேண்டாம் .(தரமான பொருட்களில் கூட காஸ்டிங்குக்கு ஆசைப் பட்டு குவாலிட்டி தேயும் படி கலப்படம் செய்யப் பட்டால் இது நமக்கு பயன்படும்)
  8. இதெல்லாம் செய்தால் (யு ஆர் டிரபிள் ப்ரீ சார் !) நீங்கள் தான் கிங்!யாரும் உங்களை ஏமாற்ற முடியாது .

இதுவரை சொல்லியாச்சு ...இனி எந்தப் பொருளை எப்படி எப்படி வாங்கனும்னு தெரிஞ்சா நல்ல இருக்குமே என்கிறீர்களா ?

(வெண்டைக்காய உடைச்சிப் பார்த்து வாங்கற மாதிரி உடைச்சா பார்க்க முடியும்?!) கவலையே வேண்டாம்...அதற்கும் பதில் உண்டு .

ஜஸ்ட் வெயிட் ....

ஒன்னு ஒண்ணா பாக்கலாமே...என்ன அவசரம் இப்போ ?

7 comments:

நாமக்கல் சிபி said...

//.ஒன்னு ஒண்ணா பாக்கலாமே...என்ன அவசரம் இப்போ ?//

அதானே! என்ன அவசரம்!

ஐ வில் வெயிட்

மிஸஸ்.டவுட் said...

வாங்க சிபி
வருகைக்கு நன்றி
அடிக்கடி வந்து இப்படியே இங்கயும் ஒரு கருத்து விதை தூவிட்டுப் போங்க...வளர உதவும்.

சந்தனமுல்லை said...

:-) வெரிகுட் கொள்கைகள்! அவசியமான கொள்கைகள்!

அதிரை ஜமால் said...

//.ஒன்னு ஒண்ணா பாக்கலாமே...என்ன அவசரம் இப்போ ?//

அதானே! என்ன அவசரம்!

we வில் வெயிட்

ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்

பொடியன்-|-SanJai said...

//இனி எந்தப் பொருளை எப்படி எப்படி வாங்கனும்னு தெரிஞ்சா நல்ல இருக்குமே என்கிறீர்களா ?//

நான் கூட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது பற்றி ஒரு பதிவெழுதலாம்னு இருக்கேன்.. நீங்க எழுதுங்க.. நான் நெனைச்ச மேட்டர் இதுல இல்லாம இருந்தா நானும் எழுதறேன் :)

மிஸஸ்.டவுட் said...

வாங்க பொடியன் சஞ்சய் அவர்களே

//நான் கூட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது பற்றி ஒரு பதிவெழுதலாம்னு இருக்கேன்.. நீங்க எழுதுங்க.. நான் நெனைச்ச மேட்டர் இதுல இல்லாம இருந்தா நானும் எழுதறேன் :)//

ஓ...எழுதலாமே!!!
இந்த ஆர்டிகிள் நான் குமுதம் சிநேகிதிக்காக 2006 நவம்பர்ல எழுதி பப்ளிஸ் ஆனது.
இன்னும் கொஞ்சம் இருக்கு நாளை தொடர்வேன்...நீங்களும் எழுதுங்க.
வாழ்த்துக்கள்

மிஸஸ்.டவுட் said...

வாங்க அதிரை ஜமால்