"சக்கரைக்கட்டி" என்றொரு படம்...!!!முருங்கைக்காய் பாக்கியராஜ் என்று ஒதுக்கி விடமுடியாத அற்புதமான திரைகதையாளரின்... மகன் சாந்தனு தான் ஹீரோ .
எந்நாளும் ஞாபாகத்தில் நீடிக்கும் "தாவணிக் கனவுகள்" படத்தில் ஹீரோ பாக்கியராஜ் ஐந்து பைசா நாணயத்தை தியேட்டர் தரையில் வீசி விட்டு தன் வயது வந்த தங்கைகள் படத்தில் காட்டப் படும் விதி மீறிய ஆபாசக் காட்சிகளைக் காண்பதை தடுப்பது போல ஒரு சீன் வருமே!!!அதே பாக்கியராஜ் மகன் தான் ...!!!
இப்போது கூட தன் மகளை வைத்து "பாரிஜாதம்" என்று ஒரு நல்ல படம் கொடுத்தார்.படம் சரியாக ஓடாவிட்டாலும் படம் நல்ல படமே குடும்பத்தோடு பார்க்கலாம் வகை,அவரது மகன் ஹீரோவாக நடித்த முதல் படம் சக்கரைக்கட்டி .
அதில் ஒரு சீன்!!!பத்து ...பன்னிரண்டு வயதில் உள்ள சிறுவர்கள் ஆறு ...ஏழு பேர் (அத்தனையும் சுட்டி டி.வி வர்ணனையாளர்கள் வேறு!!!அந்தச் சிறுவர்கள் ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து தேடித் தேடி புத்தகம் வாங்குகிறார்கள் ...என்ன புத்தகம்தெரியுமா?
"காமசாஸ்த்திரம்"சாட்சாத் வாத்ஸ்யாயனர் எழுதிய அதே புத்தகம் தான்!வெறும் பத்தே வயது நிறைந்த அந்தப் பையன்கள் அந்தப் புத்தகத்தை வாங்குவதோடு அல்லாமல் ஒரு பூங்காவில் உட்கார்ந்து அதைப் படிக்க வேறு செய்வதைப் போல படத்தில் காட்சி வைத்திருக்கிறார்கள் .
இதைக் கண்ட நொடியில் எனக்கு மிக அதிர்ச்சியாகி விட்டது .மீடியா வளராத எண்பதுகளைப் போல அல்ல இன்றைய சிறுவர்...சிறுமிகளுக்கு அன்றைய சிறுவர்...சிறுமிகளை விடவும் விவரமும் தெளிவும் அதிகம் தான் ;அதற்காக இப்படியா காட்சி வைப்பது?
பள்ளிகளில் பாலியல் கல்வியை ஒரு பாடமாக வைப்பதா ....வேண்டாமா என்பதே இன்னும் குழப்பமாக இருக்கும் பட்ச்சத்தில் இப்படி ஒரு சீன் தேவை இல்லை என்பதே எனது கருத்து.
அதிலும் கடையில் விற்பனையாளராக வரும் கிரேசி மோகன் அந்தப் பையன்களுக்கு அறிவுரை சொல்லத் தக்க ஒரு சிறந்த ஹாஸ்ய எழுத்தாளர் வேறு ?அவருமா இப்படி ஒரு சீனில் நடிக்க ஒத்துக் கொள்ள வேண்டும்?
அப்புறம் அந்தப் பையன்களில் பெரும்பாலோர் சுட்டி டி.வி காம்பியர்கள் வேறு!!!
என்னத்தைச் சொல்ல?
இங்கே இன்னொரு விஷயமும் சொல்லியே ஆக வேண்டும்...சுட்டி டி.வி நிகழ்ச்சிகளில் சில ஆகா ரகம் !!!...சில பரவாயில்லை ரகம்..சில பார்க்கலாம் ரகம் ...சில இது தேவையா இப்போது ரகம்? ...
ஆகா ரகம் !!!:-
"டோரா தி எக்ஸ்ப்ளோரர் "(சின்னஞ்சிறு இதயங்களின் தேடலை ஊக்குவிக்கும் தொடர்)
"குளோரியாவின் வீடு "(சிறுவர்களோடு அவர்களின் பெற்றோர்களுக்கும் அருமையான நட்பின் அவஷியத்தை உணர்த்தும் தொடர் இது )
"அபி அண்ட் எபி"(காட்டு விலங்குகளை...பறவைகளை...பூச்சிகளை அறிமுகப் படுத்தும் இன்னொரு உலகம் இது )
"பாபியின் உலகம் "(இதில் அந்தச் சிறுவனின் விரியும் கற்பனை உலகம் கொஞ்சம் சுவாரஷ்யமானதே)
சில பரவாயில்லை ரகம்:-
"அறிவோம் "ஆயிரம்(சில அறிவியல் ரீதியான விளக்கங்களை தினசரி வாழ்வை ஒட்டி விளக்கும் ஜப்பானியத் தொடர்...இது கூட சில நேரங்களில் தேவையில்லாத கேள்விகளை(அதாவது இப்போதைக்குத் தேவை இல்லாத சில கேள்விகளை என் மகளைக் கேட்க வைக்கிறதோ? என்ற எண்ணம் எனக்கு உண்டு...மற்றபடி பார்க்கலாம் வகை தான் பாதகம் இல்லை)அப்புறம்
"உலகச் சிறுகதைகள்"(பல்வேறு தேசத்து சிறுகதைகள் தொகுக்கப் பட்டு ஒவ்வொன்றாகக் காட்டப் படுகின்றன).
"ஜாக்கி" (ஜாக்கி சானை விரும்பும் குழந்தைகள் இதைப் பார்க்கலாம்...சுமார் ராகம் ...இறுதியில் ஜாக்கி குழந்தைகளுக்க்ச் சொல்லும் அறிவுரைகள் எல்லாம் நலம்...அதற்காக வேண்டுமானால் பார்க்கலாம்)
இவையெல்லாம் ஓகேஇவை தவிர ;
இது தேவையா இப்போது ரகம்?:-
"செட்ரிக்""ஹீமான்"
"மென் இன் ப்ளாக் "
"கடல் இளவரசிகள்"
இதெல்லாம் அத்தனை அவஷியமானது இல்லையோ ? என்ற எண்ணம் வருகிறது.எனென்றால் ஏனைய இந்தத் தொடர்களில் எல்லாம் குழந்தைகள் கற்றுக் கொள்ள எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை .இந்த நிகழிகளைத் தொகுத்து வழங்க மாற்ற டி.விக்களைப் போன்றே இதற்கும் வர்ணனையாளர்கள் உண்டு ...அவர்களில் சிலர் தான் மேலே சொன்ன படத்தில் அந்தக் காட்சியில் நடித்தவர்கள்.
பாவம் அந்தச் சிறுவர்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.அவர்களது பெற்றோர்களுக்கு இல்லாத அக்கறை அவர்களுக்கு மட்டும் எப்படி வர முடியும்?இப்படிப் பட்ட ஒரு காட்ச்சியில் தங்களது மகன் அல்லது மகள் வரலாமா கூடாதா என்ற கவலையே இல்லாத அவர்களை என்னவென்று நொந்துகொள்வதோ புரியவில்லை?
அதிலும் சுட்டி டி.வியில் சில குழந்தைகள் வர்ணனை என்ற பெயரில் தேவை இல்லாத (வயது வந்த மாற்ற டி.வி வர்ணனையாளர்களைப் போன்றே அதிகப் படியான உடல் அசைவுகள் )அலட்டல்களைச் செய்யும் போது மிதமிஞ்சிய வருத்தமே எஞ்சி நிற்கிறது .எப்போது திருந்துவார்கள் இவர்கள்? ஸாரி...ஸாரி எப்போது திருத்தப் படுவார்கள்?
குழந்தைகளிடம் எப்போதுமே "போலச் செய்தல்' என்ற பழக்கம் உண்டு அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை ஏன் இனி எதிர்காலத்திலும் கூட அது தொடரும்.அதாவது அவர்கள் எல்லா விஷயங்களையுமே பெரியவர்களிடமிருந்தே கற்றுக் கொள்கிறார்கள்...தாம் அறிந்த பெரியவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதே போல அதன் தாக்கம் அவர்களைச் சார்ந்த அந்த சிறுவர்களிடமும் படிந்து விடுகிறது...இது கண்கூடான உண்மை.
இப்படி சுட்டி டி.வி குழந்தைகளைப் பார்த்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நம் வீட்டுக் குழந்தைகளும் மாறி விட்டால் என்ன செய்வது?ஆதலால் பெற்றோர்களே உங்கள் வீட்டில் குழந்தைகள் டி.வி தானே பார்க்கிறார்கள் என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்!!! மிதமான கண்காணிப்பு எப்போதுமே எந்த வயதிலும் அவசியம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் அது எப்போதுமே நன்மை தரக் கூடும்.